சற்று முன்

நடிகர் சசிகுமார் பிறந்தநாளை முன்னிட்டு 'யாத்திசை' படத்தின் அட்டகாசமான போஸ்டர் வெளியானது!   |    ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள, பிரபாஸ் நடிக்கும் 'தி ராஜா சாப்' டிரெய்லர்!   |    VV வினாயக் முதல் காட்சியை க்ளாப் அடிக்க 'ஹெய் லெசோ' திரைப்படம் பிரம்மாண்டமாக துவங்கியது!   |    'தி பாரடைஸ்' படத்திற்காக லெஜெண்ட்டரி மோகன் பாபு மீண்டும் வெள்ளித் திரைக்கு வருகை!   |    தியா சூர்யா இயக்கியிருக்கும் டாக்குமெண்ட்ரி - டிராமா!   |    முன்னணி ஓடிடி தளமான ZEE5, தமிழ் ஒரிஜினல் “வேடுவன்” சீரிஸின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது!   |    இயக்குநராக அறிமுகமாகிறார் வரலட்சுமி சரத்குமார்!   |    காந்தாராவின் பாரம்பரியத்தை சிறப்பு தபால் அட்டைகளை வெளியிட்டு கௌரவித்துள்ளனர்!   |    முதல்முறையாக தேசிய விருது வென்றார் நடிகர் ஷாரூக் கான் !   |    அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் படமாக 'மருதம்' உருவாகியுள்ளது.   |    விமர்சன ரீதியாக பாராட்டப்படும் மோகன் ஜி இயக்கத்தில், ரிச்சர்ட் ரிஷி நடிக்கும் 'திரெளபதி 2'   |    அப்பா -மகள் இடையிலான அன்பை சொல்லும் கவிதையாக உருவாகியுள்ளது 'மெல்லிசை'   |    கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மீண்டும் திரைக்கு வருகிறது 'அனகோண்டா'!   |    நடிகர் உன்னி முகுந்தனை கேரளா ஸ்ட்ரைக்கர்ஸ் அணி தங்களது புதிய கேப்டனாக அறிவித்துள்ளது!   |    மோதியின் அரசியலுக்கு அப்பாற்பட்ட தனிப்பட்ட வாழ்வை உணர்வுப்பூர்வமாக பேசும் படம் 'மா வந்தே'   |    அதீரா, (PVCU)- பிரசாந்த் வர்மா சினிமா யுனிவர்ஸின் அடுத்த அத்தியாயமாகும்   |    ‘காந்தாரா: சேப்டர் 1’ ட்ரைலரை நடிகர் சிவகார்த்திகேயன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்!   |    கவுதம் ராம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியது   |    “காந்தாரா சேப்டர் 1” படத்தின் தமிழ் டிரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிடுகிறார்!   |    இந்த பூமி கோளில் செல்வராகவன் தான் மிகவும் சிறந்த மனிதர் - பினு ஜார்ஜ் அலெக்சாண்டர்   |   

சினிமா செய்திகள்

இசைஞானி இளையராஜாவுக்கு எம்பி பதவி:
Updated on : 07 July 2022

இசைஞானி இளையராஜா இசையமைக்கும் 1417வது படமான "நினைவெல்லாம் நீயடா " படத்தை இயக்கி வரும் ஆதிராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:



 



இசைஞானி இளையராஜா  இந்திய திரையுலகின் பெருமைமிகு அடையாளம். இதுவரை பல்வேறு இந்திய மொழிகளிலும் ஆங்கிலத்திலும் சுமார் 1400 திரைப்படங்களுக்கு மேலாக இசை அமைத்து வரலாற்று சாதனை படைத்திருக்கிறார். சுமார் 8000  பாடல்களை உருவாக்கி இருக்கிறார். உலகம் முழுவதும் சுமார் 20000 இசை நிகழ்ச்சிகளை நடத்தி இருக்கிறார். தற்போது 80 வயதிலும் 15க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை யமைத்து வருகிறார். உலகின்  தலைசிறந்த  இசையமைப்பாளர்களாக பட்டியலிடப்பட்ட 25 பேரில் ஒன்பதாவது இடத்தில் இளையராஜா உள்ளார் என்பதும் இந்தியாவிலிருந்து இந்த பட்டியலில் இடம் பிடித்திருப்பவர் அவர் மட்டுமே என்பதும் தமிழர்கள் கர்வம் கொள்ள வேண்டிய விஷயம். பத்மபூஷன் பத்மவிபூஷன் பல தேசிய விருதுகள் பெற்ற இசைஞானிக்கு அவருடைய மகுடத்தில் மற்றும் ஒரு மாணிக்கமாக,   ராஜ்யசபை எம்.பி.  பதவி வழங்கப்பட்டிருப்பது தமிழர்களுக்கு கிடைத்த கௌரவம். இதற்காக மாண்புமிகு பாரதப் பிரதமருக்கு தமிழ் திரையுலகம் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். சென்ற இடமெல்லாம் திருவள்ளுவரையும் பாரதியையும் தூக்கி பிடிக்கும் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தமிழர்களின் மீது கொண்ட அன்பின் வெளிப்பாடாகவே இந்த நியமனம் அமைந்திருக்கிறது.



 



இந்த மகிழ்ச்சியான தருணத்தில் வாழும் சகாப்தமான இளையராஜாவை மென்மேலும் கௌரவப்படுத்தும் வகையில் மத்திய அரசு இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்.  அது மட்டும் அல்லாமல் தேசிய  திரைப்பட விருதுகளுடன் தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுவது போல மத்திய அரசு  இசைஞானி இளையராஜா பெயரில் ஒரு  விருதை உருவாக்கி வருடம் தோறும் இசைத்துறை சாதனையாளர் ஒருவருக்கு அந்த விருதை வழங்க வேண்டும். அத்துடன் சென்னையில் உள்ள மிக முக்கியமான  சாலைக்கு இளையராஜாவின்  பெயரை சூட்ட வேண்டும். தமிழ்நாட்டில் இசைஞானியின் பெயரால் ஓர் இசைப் பல்கலைக்கழகத்தை நிறுவ வேண்டும். இவையெல்லாம் இளையராஜாவை பெருமை படுத்துவதோடு மட்டுமல்லாமல் தமிழர்களை பெருமைப்படுத்தும் செயலாகவும் அமையும். எனவே பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இந்த கோரிக்கைகளையும் நிறைவேற்றித் தர வேண்டும் என்று அன்புடன் வேண்டுகிறேன். 



 



இவ்வாறு அந்த அறிக்கையில் இயக்குநர் ஆதிராஜன் தெரிவித்துள்ளார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா