சற்று முன்

நல்ல நோட்டு தான் கள்ள நோட்டு! - இயக்குனர் எம் ஜி. ராயன்   |    இசை அசுரனின் மயக்கும் மெலோடியாக 'வீர தீர சூரன்- பார்ட் 2' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!   |    'டி என் ஏ' திரைப்படத்தின் டீசர் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் தனுஷ்   |    ஜல்லிக்கட்டு நிகழ்வுகளுடன் இணைந்து பொங்கலைக் கொண்டாடுகிறது ZEE5 !   |    மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அகத்தியா கேம் மற்றும் இரண்டாவது சிங்கிள்!   |    அவர் ஒரு லெஜெண்ட் என்பது அவரே உணராமல் இருக்கிறார் - இயக்குநர் கிருத்திகா உதயநிதி   |    நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் திரையுலகில் இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கும் 'நேசிப்பாயா'   |    நடிகர் தனுஷ் வெளியிட்ட 'கிங்ஸ்டன்' திரைப்படத்தின் டீசர்!   |    பொங்கல் பண்டிகைக் கொண்டாட்டமாக ஜனவரி 14 உலகமெங்கும் வெளியாகும் 'தருணம்'   |    ராக்கிங் ஸ்டார் யாஷின் 39 வது பிறந்தநாளை முன்னிட்டு, ரசிகர்களுக்கு அசத்தலான விருந்து!   |    ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் 'கிங்ஸ்டன்' படத்தின் பர்ஸ்ட் லுக்   |    ராக்கிங் ஸ்டார் யாஷ் பிறந்த நாளை முன்னிட்டு அசத்தலான 'டாக்ஸிக்' பட கிளிம்ப்ஸை வெளியிடவுள்ளார்   |    அஜித் சாரால் தான் இந்தப்படம் பொங்கலுக்கு வருகிறது! - 'மெட்ராஸ்காரன்' பட தயாரிப்பாளர் B.ஜெகதீஷ்   |    மேஸ்ட்ரோ யுவன் ஷங்கர் ராஜாவின் அற்புதமான இசையில் 'அகத்தியா' பட முதல் சிங்கிள் பாடல்!   |    படப்பிடிப்பு முடிவடைந்த சசிகுமார் - சிம்ரன் நடிக்கும் ஃபீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னர்!   |    பாடலாசிரியரும் திரைப்பட இயக்குநருமான பா.விஜய் இயக்கியுள்ள 'அகத்தியா' வெளியீடு அறிவிப்பு!   |    வெளிநாடுகளில் புகழ் பெற்ற OTT தளம் ஜனவரி 2025 முதல் இந்தியாவிலும்!   |    நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள “எமகாதகி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!   |    பத்து வயதுப் பெண் குழந்தைக்கு நேர்ந்த கொடுமையை அடிப்படையாகக் கொண்ட 'துணிந்தவன்'   |    அம்பிகா மேடம் பாராட்டியது எனக்கு விருதாக கருதுகிறேன் - 'எல்லாம் நன்மைக்கே' பட இயக்குனர்   |   

சினிமா செய்திகள்

விதார்த், விக்ராந்த், கார்த்திக் குமார், வருண் நடிக்கும் 'விடியும் வரை காத்திரு'
Updated on : 09 July 2022

தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான லிப்ரா புரொடக்ஷன்ஸ் வி சி ரவீந்திரன் தயாரிப்பில், முண்டாசுப்பட்டி மற்றும் ராட்சசன் புகழ் இயக்குநர் ராம்குமாரிடம் துணை இயக்குநராக பணியாற்றிய சஜி சலீம் இயக்கத்தில், விதார்த், விக்ராந்த், கார்த்திக் குமார், வருண் உள்ளிட்ட பலர் நடிக்கும் புதிய படத்திற்கு 'விடியும் வரை காத்திரு' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. 



 



படத்தின் முதன்மை கதாபாத்திரங்களாக விதார்த், விக்ராந்த், கார்த்திக் குமார், வருண், சந்திரன், மஹாலக்ஷ்மி ஷங்கர், குவின்சி, வலினா பிரான்சிஸ், நிம்மி இம்மானுவேல் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். 



 



படத்தை பற்றி பேசிய ரவீந்திரன், ஒரு நாள் இரவில் நடக்கும் முழு நீள திரில்லர் படமாக 'விடியும் வரை காத்திரு' இருக்கும் என்றும், தொடக்கம் முதல் இறுதி வரை விறுவிறுப்பான காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது என்றும் கூறினார்.



 



"ஒரு போலீஸ் அதிகாரி மற்றும் ஒரு நக்சலைட், அவர்கள் வந்த கார் மாறி செல்கின்றனர். இந்த பயணத்தின் போது ஏற்படும் விளைவுகள் தான் இந்த படத்தின் மையக்கரு. இதில் கார்த்திக் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார், விக்ராந்த் நக்சலைட் ஆக வருகிறார், மற்றும் விதார்த் முக்கியமான டிரைவர் கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். ஒரு சுவாரசியமான நேரத்தில் இந்த பயணத்தில் இணைகிறார் வருண்," என்று ரவீந்திரன் தெரிவித்தார். 



 





 



நடிகர்கள் தேர்வு பற்றி அவர் கூறுகையில், "சலீம் இந்த கதையை என்னிடம் கூறுகையில், இந்த நடிகர்கள் தான் இந்த கதாபாத்திரங்களுக்கு சரியாக பொருந்துவார்கள் என்று தோன்றியது. விதார்த், விக்ராந்த் மற்றும் கார்த்திக் மூவருமே மிகவும் நேர்த்தியான கலைஞர்கள். சரியான கதையை தேர்வு செய்வதில் விதார்த் திறமைசாலி, விக்ராந்த் ஒரு சிறந்த நடிகர். நடிப்பில் இருந்து விலகி இருந்த கார்த்திக்கை நான் சமாதானம் செய்து ஒத்துக்கொள்ள வைத்தேன். இந்த திறமைசாலிகளுக்கு இப்படம் அவர்களுக்கு உரிய அங்கீகாரத்தை அளிக்கும் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது. நியூசிலாந்து நாட்டில் இருந்து நடிப்பதற்கு ஆர்வத்துடன் வந்துள்ளார் வருண்," என்று தெரிவித்தார்.  



 



படத்தில் உள்ள அனைத்து கதாப்பாத்திரங்களும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று ரவீந்திரன் மேலும் கூறினார். 



 



படத்தின் தலைப்பை பற்றி பேசிய தயாரிப்பாளர் ரவீந்திரன், "பல வருடங்களுக்கு முன்பு பாக்கியராஜ் அவர்கள் இயக்கத்தில் உருவாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் 'விடியும் வரை காத்திரு'. இதன் தலைப்பு எங்கள் படத்தின் கதைக்கு மிகவும் பொருத்தமாக இருந்தததால் அவரிடம் சென்று கோரிக்கை வைத்தோம். முழு மனதோடு இந்த தலைப்பை அவர் எங்களுக்கு வழங்கினார்," என்றார். 



 



"ஜூலை 23 அன்று படப்பிடிப்பு தொடங்குகிறது. படப்பிடிப்பு முழுவதும் கோயம்புத்தூரில் 30 நாட்கள் நடைபெறவுள்ளது. ஒரு நாள் இரவில் நடைபெறும் சம்பவங்கள் என்பதால் அதிகமான காட்சிகள் இரவில் படமாக்கப் படவுள்ளன. முழு வீச்சில் படப்பிடிப்பை முடித்துவிட்டு அக்டோபர் இறுதியில் படத்தை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது," என்று அவர் கூறினார்.  



 



இந்த படத்திற்காக இயக்குநர் சலீம் பல விதமான புதிய யுக்திகளை கையாள உள்ளார் என்று ரவீந்திரன் தெரிவித்தார். 



 



'விடியும் வரை காத்திரு' திரைப்படத்தின் ஒளிப்பதிவு பணிகளை சந்தோஷ் மேற்கொள்கிறார். மேலும் இசை - அஸ்வத், படத்தொகுப்பு - ஜெரோம் ஆலென், கலை - நர்மதா வேணி, ஆடை வடிவமைப்பு - மின்னி பாஸ்டின் ஆகியோர் கையாள்கின்றனர். அசோகன் ஜி நிர்வாக தயாரிப்பாளர் ஆவார். 



 



விதார்த், விக்ராந்த், கார்த்திக் குமார், வருண் மற்றும் பிரபல நட்சத்திரங்கள் பலர் நடிக்கும் 'விடியும் வரை காத்திரு' படத்தை லிப்ரா புரொடக்ஷன்ஸ் வி சி ரவீந்திரன் தயாரிப்பில் ஷாஜி சலீம் இயக்கவுள்ளார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா