சற்று முன்

நல்ல நோட்டு தான் கள்ள நோட்டு! - இயக்குனர் எம் ஜி. ராயன்   |    இசை அசுரனின் மயக்கும் மெலோடியாக 'வீர தீர சூரன்- பார்ட் 2' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!   |    'டி என் ஏ' திரைப்படத்தின் டீசர் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் தனுஷ்   |    ஜல்லிக்கட்டு நிகழ்வுகளுடன் இணைந்து பொங்கலைக் கொண்டாடுகிறது ZEE5 !   |    மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அகத்தியா கேம் மற்றும் இரண்டாவது சிங்கிள்!   |    அவர் ஒரு லெஜெண்ட் என்பது அவரே உணராமல் இருக்கிறார் - இயக்குநர் கிருத்திகா உதயநிதி   |    நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் திரையுலகில் இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கும் 'நேசிப்பாயா'   |    நடிகர் தனுஷ் வெளியிட்ட 'கிங்ஸ்டன்' திரைப்படத்தின் டீசர்!   |    பொங்கல் பண்டிகைக் கொண்டாட்டமாக ஜனவரி 14 உலகமெங்கும் வெளியாகும் 'தருணம்'   |    ராக்கிங் ஸ்டார் யாஷின் 39 வது பிறந்தநாளை முன்னிட்டு, ரசிகர்களுக்கு அசத்தலான விருந்து!   |    ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் 'கிங்ஸ்டன்' படத்தின் பர்ஸ்ட் லுக்   |    ராக்கிங் ஸ்டார் யாஷ் பிறந்த நாளை முன்னிட்டு அசத்தலான 'டாக்ஸிக்' பட கிளிம்ப்ஸை வெளியிடவுள்ளார்   |    அஜித் சாரால் தான் இந்தப்படம் பொங்கலுக்கு வருகிறது! - 'மெட்ராஸ்காரன்' பட தயாரிப்பாளர் B.ஜெகதீஷ்   |    மேஸ்ட்ரோ யுவன் ஷங்கர் ராஜாவின் அற்புதமான இசையில் 'அகத்தியா' பட முதல் சிங்கிள் பாடல்!   |    படப்பிடிப்பு முடிவடைந்த சசிகுமார் - சிம்ரன் நடிக்கும் ஃபீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னர்!   |    பாடலாசிரியரும் திரைப்பட இயக்குநருமான பா.விஜய் இயக்கியுள்ள 'அகத்தியா' வெளியீடு அறிவிப்பு!   |    வெளிநாடுகளில் புகழ் பெற்ற OTT தளம் ஜனவரி 2025 முதல் இந்தியாவிலும்!   |    நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள “எமகாதகி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!   |    பத்து வயதுப் பெண் குழந்தைக்கு நேர்ந்த கொடுமையை அடிப்படையாகக் கொண்ட 'துணிந்தவன்'   |    அம்பிகா மேடம் பாராட்டியது எனக்கு விருதாக கருதுகிறேன் - 'எல்லாம் நன்மைக்கே' பட இயக்குனர்   |   

சினிமா செய்திகள்

“நதி” திரைப்பட டிரெய்லர் வெளியீடு !  
Updated on : 16 July 2022

Mas Cinemas சார்பில், சாம் ஜோன்ஸ் நடித்து தயாரிக்க, இயக்குநர் K.தாமரைசெல்வன்  இயக்கத்தில், காதலையும், நட்பையும் மையமாக கொண்டு, சமூக அவலங்களை சாடும், ஒரு கமர்ஷியல் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் "நதி". அனைத்து பணிகளும் முடிந்து, ஜூலை 22 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீடு, படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. 



 



இந்நிகழ்வினில்..



 



நடிகர் வடிவேல் முருகன் பேசியதாவது..,





“இந்த படத்தின் மூலம் கரு பழனியப்பன் போன்ற ஒரு சகோதரர் எனக்கு கிடைத்துள்ளார். இயக்குநர் எந்தவித பதட்டமும் இல்லாமல், படத்தை எழுதி இயக்கியுள்ளார். இந்த படம் எனக்கு ஒரு முக்கியமான அனுபவமாக இருந்தது. படம் நன்றாக வந்துள்ளது. பார்த்துவிட்டு உங்கள் கருத்தை கூறுங்கள் நன்றி”.



 



இயக்குநர் A வெங்கடேஷ் பேசியதாவது..,





“AP International உடன் இந்த படத்தை இணைந்து தயாரிப்பாளர் வெளியிடுவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. கயல் ஆனந்தி திரையில் குடும்ப பாங்கான பாத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளார். இயக்குநர் தாமரைசெல்வன் வேலை பார்க்கும் விதம் இயக்குநர் பாசில் உடைய பாணியில் இருக்கிறது. கோடங்கி இந்த படத்தில் முழுமையாக ஒரு நல்ல பாத்திரத்தில் வருகிறார், அவர் கதாபாத்திரம் அனைவரையும் ஈர்க்கும் படி இருக்கும். இப்படம் நிச்சயமாக வெற்றிப்படமாக அமையும்.”



 



நடிகை கயல் ஆனந்தி பேசியதாவது...,





“இந்த படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து மதுரையில் நடப்பது போல் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் கதையை கேட்கும் போது, இந்த கதாபாத்திரத்தை நிச்சயம் செய்ய வேண்டும் என உறுதியாக இருந்தேன். சிறந்த கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க வேண்டுமென்பதில் உறுதியாக இருக்கிறேன். இந்த படத்தில் பணிபுரிந்த அனைத்து கலைஞர்களுக்கும் என் நன்றி”



 



இயக்குநர் நடிகர் கரு பழனியப்பன் பேசியதாவது...,





“படத்தின் கதையை பற்றி கூறும் போது, வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று இயக்குநர் தயங்கியபடி கூறினார். அப்படிப்பட்ட கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பதில் தான் எனக்கு அதிக விருப்பம். வில்லனாக நடிக்கும் போது எப்படி வேண்டுமானாலும் பேச முடியும். நல்லவனாக நடிக்கும் போது அது முடியாது. அதனால் எனக்கு வில்லனாக நடிப்பது பிடிக்கும்.  இயக்குநர் குழப்பமே இல்லாமல், தெளிவாக படத்தை உருவாக்கி முடித்துள்ளார். சின்ன பட்ஜெட்டில் சிறந்த படைப்பை உருவாக்கியுள்ளார். இப்படத்தின் இண்டர்வல் நிச்சயமாக எல்லோரும் ஆச்சர்யப்படும் ஒன்றாக இருக்கும். ஒளிப்பதிவாளர் பிரபு அவர்களுடைய பணி படத்தின் கதையை விட்டு நகராமல் இருக்கும். இந்த படக்குழு இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு அடுத்த படத்தை  உடனே உருவாக்க வேண்டும். ஆனந்தி படத்தில் பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஆனந்தி உடைய கதாபாத்திரம் இந்த படத்திற்கு பிறகு பெரிய அளவில் பேசப்படும். இந்த படம் கண்டிப்பாக கவனிக்கப்படும், படத்தில் உள்ள அனைவரும் பாராட்டப்படுவார்கள். அனைவருக்கும் நன்றி”



 



நடிகர் தயாரிப்பாளர் சாம் ஜோன்ஸ் பேசியதாவது...,





“நான் அறிமுகமாகும் படம் ஆழமாக இருக்க வேண்டும் என நினைத்து கொண்டு இருந்தேன். இயக்குநர் எனக்கு இந்த கதை சொன்ன போது, அது எனக்கு மிகவும் பிடித்தது. ஒளிப்பதிவாளர் பிரபு சார்  இந்த படத்திற்கு முதுகெலும்பாக இருந்தார், அவர் இப்படத்தில் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளார். ஆனந்தி கதையை கேட்டவுடன் நடிக்க ஒத்துகொண்டார். கரு பழனியப்பன் சார் இந்த படத்திற்குள் வந்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது. நடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் இந்த படத்தின் கதைக்காக முழு ஒத்துழைப்பையும் கொடுத்துள்ளனர். படம் மிக நன்றாக வந்துள்ளது அனைவரும் உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி. 



 



ஒளிப்பதிவாளர் MS பிரபு பேசியதாவது...,





“இந்த கதையை விட இயக்குநர் கதையை சொன்ன விதம், என்னை ஈர்க்கும் வகையில் இருந்தது. இந்த படத்தை தயாரிக்க முன்வந்த சாம் ஜோன்ஸ்க்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். இருவரும் இணைந்து பொறுமையுடன் ஒரு சிறப்பான படத்தை உருவாக்கியுள்ளனர். அனைவருக்கும் வாழ்த்துக்கள். 



 



எடிட்டர் சுதர்ஷன் பேசியதாவது...,





“இந்த படத்தை உருவாக்கும் போது ஒரு தெளிவு இயக்குநரிடம் இருந்தது. அவர் முழு அர்ப்பணிப்புடன் கடுமையாக உழைத்து  இந்த படத்தை உருவாக்கியுள்ளார். படம் நன்றாக வந்துள்ளது. படம் பார்த்துவிட்டு உங்கள் ஆதரவை தாருங்கள்” 



 



இயக்குநர் தாமரை செல்வன் கூறியதாவது..,





“இந்த படம் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது. நடிகரும், தயாரிப்பாளருமான சாம் ஜோன்ஸும், நானும் இணைந்து சிறந்த படத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில், பல கட்டங்களுக்கு பிறகு, இந்த திரைப்படத்தின் கதையை உருவாக்கினோம். படத்தில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் நாங்கள் தேடிய பயணமே, ஒரு புது அனுபவமாக இருந்தது. படத்தின் கதாநாயகன் புதுமுகம் என்ற தயக்கம் எதுவும் இல்லாமல், ஆனந்தி இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். கரு பழனியப்பன் கதையை புரிந்து கொண்டு இந்த படத்திற்குள் வந்தார். படத்தில் பணிபுரிந்த அனைத்து நடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் முழு பங்களிப்பை கொடுத்துள்ளனர். படம் சிறப்பாக வந்துள்ளது. படம் பார்த்துவிட்டு உங்களது கருத்தை கூறுங்கள். “



 



 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா