சற்று முன்

நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |    வட இந்திய மாநிலங்களிலும் ரசிகர்களால் கொண்டாடப்படும் தங்கலான்!   |    'கடைசி உலகப்போர்' மாறுபட்ட களத்தில் போரின் கொடுமைகளைப் பேசும் அழுத்தமிகு படைப்பு   |    சம்யுக்தா பிறந்தநாளில் ‘சுயம்பு’ வில் அவரது கேரக்டர் லுக்கை வெளியிட்ட படக்குழு!   |    'கோட்' படத்தை வெளியிட்ட ரோமியோ பிக்சர்ஸ் விரைவில் 'சார்' படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது   |    நடிகர் ராணாவுடன் துல்கர் சல்மான் இணைந்து தயாரிக்கும் 'காந்தா' பட படப்பிடிப்பு தொடங்கியது!   |    'ரகுதாத்தா' ZEE5 இல் 13 செப்டம்பர் 2024 அன்று உலகளவில் டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படுகிறது!   |   

சினிமா செய்திகள்

வித்தியாசமான கதாப்பாத்திரங்களால் ஆவலை தூண்டும் விஜய் ஆண்டனியின் கொலை திரைப்படம்
Updated on : 18 July 2022

லைலாவை கொன்றது யார் எனும் ஹேஸ்டேக் சமூக வலை தளங்களில் டிரெண்டிங் ஆகி வருகிறது. கொலை படம் குறித்து பரவும் இந்த செய்தி திரைப்பட ஆர்வம் இல்லா பொது ரசிகர்களுக்கும்,  படத்தின் மீது பெரும் ஆர்வத்தை தூண்டுவதாக அமைந்துள்ளது. Infiniti Film Ventures நிறுவனம்  Lotus Pictures உடன் இணைந்து தயாரிக்க, பாலாஜி K குமார்  எழுதி இயக்கும் இப்படத்தில் விஜய் ஆண்டனி முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார். ‘கொலை’ திரைப்படம் கடந்த ஒரு வாரமாக கோலிவுட்டில் பேசப்பட்டு வருகிறது. இந்த  'கொலை' சஸ்பென்ஸ் மர்ம திரைப்படத்தில் சம்பந்தப்பட்ட முக்கிய கதாபாத்திரங்களை பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர்களின் புதுமையான முயற்சிக்கு பாராட்டுக்கள் கிடைத்து வருகிறது.



 



கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தும் இந்த புதுமையான முயற்சி 

மீனாட்சி சவுத்ரி நடித்த ‘லீலா’ கதாபாத்திரத்தின் அறிமுகத்துடன்  தொடங்கியது. இதைத் தொடர்ந்து, பான்-இந்திய பரபரப்பான நடிகர் முரளி சர்மா 'தி ஏஜென்ட் ஆதித்யா பாத்திரத்திலும், 'தி பாய்பிரண்ட், சதீஷ் பாத்திரத்தில் சித்தார்த்த ஷங்கர்,  'தி பாஸ், ரேகா' பாத்திரத்தில் ராதிகா சரத்குமார் அவர்களும்,  'புகைப்படக்காரர் அர்ஜுன்' பாத்திரத்தில் அர்ஜுன் சிதம்பரம், 'மேனேஜர் பப்லு' பாத்திரத்தில் கிஷோர் குமார் , 'பக்கத்து வீட்டுக்காரர் வினோத் பாத்திரத்தில் சம்கித் போஹ்ரா, 'தி காப் - மன்சூர் அலி கான்' பாத்திரத்தில் ஜான் விஜய், 'அப்ரண்டிஸ் சந்தியா' பாத்திரத்தில் ரித்திகா சிங் ஆகியோருடன்  'துப்பறியும் விநாயக்'  பாத்திரத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார். கதாபாத்திரங்களைப் பற்றிய சரியான தெளிவை பார்வையாளர்களுக்கு அளிக்கும் வகையில், தயாரிப்பாளர்கள் 'கொலை' படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இது அதன் உயர்தர காட்சிகள், கதாபாத்திரங்களின் புதுமையான அறிமுகம்,  ஒரு அற்புதமான இசையில் பழைய எவர்க்ரீன் பாடலான . 'புதிய பறவை'யிலிருந்து 'பார்த்த ஞாபகம் இல்லையோ' பாடலோடு, நம்மை கட்டிப்போடும் அளவு ஆரவத்தை தூண்டும் வகையில் அமைந்துள்ளது. 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா