சற்று முன்

நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |    வட இந்திய மாநிலங்களிலும் ரசிகர்களால் கொண்டாடப்படும் தங்கலான்!   |    'கடைசி உலகப்போர்' மாறுபட்ட களத்தில் போரின் கொடுமைகளைப் பேசும் அழுத்தமிகு படைப்பு   |    சம்யுக்தா பிறந்தநாளில் ‘சுயம்பு’ வில் அவரது கேரக்டர் லுக்கை வெளியிட்ட படக்குழு!   |    'கோட்' படத்தை வெளியிட்ட ரோமியோ பிக்சர்ஸ் விரைவில் 'சார்' படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது   |    நடிகர் ராணாவுடன் துல்கர் சல்மான் இணைந்து தயாரிக்கும் 'காந்தா' பட படப்பிடிப்பு தொடங்கியது!   |    'ரகுதாத்தா' ZEE5 இல் 13 செப்டம்பர் 2024 அன்று உலகளவில் டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படுகிறது!   |   

சினிமா செய்திகள்

ஓடிடி தளத்தில் 2 கோடி பார்வை நிமிடங்களை கடந்து சாதனை படைத்த RJ பாலாஜியின் 'வீட்ல விசேஷம்'
Updated on : 18 July 2022

சென்னை, ஜூலை 18, 2022: திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற வீட்ல விசேஷம், திரைப்படம் இப்போது ஜீ5 ஓடிடி தளத்திலும் அதே வெற்றியை பெற்று சாதனை படைத்து வருகிறது.



 



ஜூலை 15, 2022 அன்று ஜீ5 இல் திரையிடப்பட்ட இந்தத் திரைப்படம், வெளியான குறுகிய காலத்திற்குள் 2கோடி ஸ்ட்ரீமிங் நிமிடங்களைக் கடந்துள்ளது. பான்-இந்திய பிரமாண்ட திரைப்படங்களுக்கு மத்தியில், RJ பாலாஜியின் வீட்ல விசேஷம் வெளியான போதும் தற்போது ஓடிடி வெளியீட்டிலும்  ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கத் தவறவில்லை. இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியான நேரத்தில் பொது பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பையும், நல்ல விமர்சனங்களையும் பெற்றது. இந்நிலையில் ஓடிடி வெளியான இப்படம் ரசிர்களிடம் பெரிய அளவில் ஆர்வத்தை ஏற்படுத்தியது. ஜூலை 15, 2022 ஜீ5ல் வெளியான குறுகிய காலத்திற்குள் 2 கோடி ஸ்ட்ரீமிங் நிமிடங்களைக் கடந்து, ஓடிடி உலகில் பெரும் சாதனை படைத்ததிலும், ரசிகர்களின் வரவேற்பிலும் ஜீ5 மகிழ்ச்சியடைந்துள்ளது .



 



 



RJ பாலாஜி-NJ சரவணன் ஆகியோரின்  இயக்கம், அபர்ணா பாலமுரளி, சத்யராஜ், ஊர்வசி, மறைந்த நடிகை வி.எம்.சி. லலிதா மற்றும் பிற நடிகர்களின் அட்டகாசமான நடிப்பு இந்த படத்தின் முக்கிய ஈர்ப்பாக அமைந்தது. மேலும், வீட்ல விசேஷம் பார்வையாளர்கள் மத்தியில் ஒரு அதிரடியான வரவேற்பைக் கண்டது, மேலும் இதன் ஒரிஜினல் படைப்பான பதாய் ஹோ படத்தை விட சிறப்பாக இருப்பதாக  பாராட்டப்பட்டது.



 



நேர்த்தியான குடும்ப பொழுதுபோக்கு அம்சங்களுடன், நகைச்சுவை மற்றும் உணர்ச்சிகளின் கலவையும் இணைந்து இந்த திரைப்படத்திற்காக பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று தந்தது. தவிர, ஜீ5 இல் இந்தப் படம் கிடைப்பதால், குடும்ப பார்வையாளர்கள் வீட்டிலிருந்தபடியே,  வீட்ல விசேஷம் படத்தை பார்க்கவும் கொண்டாடவும் அதிக இடத்தை உருவாக்கியுள்ளது. பார்வையாளர்களின் பாராட்டுக்கள் படத்திற்கு மிகப்பெரும் விளம்பரம் அமைந்துள்ளது.



 



ஜீ5 அசல் தொடர்கள் மற்றும் திரைப்படங்கள், வணிகரீதியான பிளாக்பஸ்டர்கள் மற்றும் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட படைப்புகளை வழங்குவதன் மூலம் திரைப்பட ஆர்வலர்களை தொடர்ந்து மகிழ்வித்து வருகிறது.  ஜீ5 தொடர் வெற்றி வரிசையில் வீட்ல விசேஷம் திரைப்படமும் தற்போது இணைந்துள்ளது. ஓடிடி தளங்களின் ஜீ5 உடைய மதிப்பை உயர்த்தியுள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா