சற்று முன்

நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் மூன்று விருதுகளை வென்றுள்ள ‘பார்க்கிங்'!   |    இலங்கையில் ஜொலிக்கும் வரலட்சுமி சரத்குமார்!   |    'மீஷா' படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகும் நடிகர் கதிர்!   |    'தலைவன் தலைவி' படத்தின் மூலம் வெற்றி பயணத்தை தொய்வின்றி தொடரும் சத்யஜோதி ஃபிலிம்ஸ்   |    ஒரே வாரத்தில் 53 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்த 'மகாஅவதார் நரசிம்மா' !   |    சிவகார்த்திகேயன் நடிக்கும் 'மதராஸி' படத்திலிருந்து முதல் பாடல் வெளியானது!   |    'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது!   |    ஜியோஹாட்ஸ்டார் தனது அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் தொடரை அறிவித்துள்ளது!   |    இசை தளங்களிலும் ரசிகர்களின் இதயத்திலும் சிம்மாசனமிட்டுள்ள 'அந்த 7 நாட்கள்' பட சிங்கிள்   |    நான் முடியுமானால் அனிருத்தை கடத்தி என் பக்கத்தில் வைத்துக்கொள்வேன்! - விஜய் தேவராகொண்டா   |    அமீர் கான், ஜெனிலியா தேஷ்முக்குடன் 10 புதுமுக மாற்றுத்திறனாளிகள் நடித்துள்ள படம் YouTube-இல்!   |    சமூக அக்கறை மிக்க அழுத்தமான படைப்பாக உருவாகியுள்ள படம் 'போகி'   |    சூரி மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடித்த ப்ளாக்பஸ்டர் ‘மாமன்’ திரைப்படம், ஆகஸ்ட் 8, 2025 அன்று ZEE5 இல்!   |    ‘பிளாக்மெயில்’ படம் த்ரில்லர் என்பதையும் தாண்டி ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகி உள்ளது   |    ரசிகர்களிடையே வானளாவிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள 'கிங்டம்' ட்ரைலர்!   |    படம் வெளியானதற்கு பிறகு நிச்சயம் இயக்குநரின் வேலை பேசப்படும் - இணைத் தயாரிப்பாளர் கலை அரசு   |    'பிளாக்மெயில்' உணர்வும், உற்சாகமும் சரியாக கலந்த ஒரு படம் - நடிகை பிந்து மாதவி   |    வேலு பிரபாகரன் கொடுத்த ஒரு புத்தகம் தான் என்னை சிந்திக்க தூண்டியது! - நடிகர் சத்யராஜ்   |    பிரமாண்டமாக அரங்கேறும் 'ராக் ஸ்டார் அனிருத்தின் #Hukum சென்னை இசை நிகழ்ச்சி!   |    தமிழில் வெற்றியைத் தொடர்ந்து தெலுங்கு இந்தி மொழிகளிலும் வெளிவரும் ‘சட்டமும் நீதியும்’!   |   

சினிமா செய்திகள்

'ஜூலை 26 முதல் அமேசான் பிரைம் வீடியோவில் ராக்கெட்ரி: நம்பி எஃபெக்ட்'
Updated on : 23 July 2022

ட்ரைகலர் பிலிம்ஸ் மற்றும் வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆர்.மாதவன் இயக்கியுள்ள படம் ‘‘ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்’’ . இந்த படத்தில்  ஆர்.மாதவன், சிம்ரன் மற்றும் ரஞ்சித் கபூர் இவர்களுடன் நடிகர் சூர்யா கௌரவ நடிகராக நடித்துள்ளார். 



 



இந்தியாவிலும், 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் உள்ள பிரைம் உறுப்பினர்கள், ஜூலை 26, 2022 முதல் இத்திரைப்படத்தை அமேசான் பிரைம் வீடியோவில் பிரத்யேகமாக ஸ்ட்ரீம் செய்யலாம்.



 



சமீபத்திய மற்றும் பிரத்யேகத் திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை, Amazon Originals, Amazon Prime Music மூலம் விளம்பரமில்லா மியூசிக், இந்தியத்தயாரிப்புகளின் மிகப் பெரிய கலெக்ஷனின் இலவச விரைவான டெலிவரி, சிறந்த டீல்களுக்கு முன்கூட்டிய அணுகல், வரம்பற்ற வாசிப்புக்கு PRIME Reading மற்றும் மொபைல் கேமிங் உள்ளடக்கம் கொண்ட PRIME Gaming இவை அனைத்தும் ஆண்டுக்கு ரூ. 1499 என்ற கட்டணத்தில் Prime மெம்பர் சந்தாவில் கிடைக்கிறது. Prime Video மொபைல் பதிப்பிற்குச் சந்தா செலுத்துவதன் மூலம் வாடிக்கையாளர்கள் ராக்கெட்டரி- நம்பி எஃபக்ட் திரைப்படத்தைக் கண்டு ரசிக்க முடியும். Prime Video மொபைல் பதிப்பு Airtel ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்குத் தற்போது கிடைக்கக்கூடிய ஒற்றைப் பயனர், மொபைல் மட்டுமே திட்டமாகும்.

மும்பை, இந்தியா, 20 ஜூலை, 2022 - சுயசரிதை சார்ந்த திரைப்படமான ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்டின் பிரத்யேக ஸ்ட்ரீமிங் பிரீமியரை அமேசான் பிரைம் வீடியோ இன்று அறிவித்துள்ளது. டிரைகலர் பிலிம்ஸ், வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் ஆர். மாதவன் முக்கியக் கதாப்பாதிரமேற்று நடிப்பதோடு இப்படத்தின் மூல இயக்குனராகவும் அறிமுகமாகிறார். அவருடன் சிம்ரன், ரஞ்சித் கபூர் போன்ற திறமை வாய்ந்த நடிகர்கல் இணைந்து நடித்துள்ளனர் மற்றும் இதில் சூர்யா கவுரவ வேடத்தில் தோன்றுகிறார். தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டுள்ள இத் தமிழ் திரைப்படத்தை இந்தியா மற்றும் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள பிரைம் உறுப்பினர்கள், ஜூலை 26, 2022 முதல் ஸ்ட்ரீம் செய்யலாம்.





இந்த கதையை உலகிற்கு எடுத்துச் செல்வது எனக்கு பெருமை தருவதாக இருக்கிறது" என்று ஆர்.மாதவன் கூறினார். “திரைப்படம் பெற்றுள்ள அபிமானம் என்னை மகிழ்ச்சிக்குள்ளாக்குகிறது மற்றும் ஸ்ட்ரீமிங் மூலம் புதிய மைல்கற்களை எட்டுவதைக் கான பார்க்க மிகவும் ஆவலாக இருக்கிறேன். நம்பி சாரின் இந்த நம்பமுடியாத கதைக்கு முறையான வடிவத்தைக் கொடுத்து வெளிக் கொணர்வது இன்றியமையாத ஒன்று. பலரை உற்சாகப்படுத்தும், அறிவூட்டும், மகிழ்விக்கும் விதமாக இக்கதை அமேசான் பிரைம் வீடியோ மூலம் பல குடும்பங்களைச் சென்றடையவுள்ளது எனக்கு மகிழ்ச்சியூட்டுவதாக உள்ளது.”என்று அவர் மேலும் கூறினார்.





1994 இல் உளவு பார்த்ததற்காக சிறையில் அடைக்கப்பட்ட இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட இத்திரைப்படம், அவரது நேர்மையான சாதனைகள், நாட்டின் விண்வெளிப் பயணத்தின் மீதான அவரது ஆர்வம், ஈடு இணையற்ற அர்ப்பணிப்பு குறித்து விக்கும் இக்கதை இறுதியில் தவறுதலாக எவ்வாறு மிகப்பெரிய தனிப்பட்ட குற்றச்சாட்டாக மாறி அவரது வாழ்க்கையின் தொழில்முறை பின்னடைவு ஏற்பட்டது என்பதையும் அதிலிருந்து அவர் எவ்வாறு வெளிவந்தார் என்பதையும் விளக்குகிறது. நடிகரும் இயக்குனருமான ஆர். மாதவனின் சிறப்பான நடிப்பைக் கொண்ட உணர்வுப்பூர்வமான கதை இது என்பது மிகையல்ல.



 



 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா