சற்று முன்

நல்ல நோட்டு தான் கள்ள நோட்டு! - இயக்குனர் எம் ஜி. ராயன்   |    இசை அசுரனின் மயக்கும் மெலோடியாக 'வீர தீர சூரன்- பார்ட் 2' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!   |    'டி என் ஏ' திரைப்படத்தின் டீசர் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் தனுஷ்   |    ஜல்லிக்கட்டு நிகழ்வுகளுடன் இணைந்து பொங்கலைக் கொண்டாடுகிறது ZEE5 !   |    மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அகத்தியா கேம் மற்றும் இரண்டாவது சிங்கிள்!   |    அவர் ஒரு லெஜெண்ட் என்பது அவரே உணராமல் இருக்கிறார் - இயக்குநர் கிருத்திகா உதயநிதி   |    நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் திரையுலகில் இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கும் 'நேசிப்பாயா'   |    நடிகர் தனுஷ் வெளியிட்ட 'கிங்ஸ்டன்' திரைப்படத்தின் டீசர்!   |    பொங்கல் பண்டிகைக் கொண்டாட்டமாக ஜனவரி 14 உலகமெங்கும் வெளியாகும் 'தருணம்'   |    ராக்கிங் ஸ்டார் யாஷின் 39 வது பிறந்தநாளை முன்னிட்டு, ரசிகர்களுக்கு அசத்தலான விருந்து!   |    ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் 'கிங்ஸ்டன்' படத்தின் பர்ஸ்ட் லுக்   |    ராக்கிங் ஸ்டார் யாஷ் பிறந்த நாளை முன்னிட்டு அசத்தலான 'டாக்ஸிக்' பட கிளிம்ப்ஸை வெளியிடவுள்ளார்   |    அஜித் சாரால் தான் இந்தப்படம் பொங்கலுக்கு வருகிறது! - 'மெட்ராஸ்காரன்' பட தயாரிப்பாளர் B.ஜெகதீஷ்   |    மேஸ்ட்ரோ யுவன் ஷங்கர் ராஜாவின் அற்புதமான இசையில் 'அகத்தியா' பட முதல் சிங்கிள் பாடல்!   |    படப்பிடிப்பு முடிவடைந்த சசிகுமார் - சிம்ரன் நடிக்கும் ஃபீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னர்!   |    பாடலாசிரியரும் திரைப்பட இயக்குநருமான பா.விஜய் இயக்கியுள்ள 'அகத்தியா' வெளியீடு அறிவிப்பு!   |    வெளிநாடுகளில் புகழ் பெற்ற OTT தளம் ஜனவரி 2025 முதல் இந்தியாவிலும்!   |    நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள “எமகாதகி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!   |    பத்து வயதுப் பெண் குழந்தைக்கு நேர்ந்த கொடுமையை அடிப்படையாகக் கொண்ட 'துணிந்தவன்'   |    அம்பிகா மேடம் பாராட்டியது எனக்கு விருதாக கருதுகிறேன் - 'எல்லாம் நன்மைக்கே' பட இயக்குனர்   |   

சினிமா செய்திகள்

சாந்தினியை சந்தோஷப்படுத்திய ‘மாயத்திரை’ ஆகஸ்ட்-5ல் முதல் திரையரங்குகளில்
Updated on : 25 July 2022

ஸ்ரீ சங்கர நாராயணா சாமுண்டீஸ்வரி மூவிஸ் சார்பில் V.சாய் கிருஷ்ணா தயாரித்துள்ள படம் ‘மாயத்திரை’. இயக்குனர்கள் எழில், பாலா ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய T.சம்பத்குமார். இந்தப்படத்தை இயக்கியுள்ளார். அடிப்படையில் திரைப்படக் கல்லூரி மாணவரான இவர் விஸ்காம் பேராசிரியரும் கூட.



 



கதாநாயகனாக அசோக்குமார் நடிக்க, சாந்தினி தமிழரசன், ஷீலா ராஜ்குமார் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் முக்கிய வேடங்களில் காதல் சுகுமார், காதல் சரவணன், பாவா லட்சுமணன், நடன இயக்குனர்கள் சுஜாதா, தருண், இரவின் நிழல் படத்தில் நடித்துள்ள மாஸ்டர் ஆரவ் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர். எஸ்.என்.அருணகிரி மற்றும் எஸ்.எஸ்.தமன் ஆகியோர் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளனர். ஒளிப்பதிவை இளையராஜா வேலுசாமியும், படத்தொகுப்பை கோடீஸ்வரன்-M.சுரேஷ் ஆகியோரும் கவனித்துள்ளனர். பாடலாசிரியர் ஞானகரவேல் பாடல்களை எழுதியுள்ளார்.



 



சரஸ்வதி எண்டர்பிரைசஸ் சார்பில் செந்தில் இந்த படத்தை வெளியிடுகிறார். வரும் ஆகஸ்ட்–5ஆம் தேதி இந்தப்படம் வெளியாக உள்ள நிலையில் இந்தப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.



 



இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் T.சம்பத்குமார். பேசும்போது, “23 வருடங்களுக்கு முன்பு நாகர்கோவில் பகுதியில் இருந்த ஒரு திரையரங்கில் தீ விபத்து ஏற்பட்டு 23 பேர் பலியான உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்த படத்தை உருவாக்கியுள்ளேன். அதேசமயம் இந்தப்படம் வழக்கமான ஹாரர் படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. இதுவரை வந்த ஹாரர் படங்களில் பேய் பழிவாங்கும். இந்த படத்தில் பேய் பழிவாங்காது.. மன்னிப்பு என்பது மனித குலத்திற்கு மட்டும் சொந்தமானது அல்ல.. ஒரு பேய்கிட்டயும் அது இருக்குதுன்னு இந்த படத்துல சொல்லி இருக்கோம். இது ஒரு முக்கோண பேய் காதல் கதை என்று கூட சொல்லலாம் ஒரு பேயின் தியாகத்தை தான் இந்த படத்தில் சொல்லி இருக்கிறோம். இதில் ஒன்றல்ல, இரண்டல்ல 26 பேய்கள் இந்தப்படத்தில் இருக்கின்றன.



 



இந்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள அசோக்குமார் ஜீவா என்கிற கதாபாத்திரத்தில் சவுண்ட் இன்ஜினியராக சிட்டி பாயாக, கிராமத்து பள்ளி மாணவராக என இரண்டு விதமான கெட்டப்புகளில் நடித்துள்ளார். இந்த இரண்டிலுமே தோற்றத்திலும் நடிப்பிலும் வித்தியாசம் காட்டியுள்ளார்... அதற்காகவே உடல் இளைத்து இளமையான தோற்றத்தில் நடித்துள்ளார். கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியில் ரிஸ்க் எடுத்து நடித்துள்ளார். சினிமாவில் இதுவரை திரைத்துறை சம்பந்தமான கதாபாத்திரங்கள் பல இடம் பெற்றிருந்தாலும் சவுண்ட் இன்ஜினியர் கதாபாத்திரம் இப்போதுதான் முதன்முறையாக இந்த படத்தில் இடம்பெற்றுள்ளது..



 



வழக்கமாக இரண்டு கதாநாயகிகள் இருந்தால் ஏற்படும் பிரச்சனைகள் எதுவும் எனக்கு இந்த படத்தில் ஏற்படவில்லை. அல்ட்ரா மாடல் பெண்ணாக நடித்துள்ள சாந்தினி இடைவேளைக்கு முன் விதவிதமான மாடர்ன் உடைகள் அணிந்து வந்தாலும் இடைவேளைக்குப்பின் ஒரே ஒரு ஆடை மட்டுமே அணிந்து நடித்துள்ளார். ஷீலா ராஜ்குமார் கோமதி என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் இவர் நடித்துள்ள கல்கோனா என்கிற பாடலை பார்த்துவிட்டு இந்தப்படத்தின் தூத்துக்குடி திருநெல்வேலி ஏரியா விற்பனை ஆகியுள்ளது என்றால் அந்த பாட்டிற்கு கிடைத்த வெற்றியாகவே சொல்லலாம்.



 



எஸ்.எஸ்.தமன் இசையமைத்துள்ள அட்ரா மச்சான் என்கிற பாடலுக்கு ரிசா ஆடியுள்ளார் ராதிகா மாஸ்டர் கல்கோனா பாடலில் புதுமுகங்களுக்கும்  பயிற்சி கொடுத்து ஆட வைத்துள்ளார். சண்டை பயிற்சியாளர் பிரபு தினேஷ் 3 சண்டை காட்சிகளை சிறப்பாக வடிவமைத்துள்ளார். திருநெல்வேலி, தென்காசி, புளியங்குடி மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது” என்றார்.



 



படத்தின் நாயகன் அசோக்குமார் பேசும்போது, ‘இந்த வருடத்தில் எனது மூன்றாவது படமாக ‘மாயத்திரை படமும்’ திரையரங்கில் ரிலீஸ் ஆகிறது மாயத்திரை என்கிற டைட்டிலுக்கு ஏற்றபடி இந்த படத்தின் கதையும் ஒரு திரையரங்கில் நடப்பது போன்று தான் உருவாக்கப்பட்டுள்ளது.. அந்தவகையில் இந்த படத்தில் புளியங்குடி கிராமத்தில் உள்ள கண்ணா திரையரங்கமும் ஒரு கதாபாத்திரமாக இடம் பெற்றுள்ளது. இரண்டு நண்பர்கள் ஜாலியாக ஒரு ட்ரிப்பில் இருந்தபோது கேமராவை வைத்து படமாக்கியது போல, இந்த படத்தில் இரண்டு கதாநாயகிகளுடன் இணைந்து நடித்தது அவ்வளவு எளிதாக இருந்தது” என்றார்.



 



நாயகி சாந்தினி பேசும்போது, “இந்த படத்தின் தயாரிப்பாளர் சாய்பாபு முன்னணி நடிகைகள் அனைவருக்கும் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். அப்படிப்பட்ட ஒருவர் எனக்கும் ஆடை வடிவமைத்ததில் ரொம்பவே சந்தோஷம். வழக்கமாக இதுபோன்ற ஹரார் படங்களில் நடிக்க என்னை அழைக்கும்போது பேய் வேடத்தில் நடிக்கத்தான் என்னை அழைப்பார்கள். ஆனால் இதில் அப்படி நடக்கவில்லை. திரையரங்கு சம்பந்தப்பட்ட காட்சிகளில் ரொம்பவே என்ஜாய் பண்ணி நடித்தேன்.



 



நாயகன் அசோக்கிற்கும் எனக்கும் பத்து வருட நட்பு இருக்கிறது. நல்ல படங்கள் அவருக்கு வரும்போது எனக்கும் அவற்றை அவர் சிபாரிசு செய்து இருக்கிறார். ஆனாலும் முதல்முறையாக இப்போது தான் இருவரும் இணைந்து நடித்துள்ளோம். கடினமான சண்டைக் காட்சிகளில் கூட அவர் ரிஸ்க் எடுத்து, அதேசமயம் மிக திறமையாக நடித்ததை பார்த்தபோது தான் அவர் எந்த அளவுக்கு அதில் பயிற்சி எடுத்துக் கொண்டுள்ளார் என்பது தெரிய வந்தது. ரொம்ப நாட்களுக்குப் பிறகு எனக்கு நடனம் ஆடும் விதமாக ஒரு பாடல் இந்த படத்தில் கிடைத்துள்ளதில் மகிழ்ச்சி” என்றார்.



 



நடன இயக்குனர் ராதிகா பேசும்போது, “இந்த படத்தில் இடம்பெற்று ஹிட்டாகியுள்ள கல்கோனா பாடலை எனக்குத் தந்தற்தாக நன்றி சொல்லிக் கொள்கிறேன். இந்த படத்தின் ஹீரோ அசோக்கிற்கு நடனம் வடிவமைக்கிறேன் என்றால் அதற்காகவே ஒரு வாரம் ஹோம் ஒர்க் செய்வேன்.. அந்த அளவுக்கு எந்த விதமான கடினமான நடன அசைவுகளையும் அவர் அழகாக செய்து விடுவார்” என்றார்.



 



கலை இயக்குனர் கே.ஆர்.சிட்டிபாபு பேசும்போது, “இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் நடப்பது ஒரு திரையரங்கம் என்பதால் ஒரு கலை இயக்குனரின் பசிக்கு தேவையான தீனி போடும் அளவுக்கு கதையில் நிறைய காட்சிகள் இருந்தன. குறிப்பாக இந்த படத்திற்காக பழைய மாடல் டூரிங் டாக்கீஸை வடிவமைக்க, பல இடங்களில் இருந்தும் அதன் பாகங்களை வரவழைத்து உருவாக்கினோம். மேலும் அந்த காலகட்டத்தில் ஆபரேட்டராக இருந்தவரையே அழைத்து வந்து படத்தை திரையிட செய்து அதை படமாக்கினோம். அதேபோல கல்கோனா பாடலிலும் வித்தியாசமான செட்டுகள் அமைத்து கொடுத்துள்ளோம். இந்தப் பாடலை இரவு நேரத்தில் படமாக்க முடிவு செய்திருந்த சமயத்தில் தொடர்ந்து ஒரு வாரம் இரவில் மழை பெய்ததால் ஒவ்வொரு நாளும் மழை நின்றபின் விடியற்காலை மூன்று மணி முதல் ஐந்து மணி வரை மட்டுமே இந்த பாடலை பாடமாக்கினோம்” என்றார்.



.



இந்தப்படத்தின் தயாரிப்பாளர் சாய்பாபு முன்னணி நட்சத்திரங்கள் பலருக்கும் ஆடை வடிவமைப்பு செய்த பெருமை கொண்டவர்., சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு பர்சனல் ஆடை வடிவமைப்பாளராக பல படங்களில் பணியாற்றியுள்ளார் குறிப்பாக எந்திரன் படத்தில் இவரது பங்களிப்பு ரொம்பவே முக்கியமானது. ரோபோ சம்பந்தப்பட்ட காட்சிகளில் 100க்கும் மேற்பட்ட ரோபோக்களுக்கு ஆடை வடிவமைப்பு செய்தது இவர் தான். சில வருடங்களுக்கு முன் ராம்கி, குஷ்பு இணைந்து நடித்த தாலி புதுசு என்கிற படத்தை தயாரித்தவர். இந்த படத்தின் கதை இவரை ரொம்பவே கவர்ந்து விட்டதால் மீண்டும் தயாரிப்பில் இறங்கியுள்ளார்.



 



தயாரிப்பாளர் சாய்பாபு பேசும்போது, “இந்த படத்தின் கதையை கேட்டதும் இதில் ஷீலா ராஜ்குமாரின் கதாபாத்திரம் என்னை ரொம்பவே கவர்ந்து விட்டது சாந்தினியின் கதாபாத்திரமும் கூடத்தான். இந்த இரண்டு கதாபாத்திரங்களுக்காக தான் இந்த படத்தை தயாரிக்க முன் வந்தேன்” இது ஷீலா ராஜகுமாரின் படம் என்றே சொல்லலாம்” என கூறினார்.



 



வரும் ஆக-5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இந்தப்படத்தை, கேரளா மற்றும் கர்நாடகாவிலும் சேர்த்து அதிக திரையரங்குகளில் வெளியிட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா