சற்று முன்

நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |    வட இந்திய மாநிலங்களிலும் ரசிகர்களால் கொண்டாடப்படும் தங்கலான்!   |    'கடைசி உலகப்போர்' மாறுபட்ட களத்தில் போரின் கொடுமைகளைப் பேசும் அழுத்தமிகு படைப்பு   |    சம்யுக்தா பிறந்தநாளில் ‘சுயம்பு’ வில் அவரது கேரக்டர் லுக்கை வெளியிட்ட படக்குழு!   |    'கோட்' படத்தை வெளியிட்ட ரோமியோ பிக்சர்ஸ் விரைவில் 'சார்' படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது   |    நடிகர் ராணாவுடன் துல்கர் சல்மான் இணைந்து தயாரிக்கும் 'காந்தா' பட படப்பிடிப்பு தொடங்கியது!   |    'ரகுதாத்தா' ZEE5 இல் 13 செப்டம்பர் 2024 அன்று உலகளவில் டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படுகிறது!   |   

சினிமா செய்திகள்

அறிமுக இயக்குனர் ஹரிஹரன் எழுதி, இயக்கியிருக்கும் 'இனி ஒரு காதல் செய்வோம்'
Updated on : 26 July 2022

புதுமுகம் அஜய் பாலகிருஷ்ணா கதாநாயகனாக நடித்துள்ளார். படத்தின் கதாநாயகியாக ஸ்வேதா ஷ்ரிம்டன் நடித்துள்ளார். இவர் பல குறும்படங்கள், விளம்பரங்களில் நடித்துள்ளார்.  



 



பல தமிழ் மற்றும் கன்னட படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கோபிநாத் சுகுமார் இந்த படத்திற்கு  ஒளிப்பதிவு செய்ய, ஜெய் திலிப் கலை இயக்கத்தை மேற்கொண்டார்.



 



"ரேவா" எனும் பெண் இசையமைப்பாளர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இவர் விஜய் சேதுபதியின் தயாரிப்பு மற்றும் நடிப்பில், ரெஜினா கசாண்ட்ரா கதானாயகியாக நடித்து வெளியான “முகில்” படத்தின் இசையமைப்பாளர் ஆவார். இத்திரைப்படத்தின் இசை அனைவரின் கவனத்தை ஈர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.

“96” பட புகழ் "கவிஞர் கார்த்திக் நேத்தா" இந்த படத்தின் அனைத்துப் பாடல்களையும் எழுதியுள்ளார். 



 



படத்தில் இடம்பெற்றுள்ள ஐந்து பாடல்களையும் பாடகர்கள் சின்மயி, ஸ்வேதா மோகன், ஹரி சரன், தீபக் போன்றோர் பாடியுள்ளனர். மேலும் "நிழல்கள் ரவி" அவர்கள் குரலில், சமீபத்தில் வெளியான இத்திரைப்படத்தின் பாடல், மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.



 



மேலும் நடிகர்கள் வர்கீஸ் மேத்யூ, கிஷோர் ராஜ்குமார், விக்னேஷ் சண்முகம், திடியன், மனு பார்த்திபன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.



 



இத்திரப்படத்தை சென்னை, ஈ.சி.ஆர், பாண்டிச்சேரி, கொடைக்கானல், மற்றும் பல்வேறு இடங்களில் காட்சி அமைத்துள்ளனர்.



 



தொண்ணூறுகளில் பிறந்தவர்களின் கல்லூரி வாழ்க்கையையும், நட்பையும், காதல் மற்றும் பிரிவையும் பிரதிபலுக்கும் வண்ணம் படத்தின் கதை அமைந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். முழுக்க முழுக்க காதல் மற்றும் காமெடியுடன் கலகலப்பாக நகரும் திரைக்கதையை எழுதியுள்ளார் இயக்குனர் ஹரிஹரன். 



 



படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடல்களை வரும் ஆகஸ்டு மாதம் வெளியிடவும், திரைப்படத்தை வரும் கிறிஸ்த்துமஸ் விடுமுறையில்  வெளியிடவும் படக்குழுவினர் திட்டமிட்டு வருகின்றனர்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா