சற்று முன்

தனுஷ் ரசிகர்களுக்கு குட் நியூஸ்: ‘கரா’ டிக்கெட் ப்ரீ-புக்கிங் ஆரம்பம்!   |    மதுரையில் மாஸ் கொண்டாட்டம்: சூர்யாவின் ‘கருப்பு’ இசை வெளியீடு கோலாகலம்!   |    மீண்டும் மீண்டும் கேட்க வைக்கும் 'இரண்டு வானம்’ திரைப்படத்தின் மெலடி ஹிட் ‘வெள்ளிச்சுடரே’!   |    ஜூலை 24ல் திரைக்கு வரும் சமூக விழிப்புணர்வு படம் ‘தி இந்தியா ஸ்டோரி’   |    மே 15 முதல் உலகளவில் வெளியாகும் ‘எக்ஸாம்’ தமிழ் சீரிஸ்!   |    “மேட் இன் கொரியா”க்கு சர்வதேச அங்கீகாரம் – ராஷ்டிரபதி பவன் விருந்தில் பிரியங்கா மோகன்!   |    “பிரேக்ஃபாஸ்ட்” இசை உணர்வுகளை பேசும் – ஜி.வி. பிரகாஷ் குமார்   |    நவீன காதல் மற்றும் உறவுகளை நுட்பமாகவும் ஆழமாகவும் பேசும் ‘பிரேக்ஃபாஸ்ட்’ - எஸ். குகன்!   |    என்டிஆர் – பிரஷாந்த் நீல் இணையும் ‘NTRNeel’ முதல் கிளிம்ப்ஸ் வெளியீடு அறிவிப்பு!   |    “பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்” – ஜியோஹாட்ஸ்டாரில் புதிய குடும்ப வெப்சீரிஸ் மே மாதம் முதல்!   |    கவின் நடிக்கும் புதிய குடும்பக் கதை, மே இறுதியில் படப்பிடிப்பு தொடக்கம்!   |    நயன்தாரா - கவினின் காதல் மெலடியில் ரசிகர்களை மயக்கும் “ஹாய்” பட முதல் சிங்கிள் ஹிட்!   |    பூரி ஜெகன்நாத் – விஜய் சேதுபதி இணையும் “ஸ்லம் டாக்”: படப்பிடிப்பு நிறைவு!   |    சாம் CS-ன் ஹாலிவுட் தர இசையில் 'மகா அவதார் பரசுராம்'!   |    “29” மே 8ல் வெளியாகும் காதலும் நினைவுகளும் கலந்த புதிய படைப்பு!   |    காளி வெங்கட் நடிக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 3’ படப்பிடிப்பு துவங்கியது!   |    2026 தேர்தலை முன்னிட்டு திமுகக்கு ஆதரவாக கமல்ஹாசன் வெளியிட்ட பிரச்சாரப் பாடல்!   |    இளைஞர்களின் கனவுகளை சொல்லும் “பீட்சா பாய்ஸ்” பூஜையுடன் தொடங்கியது!   |    உறவுகளின் நுணுக்கங்களை பேசும் குடும்பக் கதை “பிரேக்ஃபாஸ்ட்” இசை வெளியீடு!   |    விஜய் தேவரகொண்டா உலகளாவிய ‘ட்ரீம் கலெக்டிவ்’ உடன் பிரம்மாண்ட அறிவிப்பு!   |   

சினிமா செய்திகள்

மூன்று மாதக் காலக்கட்டத்திற்குள் முழுமையாக படப்பிடிப்பை நிறைவு செய்தது ‘தக்ஸ்’ படக்குழு
Updated on : 30 July 2022

நடன இயக்குநரும், இயக்குநருமான பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் தயாராகி வரும் ஆக்சன் எண்டர்டெய்னர் திரைப்படமான ‘தக்ஸ்’ எனும் படத்தின் படபிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். 



 



நடன இயக்குநராக திரையுலகில் புகழ்பெற்ற பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய ஆக்சன் திரைப்படம் 'தக்ஸ்'. இந்த படத்தின் மூலம் நடிகர் ஹிர்ரூது ஹாரூன் தமிழில் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். இவருடன்  நடிகர்கள் சிம்ஹா, ஆர். கே. சுரேஷ், முனீஸ்காந்த், அப்பாணி சரத், நடிகைகள் அனஸ்வரா ராஜன், ரம்யா சங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பிரியேஷ் குருசாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு சாம் சி. எஸ் இசையமைத்திருக்கிறார்.  பட தொகுப்பு பணிகளை பிரவீன் ஆண்டனி மேற்கொள்கிறார். ஆக்சனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதால் ' தக்ஸ் ' படத்தில் பிரபல சண்டை பயிற்சி  இயக்குநர்களான ராஜசேகர் மற்றும் ஃபோனீக்ஸ் பிரபு ஆகிய இருவரும் சண்டை பயிற்சி இயக்குநர்களாக பணியாற்றியிருக்கிறார்கள். 



 



இந்தப் படத்தின் தயாரிப்புஒருங்கிணைப்பாளராக முத்து கருப்பையா பணியாற்ற, யுவராஜ் நிர்வாக தயாரிப்பாளராகவும், மக்கள் தொடர்பாளராகவும் பணியாற்றுகிறார். தமிழைத் தவிர்த்து தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தை ஹெச். ஆர். பிக்சர்ஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார். இந்நிறுவனம் தமிழில் வெளியாகி, வசூலில் வெற்றியைப் பெற்ற ‘விக்ரம்’ மற்றும் ‘ஆர். ஆர். ஆர்.’ ஆகிய படங்களை கேரளாவில் விநியோகித்தது என்பது குறிப்பிடத்தக்கது.



 



குமரி மாவட்டத்தைக் கதையின் பின்னணி களமாக கொண்டிருந்தாலும், இப்படத்தின்  படபிடிப்பு கன்னியாகுமரி, நாகர்கோவில், கொச்சி என பல்வேறு இடங்களில் ஒரே கட்டமாக நடைபெற்று நிறைவடைந்திருக்கிறது. பிருந்தா மாஸ்டர் இயக்கும் ஆக்சன் படமான ‘தக்ஸ்’ படத்தின் டைட்டில், கடந்த ஜுன் 10 ஆம் தேதியன்று அறிவிக்கப்பட்டு, படபிடிப்பு தொடங்கியது. நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நட்ப கலைஞர்களின் முழுமையான ஒத்துழைப்புடன் ‘தக்ஸ்’ படத்தின் படபிடிப்பு திட்டமிட்டப்படி ஒரே கட்டமாக நடைபெற்று நிறைவடைந்திருக்கிறது.  படபிடிப்பு நிறைவடைந்திருப்பதால் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 



 



‘தக்ஸ்’ படத்தின் டைட்டில் வெளியானவுடன், இணையத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, எதிர்பார்ப்பினை எகிற வைத்தது- இதனையடுத்து படக்குழுவினரும்  திட்டமிட்டப்படி மூன்று மாதக் காலக்கட்டத்திற்குள் பட பிடிப்பு நிறைவு செய்திருக்கிறார்கள்.  இதன் காரணமாக ‘தக்ஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸருக்கு பெரிய எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.



 



 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா