சற்று முன்

நடிகர் சசிகுமார் பிறந்தநாளை முன்னிட்டு 'யாத்திசை' படத்தின் அட்டகாசமான போஸ்டர் வெளியானது!   |    ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள, பிரபாஸ் நடிக்கும் 'தி ராஜா சாப்' டிரெய்லர்!   |    VV வினாயக் முதல் காட்சியை க்ளாப் அடிக்க 'ஹெய் லெசோ' திரைப்படம் பிரம்மாண்டமாக துவங்கியது!   |    'தி பாரடைஸ்' படத்திற்காக லெஜெண்ட்டரி மோகன் பாபு மீண்டும் வெள்ளித் திரைக்கு வருகை!   |    தியா சூர்யா இயக்கியிருக்கும் டாக்குமெண்ட்ரி - டிராமா!   |    முன்னணி ஓடிடி தளமான ZEE5, தமிழ் ஒரிஜினல் “வேடுவன்” சீரிஸின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது!   |    இயக்குநராக அறிமுகமாகிறார் வரலட்சுமி சரத்குமார்!   |    காந்தாராவின் பாரம்பரியத்தை சிறப்பு தபால் அட்டைகளை வெளியிட்டு கௌரவித்துள்ளனர்!   |    முதல்முறையாக தேசிய விருது வென்றார் நடிகர் ஷாரூக் கான் !   |    அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் படமாக 'மருதம்' உருவாகியுள்ளது.   |    விமர்சன ரீதியாக பாராட்டப்படும் மோகன் ஜி இயக்கத்தில், ரிச்சர்ட் ரிஷி நடிக்கும் 'திரெளபதி 2'   |    அப்பா -மகள் இடையிலான அன்பை சொல்லும் கவிதையாக உருவாகியுள்ளது 'மெல்லிசை'   |    கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மீண்டும் திரைக்கு வருகிறது 'அனகோண்டா'!   |    நடிகர் உன்னி முகுந்தனை கேரளா ஸ்ட்ரைக்கர்ஸ் அணி தங்களது புதிய கேப்டனாக அறிவித்துள்ளது!   |    மோதியின் அரசியலுக்கு அப்பாற்பட்ட தனிப்பட்ட வாழ்வை உணர்வுப்பூர்வமாக பேசும் படம் 'மா வந்தே'   |    அதீரா, (PVCU)- பிரசாந்த் வர்மா சினிமா யுனிவர்ஸின் அடுத்த அத்தியாயமாகும்   |    ‘காந்தாரா: சேப்டர் 1’ ட்ரைலரை நடிகர் சிவகார்த்திகேயன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்!   |    கவுதம் ராம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியது   |    “காந்தாரா சேப்டர் 1” படத்தின் தமிழ் டிரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிடுகிறார்!   |    இந்த பூமி கோளில் செல்வராகவன் தான் மிகவும் சிறந்த மனிதர் - பினு ஜார்ஜ் அலெக்சாண்டர்   |   

சினிமா செய்திகள்

'கொத்தங்கோடு பங்களா' படத்திற்காக கனடாவிலிருந்து வரவழைக்கப்பட்ட பாடகி !
Updated on : 17 August 2022

கே ஜே எஸ் மீடியா புரோடக்சன்ஸ்  கலசா ஜே.செல்வம் தயாரிக்கின்ற திகில் திரைப்படம் "கொத்தங்கோடு பங்களா" இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இசையமைப்பாளரும் மறறும் நடிகருமான விஜய் ஆண்டனி சமீபத்தில் வெளியிட்டார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.



 



இந்த படத்தில், புஷ்பா உட்பட பல திரைப்படங்களில் வெற்றிகரமாக பாடல்களை எழுதிக் கொண்டிருக்கும் கவிஞர் விவேகா அவர்கள் பாடல்கள் அனைத்தும் எழுதுகிறார் என்பது சிறப்பு.



 



இத்திரைப்படத்தின் மற்றொரு சிறப்பு,இசையமைப்பாளர் விது பாலாஜி கதாநாயகனாக நடிப்பதுதான்.



 



சமீபத்தில் இத்திரைப்படத்தின் டூயட் பாடலின் ஒளிப்பதிவு சென்னையில் நடைபெற்றது.இப்பாடலை பாட பாடகி விதுசாயினி பரமநாதன் பிரத்தியேகமாக கனடாவிலிருந்து வரவழைக்கப்பட்டார்.இவர் 2019ஆம் ஆண்டு ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்த்திய லைவ் இன் கான்செர்ட் நிகழ்ச்சியில் பாடுவதற்காக சென்னைக்கு வரவழைக்கப்பட்டார். இவர் இளைய தளபதி விஜய் நடித்த பிகில் திரைப்படத்தில் 'மாதரே...' எனும் பாடலை சின்மயியுடன் இணைந்து ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடியுள்ளார்.அதன்பிறகு 2022ஆம் ஆண்டு "கொத்தங்கோடு பங்களா" திரைப்படத்தில் பாடுவதற்காக வரவழைக்கப்பட்டு இருக்கிறார்.



 



இப்பாடல் குறித்து இசையமைப்பாளர் விது பாலாஜியிடம் கேட்டபோது இந்த பாடல் ஒரு வித்தியாசமான  காதல் பாடல்.இதற்கு வசீகரமான ஒரு குரல் தேவைப்பட்ட காரணத்தினால் நானும் இயக்குனரும் கலந்து உரையாடி இவரை கனடாவில் இருந்து வரவழைத்தோம்.



 



இந்தியாவிலேயே 50க்கும் மேற்பட்ட இசைக் கருவிகளை வாசிக்கக்கூடிய ஒரே மகத்தான இசைக்கலைஞர் இப்பாடலின் பின்னணி சேர்திருப்பது மற்றும் ஒரு சுவாரசியமான நிகழ்வு.



 



இத்திரைப்படத்தில் நாயகன் விது பாலாஜிக்கு இரண்டு கதாநாயகிகள். ஒருவர் கொல்கத்தாவில் பிரபலமான மாடலும்,மற்றொருவர் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர்.



 



இத்திரைப்படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் கலாச ஜே.செல்வம் அவர்கள் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவிடம் 15 ஆண்டுகளாக ஒலிப்பதிவாளராக இருந்தவர்.அதனால் யுவனின் ஆசி பெற்று இத்திரைப்படத்தை துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா