சற்று முன்

கார்த்தியின் வித்தியாசமான தோற்றத்தில் 'வா வாத்தியார்' படத்தின் டீஸர் வெளியானது!   |    இந்தியாவின் முதல் பான்-இந்திய நட்சத்திரமானது எப்படி? 22 வருட திரை வாழ்க்கை பற்றி பிரபாஸ்   |    டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அதன் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான 'பாராசூட்' டீசரை வெளியிட்டுள்ளது!   |    ஜப்பான் நாட்டில் வெளியிடப்பட உள்ள 'கல்கி 2898 கிபி'!   |    ரிபெல் ஸ்டார் பிரபாஸ் மற்றும் ஹோம்பாலே பிலிம்ஸ் இணைந்து, மூன்று படத்தில் ஒப்பந்தம்!   |    #NaniOdela2 திரைப்படத்திற்கு 'தி பாரடைஸ்' என்று தலைப்பிடப்பட்டுள்ளது!   |    'அமரன்' பட வெற்றியை தொடர்ந்து இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் தனுஷின் #D55   |    ராம் சரணின் ஸ்வாக், ஸ்டைல் மற்றும் மாஸ் என அதிரடியாக கலக்கும் ‘கேம் சேஞ்சர்’ பட டீசர்!   |    அரசாங்கத்திற்கு எதிராக பொய் பிரச்சாரம் செய்து வரும் ராதாரவி!   |    அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் நிரபராதி என விடுவிக்கப்பட்டார் #நிவின்பாலி !   |    2026 மற்றும் 2027 தீபாவளி அன்று வரலாற்றின் சிறப்பு மிக்க பக்கத்தைக் காணத் தயாராகுங்கள்!   |    நடிகர் பிரபாஸ் எழுத்தாளர்களுக்காக துவக்கி வைத்த ‘தி ஸ்கிரிப்ட் கிராஃப்ட்’ இணையதளம்!   |    'கேம் சேஞ்சர்' பட கூட்டணியின் மாஸ் அப்டேட்!   |    நவம்பர் 8 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் மெகாஹிட் 'ஏ.ஆர்.எம்' திரைப்படம்!   |    கேபிஒய் பாலா மற்றும் நியதி நடிப்பில் காதலை கலகலப்பாக சொல்லும் பாடல் 'ராக்காயி'   |    ‘பிரேக் ஃபாஸ்ட்’ படம் மூலம் தமிழ் திரையுலகில் தனது பயணத்தைத் தொடங்கும் நடிகை ரோஸ்மின்!   |    3 ஆயிரம் கோடி வசூலைக் கடந்த திரைப்படங்களைத் தந்த இந்தியாவின் ஒரே நடிகர் பிரபாஸ்!   |    நாக சைதன்யா, சாய் பல்லவி நடிக்கும் 'தண்டேல்' திரைப்பட வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டது!   |    ZEE5 இல் 50 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்து வரும் 'ஐந்தாம் வேதம்’ சீரிஸ்!   |    யூனிஃபார்ம் அணிந்தாலே வேறு மாதிரியான கம்பீர உணர்வு நமக்கு வரும் - போலீசாக நடித்த நகுல் பேச்சு   |   

சினிமா செய்திகள்

59 விருதுகளை வென்ற குறும்படம்
Updated on : 19 August 2022

Cathy & Raphy பிலிம்ஸ் சார்பில் தயாராகியுள்ள குறும்படம் ‘சஷ்தி’. ஜூட் பீட்டர் டேமியான் என்பவர் இந்த குறும்படத்தின் கதையை எழுதி இயக்கியுள்ளார். 30 நிமிடங்கள் ஓடும் விதமாக உருவாகியுள்ள இந்த குறும்படம் ஆகஸ்ட்-15ஆம் தேதி ஐ ட்யூன்ஸ் மற்றும் கூகுள் பிளே ஆகியவற்றில் ரிலீசாகி உள்ளது.



 



தாய்க்கும் மகனுக்குமான உறவை மையப்படுத்தி உருவாகியுள்ளது இந்த ‘சஷ்தி' குறும்படம்..தான் வளர்ப்பு மகன் என்பதை அறியாமலேயே வளரும் சிறுவன் ஒருவன், சாதாரண பெண்ணாக இருக்கும் ஒருவரை எப்படி கடவுள் என நினைக்கும் அளவுக்கு ஒவ்வொரு காலகட்டத்திலும் அவரை பற்றிய அவனுடைய அபிப்ராயங்கள் எப்படி மாறுகின்றன என்பதை அழகாக சொல்கிறது இந்த குறும்படம்..இந்த படம் லைவ் ஆடியோ ரெக்கார்டிங் முறையில் உருவாகியுள்ளது தனிச்சிறப்பு.



 



செம்மலர் அன்னம், லிசி ஆண்டனி, மாஸ்டர் ஜெப்ரி ஜேம்ஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 



 



இந்த ‘சஷ்தி’ குறும்படம் டோக்கியோ முதல் டொராண்டோ வரை , 25 திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பல்வேறு பிரிவுகளில் 59 விருதுகளை வென்றுள்ளது.



 



அடிப்படையில் ஒரு சார்டட் அக்கவுண்டன்ட் ஆன ஜூட் பீட்டர் டேமியான் கிட்டத்தட்ட அதே துறையில் 30 வருடங்கள் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். டைரக்சன் மீது இருக்கும் ஆர்வத்தால் எல்வி பிரசாத் திரைப்பட பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து டைரக்சன் கற்றுக்கொண்டவர். தனது முதல் படைப்பாக இந்த ‘சஷ்தி’ என்கிற குறும்படத்தை இயக்கியுள்ளார்.



 



“30 நிமிடங்களுக்கு குறைவான நேரமே ஓடக்கூடிய இந்த குறும்படத்தை ஒரே வாரத்தில் படமாக்கி முடித்து விட்டாலும் இதற்கான கதை மற்றும் திரைக்கதையை உருவாக்க கிட்டத்தட்ட ஒரு வருட காலம் ஆனது” என்கிறார் ஜூடு பீட்டர் டேமியன்.



 



இந்த குறும்படத்தை https://apple.co/3PpIXnJ என்கிற லிங்க் மூலம் iTunesலும் https://bit.ly/3JXXoOD என்கிற லிங்க் மூலம் Google Playயிலும் காணலாம்.



 



 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா