சற்று முன்

நடிகர் சசிகுமார் பிறந்தநாளை முன்னிட்டு 'யாத்திசை' படத்தின் அட்டகாசமான போஸ்டர் வெளியானது!   |    ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள, பிரபாஸ் நடிக்கும் 'தி ராஜா சாப்' டிரெய்லர்!   |    VV வினாயக் முதல் காட்சியை க்ளாப் அடிக்க 'ஹெய் லெசோ' திரைப்படம் பிரம்மாண்டமாக துவங்கியது!   |    'தி பாரடைஸ்' படத்திற்காக லெஜெண்ட்டரி மோகன் பாபு மீண்டும் வெள்ளித் திரைக்கு வருகை!   |    தியா சூர்யா இயக்கியிருக்கும் டாக்குமெண்ட்ரி - டிராமா!   |    முன்னணி ஓடிடி தளமான ZEE5, தமிழ் ஒரிஜினல் “வேடுவன்” சீரிஸின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது!   |    இயக்குநராக அறிமுகமாகிறார் வரலட்சுமி சரத்குமார்!   |    காந்தாராவின் பாரம்பரியத்தை சிறப்பு தபால் அட்டைகளை வெளியிட்டு கௌரவித்துள்ளனர்!   |    முதல்முறையாக தேசிய விருது வென்றார் நடிகர் ஷாரூக் கான் !   |    அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் படமாக 'மருதம்' உருவாகியுள்ளது.   |    விமர்சன ரீதியாக பாராட்டப்படும் மோகன் ஜி இயக்கத்தில், ரிச்சர்ட் ரிஷி நடிக்கும் 'திரெளபதி 2'   |    அப்பா -மகள் இடையிலான அன்பை சொல்லும் கவிதையாக உருவாகியுள்ளது 'மெல்லிசை'   |    கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மீண்டும் திரைக்கு வருகிறது 'அனகோண்டா'!   |    நடிகர் உன்னி முகுந்தனை கேரளா ஸ்ட்ரைக்கர்ஸ் அணி தங்களது புதிய கேப்டனாக அறிவித்துள்ளது!   |    மோதியின் அரசியலுக்கு அப்பாற்பட்ட தனிப்பட்ட வாழ்வை உணர்வுப்பூர்வமாக பேசும் படம் 'மா வந்தே'   |    அதீரா, (PVCU)- பிரசாந்த் வர்மா சினிமா யுனிவர்ஸின் அடுத்த அத்தியாயமாகும்   |    ‘காந்தாரா: சேப்டர் 1’ ட்ரைலரை நடிகர் சிவகார்த்திகேயன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்!   |    கவுதம் ராம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியது   |    “காந்தாரா சேப்டர் 1” படத்தின் தமிழ் டிரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிடுகிறார்!   |    இந்த பூமி கோளில் செல்வராகவன் தான் மிகவும் சிறந்த மனிதர் - பினு ஜார்ஜ் அலெக்சாண்டர்   |   

சினிமா செய்திகள்

அனிருத்தின் முதல் இந்திய மியூசிக் கான்செர்ட்டை Disney + Hotstar உடன் இணைந்து நடத்துவதாக அறிவிப்பு
Updated on : 19 August 2022

சென்னை (ஆகஸ்ட்  19, 2022) – சினிமா துறையில் தனது 10வது ஆண்டைக் கொண்டாடும் வகையில், இசையமைப்பாளர் அனிருத் தனது முதல் இந்திய மியூசிக் கான்செர்ட் நிகழ்வான ‘ராக்ஸ்டார் ஆன் ஹாட்ஸ்டார் – ஒன்ஸ் அப்பான் எ டைம் கான்சர்ட்’ எனும் நிகழ்ச்சியை  டிஸ்னி+ ஹாட்ஸ்டார் உடன்  இணைந்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்நிகழ்ச்சிகளின் தேதிகள் இன்னும் வெளியிடப்படாத நிலையில், செப்டம்பர்-அக்டோபர் 2022 மாதங்களில் சென்னை மற்றும் கோயம்புத்தூரில் இந்த மியூசிக் கான்செர்ட்  கச்சேரிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.



 



கோயம்புத்தூரில் நடைபெறவுள்ள நிகழ்ச்சி  ஒரு லைவ்-இன் கச்சேரியாகத் திட்டமிடப்பட்டுள்ளது, ஆனால் சென்னை நிகழ்ச்சியானது டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில்,  முழு கச்சேரியும் நேரலையாக ஸ்ட்ரீம் செய்யப்படவுள்ளது. இது இந்தியாவில் மிகப்புதுமையான முதல் வகை அனுபவமாக இருக்கும். மற்ற நகரங்களைச் சேர்ந்த இசை ஆர்வலர்கள்,  ராக்ஸ்டார் அனிருத்தின் தீவிர ரசிகர்கள் ஆகியோரும், தங்கள் டிஜிட்டல் சாதனங்கள் மூலம்  நேரலையில்  இந்த இசை நிகழ்ச்சியை காணும் அனுபவத்தை  பெறுவார்கள். இந்த நிகழ்ச்சி மிக உயர்ந்த தரத்தில், சிறந்த காட்சி மற்றும் ஒலி தெளிவுடன் ஸ்ட்ரீம் செய்யப்படவுள்ளது. நாட்டின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான அனிருத், மில்லியன் கணக்கான ரசிகர்களின் நெஞ்சங்களை வென்றவர்.  சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது புதிய இசை நிகழ்ச்சி குறித்தான தகவலை பகிர்ந்தார், இது ரசிகர்களை உற்சாக எல்லைக்கு அழைத்து சென்றது. அனிருத்தின் மியூசிக் கான்செர்ட் நிகழ்ச்சி பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில், இந்நிகழ்ச்சி குறித்த கூடுதல் தகவல்கள் வரும் நாட்களில் அதிகாரப்பூர்வமாக  வெளியாகும். 



 



டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஒரு முன்னணி ஸ்ட்ரீமிங்  ஓடிடி தளமாகும். இது இந்தியாவில்  பொழுதுபோக்கு, திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விளையாட்டு மற்றும் வெற்றிகரமாக ஸ்ட்ரீம் செய்யும் மற்ற அனைத்து நிகழ்ச்சிகளையும் வழங்கி, மக்கள் பார்க்கும் விதத்தில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.  டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளமானது சுமார் 8 மொழிகளில் 1,00,000 தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் மற்றும் விளையாட்டு தொடர்பான ஸ்லாட்டுகளை உலகம் முழுவதிலிருந்து வழங்கி வருகிறது.



 



 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா