சற்று முன்

நல்ல நோட்டு தான் கள்ள நோட்டு! - இயக்குனர் எம் ஜி. ராயன்   |    இசை அசுரனின் மயக்கும் மெலோடியாக 'வீர தீர சூரன்- பார்ட் 2' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!   |    'டி என் ஏ' திரைப்படத்தின் டீசர் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் தனுஷ்   |    ஜல்லிக்கட்டு நிகழ்வுகளுடன் இணைந்து பொங்கலைக் கொண்டாடுகிறது ZEE5 !   |    மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அகத்தியா கேம் மற்றும் இரண்டாவது சிங்கிள்!   |    அவர் ஒரு லெஜெண்ட் என்பது அவரே உணராமல் இருக்கிறார் - இயக்குநர் கிருத்திகா உதயநிதி   |    நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் திரையுலகில் இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கும் 'நேசிப்பாயா'   |    நடிகர் தனுஷ் வெளியிட்ட 'கிங்ஸ்டன்' திரைப்படத்தின் டீசர்!   |    பொங்கல் பண்டிகைக் கொண்டாட்டமாக ஜனவரி 14 உலகமெங்கும் வெளியாகும் 'தருணம்'   |    ராக்கிங் ஸ்டார் யாஷின் 39 வது பிறந்தநாளை முன்னிட்டு, ரசிகர்களுக்கு அசத்தலான விருந்து!   |    ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் 'கிங்ஸ்டன்' படத்தின் பர்ஸ்ட் லுக்   |    ராக்கிங் ஸ்டார் யாஷ் பிறந்த நாளை முன்னிட்டு அசத்தலான 'டாக்ஸிக்' பட கிளிம்ப்ஸை வெளியிடவுள்ளார்   |    அஜித் சாரால் தான் இந்தப்படம் பொங்கலுக்கு வருகிறது! - 'மெட்ராஸ்காரன்' பட தயாரிப்பாளர் B.ஜெகதீஷ்   |    மேஸ்ட்ரோ யுவன் ஷங்கர் ராஜாவின் அற்புதமான இசையில் 'அகத்தியா' பட முதல் சிங்கிள் பாடல்!   |    படப்பிடிப்பு முடிவடைந்த சசிகுமார் - சிம்ரன் நடிக்கும் ஃபீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னர்!   |    பாடலாசிரியரும் திரைப்பட இயக்குநருமான பா.விஜய் இயக்கியுள்ள 'அகத்தியா' வெளியீடு அறிவிப்பு!   |    வெளிநாடுகளில் புகழ் பெற்ற OTT தளம் ஜனவரி 2025 முதல் இந்தியாவிலும்!   |    நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள “எமகாதகி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!   |    பத்து வயதுப் பெண் குழந்தைக்கு நேர்ந்த கொடுமையை அடிப்படையாகக் கொண்ட 'துணிந்தவன்'   |    அம்பிகா மேடம் பாராட்டியது எனக்கு விருதாக கருதுகிறேன் - 'எல்லாம் நன்மைக்கே' பட இயக்குனர்   |   

சினிமா செய்திகள்

படவிழாவில் அவமானப்பட்டு தலை குனிந்த ரோபோ ஷங்கர் !
Updated on : 20 August 2022

மினர்வா பிக்சர்ஸ் தயாரிப்பில் மணிகாந்த் தல்லாகுட்டி இயக்கத்தில் மாஸ்டர் மஹேந்திரன், ஷ்ரத்தா தாஸ், நந்தா ரோபோ ஷங்கர் மற்றும் பலர் நடித்துள்ள படம் “அர்த்தம்”. இந்த படத்திற்கு இசை ஹர்ஷவர்தன் ராமேஸ்வர்.  



 



இந்த படத்தின் ட்ரைலர் இன்று மாலை வெளிவர இருப்பதால் அதனை முன்னிட்டு இன்று அந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு ஒரு தனியார் திரையரங்கில் நடைபெற்றது.



 



இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரோபோ ஷங்கர் பேசியபோது அவர் இதற்கு முன் ஒரு கிராம நிகழ்ச்சியில் கலந்துகொண்டதை பற்றியும் அதில் நடந்த நிகழ்வை பற்றியும் நினைவு கூர்ந்தார். அதில் ஒரு அந்த கிராமத்தை சேர்ந்த நபர் பேசிய பொது ரோபோ ஷங்கர் என்று குறிப்பிடுவதற்கு பதிலாக சோபா சேகரு என்று குறிப்பிட்டதாகவும் இதுபோல் பல விஷயங்களை கூறி கிராமத்து மக்களை கிண்டல் செய்து பேசியுள்ளார்.



 



எதுக்கு ரோபோ  உங்களுக்கு இந்த வேலை. பட விழாவுக்கு அழைத்தால் அந்த படத்தை பற்றி பேசினோமா அந்த படம் சம்பந்தப்பட்டவர்களை பற்றி பேசினோம்மா என்றில்லாமல்   இது கொஞ்சம் அதிகப்ரசங்கித்தனமாக தெரிகிறது. அதுமட்டுமின்றி விழாவில் பேசும்போது நீங்கள் பொதுவாக பேசுவதாக இருந்தாலும் கொஞ்சம் அனைவரையும் மரியாதையாக பேசினால் நலமாக இருக்கும். 



 



மேலும் இந்த பட விழாவில் பேசிய நடிகைக்கு தமிழ் தெரியாது என்பதால் அவருக்கு மொழி பெயர்ப்பு செய்கிறேன் என்ற பெயரில் பார்வையாளர்களுக்கு கடுப்பை ஏற்படுத்தியதால் பத்திரிகையாளர்களிடம் வசமாக வாங்கி கட்டிக்கொண்டார். 



 



நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி குணச்சித்திர நடிகராக வளர்ந்து இன்று ஒரு படத்தை இயக்கும் அளவுக்கு வளர்ந்துள்ள ரோபோ ஷங்கர் கொஞ்சம் அவை அடக்கத்தையும் கடைபிடிக்கலாம். 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா