சற்று முன்

நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |    வட இந்திய மாநிலங்களிலும் ரசிகர்களால் கொண்டாடப்படும் தங்கலான்!   |    'கடைசி உலகப்போர்' மாறுபட்ட களத்தில் போரின் கொடுமைகளைப் பேசும் அழுத்தமிகு படைப்பு   |    சம்யுக்தா பிறந்தநாளில் ‘சுயம்பு’ வில் அவரது கேரக்டர் லுக்கை வெளியிட்ட படக்குழு!   |    'கோட்' படத்தை வெளியிட்ட ரோமியோ பிக்சர்ஸ் விரைவில் 'சார்' படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது   |    நடிகர் ராணாவுடன் துல்கர் சல்மான் இணைந்து தயாரிக்கும் 'காந்தா' பட படப்பிடிப்பு தொடங்கியது!   |    'ரகுதாத்தா' ZEE5 இல் 13 செப்டம்பர் 2024 அன்று உலகளவில் டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படுகிறது!   |   

சினிமா செய்திகள்

99 ரூபாய் மட்டுமே செலுத்தி அனைத்து படங்களையும் காண வாய்ப்பு !
Updated on : 22 August 2022

இந்தியாவின் முதல் பிராப்பர் சிங்கிள் ஷாட் ஆக்‌ஷன் மூவி என்ற அறிவிப்போடு உருவாகியுள்ள 'யுத்த காண்டம்' என்கிற திரைப்படம் பல சர்வதேச விருதுகளையும் வென்றிருக்கிறது.. இந்தப்படம் கடந்த ஆகஸ்ட்—15ஆம் தேதி மூவி வுட் (Movie Wood) ஒடிடி தளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பையும் வெற்றியையும் பெற்றுள்ளது. 



 



'கன்னிமாடம்' புகழ் ஸ்ரீராம்கார்த்திக் இந்தப்படத்தில்  கதாநாயகனாக நடித்துள்ளார். கிரிஷா குறூப், சுரேஷ் மேனன், போஸ் வெங்கட், யோக் ஜேபி என சிறந்த நடிகர்கள் இதில் நடித்துள்ளனர். குமரன் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தை, பாரடைஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.



 



மூவி வுட் (Movie Wood) ஒடிடி தளம் தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் வெளியாகும் நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தங்களது தளத்தில் கொண்டுள்ளது. 



 



அந்தவகையில் மலையாளத்தில் உருவாகி, கேரளாவில் கம்யூனிஸ்ட்களின் எதிர்ப்பை சம்பாதித்த ‘பிப்ரவரி-29’ என்கிற படமும் ஆக-18ல் இதே மூவி வுட் (Movie Wood) ஒடிடி தளத்தில் நேரடியாக வெளியாகியுள்ளது.



 



மூவி வுட் (Movie Wood) ஒடிடி தளத்தில் வருடத்திற்கு வெறும் 99 ரூபாய் மட்டுமே கட்டணமாக செலுத்தி இந்த தளத்தில் வெளியாகும் அனைத்து படங்களையும் பார்த்துக்கொள்ள முடியும். இல்லாவிட்டாலும் விரும்பும் படங்களை 5 ரூ முதல் 50 ரூ வரை கட்டணம் செலுத்தி பார்க்கின்ற வசதியும் இந்த தளத்தில் (மட்டுமே) உண்டு.



 



தெளிவு பாதையில் நீச தூரம், விண்வெளி பயணக்குறிப்புகள், உலக திரைப்பட விழாவில் விருது பெற்ற இன்ஷா அல்லா என சிறிய பட்ஜெட்டில் உருவான மிகச்சிறந்த படங்களையும் இதில் பார்த்து ரசிக்கலாம். அதுமட்டுமல்ல ரசிகர்கள் எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் என தங்களது அபிமான நடிகர்களின் சிறந்த படங்களையும் இதில் பார்க்க முடியும்.



 



தியேட்டர்களில் ரிலீஸாகும் வாய்ப்பு கிடைக்காத சிறிய படங்களை வசூல் பங்கீடு என்கிற முறையில் இந்த மூவி வுட் (Movie Wood) ஒடிடி தளத்தில் வெளியிடும் வசதியும் உண்டு. சிறிய பட்ஜெட் படங்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பயனடைய முடியும்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா