சற்று முன்

நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |    வட இந்திய மாநிலங்களிலும் ரசிகர்களால் கொண்டாடப்படும் தங்கலான்!   |    'கடைசி உலகப்போர்' மாறுபட்ட களத்தில் போரின் கொடுமைகளைப் பேசும் அழுத்தமிகு படைப்பு   |    சம்யுக்தா பிறந்தநாளில் ‘சுயம்பு’ வில் அவரது கேரக்டர் லுக்கை வெளியிட்ட படக்குழு!   |    'கோட்' படத்தை வெளியிட்ட ரோமியோ பிக்சர்ஸ் விரைவில் 'சார்' படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது   |    நடிகர் ராணாவுடன் துல்கர் சல்மான் இணைந்து தயாரிக்கும் 'காந்தா' பட படப்பிடிப்பு தொடங்கியது!   |    'ரகுதாத்தா' ZEE5 இல் 13 செப்டம்பர் 2024 அன்று உலகளவில் டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படுகிறது!   |   

சினிமா செய்திகள்

மார்ச் 30 2023 முதல் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது 'தசரா'!
Updated on : 26 August 2022

தொடர் வெற்றிப்படங்களை தந்து வரும்,  நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில், முதல் பான் இந்திய திரைப்படமாக உருவாகிறது  ‘தசரா’ திரைப்படம். ஶ்ரீ லக்‌ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்  சுதாகர் செருகுரி இப்படத்தை தயாரிக்கிறார்கள். அறிமுக இயக்குநர் ஶ்ரீகாந்த ஒதெலா இயக்குகிறார். 



 



நேச்சுரல் ஸ்டார்  நானி, தனது வழக்கமான பாணியிலிருந்து நவ நாகரீக தோற்றத்திலிருந்தும் முற்றிலுமாக மாறி முதல் முறையாக  முழுக்க முழுக்க  மாறி, ஒரு கிராமிய கேரக்டரில் கரடுமுரடான தோற்றத்தில் நடிக்கிறார். இந்த கேரக்டரில் நடிப்பதற்காக  அவர்  நிறைய பயிற்சி எடுத்து தன்னை முழுமையாக கிராமத்து மனிதனாக  மாற்றிக்கொண்டுள்ளார்.  இப்படத்தின் அறிவிப்பு வீடியோவில் அவரது தெலுங்கானா பேச்சுவழக்குமொழி அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்தது. படம் முழுக்க அவர் மாஸ் டயலாக்குகளைப் பேசுவதைப் பார்ப்பதே ஒரு விருந்தாக இருக்கும். ஸ்பார்க் ஆஃப் தசரா க்ளிம்ப்ஸுக்கும் ரசிகர்களிடையே  அமோக வரவேற்பு கிடைத்தது குறிப்பிடதக்கது.



 



தயாரிப்பாளர்கள், ரசிகர்களின் ஆர்வத்தை கூட்டும் விதமாக தற்போது ஒரு பெரிய அறிவிப்பை தந்துள்ளனர். ஸ்ரீராம நவமி கொண்டாட்ட வெளியீடாக, 4 நாட்கள் நீண்ட வார விடுமுறையை ஒட்டி “தசரா” திரைப்படம் 30 மார்ச் 2023 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.  எல்லா மொழிகளிலும் படம் வெளியாவதற்கு இது சரியான தேதியாக இருக்கும்.



 



பட வெளியீடு குறித்த அறிவிப்பு போஸ்டரில் நாயகன்  தூசி படிந்த கைலி சட்டையுடன் நானி அதிரடியான கிராமத்து லுக்கில் அசத்தலாக இருக்கிறார். அவரது ஹேர் ஸ்டைலும், கையில் இருக்கும் மதுபான பாட்டில்களும் அவரது முரட்டுத்தனத்தைக் கூட்டி அவரது கதாப்பாத்திரத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. பின்னணியில், நகங்களைக் கடிக்கும் சில்க் ஸ்மிதாவின் உருவப்படத்தையும் நாம் போஸ்டரில் காணலாம்.



 



இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று ஹைதராபாத்தில் மீண்டும் தொடங்கியுள்ளது. படத்தின் முன்னணி நடிகர்கள் அனைவரும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்கள். இப்படத்தில் நானிக்கு ஜோடியாக தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார்.



 



படத்தின் கதை பெத்தபள்ளி மாவட்டத்தில் உள்ள கோதாவரிகானியில் (தெலுங்கானா) சிங்கரேணி நிலக்கரி சுரங்கத்தில் அமைந்துள்ள ஒரு கிராமத்தில் நடப்பதாக  அமைக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக இப்படத்தில் இதுவரையிலும் பார்த்திராத புதுமையான பார்த்திரத்தில்  நானி நடிக்கிறார்.



 



சத்யன் சூரியன் ISC ஒளிப்பதிவு செய்ய சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் சமுத்திரக்கனி, சாய் குமார் மற்றும் ஜரீனா வஹாப் ஆகியோர் முக்கியமான பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.



 



இப்படத்தில் நவின் நூலி எடிட்டராகவும், அவினாஷ் கொல்லா தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், விஜய் சாகந்தி நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றுகிறார்கள்.



 



“தசரா” திரைப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா