சற்று முன்

‘பிளாக்மெயில்’ படம் த்ரில்லர் என்பதையும் தாண்டி ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகி உள்ளது   |    ரசிகர்களிடையே வானளாவிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள 'கிங்டம்' ட்ரைலர்!   |    படம் வெளியானதற்கு பிறகு நிச்சயம் இயக்குநரின் வேலை பேசப்படும் - இணைத் தயாரிப்பாளர் கலை அரசு   |    'பிளாக்மெயில்' உணர்வும், உற்சாகமும் சரியாக கலந்த ஒரு படம் - நடிகை பிந்து மாதவி   |    வேலு பிரபாகரன் கொடுத்த ஒரு புத்தகம் தான் என்னை சிந்திக்க தூண்டியது! - நடிகர் சத்யராஜ்   |    பிரமாண்டமாக அரங்கேறும் 'ராக் ஸ்டார் அனிருத்தின் #Hukum சென்னை இசை நிகழ்ச்சி!   |    தமிழில் வெற்றியைத் தொடர்ந்து தெலுங்கு இந்தி மொழிகளிலும் வெளிவரும் ‘சட்டமும் நீதியும்’!   |    மூன்றாவது படத்துக்கே பண்டிகை தின ரிலீஸ் எனும் உயர்வை பெற்றிருக்கும் பிரதீப் ரங்கநாதன்!   |    தன்யா ரவிச்சந்திரன் நடிக்கும் விறுவிறுப்பான கிரைம் திரில்லர் 'றெக்கை முளைத்தேன்'   |    கோவையை கலக்கப் போகும் வித்யாசாகர், விஜய் ஆண்டனி   |    ‘பிளாக்மெயில்’ நிறைய த்ரில், ஆச்சரியம் மற்றும் எண்டர்டெயின்மெண்ட் நிறைந்த படம்   |    தரமான கதைகளுக்காகவே திரைப்படம் தயாரிக்கிறேன்! - 'அந்த 7 நாட்கள்' தயாரிப்பாளர் முரளி கபீர்தாஸ்   |    'மிராய்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் 'வைப் இருக்கு பேபி'!   |    ஏஐ மூலம் உருவாக்கிய ஒரு முழு இசை வீடியோ ஆல்பம், இயக்குநர் அசத்தல்!   |    15 ஆண்டுகளுக்கு பிறகு திடீரென சமூக ஊடகங்களில் வைரல் ஆகியுள்ள 'பலே பாண்டியா' பட பாடல்!   |    'காந்தாரா: சாப்டர் 1 ' படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு   |    'பெத்தி' படத்திற்காக நம்ப முடியாத வகையில் தன் உடலை செதுக்கும் 'குளோபல் ஸ்டார்' ராம் சரண்'!   |    ZEE5-ல் ‘சட்டமும் நீதியும்’ சீரிஸ் இலவசமாக கண்டுகளிக்கலாம்!   |    சின்ன படங்கள் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது - முனீஷ்காந்த்   |    கோயம்புத்தூரில் நடைபெற்ற ஆல் இந்தியா ஆல் ஸ்டார் நவகோடி நினைவு கோப்பை நிகழ்வு!   |   

சினிமா செய்திகள்

சர்வதேசத் திரைப்பட விழா விருதுகளைக் குவித்த '21 கிராம்ஸ்' பைலட் பிலிம்!
Updated on : 30 August 2022

இப்போது வருகிற எந்தப் படத்தைப் பார்த்தாலும் வெட்டு, குத்து, ரத்தம் என்று மனித உயிரை மலிவாகக் காட்டும் வகையில் காட்சிகள் வருவது சகஜமாகி வருகிறது.

இந்த நிலையில் உயிரின் விலை மதிப்பற்றது. மனிதன் ஒருவனின் உயிரை எடுக்க யாருக்கும் உரிமையோ அதிகாரமோ கிடையாது என்கிற கருத்தை வலியுறுத்தும் வகையில் வித்தியாசமான யாரும் சொல்லாத கோணத்தில் உருவாகியுள்ள படம் தான் '21 கிராம்ஸ்'.



 



இந்தப் படத்தை யான் சசி இயக்கி உள்ளார். அவர் ஏற்கெனவே சில படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.



 



இந்தப் படத்தில் கதாநாயகனாக மோகணேஷ் என்கிற அறிமுக நடிகர் நடித்துள்ளார். அண்மையில் காலமான குணச்சித்திர நடிகர் பூ ராமு ஓர் அழுத்தமான கதாபாத்திரத்தின் மூலம் இந்த படத்தில் நடித்து, படம் பார்ப்பவர்கள் மனதில் நிறைகிறார்.



 



இப்படத்திற்கு  சௌந்தர்ராஜன், அன்பு டென்னிஸ் என்கிற இருவர் ஒளிப்பதிவு செய்துள்ளனர். இந்த இருவருக்கும் சில படங்களிலும் இணைய தொடர்களிலும் விளம்பரப் படங்களிலும் பணியாற்றிய அனுபவம் உண்டு.



 



இப்படத்திற்கு இசையமைத்துள்ள விஜய் சித்தார்த், ராக்கி புகழ்  நடிகர் வசந்த் ரவி நடித்துள்ள புதிய படத்திற்கு இசையமைத்து வருகிறார். அந்தப் படம் விரைவில் வெளியாக இருக்கிறது.



 



இந்தப் படம் பற்றிய அனுபவத்தை இயக்குநர் யான் சசி கூறும் போது,



 



" முழு நீளத்திரைப்படம் இயக்குவது தான் எனது கனவு . அப்படி நான் ஒரு படத்திற்காகப் பேசி ஒரு பெரிய  நிறுவனத்தால் எனக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.படம் துவங்க வேண்டிய நேரத்தில் கொரோனா காலம் வந்து விட்டது. தாமதமாகிக் கொண்டே வந்தது. இடையில் ஏதாவது செய்யலாம் என்று ஒரு சிறு முயற்சியாக 15 நிமிடத்தில் ஓடக்கூடிய ஒரு பைலட் பிலிம்  போல் இதை உருவாக்குவது எனத் திட்டமிட்டேன். ஆனால் அதன் கதை வளர்ந்து விரிவாகி, அந்தக் கதை தானே பெருக்கிக் கொண்டு ஒரு முழு நீளப் படமாக  52 நிமிடங்களில் ஓடக்கூடிய படமாக உருமாறி உருவாகியுள்ளது.



 



நான் எடுத்துக்கொண்ட கதை அதன் வீரியத்தால் பல பிரச்சினைகளைத் தாண்டி முழுப் படமாக வடிவம் பெற்று இன்று பார்த்தவர்கள் எல்லாம் பாராட்டுகிறார்கள். அதைப் திரையிட்டுக் காட்டிய போது அனைவரும் இப்படிக் கூட இதைச் சொல்ல முடியுமா என்று வியந்து பாராட்டினார்கள். திரைப்பட விழாக்களுக்கு அனுப்பிய போது பல இடங்களில்  விருதுகளைப் பெற்றுள்ளது.



 



கல்கட்டா சர்வதேச கல்ட்டு திரைப்பட விழாவில் இப்படத்திற்கு சிறந்த படம், சிறந்த  நடிகர் , சிறந்த இயக்குனர்,சிறந்த ஒளிப்பதிவு என மொத்தம் நான்கு விருதுகளைப் பெற்றது. அந்தத் திரைப்பட விழாவில் தான் விஜய் சேதுபதியின் மாமனிதன் படத்திற்கும் விருதுகள் கிடைத்தன என்பது குறிப்பிடத்தக்கது .



 



அதேபோல தாகூர் சர்வதேச திரைப்பட விழா, சிங்கப்பூர் திரைப்பட விழா, டோக்கியோ, இத்தாலி ரோம்,அமெரிக்கன் கோல்டன் பிக்சர்ஸ் திரைப்பட விழாக்கள் என்று சர்வதேச திரைப்பட விழாக்களில்  இதுவரை 17 விருதுகள் இந்த படத்திற்கு கிடைத்திருக்கின்றன. 52 நிமிடங்களில் ஒரு முழு படத்திற்கான  திருப்தியை இப்படம் பார்வையாளர்களுக்கு வழங்கும் வகையில் இது உருவாகி உள்ளது.



 



இப்படத்தில் அறிமுகம் ஆகியுள்ள கதாநாயகனுக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது .இந்தப் படத்தில் இன்னொரு கதாநாயகனாக நடித்துள்ள பூ ராமு அவர்களின் நடிப்பும் பேசப்படும் .



 



நாங்கள் ஒரு புது படக் குழுவாக இருந்தாலும் கதையையும் இந்த முயற்சியையும் ஊக்கப்படுத்தும் வகையில் எங்கள் மீது நம்பிக்கை வைத்து எங்களுக்கு அவர் கொடுத்த ஒத்துழைப்பு மறக்க முடியாதது .அவரது இறப்பு எங்களைப் போல வளரும் இளம் இயக்குனர்களுக்கு பெரிய இழப்புதான்.



 



படத்தை முடித்து திரையிட்டுக் காட்டிய போது பலரும் கொடுத்த பாராட்டுகளும் வாழ்த்துகளும் எங்களுக்குப் பெரிய உற்சாகத்தைக் கொடுத்தன. திரையிடப்படும் திரைப்பட விழாக்களில் கிடைத்து வரும் விருதுகளும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்கிற நம்பிக்கையை எனக்கு அளித்து வருகிறது." என்கிறார் இயக்குநர் யான் சசி.



 



 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா