சற்று முன்

நல்ல நோட்டு தான் கள்ள நோட்டு! - இயக்குனர் எம் ஜி. ராயன்   |    இசை அசுரனின் மயக்கும் மெலோடியாக 'வீர தீர சூரன்- பார்ட் 2' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!   |    'டி என் ஏ' திரைப்படத்தின் டீசர் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் தனுஷ்   |    ஜல்லிக்கட்டு நிகழ்வுகளுடன் இணைந்து பொங்கலைக் கொண்டாடுகிறது ZEE5 !   |    மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அகத்தியா கேம் மற்றும் இரண்டாவது சிங்கிள்!   |    அவர் ஒரு லெஜெண்ட் என்பது அவரே உணராமல் இருக்கிறார் - இயக்குநர் கிருத்திகா உதயநிதி   |    நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் திரையுலகில் இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கும் 'நேசிப்பாயா'   |    நடிகர் தனுஷ் வெளியிட்ட 'கிங்ஸ்டன்' திரைப்படத்தின் டீசர்!   |    பொங்கல் பண்டிகைக் கொண்டாட்டமாக ஜனவரி 14 உலகமெங்கும் வெளியாகும் 'தருணம்'   |    ராக்கிங் ஸ்டார் யாஷின் 39 வது பிறந்தநாளை முன்னிட்டு, ரசிகர்களுக்கு அசத்தலான விருந்து!   |    ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் 'கிங்ஸ்டன்' படத்தின் பர்ஸ்ட் லுக்   |    ராக்கிங் ஸ்டார் யாஷ் பிறந்த நாளை முன்னிட்டு அசத்தலான 'டாக்ஸிக்' பட கிளிம்ப்ஸை வெளியிடவுள்ளார்   |    அஜித் சாரால் தான் இந்தப்படம் பொங்கலுக்கு வருகிறது! - 'மெட்ராஸ்காரன்' பட தயாரிப்பாளர் B.ஜெகதீஷ்   |    மேஸ்ட்ரோ யுவன் ஷங்கர் ராஜாவின் அற்புதமான இசையில் 'அகத்தியா' பட முதல் சிங்கிள் பாடல்!   |    படப்பிடிப்பு முடிவடைந்த சசிகுமார் - சிம்ரன் நடிக்கும் ஃபீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னர்!   |    பாடலாசிரியரும் திரைப்பட இயக்குநருமான பா.விஜய் இயக்கியுள்ள 'அகத்தியா' வெளியீடு அறிவிப்பு!   |    வெளிநாடுகளில் புகழ் பெற்ற OTT தளம் ஜனவரி 2025 முதல் இந்தியாவிலும்!   |    நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள “எமகாதகி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!   |    பத்து வயதுப் பெண் குழந்தைக்கு நேர்ந்த கொடுமையை அடிப்படையாகக் கொண்ட 'துணிந்தவன்'   |    அம்பிகா மேடம் பாராட்டியது எனக்கு விருதாக கருதுகிறேன் - 'எல்லாம் நன்மைக்கே' பட இயக்குனர்   |   

சினிமா செய்திகள்

விஜய்யின் மாஸ்டர் பட தயாரிப்பாளர் தனது அடுத்த படத்தை வெளியிட முடியாத அவல நிலை!
Updated on : 01 September 2022

தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ அவர்கள் "எஸ்தல் எண்டர்டெய்னர்" நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கும் திரைப்படம் "அழகிய கண்ணே". இத்திரைப்படத்தை இயக்குநர் சீனு ராமசாமியின் தம்பி மற்றும் துணை இயக்குனர் R.விஜயகுமார் இயக்குகிறார்.



 



திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் கதாநாயகனாகவும் இவருக்கு ஜோடியாக சஞ்சிதா ஷெட்டியும் நடிக்கின்றனர். மக்கள்செல்வன் விஜய்சேதுபதி மற்றும் இயக்குநர் பிரபுசாலமன் ஆகியோர் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார்கள். 



 



பல திருப்பங்கள் கொண்ட ஒரு இளைஞனின் காதல் கதையை மையமாக கொண்ட இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் சிங்கம்புலி, இயக்குநர் ராஜ்கபூர், காதல் சுகுமார், விஜய் டிவி ஆன்டிருவ்ஸ் , அமுதவானன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.



 



கவிப்பேரரசு வைரமுத்து பாடல்கள் எழுத, N.R.ரகுநந்தன் இசையமைக்கிறார்.  காடன் திரைப்பட ஒளிப்பதிவாளர் A.R.அசோக் குமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பினை பிரபல படத் தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத்தின் மாணவர் சங்கத் தமிழன் கவனிக்கிறார். சண்டை பயிற்சி ஸ்டண்ட் சில்வா.



 



இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழிநுட்ப வேலைகள் அனைத்தும் முடிவடைந்து கடந்த ஒரு வருடமாக ரிலீசுக்கு தயாராக உள்ளது. ஆனால் படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோவால் இந்த  படத்தை வெளியிட முடியவில்லை. 



 



தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தை தயாரித்த தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ சிறிய படமான "அழகிய கண்ணே" படத்தை தயாரித்து வெளியிட முடியாமல் தத்தளித்துக்கொண்டிருக்கிறார். 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா