சற்று முன்

‘பிளாக்மெயில்’ படம் த்ரில்லர் என்பதையும் தாண்டி ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகி உள்ளது   |    ரசிகர்களிடையே வானளாவிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள 'கிங்டம்' ட்ரைலர்!   |    படம் வெளியானதற்கு பிறகு நிச்சயம் இயக்குநரின் வேலை பேசப்படும் - இணைத் தயாரிப்பாளர் கலை அரசு   |    'பிளாக்மெயில்' உணர்வும், உற்சாகமும் சரியாக கலந்த ஒரு படம் - நடிகை பிந்து மாதவி   |    வேலு பிரபாகரன் கொடுத்த ஒரு புத்தகம் தான் என்னை சிந்திக்க தூண்டியது! - நடிகர் சத்யராஜ்   |    பிரமாண்டமாக அரங்கேறும் 'ராக் ஸ்டார் அனிருத்தின் #Hukum சென்னை இசை நிகழ்ச்சி!   |    தமிழில் வெற்றியைத் தொடர்ந்து தெலுங்கு இந்தி மொழிகளிலும் வெளிவரும் ‘சட்டமும் நீதியும்’!   |    மூன்றாவது படத்துக்கே பண்டிகை தின ரிலீஸ் எனும் உயர்வை பெற்றிருக்கும் பிரதீப் ரங்கநாதன்!   |    தன்யா ரவிச்சந்திரன் நடிக்கும் விறுவிறுப்பான கிரைம் திரில்லர் 'றெக்கை முளைத்தேன்'   |    கோவையை கலக்கப் போகும் வித்யாசாகர், விஜய் ஆண்டனி   |    ‘பிளாக்மெயில்’ நிறைய த்ரில், ஆச்சரியம் மற்றும் எண்டர்டெயின்மெண்ட் நிறைந்த படம்   |    தரமான கதைகளுக்காகவே திரைப்படம் தயாரிக்கிறேன்! - 'அந்த 7 நாட்கள்' தயாரிப்பாளர் முரளி கபீர்தாஸ்   |    'மிராய்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் 'வைப் இருக்கு பேபி'!   |    ஏஐ மூலம் உருவாக்கிய ஒரு முழு இசை வீடியோ ஆல்பம், இயக்குநர் அசத்தல்!   |    15 ஆண்டுகளுக்கு பிறகு திடீரென சமூக ஊடகங்களில் வைரல் ஆகியுள்ள 'பலே பாண்டியா' பட பாடல்!   |    'காந்தாரா: சாப்டர் 1 ' படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு   |    'பெத்தி' படத்திற்காக நம்ப முடியாத வகையில் தன் உடலை செதுக்கும் 'குளோபல் ஸ்டார்' ராம் சரண்'!   |    ZEE5-ல் ‘சட்டமும் நீதியும்’ சீரிஸ் இலவசமாக கண்டுகளிக்கலாம்!   |    சின்ன படங்கள் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது - முனீஷ்காந்த்   |    கோயம்புத்தூரில் நடைபெற்ற ஆல் இந்தியா ஆல் ஸ்டார் நவகோடி நினைவு கோப்பை நிகழ்வு!   |   

சினிமா செய்திகள்

யோகிபாபு நாயகனாக நடித்திருக்கும் திரில்லர் காமெடி திரைப்படம் 'ஷீ'
Updated on : 05 September 2022

Netco Studios சார்பில் நியாஷ் & கார்த்திக் மற்றும் ATM Productions T மதுராஜ் நிறுவனங்கள் தயாரிப்பில் இயக்குநர் கல்யாண் இயக்கத்தில் யோகிபாபு நாயகனாக நடித்திருக்கும் திரில்லர் காமெடி திரைப்படம் “ஷீ”. இப்படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் சாம் CS இசையமைத்துள்ளார். புதுமையான திரைக்கதையில் ஒரு அருமையான திரில் பயணமாக உருவாகியுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவினில் திரைப்பிரபலங்கள் மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர். 



 



இவ்விழாவினில்..



 



தயாரிப்பாளர் நியாஷ் கூறியதாவது...



 



தமிழ் சினிமாவில் சிறந்த படங்களை தருவதை மட்டுமே நோக்கமாக கொண்டு தயாரிப்பில் இயங்கியுள்ளோம். எங்களது முதல் திரைப்படமாக கல்யாண் இயக்கத்தில் ‘ஷூ’ திரைப்படம் உருவானது எங்களுக்கு மகிழ்ச்சி. அடுத்து பல திரைப்படங்களை வரிசையில் வைத்துள்ளோம். உங்களுடைய ஆதரவு எங்களுக்கு தேவை.  தொடர்ந்து நல்ல படங்கள் தருவோம் நன்றி.



 



தயாரிப்பாளர் கார்த்திக் கூறியதாவது...



 



இது எங்களுடைய முதல் திரைப்படம். இது  குழந்தைகளை மையமாக வைத்து உருவாக்கபட்ட கதை. இந்த படத்தை இயக்குனர் கல்யாண் மிகவும் சிரமப்பட்டு சிறப்பாக உருவாக்கியுள்ளார். இந்த படத்தை தியேட்டரில் நீங்கள் பார்க்க வேண்டும் என்று நான் கேட்டுகொள்கிறேன்.



 



நடிகை ஷஞ்சிதா ஷெட்டி கூறியதாவது...



 



படத்தின் தலைப்பு ஷூ என்று இருந்தாலும், இந்த படத்தின் கரு அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்றாக இருக்கிறது. குழந்தை கடத்தலை மையமாக வைத்து உருவாக்கபட்ட இந்த கதை இந்த சமூகத்திற்கு மிக முக்கியமானது. பெண்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதும், மரியாதை கொடுப்பதும் மிக அவசியமான ஒன்று. இந்த படம் வெற்றியடைய எனது வாழ்த்துகள். 



 



ஜாக்குவார் தங்கம் கூறியதாவது...



 



தயாரிப்பாளருக்கும், இயக்குனருக்கும் எனது வாழ்த்துகள். தொடர்ந்து தமிழ் திரைப்படங்களை எடுக்க வேண்டும் என்று இந்த தயாரிப்பாளர்களிடம் நான் கேட்டுகொள்கிறேன். இந்த படம் நிச்சயமாக வெற்றியடைந்தே தீரும்.  அனைவருக்கும் வாழ்த்துகள்.  



 



நடிகை கோமல் ஷர்மா கூறியதாவது...



 



இது போன்ற கதைக்களத்தை உருவாக்கி அதை திரைப்படமாக மாற்றுவது மிகவும் சவாலான விஷயம், இப்படம் உருவாக தயாரிப்பாளர் தான் காரணம். சமூக கருத்துகள் கொண்ட இந்த திரைப்படத்தை எடுத்ததற்கு கல்யாண் அவர்களுக்கு நன்றி. இப்போதைய சமூகத்திற்கு தேவையான கருத்துகளை கொண்ட திரைப்படமாக இது உருவாகியுள்ளது. படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.



 



இயக்குனர் விருமாண்டி கூறியதாவது...



 



எல்லா இயக்குனருக்கும் சமூக பொறுப்பு இருக்கிறது. இயக்குனர் கல்யாண் இது போன்ற படத்தை உருவாக்கியது மகிழ்ச்சி தரக்கூடிய விஷயம். இதுபோன்ற படங்களை தயாரிக்க முன்வந்த தயாரிப்பாளர் அவர்களுக்கு நன்றி. இந்த படத்திற்கு உங்கள் ஆதரவை தாருங்கள். 



 



பெப்சி சிவா கூறியதாவது...



 



இந்த படத்தின் தயாரிப்பாளர் தமிழ் சினிமாவிற்குள் முதன்முறையாக நுழைகிறார். அவருக்கு எனது வாழ்த்துகள், படத்தின் தொழில்நுட்ப கலைஞர்களும், நடிகர்களும் மிகப்பெரிய உழைப்பை கொடுத்துள்ளனர். இந்த படம் வெற்றி பெற்று அனைவருக்கும் மகிழ்ச்சி தரும். நன்றி. 



 



இயக்குனர் பாக்யராஜ் கூறியதாவது...



 



புது தயாரிப்பாளர்கள் தமிழ் சினிமாவிற்கு வருவது, ஆரோக்கியமான விஷயம். இயக்குனர் கல்யாண் தயாரிப்பாளர்களுக்கான இயக்குனர். யோகிபாபுவிற்கு இப்போது அதிக வரவேற்பு இருக்கிறது. அவர் இருப்பதனாலே படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். முக்கியமான தொழில்நுட்ப கலைஞர்களை வைத்து இந்த படத்தை உருவாக்கியது இந்த படத்திற்கு மேலும் ஒரு பலம். அதனால் இந்த படமும் நன்றாக வந்திருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. படம் வெற்றி பெற வாழ்த்துகள். 



 





 



இயக்குனர் கல்யாண் கூறியதாவது...



 



தயாரிப்பாளர் கடின உழைப்பை கொடுத்து இந்த படத்தை உருவாக்கியுள்ளனர். இந்த படத்தில் தொழில்நுட்ப கலைஞர்கள் உடைய பங்கு மிகப்பெரியது. இந்த படத்தில் நடித்துள்ள குழந்தை நட்சத்திரங்கள் உடைய நடிப்பு சிறப்பாக வந்துள்ளது. இந்த படம் கண்டிப்பாக வெற்றியடையும். படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்.  இங்கு வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. 



 



நக்கீரன் கோபால் கூறியதாவது...



 



இந்த படத்தின் கதைகரு தான் இந்த இசை வெளியீட்டிற்கு நான் வர காரணம். குழந்தை கடத்தல், பாலியல் குற்றங்கள் போன்றவை நடக்காமல் இருப்பதற்காக போராடும் நக்கீரன் சார்பில் இந்த விழாவிற்கு நான் வந்துள்ளேன். தொடர்ந்து நல்ல  திரைப்படங்களை எடுக்க தயாரிப்பாளருக்கு எனது வாழ்த்துகள். சமூகத்தில் பாலியல் குற்றம் சம்பந்தமான பிரச்சனை வந்தாலே முதலில் எங்களிடம் தான் வருகிறார்கள் அது பற்றிய உண்மையை நாம் தான் வெளிக்கொண்டுவர வேண்டியுள்ளது.  இது போன்ற திரைப்படங்கள் எடுக்க தனி தைரியம் தேவை. அந்த வகையில் இந்த திரைபடத்திற்கு எனது வாழ்த்துகள்.



 





இப்படத்தில் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, KPY பாலா, திலீபன் ஆகியோருடன்  மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.  இப்படத்தினை இயக்குநர் கல்யாண் இயக்கியுள்ளார். சாம் CS இசையமைத்துள்ளார். Netco Studios மற்றும் ATM Productions நிறுவனங்கள் சார்பில் நியாஷ், கார்த்திக் மற்றும் T மதுராஜ் தயாரித்துள்ள இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா