சற்று முன்
சினிமா செய்திகள்
சிபி சத்யராஜ் நடிக்கும் இன்வஸ்டிகேசன் திரில்லர் படத்தின் படப்பிடிப்பு இனிதே துவங்கியது !
Updated on : 05 September 2022
தமிழ் திரையுலகில் வளரும் இளம் நட்சத்திர நடிகர் சிபி சத்யராஜ் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதைக்களங்கள் மாறுபட்ட கதாப்பாத்திரங்களால் ரசிகர்களை அசத்தி வருகிறார். அவரது சமீபத்திய வெற்றிப்படங்கள் அவருக்கு விநியோக வட்டாரங்களில் ஒரு நல்ல பெயரை பெற்று தந்துள்ளது. தற்போது அடுத்ததாக Latha Babu & Durgaini of Duvin studios private limited சார்பில் தயாரிப்பாளர்கள் லதா பாபு & துர்க்கைனி தயாரிப்பில், இயக்குநர் இளையராஜா கலியபெருமாள் இயக்கத்தில் புரடக்சன் நம்பர் 1 படத்தில் நடிக்கவுள்ளார். இன்னும் தலைப்பிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 5 இன்று காலை படக்குழுவினர் கலந்துகொள்ள, எளிமையான பூஜையுடன் இனிதே துவங்கியது. இயக்குநர் இளையராஜா கலியபெருமாள் இதற்கு முன் இயக்குநர்கள் கணேஷ் விநாயக், ஜெகன் ராஜசேகர் மற்றும் வினோத் DL ஆகியோருடன் இணை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.
இன்னும் பெயரிடப்படாத இப்படம், ஒரு கொலையைச் சுற்றி நடக்கும் இன்வஸ்டிகேசன் திரில்லராக உருவாகிறது. இப்படத்தில் சிபி சத்யராஜ் மூன்று வித்தியாசமான தோற்றங்களில் தோன்றுகிறார். அவருக்கு ஜோடியாக எந்தப் பெண் முக்கிய கதாப்பாத்திரமும் இருக்காது, ஆனால் இப்படம் 25 முக்கிய கதாபாத்திரங்களைச் சுற்றி நகரும் வித்தியாசமான கதையில் உருவாகிறது.
இப்படத்தில் திலீப் (வத்திக்குச்சி புகழ்), கஜராஜ், ஆடுகளம் முருகதாஸ், ராஜ் அய்யப்பா (வலிமை), பழைய ஜோக் தங்கதுரை, விஜய் டிவி குரேஷி மற்றும் பல முக்கிய நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர்.
தொழில்நுட்ப குழுவில் கார்த்திக் வெங்கட் ராமன் (ஒளிப்பதிவு), சுந்தரமூர்த்தி KS (இசை), அருண் சங்கர் துரை (கலை), சக்தி சரவணன் (ஸ்டண்ட்ஸ்), லாரன்ஸ் கிஷோர் (எடிட்டிங்), ராஜ் (ஸ்டில்ஸ்), பாரதிராஜா (எக்ஸிகியூட்டிவ் மேனேஜர்), ஆகியோர் பணிபுரிகின்றனர்.
சென்னை நெடுஞ்சாலைகள் மற்றும் சென்னை மாநகரின் பல இடங்களில் ஒரே நேர கட்டமாக படமாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகள்
நல்ல நோட்டு தான் கள்ள நோட்டு! - இயக்குனர் எம் ஜி. ராயன்
'கள்ள நோட்டு 'படத்தின் நாயகனாக எம்.ஜி .ராயன், நாயகியாக மது,வில்லன்களாக குமார், மிப்புசாமி, வில்லியாக சுமதி, நாயகனின் நண்பனாக நா. ரஞ்சித்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் N.ராஜேந்திரன் ஆகியோரும் நடித்துள்ளனர்.
இப் படத்தினை எம்.ஜி. ராயன் எழுதி இயக்கியுள்ளார். சம்பத்குமார் ஏ ஒளிப்பதிவு செய்துள்ளார். முத்து கொடப்பா படத்தொகுப்பு செய்துள்ளார் .எம் ஜி ரா ஃபிலிம் பேக்டரி சார்பில் எம்.ஜி .ராஜேந்திரன் தயாரித்துள்ளார்.
வறுமையால் துரத்தப்பட்டவர்கள், பணத்தாசை பிடித்தவர்கள் இருவருமே கள்ள நோட்டு என்ற கறுப்புச் சகதிக்குள் சிக்கிக் கொள்வதுண்டு.அதிலிருந்து மீள முடியாமல் தவிப்பதுண்டு. அப்படிச் சிக்கிக் கொண்ட ஒருவனின் கதை தான் கள்ள நோட்டு என்கிற திரைப்படம்.
கள்ள நோட்டு படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் திரைப்படத்தினை இயக்கி உள்ள எம் ஜி. ராயன் பேசும்போது,
"கள்ள நோட்டு பற்றி எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படம் நன்றாக வந்திருக்கிறது. இது நிச்சயமாக வித்தியாசமான கதைக்களம் என்று நம்புகிறேன்.
இதில் கள்ள நோட்டு என்பதை விட நல்ல நோட்டு தான் கள்ள நோட்டு என்கிற கருத்தும் சொல்லப்பட்டுள்ளது. அது என்ன என்பதைப் படம் பாருங்கள் புரியும்.இதில் நாங்கள் அரசியல் எதுவும் பேசவில்லை, ஆனால் நாட்டு நடப்பைக் காட்டி இருக்கிறோம். சர்ச்சைகள் எதுவும் எழுப்பவில்லை, ஆனால் உண்மையைக் கூறியிருக்கிறோம் "என்றார்.
படத்தில் முக்கியமான கதாபாத்திரம் ஏற்று நடத்துள்ள நடிகை சுமதி பேசும் போது,
'நான் நிறைய படங்களில் நடித்திருக்கிறேன் .எனக்கு மறக்க முடியாத ஒரு படம் கள்ள நோட்டு. இதில ஒரு கதாநாயகிக்குரிய முக்கியத்துவத்தோடு என் பாத்திரம் அமைந்துள்ளது.
இயக்குநர் தனக்குத் திருப்தியான வகையில் காட்சிகள் வரும் வரை மீண்டும் மீண்டும் எடுத்தார்.ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து இந்தப் படத்தை செதுக்கியிருக்கிறார். இந்தப் படத்தின் வசனம் பேசப்படும். இந்த படத்தில் நான் கருங்காலி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.அது ஒரு கொடூரமான பாத்திரம். நடித்து முடித்து விட்டுப் பார்த்தபோது எனக்கே பயமாக இருந்தது . படத்தில் நான் சுருட்டு பிடித்து நடித்துள்ளேன் .அதற்காக நான் சிகரெட் பிடித்துப் பழகினேன்.அப்போது புகை மூக்கில் ஏறி ரொம்பவும் சிரமப்பட்டேன். ஆனால் அந்தக் கதாபாத்திரத்திற்காக நடித்துள்ளேன். படத்தை திரையரங்கு சென்று அனைவரும் பார்க்க வேண்டும்" என்றார்.
விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
இசை அசுரனின் மயக்கும் மெலோடியாக 'வீர தீர சூரன்- பார்ட் 2' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடிக்கும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற 'கல்லூரூம்..' எனும் முதல் பாடலும் , பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
முன்னணி நட்சத்திர இயக்குநரான எஸ். யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன்- பார்ட் 2' எனும் திரைப்படத்தில் சீயான் விக்ரம், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு , துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ஜி.கே. பிரசன்னா கவனிக்க, கலை இயக்கத்தை சி. எஸ். பாலச்சந்தர் மேற்கொண்டிருக்கிறார். ஆக்சன் திரில்லர் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை ஹெச் ஆர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் தற்போது முழு வீச்சில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் கிளிம்ப்ஸ் மற்றும் டீசர் வெளியாகி மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருந்தது. இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற ' கல்லூரூம்..' எனும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலை பாடலாசிரியர் விவேக் எழுத, பின்னணிப் பாடகி ஸ்வேதா மோகன் மற்றும் பின்னணி பாடகர் ஹரிசரண் ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். இசை அசுரனின் மயக்கும் மெலோடியாக உருவாகி இருக்கும் இந்த பாடலுக்கு இசை ரசிகர்களிடத்தில் ஆதரவும், வரவேற்பும் கிடைத்து வருகிறது.
'டி என் ஏ' திரைப்படத்தின் டீசர் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் தனுஷ்
தமிழின் முன்னணி நட்சத்திர நடிகரான அதர்வா முரளி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ' டி என் ஏ ' எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரையுலகின் பன்முக ஆளுமையான தனுஷ் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
'ஒரு நாள் கூத்து', 'மான்ஸ்டர்', ' ஃபர்ஹானா ' போன்ற வெற்றி படைப்புகளை இயக்கிய இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகி வரும் ' டி என் ஏ ' எனும் திரைப்படத்தில் அதர்வா முரளி, நிமிஷா சஜயன், பாலாஜி சக்திவேல், ரமேஷ் திலக் , விஜி சந்திரசேகர் , சேத்தன், ரித்விகா , கே பி , சுப்பிரமணியம் சிவா, கருணாகரன், 'பசங்க ' சிவக்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பார்த்திபன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஸ்ரீகாந்த் ஹரிஹரன் - சத்ய பிரகாஷ் - அனல் ஆகாஷ் - பிரவீண் சைவி - சஹி சிவா- ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். படத்தொகுப்பு பணிகளை வி.ஜே.சபு ஜோசப் கவனிக்க, கலை இயக்கத்தை சிவசங்கர் மேற்கொண்டிருக்கிறார். ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்கர் தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை ஒலிம்பியா மூவிஸ் எஸ். அம்பேத்கர் வழங்குகிறார்.
படத்தைப் பற்றி இயக்குநர் குறிப்பிடுகையில்,
'' திவ்யா - ஆனந்த் எனும் இரண்டு முதன்மையான கதாபாத்திரங்களின் உளவியலும், வாழ்வியலும் தான் இப்படத்தின் பிரதான அம்சம். இவர்கள் இருவரும் தினமும் பல காரணங்களால் இந்த சமூகத்தினரால் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். காயப்படுத்தப்பட்ட இந்த இரண்டு ஆன்மாக்களும் உணர்வுபூர்வமான தருணத்தில் சந்திக்கிறார்கள். அதன் பிறகு என்ன நடக்கிறது? என்பதுதான் இப்படத்தின் கதை. ஃபேமிலி என்டர்டெய்னராக உருவாகி இருக்கும் இந்தத் திரைப்படத்தில் ஐந்து இசையமைப்பாளர்களுடன் முதன்முறையாக பணியாற்றிருக்கிறேன். அனைத்து பாடல்களும், பின்னணி இசையும் சிறப்பாகவும், தனித்துவமாகவும் அமைந்திருக்கிறது. அதனால் படத்தின் இசை அனைத்து தரப்பு ரசிகர்களையும் நிச்சயம் கவரும். '' என்றார்.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த டீசரில் இடம்பெற்றிருக்கும் காட்சிகளும், இசையும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. இதனால் இதற்கு பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பும், ஆதரவும் கிடைத்து வருகிறது.
ஜல்லிக்கட்டு நிகழ்வுகளுடன் இணைந்து பொங்கலைக் கொண்டாடுகிறது ZEE5 !
இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி வீட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் மில்லியன் கணக்கானவர்களுக்குப் பன்மொழி கதைசொல்லியான ZEE5, இந்த பொங்கல் சீசனில் தமிழ்நாட்டின் அடையாளமான ஜல்லிக்கட்டு நிகழ்வுகளை, மக்களுக்கு நேரடியாகக் கொண்டு செல்வதை, அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது. இந்த ஆண்டு, ZEE5, 14 ஆம் தேதி அவனியாபுரத்திலும், 15 ஆம் தேதி பாலமேடு மற்றும் ஜனவரி 16 ஆம் தேதி அலங்காநல்லூரில் நடைபெறும் மதிப்புமிக்க ஜல்லிக்கட்டு நிகழ்வுகளுடன் இணைந்து பொங்கலைக் கொண்டாடுகிறது. ZEE5 தளத்தில், ஜல்லிகட்டு முழு நிகழ்வையும் பிரத்தியேகமாக நேரலை ஸ்ட்ரீம் செய்யும், இதன் மூலம் உலகளாவிய பார்வையாளர்கள் நம் பாரம்பரியம் மற்றும் கலாச்சார மகத்துவத்தை அனுபவிக்க முடியும் என்பதை உறுதிப்படுத்துகிறது.
பொங்கல் பண்டிகையின் போது நடைபெறும் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு, தமிழகத்தின் வீரம் மற்றும் கலாச்சாரப் பெருமையை உணர்த்துகிறது. இந்த வரலாற்றுப் பெருமைமிகு நிகழ்வை, நேரடியாக ஸ்ட்ரீமிங் செய்வதன் மூலம், ZEE5 இப்பகுதியின் வளமான பாரம்பரியத்தைக் கொண்டாடுகிறது, அதே நேரத்தில் இவ்விழாக்களை உலகளாவிய பார்வையாளர்களுக்குக் கொண்டு வருகிறது. பொங்கல் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ZEE5 ஆனது ₹49 மாதாந்திர சந்தா பேக்கை வழங்குகிறது, ZEE5 தளம் பார்வையாளர்களை வழங்கும் வகையில், தமிழ்நாட்டின் துடிப்பான பாரம்பரியங்கள் மற்றும் கதைகளைப் பிரதிபலிக்கும் பிரத்தியேக உள்ளடக்க வரிசையில் பல படைப்புகளை வழங்கி வருகிறது.
ZEE5 இன் தலைமை வணிக அதிகாரியும், ZEE என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் லிமிடெட்டின் தலைமை தொழில்நுட்பம் மற்றும் தயாரிப்பு அதிகாரியுமான சிவக்குமார் சின்னசாமி கூறுகையில்..,
“ZEE5 இல், நமது பன்முகத்தன்மை கொண்ட நம் நாட்டை வடிவமைக்கும் மரபுகள் மற்றும் மதிப்புகளைக் கொண்டாட, உறுதிகொண்டு செயல்பட்டு வருகிறோம். தமிழ்நாடு எங்களுக்கு மிக முக்கிய சந்தையாகும், இங்குள்ள பார்வையாளர்கள் பலவிதமான படைப்புகளை, சிறந்த கதைசொல்லலை ஆழமாகப் பாராட்டி வருகின்றனர். இந்தப் பொங்கலுக்கு, தமிழ் பேசும் பார்வையாளர்களுக்கு, கவனமாகத் தொகுக்கப்பட்ட உள்ளடக்க வரிசை மற்றும் பிரீமியம் பொழுதுபோக்கை அணுகக்கூடிய வகையில் ₹49 சிறப்புச் சந்தா சலுகை மூலம், முன்னுரிமை அளித்து வருகிறோம். இதுபோன்ற சின்னச் சின்ன நிகழ்வுகளுடனான எங்கள் தொடர்பின் மூலம், பிராந்திய கதைசொல்லல் மற்றும் இணையற்ற பொழுதுபோக்கிற்கான ZEE5 இன் அர்ப்பணிப்பை உயர்த்திக் காட்டும் அதே வேளையில், உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களுக்கு இந்த வளமான கலாச்சார பாரம்பரியத்தைக் கொண்டு செல்வதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.
ZEE5 இன் ஜல்லிக்கட்டு நிகழ்வுகளின் நேரடி ஸ்ட்ரீமிங், தமிழ்நாட்டின் நேசத்துக்குரிய மரபுகள் எல்லைகளைக் கடந்து செல்வதை உறுதிசெய்கிறது, இதனால் மில்லியன் கணக்கானவர்கள் தங்கள் வீடுகளிலிருந்து திருவிழாவின் கொண்டாட்டத்தையும் பெருமையையும் அனுபவிக்க முடியும். இந்த நிக்ழவு பிராந்திய கலாச்சாரங்களைக் கொண்டாடுவதற்கும், அர்த்தமுள்ள மற்றும் பொழுதுபோக்கு உள்ளடக்கம் மூலம், பல்வேறு பார்வையாளர்களை இணைப்பதற்கும் ZEE5 இன் அர்ப்பணிப்பை வலுப்படுத்துகிறது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அகத்தியா கேம் மற்றும் இரண்டாவது சிங்கிள்!
தமிழ்த் திரையுலகில் புதிய வரலாற்றைப் படைக்கும் வகையில், "அகத்தியா" படக்குழு, இரண்டு புதிய அற்புதமான முயற்சிகளைத் தொடங்கியுள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அகத்தியா கேம் மற்றும் இரண்டாவது சிங்கிள் “என் இனிய பொன் நிலாவே.” பாடல் என இரண்டும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பிரம்மாண்டத் திரைப்படம் ஜனவரி 31, 2025 அன்று பான்-இந்திய வெளியீடாக வெளியாகவுள்ளது.
தமிழ் சினிமா வரலாற்றில் முதன்முறையாக, திரைப்படத்தின் கதாபாத்திரங்கள் மற்றும் கதைக்களத்தின் அடிப்படையில் ஒரு விளையாட்டு ஆப் (game) உருவாக்கப்பட்டுள்ளது. அகத்தியாவின் ஏஞ்சல்ஸ் அண்ட் டெவில்ஸ் இடம்பெறும் இந்த கற்பனை-சாகச விளையாட்டு, எல்லா வயதினரும் விளையாடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த விளையாட்டு படத்தின் கதை மீதும், கதைக்களத்தின் மீதும் ஒரு முழுமையான பார்வையை வழங்கி, படத்தின் மீதான ஆவலைத் தூண்டுவதாக அமைந்துள்ளது.
இந்த கேம் ஆப் வடிவமைப்பின் இணை தயாரிப்பாளரும் தொலைநோக்கு பார்வையாளருமான அனீஷ் அர்ஜுன் தேவ் கூறியதாவது..,
“இந்த கேம் அனைவரும் எளிமையாக விளையாட வேண்டும் என்பதை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது, இதனால் முதல் முறையாக விளையாடுபவர்கள் கூட சிரமமின்றி வெகு எளிதாக இந்த விளையாட்டை அனுபவிக்க முடியும். ஜீவா மற்றும் அர்ஜுன், ஏஞ்சல்ஸ் போன்ற கதாபாத்திரங்கள், மற்றும் எட்வர்ட் மற்றும் அவரது கூட்டாளிகள் டெவில்ஸ் போன்ற கதாபாத்திரங்களுடன், இந்த கேம் பார்வையாளர்களைக் கவரும் அதே நேரத்தில், திரைப்படத்தின் தனித்துவமான கதைக்களம் பற்றிய தனித்துவமான பார்வையையும் வழங்கும் என்றார்.
படத்தின் நாயகன் நடிகர் ஜீவா இது குறித்துக் கூறியதாவது..
“என்னை ஒரு வீடியோ கேமின் ஒரு பகுதியாகப் பார்ப்பது உண்மையில் நம்பமுடியாத அனுபவம். கேமிங் ரசிகனாக இது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தந்துள்ளது. இந்த முயற்சி அகத்தியா திரைப்படத்தை இளைய தலைமுறையினரிடம் வெகுவாக எடுத்துச் செல்லும். இந்த கேம் திரைப்படம் குறித்த ஆர்வத்தைத் தூண்டும் என்றும் நான் நம்புகிறேன்.
படத்தின் முன்னணி நடிகையான ராஷி கண்ணா கூறியதாவது.. ,
“ஒரு படத்தை விளம்பரப்படுத்த, இது முற்றிலும் புதுமையான வழி. கேமிங் மூலம் மில்லினியல்கள் மற்றும் ஜென் Z ஜி பார்வையாளர்களைக் கவரும் புதிய பொழுதுபோக்கு வழியை நாங்கள் உருவாக்கியிருக்கிறோம். ஒரு அருமையான முயற்சியின் அங்கமாக இருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்."
இந்த பிரமாண்டமான நிகழ்வினில் ஒரு பகுதியாகப் பார்வையாளர்களை மகிழ்விக்கும் வகையில், படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலை வெளியிட்டுள்ளது படக்குழு. திரை ஆளுமை மேஸ்ட்ரோ இளையராஜாவிடமிருந்து இந்த பாடல் உருவாகியுள்ளது. இளையராஜாவின் இசையில், காலத்தால் அழியாத கிளாசிக் பாடலான “என் இனிய பொன் நிலாவே” பாடலை, லிட்டில் மேஸ்ட்ரோ யுவன் ஷங்கர் ராஜா வெகு அழகாக மறு உருவாக்கம் செய்துள்ளார்.
இது குறித்து இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா கூறியதாவது.. ,
“விண்டேஜ் பாணியில் ஒரு பாடலை உருவாக்குவது குறித்து, பா.விஜய் என்னை அணுகியபோது, அதைப் பற்றி யோசிக்க ஒரு நாள் எடுத்துக் கொண்டேன். அடுத்த நாள், "என் இனிய பொன் நிலாவே" பாடலை மறு உருவாக்கம் செய்யலாம் என, என் மனதிலிருந்த ஐடியாவை அவரிடம் சொன்னேன். அவரது முகத்தில் உடனடியாக பெரும் உற்சாகம் தெரிந்தது. இப்பாடலை முதலில் பாடியவர் கே.ஜே. யேசுதாஸ், இந்த புதிய பதிப்பை அவரது மகன் விஜய் யேசுதாஸ் மற்றும் பிரியா ஜெர்சின் ஆகியோர் அழகாக உயிர்ப்பித்துள்ளனர். முதன் முதலாக இப்பாடலை உருவாக்கிய அதே இசைக்கலைஞர்களுடன் மீண்டும் இணைந்து, இப்பாடலை உருவாக்கினோம். காலத்தால் அழியாத ஒரு தலைசிறந்த படைப்பிற்கான அஞ்சலியாக இந்தப் பாடல், என் இதயத்தில் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது. மேலும் எனது தந்தையின் இசை எப்போதும் வழங்கிய அதே மேஜிக்கை இப்பாடல் மீண்டும் உருவாக்கும் என்று நான் நம்புகிறேன். இது வெறும் பாடல் அல்ல; இது காலத்தைக் கடந்து, தலைமுறைகளை இணைக்கும் இசையின் கொண்டாட்டம்." இப்பாடலை மீண்டும் உருவாக்கியதைப் பெருமையாக உணர்கிறேன்.
இயக்குநர் பா.விஜய் கூறியதாவது..,
“இந்தப் பாடல் என் மனதிற்கு மிகவும் நெருக்கமானது. இளையராஜா சாரின் மாஸ்டர் பீஸை, யுவனின் நவநாகரீக இசையுடன் கலப்பது, இந்த மெல்லிசை பாடலின் புத்திசாலித்தனத்தனமான கொண்டாட்டமாகும். இந்தப் பொங்கலில் ரசிகர்களுக்கு இது சரியான பரிசாக இருக்கும்.
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனலின் தலைவரும், தொலைநோக்கு தயாரிப்பாளருமான டாக்டர். ஐசரி கே. கணேஷ் கூறியதாவது… “அகத்தியா ஒரு பிரம்மாண்ட ஃபேண்டஸி முயற்சியாகும், இதன் ஒவ்வொரு அம்சமும் உலகளாவிய தரத்துடன் கூடிய சினிமா அனுபவத்தை வழங்குவதற்காக, வடிவமைக்கப்பட்டுள்ளது. திரைப்படத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு விளையாட்டை உருவாக்கும் கருத்தை, எனது நல்ல நண்பரும் கூட்டாளருமான அனீஷ் அர்ஜுன் தேவ் எனக்கு முதலில் முன்மொழிந்தபோது, முதலில் நான் ஆச்சரியப்பட்டேன், அந்த ஐடியாவை முழுமையாகப் புரிந்துகொள்ள ஒரு நாள் தேவைப்பட்டது. இருப்பினும், அதன் புதுமை மற்றும் படத்தைப் பிரபலப்படுத்த அற்புதமான வழி அது தான் என்பதை விரைவாக உணர்ந்தேன், உடனடியாக எனது ஒப்புதலை அளித்தேன். பார்வையாளர்களை மேலும் மகிழ்விப்பதற்காக, குறிப்பாகப் பொங்கல் பண்டிகையின் போது, புதிய தலைமுறைக்காக மறுவடிவமைக்கப்பட்ட “என் இனிய பொன் நிலாவே” என்ற ஐகானிக் பாடலை வெளியிட முடிவு செய்தோம். அகத்தியாவின் மூலம் இந்த சிறப்பான இசைப் பயணத்தைச் சாத்தியமாக்கிய பழம்பெரும் ஆளுமை இசைஞானி இளையராஜா சார் மற்றும் திறமை மிகு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தென்னிந்தியாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில், டாக்டர் ஐசரி கே. கணேஷ் அவர்களுடன் அனீஷ் அர்ஜுன் தேவ் தலைமையிலான வாமிண்டியா (வைட் ஆங்கிள் மீடியா பிரைவேட் லிமிடெட்) இணைந்து, அகத்தியா திரைப்படத்தை உருவாக்கி வருகிறது. டீஸரும் இப்போது வெளியாகியுள்ள இரண்டு பாடல்களும் மிகுந்த உற்சாகத்தை உருவாக்கி, 2025 ஆம் ஆண்டில் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படமாக இருக்கும் எனும் எதிரப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மர்மம், திகில் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான கதை ஆகியவற்றின் வசீகரிக்கும் கலவையுடன், அகத்தியா ஒரு அற்புதமான திரை அனுபவமாக விஷுவல் விருந்தாக உருவாகியுள்ளது. இப்படம் ஜனவரி 31, 2025 இல் பிரம்மாண்டமாக வெளியாகிறது.
அவர் ஒரு லெஜெண்ட் என்பது அவரே உணராமல் இருக்கிறார் - இயக்குநர் கிருத்திகா உதயநிதி
ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில், இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் ரொமான்ஸ் திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் “காதலிக்க நேரமில்லை”. பொங்கல் கொண்டாட்டமாக ஜனவரி 14 அன்று இப்படம் திரைக்கு வருகிறது. இப்படத்தின் வெளியீட்டை ஒட்டி, படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து, படம் குறித்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
இந்நிகழ்வினில்…
ரெட் ஜெயன்ட் மூவீஸ் சார்பில் அர்ஜூன் துரை பேசியதாவது....
காதலிக்க நேரமில்லை ஜனவரி 14 ரிலீஸாகிறது. ஜெயம் ரவி சார் நீண்ட காலம் கழித்து திரையில் ரொமான்ஸ் செய்துள்ளார். பார்க்க மிக நன்றாக உள்ளது. நித்யா மேனன் ரொம்ப செலக்டிவாக தான் கதாப்பாத்திரங்கள் செய்கிறார். திருச்சிற்றம்பலம் படத்திற்குப் பிறகு, இந்தப்படம் மிக முக்கியமானதாக இருக்கும். ஜெயம் ரவி, நித்யா மேனன் ஜோடி உங்களைக் கவர்வார்கள். வினய் மிக வித்தியாசமான ரோல் செய்துள்ளார். அனைவரும் நன்றாக நடித்துள்ளனர். கிருத்திகா எல்லோரும் பார்த்து ரசிக்கும்படி அருமையான ரொமான்ஸ் படம் தந்துள்ளார். அனைவரும் படம் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.
கலை இயக்குநர் சண்முகராஜா பேசியதாவது....
என்னுடைய முதல் மேடை இது. இந்த இடத்திற்கு வர ரொம்ப கஷ்டப்பட்டுள்ளேன். என்னை நம்பி இப்படத்தைத் தந்த கிருத்திகா மேடமிற்கு நன்றி. படம் மிகச் சிறப்பாக வந்துள்ளது,. அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.
ஒளிப்பதிவாளர் கேவ்மிக் ஆரி பேசியதாவது...
2 வருடத்திற்கு முன் என்னிடம் இந்த திரைக்கதை தந்தார் கிருத்திகா. சில பக்கங்கள் படித்துவிட்டு அவரிடம் நிறையப் பேசினேன். அவர் எப்படி இந்த திரைக்கதை எழுதினார் என ஆச்சரியமாக இருந்தது. ஜெயம் ரவி சார் சிங்கப்பெண்களின் படைப்பு. ஜெயம் ரவி மிக மெச்சூர்டான பெர்ஃபார்மன்ஸ் தந்துள்ளார். நித்யா மேனன் பெர்ஃபெக்டான பெர்ஃபார்மன்ஸ் தந்துள்ளார். அவர் ஒரு ஏஞ்சலிக் ஆக்டர். வினயை உன்னாலே உன்னாலே பட்டத்திற்குப் பிறகு பார்க்கிறேன். மிக அழகாக நடித்துள்ளார். மிக அழகான படம் தந்துள்ளோம். பார்த்துவிட்டு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.
எடிட்டர் லாரன்ஸ் கிஷோர் பேசியதாவது...
"காதலிக்க நேரமில்லை" ரொம்ப ஸ்பெஷலான படம், எனக்கு ரொம்ப பிடிச்ச ஜானர். கிருத்திகா மேடமுக்கும் எனக்கும் பெரிய ஜர்னி. மேடம் கதை எழுதியபோதே ரொம்ப போல்டா மெச்சூர்டா, இதை எழுதியுள்ளீர்கள் என்றேன். அதை விஷுவலாக அவர்கள் எடுத்திருந்ததைப் பார்த்த போது, இன்னும் ஆச்சரியப்பட்டேன். ரொம்பவும் மெச்சூர்டாக படம் எடுத்திருந்தார்கள். மேடம் எடுத்த படத்திலேயே இது தான் பெஸ்ட். எடிட்டிங்கில் எனக்கு நிறைய ரெபரென்ஸ் தந்தார்கள். மிக அற்புதமான நடிகர்கள், ஜெயம் ரவி, நித்யா மேனன், வினய் சார் மூவருக்கும் நான் பயங்கர ஃபேன். பானு, படத்தில் ஒரு இடத்தில் அட்டகாசமாக நடித்துள்ளார். தொழில் நுட்ப கலைஞர்கள் எல்லோரும் முழு உழைப்பைத் தந்துள்ளனர். எல்லா வேலையும் முடிந்த பிறகு தலைவன் ஏ ஆர் மியூசிக் பார்த்தேன் வேற லெவவில் இருந்தது. ஒரு நல்ல படம் தந்துள்ளோம் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.
நடிகை T J பானு பேசியதாவது....
காதலிக்க நேரமில்லை, இந்தக்கதையை மிக அன்பாக, மிக இயல்பாக என்னிடம் சொன்னார்கள், எனக்கு மிக அருமையான கேரக்டர். எல்லோரும் ரொம்ப ஃபிரண்ட்லியா இந்தப்படம் செய்தோம். கிருத்திகா மேடமிற்கு நன்றி. அவர் கன்வின்ஸ் செய்யாமல் இருந்திருந்தால், இந்தப்படம் செய்திருக்க மாட்டேன். படத்தை அட்டகாசமாக எடுத்துள்ளார். அனைவரும் பாருங்கள் நன்றி.
நடிகர் வினய் பேசியதாவது....
பட இயக்குநர் கிருத்திகா எனக்கு மிக வித்தியாசமான ரோல் தந்துள்ளார். நான் எப்போதும் இயக்குநரைச் சார்ந்து தான் இருப்பேன். என் கேரியரில் முதல் முறையாகப் பெண் இயக்குநர் படத்தில் நடித்துள்ளேன். மிக அட்டகாசமாக இயக்கியுள்ளார். செட் அவ்வளவு ஜாலியாக இருந்தது. செட்டை அவர் கண்ட்ரோல் செய்த விதம் வியப்பைத் தந்தது. சின்ன சின்ன நகைச்சுவை காட்சிகள் வைத்து சமூக கருத்துக்கள் சொல்லியுள்ளார். இந்தப்படம் மூலம் ஏ ஆர் ரஹ்மானை முதன் முதலில் சந்தித்தேன். டிஜே பானுவை இந்தப்படத்தில் சந்தித்தேன். மிக அற்புதமான நடிகை. ஜெயம் ரவி மிக நல்ல நடிகர். எனக்கு டான்ஸ் ஆடவே வராது. ஆனால் ரவி மிக அழகாக நடனம் ஆடுகிறார். ஒளிப்பதிவாளர் எங்கள் எல்லோரையும் அழகாகக் காட்டியுள்ளார். படம் மிக நன்றாக வந்துள்ளது அனைவருக்கும் நன்றி.
நடிகை நித்யா மேனன் பேசியதாவது....
எப்போதும் நான் கதை கேட்கும் போது, இந்தக்கதை அப்படியே திரையில் வருமா ? எனும் சந்தேகம் இருக்கும். இப்படத்தில் அது அற்புதமாக வந்துள்ளது. கிருத்திகா எனக்கு நல்ல ஃப்ரண்ட். அவர் ஒரு ரைட்டராக, இயக்குநராகக் கலக்கியுள்ளார். இந்த செட்டில் அனைவருமே எந்த ஈகோ இல்லாமல் இயல்பாக இருந்தார்கள், படம் நன்றாக வர அதுவும் காரணம். இது ரோம் காம் இல்லை நிறைய டிராமா படத்தில் இருக்கிறது. கிருத்திகா அதை அருமையாகக் கையாண்டுள்ளார். இந்தப்படம் செய்தது எனக்குப் பெருமை. படம் எனக்குப் பிடித்துள்ளது, உங்களுக்கும் பிடிக்கும். பொங்கலுக்கு வருகிறது, படம் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.
நடிகர் ஜெயம் ரவி பேசியதாவது....
மிக அழகான மேடை இவர்களுடன் வேலை பார்த்தது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த அழகை மிக அழகாகப் படம்பிடித்துள்ளார் இயக்குநர். டைட்டிலே அட்டகாசமாக இருந்தது. கிளாசிக் பட டைட்டில் கிடைத்தது மகிழ்ச்சி. படத்தில் நித்யா மேனன் பேருக்குப் பிறகு ஏன் உங்கள் பெயர் எனக் கேட்டார்கள், என் மீதான கான்ஃபிடண்ட் தான். ஏன் கூடாது திரை வாழ்க்கையில் நிறைய விசயங்களை உடைத்துள்ளேன் இது மட்டும் ஏன் கூடாது. ஷாருக்கான் சார் பார்த்துத் தான் இந்த முடிவை எடுத்தேன். பெண்கள் இல்லாமல், நம் உலகம் இல்லை அவர்கள் இல்லாமல் நாம் இல்லை இனி பெண் இயக்குநர்கள் படத்தில் இதை ஃபாலோ செய்வேன். எனக்கு மிக கஷ்டமான காலம் இருந்தது, நான் நடித்த படங்கள் ஓடவில்லை, நான் என்ன தப்பு செய்தேன் என யோசித்தேன். என் மீது தவறு இல்லாதபோது ஏன் துவண்டு போக வேண்டும் எனத் தோன்றியது. அடுத்த வருடமே என் மூன்று படம் ஹிட். துவண்டு போவது தோல்வியில்லை, விழுந்தால் எழாமல் இருப்பது தான் தோல்வி. நான் கண்டிப்பாக இந்த வருடம் மீண்டு வருவேன். அடுத்தடுத்து மிக நல்ல வரிசையில் படம் செய்து வருகிறேன். காதலிக்க நேரமில்லை, பாலசந்தர் சார் தன்னுடைய படங்களில் பல விசயங்களை சர்வசாதாரணமாக உடைத்திருப்பார். அதே போல் ஜென் ஜி தலைமுறையில் கிருத்திகா அதைச் செய்துள்ளார். இது யூஏ சர்டிபிகேட் படம் அனைவரும் குடும்பத்துடன் வந்து பார்த்து, ரசியுங்கள் நன்றி.
இயக்குநர் கிருத்திகா உதயநிதி பேசியதாவது...
மீடியா நண்பர்கள் எனக்கு எப்போதும் ஆதரவு தந்துள்ளீர்கள், இந்த படத்திற்கும் ஆதரவு தாருங்கள். ஜெயம் ரவியிடம் முதன் முதலில் கதை சொன்ன போது, நார்மலாகவே எல்லா ஹீரோக்களும் கதை சொன்னால், எத்தனை கன்ஸ் வரும், எத்தனை கத்தி, எத்தனை சண்டை வரும் எனக் கேட்பார்கள், ஆக்சன் பட ஹீரோக்கள் மற்ற ஜானர் படம் பண்ணத் தயங்குவார்கள், நான் நம் படத்தில் ஒரு சின்ன கத்தி கூட இல்லை என்று சொன்னேன். ஆனால் நான் செய்கிறேன் என்று என்னை நம்பி வந்தார். எந்த இடத்திலும் அவர் யோசிக்கவே இல்லை. மிக அருமையாக நடித்துள்ளார். அவர் என்னை பாலசந்தர் சாருடன் ஒப்பிட்டது ரொம்ப கூச்சமாக உள்ளது. நான் அவரின் பெரிய ஃபேன், அவருடன் ஒப்பிட்டது மகிழ்ச்சி. நித்யாமேனன் அவர் எப்போதும் ரொம்ப செலெக்ட்டிவாக, கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்த கதையைச் சொல்வதற்கு முன்னே, கொஞ்சம் தயங்கினேன். அவர் ஒத்துக் கொள்வாரா இல்லையா? என்ற தயக்கம் இருந்தது. ஆனால் அவர் கேட்டவுடன் நான் செய்கிறேன் என்றார். மிக அட்டகாசமாக நடித்திருக்கிறார். வினய் இந்த கேரக்டர் பற்றிச் சொன்ன போது, நான் செட்டாவேனா? எனத் தயங்கினார், ஆனால் சிறப்பாகச் செய்துள்ளார். பானு சின்ன கேரக்டர் தான், அவர் முதலில் ஒத்துக்கொள்ளவில்லை, என் டீம் வேறு பலரைக் காட்டினார்கள், ஆனால் எனக்கு யாரும் செட்டாகவில்லை கடைசி வரை பானு தான் என் மனதில் இருந்தார். அவர் நான் விட மாட்டேன், என நடிக்க ஒத்துக்கொண்டார். யோகிபாபு வந்தாலே ஷூட்டிங்க் ஸ்பாட் ஜாலியாக இருக்கும். யோகிபாபு இல்லாமல் தமிழ் படம் எடுக்க முடியாது, அவரும் சின்ன ரோல் செய்துள்ளார். இந்தப்படம் விஷுவலாக நன்றாக இருக்கக் காரணம் கேவ்மிக் தான் அத்தனை உழைத்துள்ளார், எடிட்டிங்கில் கிஷோர் நிறையச் செய்துள்ளார். நானும் அவரும் எடிட்டிங்க் டேபிளில் தான் சினிமா நிறையக் கற்றுக்கொண்டோம். ஏ ஆர் ரஹ்மான் சார் பற்றி சொல்ல நிறைய இருக்கிறது. மியூசிக்கில் கரக்சன் எதுவாக இருந்தாலும் சொல்லுங்கள் என்பார், அவர் இசையைப் பற்றி எப்படி கருத்துச் சொல்ல முடியும், அவர் ஒரு லெஜெண்ட் என்பது அவரே உணராமல் இருக்கிறார். தயாரிப்பு, என் சொந்த தயாரிப்பு எனப் பலரும் நினைத்துக் கொள்கிறார்கள், ஆனால் ஒவ்வொன்றிற்கும் நான் கணக்கு சொல்ல வேண்டும், நான் தயாரிப்பாளர் ஃப்ரண்ட்லி இயக்குநர். இப்படம் என் கனவு நனவானதாக அமைந்துள்ளது, உங்கள் அனைவருக்கும் பிடிக்குமென நம்புகிறேன் நன்றி.
இயக்குநர் கிருத்திகா உதயநிதியின் வித்தியாசமான திரைக்கதையில், ஒரு மாறுபட்ட காதல் காவியமாக உருவாகும் இப்படத்தில் முன்னணி நட்சத்திர நடிகர் ஜெயம் ரவி நாயகனாக நடிக்கிறார், நித்யா மேனன் நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் நடிகர்கள் வினய், யோகிபாபு, T J பானு, லால், ஜான் கொகேய்ன், லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ரெட் ஜெய்ன்ட் மூவீஸ் சார்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தின் தயாரிப்பு பணிகளை இணைத் தயாரிப்பாளர் திரு செண்பகமூர்த்தி செய்துள்ளார். இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். U கேவ்மிக் ஆரி ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்புப் பணிகளை லாரன்ஸ் கிஷோர் செய்துள்ளார்.
ஜனவரி 14 பொங்கல் கொண்டாட்டமாக உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் திரையுலகில் இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கும் 'நேசிப்பாயா'
இயக்குநர் விஷ்ணுவர்தனின் திரைப்படங்கள் எப்போதும் ஸ்டைலிஷான விஷூவல் மற்றும் சுவாரஸ்யமான கதைசொல்லலுக்கு பெயர் பெற்றது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர் நடிப்பில் வெளியாக இருக்கும் 'நேசிப்பாயா' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் மீண்டும் படம் இயக்கி உள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14, 2025 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாகிறது.
படம் குறித்து இயக்குநர் விஷ்ணுவர்தன் பகிர்ந்து கொண்டதாவது, “உங்கள் சொந்த வீட்டிற்கு திரும்பி வருவது எப்போதும் மகிழ்ச்சியான விஷயம். அந்த ஒரு அனுபவத்தைத் தான் ‘நேசிப்பாயா’ படத்தில் பணிபுரிந்தபோது உணர்ந்தேன். எனது பாலிவுட் திட்டமான 'ஷெர்ஷா' படத்தை முடித்த பிறகு, என்னை உற்சாகப்படுத்திய ஒரு கதையை இயக்க விரும்பினேன். அந்த நேரத்தில் தான் ஆகாஷ் முரளியை சந்தித்தேன். கதையைப் பற்றி பேசியபோது இருவரும் இணைந்து பணிபுரிய முடிவு செய்தோம். படத்தை இறுதியாக பார்த்தபோது எங்களுக்கும் எங்கள் அணியினருக்கும் முழு திருப்தி இருந்தது. புதுமுக நடிகர் போல அல்லாமல் தேர்ந்த நடிகரைப் போல நடித்து எங்களை ஆச்சரியப்படுத்தினார்.
இயற்கையாகவே அவருக்கு அற்புதமாக நடிக்கும் திறன் இருக்கிறது. அதிதி ஷங்கர் பணிபுரிவதற்கு மிகவும் இலகுவானவர். நடிகர்கள் சரத்குமார், பிரபு, குஷ்பு சுந்தர், ராஜா, கல்கி கோச்லின், சிவ பண்டிட் மற்றும் பல சிறந்த நடிகர்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு எனக்கு இதுதான் முதல் முறை. 90 சதவீத படப்பிடிப்பு ஸ்பெயின், போர்ச்சுகல் போன்ற வெளிநாடுகளில் நடந்துள்ளதால் இப்படம் திரையரங்குகளில் சினிமா ரசிகர்களுக்கு ஒரு விஷுவல் ட்ரீட்டாக இருக்கும் என்று நம்புகிறேன். எனது நெருங்கிய நண்பர் யுவன் ஷங்கர் ராஜாவின் இசை எப்போதும் எனது படங்களுக்கு பெரும் பலம். இந்த படத்தில் நாங்கள் இருவரும் இணைந்து பணியாற்றியதில் மகிழ்ச்சி. எனது பார்வையை அழகான காட்சிகளாக மொழிபெயர்த்த ஒளிப்பதிவாளர் கேமரூன் எரிக் பிரிசன் மற்றும் சண்டை பயிற்சி குழுவினருக்கு எனது சிறப்பு நன்றி. எனது தயாரிப்பாளர்கள் சேவியர் பிரிட்டோ மற்றும் சினேகா பிரிட்டோ ஆகியோருக்கு நன்றி. ’நேசிப்பயா’ படம் காதல், ஆக் ஷன் மற்றும் எல்லையற்ற பொழுதுபோக்கு கொண்ட விஷுவல் ட்ரீட்டாக இருக்கும்” என்றார்.
இந்தப் படத்தை எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ், சேவியர் பிரிட்டோ தயாரித்திருக்க சினேகா பிரிட்டோ இணைந்து தயாரித்துள்ளார்.
நடிகர் தனுஷ் வெளியிட்ட 'கிங்ஸ்டன்' திரைப்படத்தின் டீசர்!
இசையமைப்பாளரும் , நட்சத்திர நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'கிங்ஸ்டன் ' எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழில் முன்னணி நட்சத்திர நடிகரான தனுஷ் வெளியிட்டு படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கத்தில் உருவாகி வரும் 'கிங்ஸ்டன்' எனும் திரைப்படத்தில் ஜீ. வி. பிரகாஷ் குமார், திவ்ய பாரதி, அழகம் பெருமாள், 'மேற்கு தொடர்ச்சி மலை' ஆண்டனி, சேத்தன், குமரவேல், சபுமோன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் உரையாடல்களை தீவிக் எழுத, ஷான் லொகேஷன் படத் தொகுப்பாளராக பணியாற்றியிருக்கிறார். கலை இயக்கத்தை எஸ். எஸ். மூர்த்தி கவனிக்க, அதிரடி சண்டை காட்சிகளை திலீப் சுப்பராயன் அமைத்திருக்கிறார். கடல் பின்னணியில் ஃபேண்டஸி அட்வென்ச்சர் ஜானரில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது. தினேஷ் குணா கிரியேட்டிவ் புரொடியுசராக பொறுப்பேற்றிருக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து இப்படத்தின் பர்ஸ்ட் லுக் சில தினங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை கவர்ந்தது. தற்போது இப்படத்தின் டீசர் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த டீசரில் பரந்து விரிந்த கடலின் பிரமிப்பையும், கடலில் மிதக்கும் கப்பல் ஒன்றின் பிரம்மாண்டமும், அதில் ஜீ.வி. பிரகாஷ் குமாரின் தோற்றமும், காட்சிகளை மேம்படுத்தும் அதிரடியான பின்னணி இசையும், ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது. மேலும் இந்த டீசரில் VFX காட்சிகள் சர்வதேச தரத்தில் அமைந்து.. பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. இதன் மூலம் படத்தின் தயாரிப்பில் எந்தவித சமரசமும் செய்து கொள்ளாமல் பார்வையாளர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை வழங்க வேண்டும் என்ற தயாரிப்பு நிறுவனங்களின் நோக்கம் வெற்றி பெற்றிருக்கிறது. மேலும் 'கிங்ஸ்டன்' பார்வையாளர்களுக்கு பரவசமிக்க உணர்வை வழங்கும் என்பதையும் உறுதியளிக்கிறது.
'கிங்ஸ்டன்' படத்தின் இந்தி பதிப்பு டீசரை முன்னணி பாலிவுட் நட்சத்திர நடிகையுமான கங்கணா ரணாவத் வெளியிட்டார். தெலுங்கு பதிப்பு டீசரை முன்னணி நட்சத்திர நடிகரான நாகார்ஜுனா வெளியிட்டார்.
'கிங்ஸ்டன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்- டீசர் ஆகியவை வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், இப்படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீடு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்படத்தின் டீசரில் இந்தத் திரைப்படம் எதிர்வரும் மார்ச் மாதம் 7 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் இந்த திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகிறது.
பொங்கல் பண்டிகைக் கொண்டாட்டமாக ஜனவரி 14 உலகமெங்கும் வெளியாகும் 'தருணம்'
ZHEN STUDIOS சார்பில் தயாரிப்பாளர்கள் புகழ் மற்றும் ஈடன் வழங்கும், தேஜாவு படப்புகழ் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷன் தாஸ் & ஷ்ம்ருதி வெங்கட் நடித்துள்ள "தருணம்" திரைப்படம், பொங்கல் பண்டிகைக் கொண்டாட்டமாக ஜனவரி 14ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. படத்தின் வெளியீட்டை முன்னிட்டு படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து உரையாடினர்.
இந்நிகழ்வினில்
தயாரிப்பாளர் புகழ் பேசியதாவது....
எங்கள் படத்தை வாழ்த்த இங்கு வந்துள்ள பிரபலங்களுக்கு நன்றி. ஒரு நல்ல படம் தந்துள்ளோம். நீங்கள் தான் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். உங்கள் முழு ஆதரவைத் தர வேண்டும், நன்றி
எடிட்டர் அருள் E சித்தார்த் பேசியதாவது....
தேஜாவு தான் என் முதல்ப்படம். அந்தப் படத்தில் தான் அரவிந்த் அறிமுகம். இந்தப்படத்துக்கும் நீங்கள் தான் எடிட்டர் என்றார். தேஜாவு படத்தில் பாட்டு, ஃபைட் இல்லை ஆனால் இந்தப்படத்தில் அதற்கும் சேர்த்து, எல்லாம் வைத்துள்ளார். தேஜாவு படம் போல, இந்தப்படத்திலும் இடைவேளையிலிருந்து வேறு மாதிரி இருக்கும். ஸ்ம்ருதி வெங்கட் அருமையாக நடித்துள்ளார். கிஷன் அவரும் சிறப்பாகச் செய்துள்ளார். இசை அருமையாக வந்துள்ளது. படம் நன்றாக வந்துள்ளது. அரவிந்த் ப்ரோ அடுத்த படத்திற்கும் எனக்கு வாய்ப்பு தாருங்கள், இப்படத்திற்கு அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.
டான்ஸ் மாஸ்டர் பாபி பேசியதாவது...
எல்லோரும் நல்ல தருணத்துக்காகத்தான் உழைக்கிறோம். தருணத்துக்கும் அது அமைய வேண்டும். தயாரிப்பாளர் இப்படத்திற்கு முழு ஆதரவாக இருந்தார். அவர்களுக்கு இது நல்ல வெற்றிப்படமாக அமைய வேண்டும். அரவிந்த் ப்ரோ குறுகிய காலத்தில் பெரும் உழைப்பைத் தந்துள்ளார். தேஜாவு படம் எனக்கு ரொம்பப் பிடிக்கும், இந்தப்படத்தில் எனக்கும் ஒரு வாய்ப்பைத் தந்ததற்கு நன்றி.
நடிகர் விமல் ராஜா பேசியதாவது...
இந்தப்படத்தில் எல்லா நடிகர்களுடன் நானும் ஒரு சின்ன கதாப்பாத்திரம் செய்துள்ளேன். தேஜாவு இயக்குநர் படம் செய்கிறார் என்று தெரிந்து, அவரிடம் வாய்ப்பு கேட்டு, ஆடிஷனில் கலந்து கொண்டு தான் இந்தப் படத்தில் நடித்தேன். இந்த படத்திற்கு ஆடிஷன் வைத்துத் தேர்ந்தெடுத்தது மிக மகிழ்ச்சியாக இருந்தது. எங்கள் பெஸ்ட்டைத் தந்து இப்படத்தை உருவாக்கியுள்ளோம். உங்கள் எல்லோருக்கும் இந்த திரைப்படம் பிடிக்கும் அனைவரும் நன்றி.
இசையமைப்பாளர் அஸ்வின் பேசியதாவது...
இப்படத்திற்கு நான் பின்னணி இசை அமைத்துள்ளேன். எனக்கு இந்த வாய்ப்பைத் தந்ததற்கு இயக்குநர், தயாரிப்பாளருக்கு நன்றி. நிறைய புதிய முயற்சிகள் செய்துள்ளோம். படம் மிக நன்றாக வந்துள்ளது. கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும். தர்புகா சிவா நல்ல பாடல்கள் தந்துள்ளார். கார்கிக்கு நான் ரசிகன், இந்தப்படத்தில் வேலை பார்த்தது மகிழ்ச்சி. நன்றி.
நடிகர் ராஜ் ஐயப்பா பேசியதாவது...
நான் வாழ்க்கையில் மிகவும் சோர்வாக இருந்த காலகட்டத்தில் எனக்கு இந்த படத்தின் வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்திற்குப் பிறகு, எனக்கு நிறைய வாய்ப்புகள் வர ஆரம்பித்தது. இந்தப் படம் எனக்கு லக்கி ஜாம். இந்த படத்தில் நான் மிக முக்கியமான கேரக்டர் செய்து இருக்கிறேன். கிஷன், ஸ்ம்ருதி வெங்கட், நான் மூவரும் ஒரு தருணத்தில் சந்திப்போம், பிறகு என்ன நடக்கிறது ? என்பதுதான் இந்தப் படத்தின் கதை. இப்படி ஒரு முக்கியமான கதாப்பாத்திரம் தந்ததற்கு இயக்குநர் அரவிந்த்திற்கு நன்றி. இந்தப்படத்தை ஏற்கனவே மிகப்பெரிய படமாக உருவாக்கிய, தயாரிப்பாளருக்கு நன்றி படத்தில் உழைத்த கலைஞர்களுக்கு நன்றி. படம் மிக நன்றாக வந்துள்ளது. உங்கள் அனைவருக்கும் கண்டிப்பாகப் பிடிக்கும் நன்றி.
நடிகை கீதா கைலாசம் பேசியதாவது...
நான் வழக்கமாகச் செய்யும் அம்மா பாத்திரத்திலிருந்து இது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். இந்தக்கதையை அரவிந்த் சொன்னபோதே, எனக்குப் பிடித்திருந்தது. ஒரு திரில்லர் படத்தில் நடிக்க ஆசைப்பட்டேன், அந்த நேரத்தில் இந்த வாய்ப்பு வந்தது மகிழ்ச்சி. கிஷன், ஸ்ம்ருதி, ராஜ் ஐயப்பா உடன் நடித்தது நல்ல அனுபவம். இந்தப்படம் நடிக்கும் போதே நன்றாக வருகிறது, என்ற நம்பிக்கை இருந்தது. பட டிரெய்லர் பார்த்து, எல்லோரும் பாராட்டினார்கள். படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும், நன்றி.
பாடலாசிரியர் மதன் கார்கி பேசியதாவது...
இந்தப்படத்தின் கதையை அரவிந்த் சொன்னபோதே எனக்குப் பிடித்திருந்தது. ஒரு அழகான ரொமான்ஸ் கதையில், திரில்லரை நுழைத்து, மிக அழகாகத் திரைக்கதை அமைத்துள்ளார். தர்புகா சிவாவுடன் நிறையப் படம் செய்துள்ளேன், அவரது இசை எனக்கு மிகவும் பிடிக்கும், இப்படத்திலும் இரண்டு அழகான பாடல்கள் எழுதியுள்ளேன். ஒவ்வொன்றிற்கும் இரண்டு வேலை இருந்தால் எப்படி இருக்கும் எனும் மையத்தில் ஒரு அழகான பாடல் எழுதியுள்ளேன். எனக்கு மிகவும் பிடித்த பாடல். கிஷன் எனக்கு மிகப் பிடித்த நடிகர், அவருக்குத் தொடர்ந்து வெற்றிப்படங்கள் அமைய வாழ்த்துக்கள். எடிட்டர் டிரெய்லரை மிக அழகாகக் கதை தெரியாமல், எடிட் செய்திருந்தார். இந்த படம் நல்ல திரில்லராக வந்துள்ளது. படம் பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்.
நடிகை ஸ்ம்ருதி வெங்கட் பேசியதாவது...
எங்கள் தருணம் படத்திற்கு ஆதரவு தரும் அனைவருக்கும் நன்றி. அரவிந்தின் தேஜாவு படத்தில் நான் நடித்திருந்தேன், அதில் எனக்குச் சின்ன கேரக்டர், ஆனால் அவர் என்னை கன்வின்ஸ் செய்து நடிக்க வைத்தார். அப்போது அடுத்த படத்தில் நீங்க தான் ஹீரோயின் என்றார் நான் நம்பவில்லை, ஆனால் இந்தப்படத்தில் நான் தான் ஹீரோயின் என்றார் ஆச்சரியமாக இருந்தது. இந்தக்கதை சொன்னார் மிகவும் பிடித்திருந்தது. எனக்கு மிகவும் வித்தியாசமான மாடர்ன் கேரக்டர், இதுவரை செய்ததிலிருந்து மாறுபட்ட கேரக்டராக இருக்கும். எனக்கு முக்கியமான நேரத்தில் கிடைத்த வாய்ப்பு அரவிந்த் சாருக்கு நன்றி. கீதா மேடமுடன் நடித்தது மகிழ்ச்சி. தயாரிப்பாளருக்கு நன்றி. ராஜா பட்டாசார்ஜி மிகச்சிறப்பாக ஒளிப்பதிவு செய்துள்ளார், அனைத்து கலைஞர்களும் கடின உழைப்பைத் தந்துள்ளனர். படம் மிக நன்றாக வந்துள்ளது. அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.
தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது....
இந்த தைப் பொங்கல் அனைவருக்கும் நல்லதாக அமைய வேண்டும். தருணம் படத்திற்கும் நல்லதாக அமைய வேண்டும். புதிய தயாரிப்பாளர் புகழுக்கு வாழ்த்துகள். முதல் படத்திலேயே, ஒரு கார்பரேட் கம்பெனி போல் சினிமாவைத் திட்டமிட்டு உருவாக்கியது ஆச்சரியமாக இருந்தது. தயாரிப்பாளர் இன்வால்வ்மெண்ட் கம்மியாக இருக்கும் என்று தான் கேள்விப்பட்டிருக்கேன், ஆனால் இந்தப்படத்தில் புகழ் மற்றும் ஈடன் இருவரின் இன்வால்வ்மெண்ட் மிகப்பெரியது. அரவிந்த் எனக்கு நெருங்கிய நண்பர். படம் எனக்குக் காட்டினார், படம் பார்த்து கிஷனை எனக்கு ரொம்பப் பிடித்து விட்டது. ஸ்ம்ருதி மிக அழகாக நடித்துள்ளார். கீதா மேடம் மிக நன்றாக நடித்துள்ளார். ராஜ் ஐயப்பா நல்ல நடிப்பைத் தந்துள்ளார். ஒரு குவாலடியான படத்தை இந்தப்படக்குழு தந்துள்ளனர். இந்த பொங்கலுக்கு ஏழு படங்கள் திரைக்கு வருகிறது. எப்போதும் பொங்கல் பண்டிகையில், நல்ல படம் என்றால் மக்கள் திரையரங்கு வந்து பார்ப்பார்கள். அதனால் திரைக்குக் கொண்டு வாருங்கள் என்று சொன்னேன். அதேபோல் பொங்கலுக்கு இந்த திரைப்படத்தைக் கொண்டு வந்துள்ளார்கள். அரவிந்த்துக்கு இந்தப்படம் பெரிய வெற்றியைத் தரட்டும். இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற என் வாழ்த்துக்கள். நன்றி.
நடிகர் கிஷன் தாஸ் பேசியதாவது...
பொங்கலுக்கு வெளியாகும் பல படங்களில் எங்கள் படமும் ஒன்று. உங்கள் முழு ஆதரவைத் தந்து, நீங்கள் படத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும். இந்தப்படத்திற்காக அரவிந்த் என்னை அழைத்தார். தேஜாவு இயக்குநர் என்ற உடனே, எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒரு வெற்றிப் படம் தந்த, இயக்குநர் என்னைத் தேடி வந்தது எனக்கு ஆச்சரியம் தான். நானும் பயங்கரமாக திரில்லர் கதை சொல்வார் என்று நினைத்தேன். ஆனால் முழுக்க முழுக்க ரொமான்ஸ் உடன் ஒரு கதை சொன்னார். இடைவேளைக்குப் பிறகு அவர் சொன்ன கதை, முழு திரில்லராக அவர் பாணியிலிருந்தது. கதை கேட்டவுடன் எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது, கதையில் ஒரு ஆபீஸர் கேரக்டர், படத்தில் பாட்டு, ஃபைட் எல்லாமே இருக்கிறது. இந்த கதைக்கு நான் தாங்குவேனா? என்று கேட்டேன், ஆனால் அரவிந்த் கண்டிப்பாக நீங்கள் சரியாக இருப்பீர்கள் என்று ஊக்கம் தந்தார். என் மீது முழு நம்பிக்கை வைத்தார். அந்த கேரக்டர் எப்படி இருக்க வேண்டும் என, எனக்கு நிறையச் சொல்லித் தந்தார். புகழ் & ஈடன் இருவருக்கும் இது முதல் திரைப்படம். இப்போதுள்ள திரைத் துறையில் முதல் படம் செய்வது எத்தனை கடினம் என்பது தெரியும். அதைத் தாண்டி மிகச் சிறப்பாக இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளார்கள், இப்படம் அவர்களுக்காகப் பெரிய வெற்றி பெறும் வாழ்த்துகள். ஸ்ம்ருதி வெங்கட் மிகச்சிறந்த கோ ஸ்டார், இந்தபடம் ஆரம்பித்ததிலிருந்து, இப்போது வரை எங்களுக்கு நிறையத் தருணம் இருந்தது அவருக்கு நன்றி. கீதா கைலாசம் மேடம் பார்த்தால், என் அம்மா ஞாபகம் தான் வரும் அவருடன் நடித்தது மகிழ்ச்சி. பாலசரவணன் ஒரு அருமையான ரோல் செய்துள்ளார். என்னை நம்பி டான்ஸ் ஆட வைத்த, பாபி மாஸ்டருக்கு நன்றி. அருள் மிகச்சிறப்பாக எடிட் செய்துள்ளார் நன்றி. கார்கி சாருக்கு நான் மிகப்பெரிய ஃபேன், அவர் இந்தப்படத்தில் பணியாற்றியது மகிழ்ச்சி. என்னை நம்பி இந்தப்படம் தந்த அரவிந்துக்கு நன்றி. எல்லாச் சின்ன படத்திற்கும் ஆதரவு தரும் தனஞ்செயன் சாருக்கு நன்றி. என் முதல் படத்திற்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஆதரவு தந்தது பத்திரிக்கையாளர்கள் தான், இந்தப்படத்திற்கும் உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.
இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் பேசியதாவது.....
நான் பத்திரிக்கையாளராக இருந்து தான் சினிமாவுக்குள் வந்துள்ளேன், நீங்கள் எனக்குத் தந்து வரும் ஆதரவு மிகப்பெரியது நன்றி. தருணம் படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது. புகழ் & ஈடன் இருவருக்கும் இது முதல் திரைப்படம். என்னை நம்பி இந்தப்படத்தை தயாரித்ததற்கு நன்றி. முதல் படத்தில் எல்லோரும் புது முகம் என்றால் தயங்குவார்கள், ஆனால் என் மீது நம்பிக்கை வைத்து, நீங்கள் தான் இயக்குநர் நீங்கள் என்ன சொன்னாலும் சரிதான், என்று சொல்லி இந்த படத்தைத் தயாரித்தார்கள் அவர்களுக்கு என் நன்றிகள். என் முதல் படத்தை முடித்த சமயத்தில் தான், கிஷன் நடித்த படத்தைப் பார்த்தேன். அவர் இந்தப் படத்திற்கு மிகச் சரியாக இருப்பார் என்று என் நண்பரிடம் சொன்னேன். அவரிடம் கதை சொன்னேன் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. வழக்கமாக நாம் ஒரு படத்தை முடித்த பிறகு, ஹீரோவே இல்லை, பெரிய ஹீரோ கால்ஷீட் இல்லை என்பார்கள். ஏன் ஒரு படத்தை முடித்துவிட்டு, பெரிய ஹீரோவைத் தேட வேண்டும், இங்கு இருக்கும் ஹீரோக்களை வைத்து படம் எடுக்கலாமே? புதிய ஹீரோக்களைக் கூட்டி வரலாமே? என்பேன். நீ ஒரு படம் செய்தால், நீயும் பெரிய ஹீரோவைத்தான் தேடிச் செல்வாய் என்றார்கள். அதற்காகவே நான் புது முகங்களை வைத்து, படம் இயக்க வேண்டும் என்று நினைத்தேன். தனஞ்செயன் சார் படம் பார்த்துவிட்டு கிஷன் நம்பர் வாங்கி பாராட்டினர். அப்போது நான் என்ன செய்ய நினைத்தேனோ அதைச் செய்து விட்டேன் என்ற மகிழ்ச்சி ஏற்பட்டது. ஸ்ம்ருதி வெங்கட் என்னுடைய தேஜாவு படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரம் செய்தார், அப்போதே அவரிடம் சொல்லியிருந்தேன், உங்களது நடிப்பு நன்றாக இருக்கிறது, ஒரு நல்ல படத்தில் உங்களைக் கதாநாயகியாகப் போடுவேன் என்றேன். அவர் நம்பவில்லை, இந்தப் படம் ஆரம்பித்த பொழுது, அவர்தான் சரியாக இருப்பார் என்று சொன்னேன். எல்லோரும் தயங்கினார்கள், ஆனால் நான் அவர்தான் சரியாக இருப்பார், இதுவரை செய்யாதவர் இந்தக்கதாபாத்திரம் செய்தால் தான் நன்றாக இருக்கும் என்று அவரிடம் கதை சொன்னேன். சில விசயங்கள் படத்தில் இருக்கும் யோசித்துச் சொல்லுங்கள் என்றேன். அவருக்குக் கதை பிடித்து இருந்தது. இப்படத்தில் மிக நன்றாக நடித்துள்ளார். ராஜ் ஐயப்பா என்னிடம் வாய்ப்பு கேட்டிருந்தார், அவர் ஹீரோவாக நடிக்க ஆசைப்படுகிறார் எனத் தயங்கினேன், பின்னர் ஒரு நாள் அவரை அழைத்துக் கதை சொன்னேன், அவருக்குப் பிடித்திருந்தது, மிக சிறப்பாக நடித்திருக்கிறார். எல்லோரும் கிஷன் சொல்லித் தான் தர்புகா சிவா இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார் என்று நினைக்கிறார்கள், ஆனால் இந்த படத்திற்கு ஆரம்பத்திலேயே முடிவு செய்தது அவரைத்தான். அவரிடம் கதை சொன்னேன் அவர் எளிதாக எந்த படத்தையும் ஒப்புக் கொள்வதில்லை, முழு பவுண்டேட் ஸ்கிரிப்ட் கேட்டார், படித்துவிட்டு அவரே அழைத்து, படத்தின் கதை நன்றாக இருக்கிறது நான் செய்கிறேன் என்றார். மிக அட்டகாசமான பாடல்கள் தந்துள்ளார் அவருக்கு நன்றி. என் முதல் படத்தின் எடிட்டர் அருள் தான் இந்தப்படத்திற்கும் எடிட்டர். அவருக்கும் எனக்கும் நிறையச் சண்டை வந்தாலும் அவர் எடிட்டிங் மிகச் சிறப்பாக இருக்கும். பலரும் டிரெய்லர் பார்த்து, எடிட் கட் நன்றாக இருப்பதாகப் பாராட்டினார்கள். அஸ்வின் இந்த படத்திற்காக நான்கு மாதங்கள், பின்னணி இசை அமைத்திருக்கிறார். கார்கி சார் ரசிகன், அவருடன் வேலை பார்த்தது மகிழ்ச்சி. கிட்டத்தட்ட ஒவ்வொரு ஃபிரேமாக செதுக்கி இருக்கிறார். ஒரு தரமான படைப்பு வரும் போது நீங்கள் கைவிட்டதில்லை, அந்த நம்பிக்கையில் தான் படத்தை, பொங்கலுக்குக் கொண்டு வருகிறோம். உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.
வாழ்வே பல தருணங்களால் ஆனது ஆனால் ஒரு தருணம் மொத்த வாழ்க்கையையும் மாற்றும் அப்படியான ஒரு தருணத்தை, காதல் கலந்து சொல்லும் அருமையான படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது. தேஜாவு திரில்லர் படம் மூலம் ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்த இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இப்படத்தை இயக்கியுள்ளார்.
திரையுலகில் கால்பதித்துள்ள ZHEN STUDIOS நிறுவனம் சார்பில் புகழ் மற்றும் ஈடன், பெரும் பொருட்செலவில் இப்படத்தை உயர்தரமான படைப்பாகத் தயாரித்துள்ளனர்.
இப்படம் வரும் பொங்கல் பண்டிகை கொண்டாட்டமாக ஜனவரி 14 அன்று உலகமெங்கும் வெளியாகிறது.
ராக்கிங் ஸ்டார் யாஷின் 39 வது பிறந்தநாளை முன்னிட்டு, ரசிகர்களுக்கு அசத்தலான விருந்து!
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், இன்று 39 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவரது பிறந்த நாளை முன்னிட்டு, ரசிகர்களுக்கு விருந்தாக, மிகப்பெரும் எதிர்பார்ப்பிலிருக்கும் “டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்” படத்தின் அசத்தலான கிளிம்ப்ஸ் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ, யாஷின் ஸ்டைல் மற்றும் மாஸ் கலவையைப் பிரம்மாண்டமாகக் காட்சிப்படுத்துகிறது.
பிறந்தநாள் பீக் வீடியோவில், யாஷ், மிருதுவான வெள்ளை நிற உடையில், ஃபெடோரா மற்றும் ஒரு சுருட்டைப் பிடித்தபடி, ஒரு கிளப்புக்குள் நுழைகிறார். கிளப்பின் கண்ணைக் கவரும் சூழல், ஆடம்பரம், மகிழ்ச்சி மற்றும் அதிரடி இசை மனதை மயக்குகிறது. யாஷின் ஸ்டைல் தோற்றம் மற்றும் மாஸ், அறையில் உள்ள ஒவ்வொரு பார்வையும் அவரை நோக்கி ஈர்க்கிறது. இந்த அதிரடி டீஸர், பார்வையாளர்கள் மனதை மயக்கி, வசீகரிக்கும் மற்றொரு உலகத்திற்குள் அழைத்துச் செல்கிறது, இது எல்லைகளைத் தாண்டிய ஒரு சினிமா அனுபவமாக உருவாகியுள்ளது.
யாஷ் மற்றும் டாக்ஸிக் படத்தின் உலகத்தை உருவாக்குவது குறித்துப் பேசிய இயக்குநர் கீது மோகன்தாஸ் கூறியதாவது
“டாக்ஸிக் எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன் அப்ஸ்” என்பது மரபை மீறும் மற்றும் நமக்குள் குழப்பத்தைத் தூண்டும் ஒரு வித்தியாசமான கதை. இன்று, எங்கள் படத்தின் முதல் பார்வையை வெளியிட்டு, யாஷ்-ஐ கொண்டாடுகிறோம். யாஷ் ஒரு தனித்துவமான மனிதர், அவரது புத்திசாலித்தனத்தை நான் கவனித்திருக்கிறேன், அவரை அறிந்தவர்களுக்கு அல்லது அவரது பயணத்தைப் பின்தொடர்பவர்களுக்கு, அவரது செயல்முறை மர்மமானதாக இருப்பது போல், தோன்றும் ஆனால் அவர் உண்மையில் தனித்துவமானவர். அதே போல் டாக்ஸிக் படத்தின் வசீகரிக்கும் உலகத்தை மற்றவர்கள் சாதாரணமாகப் பார்க்கும் இடத்தில், அசாதாரணமானதைக் காணும் மனதுடன் இணைந்து உருவாக்கியது ஒரு பாக்கியம் மற்றும் சிலிர்ப்பான அனுபவமாகும். எங்கள் இரு சிந்தனையும் இணைந்து, மொழிகள் மற்றும் கலாச்சார எல்லைகளைத் தாண்டி வணிகக் கதைசொல்லலின் துல்லியத்தைச் சந்திக்கும் மாற்றமாக இப்படம் இருக்கும். நம் அனைவருக்குள்ளும் முதன்மையான சந்தோஷத்தைத் தூண்டும் வகையில், ஒரு மாறுபட்ட அனுபவத்தைக் கொண்டுவருவோம் என்று நம்புகிறோம்- இது பார்ப்பதற்கு மட்டுமல்ல, உணரப்பட வேண்டிய திரைப்படம். படைப்பின் பயணம் புனிதமானது என்பதை அவர் எனக்குக் கற்றுக் கொடுத்தார். அவருக்கு, முன்னோக்கிச் செல்லும் பயணத்தின் சிலிர்ப்பைத் தவிர வேறு எதுவும் முக்கியமானதாகத் தெரியவில்லை. இந்த வார்த்தைகள் ஒரு இயக்குநரிடமிருந்து அவரது நடிகரைப் பற்றி மட்டுமல்ல, அவரது தீவிர ரசிகர்களுக்காக மட்டுமல்ல, சினிமா மீதான அவரது அசைக்க முடியாத ஆர்வத்தையும் படைப்பாற்றலின் எல்லையற்ற உணர்வையும் புரிந்துகொள்ள விரும்பும் எவருக்கும் உத்வேகம் தருவதாக இருக்கும். எங்கள் மான்ஸ்டர்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
"நீங்கள் யார் என்பதை நீங்கள் விட்டுவிட்டால், நீங்கள் நீங்களாக இருக்க முடியும்" - ரூமி."
KVN புரொடக்ஷன்ஸ் மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் ஆகியவற்றின் கீழ் வெங்கட் K. நாராயணா மற்றும் யாஷ் இணைந்து தயாரிக்கும், டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ், சர்வதேச அளவில் புகழ்பெற்ற திரைப்படத்தை இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்குகிறார். சன்டான்ஸ் திரைப்பட விழாவில் தேசிய விருது மற்றும் குளோபல் ஃபிலிம்மேக்கிங் விருது உட்படப் பல பாராட்டுக்களைப் பெற்ற கீது மோகன்தாஸ், இம்முறை மிகப்பெரிய பொழுதுபோக்கு திரைப்படத்தை வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.
- உலக செய்திகள்
- |
- சினிமா