சற்று முன்

VV வினாயக் முதல் காட்சியை க்ளாப் அடிக்க 'ஹெய் லெசோ' திரைப்படம் பிரம்மாண்டமாக துவங்கியது!   |    'தி பாரடைஸ்' படத்திற்காக லெஜெண்ட்டரி மோகன் பாபு மீண்டும் வெள்ளித் திரைக்கு வருகை!   |    தியா சூர்யா இயக்கியிருக்கும் டாக்குமெண்ட்ரி - டிராமா!   |    முன்னணி ஓடிடி தளமான ZEE5, தமிழ் ஒரிஜினல் “வேடுவன்” சீரிஸின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது!   |    இயக்குநராக அறிமுகமாகிறார் வரலட்சுமி சரத்குமார்!   |    காந்தாராவின் பாரம்பரியத்தை சிறப்பு தபால் அட்டைகளை வெளியிட்டு கௌரவித்துள்ளனர்!   |    முதல்முறையாக தேசிய விருது வென்றார் நடிகர் ஷாரூக் கான் !   |    அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் படமாக 'மருதம்' உருவாகியுள்ளது.   |    விமர்சன ரீதியாக பாராட்டப்படும் மோகன் ஜி இயக்கத்தில், ரிச்சர்ட் ரிஷி நடிக்கும் 'திரெளபதி 2'   |    அப்பா -மகள் இடையிலான அன்பை சொல்லும் கவிதையாக உருவாகியுள்ளது 'மெல்லிசை'   |    கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மீண்டும் திரைக்கு வருகிறது 'அனகோண்டா'!   |    நடிகர் உன்னி முகுந்தனை கேரளா ஸ்ட்ரைக்கர்ஸ் அணி தங்களது புதிய கேப்டனாக அறிவித்துள்ளது!   |    மோதியின் அரசியலுக்கு அப்பாற்பட்ட தனிப்பட்ட வாழ்வை உணர்வுப்பூர்வமாக பேசும் படம் 'மா வந்தே'   |    அதீரா, (PVCU)- பிரசாந்த் வர்மா சினிமா யுனிவர்ஸின் அடுத்த அத்தியாயமாகும்   |    ‘காந்தாரா: சேப்டர் 1’ ட்ரைலரை நடிகர் சிவகார்த்திகேயன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்!   |    கவுதம் ராம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியது   |    “காந்தாரா சேப்டர் 1” படத்தின் தமிழ் டிரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிடுகிறார்!   |    இந்த பூமி கோளில் செல்வராகவன் தான் மிகவும் சிறந்த மனிதர் - பினு ஜார்ஜ் அலெக்சாண்டர்   |    சென்னைவில் நடைபெறும் 23வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் – 2025   |    நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும், அசத்தலான கமர்ஷியல் திரில்லர் திரைப்படம் 'ரைட்'   |   

சினிமா செய்திகள்

‘சினம்’ குறித்து மனம் திறந்த அருண் விஜய்
Updated on : 06 September 2022

மூவி ஸ்லைட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் நடிகர் ஆர்.விஜயகுமார் தயாரிப்பில், ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கத்தில், அருண் விஜய் நடித்திருக்கும் படம் ‘சினம்’. இதில் ஹீரோயினாக பாலக் லால்வானி நடித்திருக்கிறார். இவர்களுடன் காளி வெங்கட், ஆர்,என்.ஆர்.மனோகர், மறுமலர்ச்சி பாரதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.



 



சபீர் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை கமலா திரையரங்கில் நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் ஹரி, மகிழ் திருமேணி, அறிவழகன், நடிகர்கள் சாந்தனு, பிரசன்னா, விஜய் ஆண்டனி, பார்த்திபன் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டார்கள்.



 



நிகழ்ச்சியில் ‘சினம்’ படம் பற்றி பேசிய நடிகர் அருண் விஜய், “இந்த படம் தியேட்டரில் வர வேண்டும் என்று நான் உறுதியாக இருந்தேன். இது பார்வையாளர்களுக்கான படமாக இருக்கும். சமூகத்தில் நடக்கும் சம்பவங்களை தொடர்புபடுத்த கூடிய ஒரு கதாபாத்திரமாக இந்த படத்தின் பாரிவெங்கட் கதாபாத்திரம் இருக்கும். எனது முந்தயை படத்திற்கும் இந்த படத்திற்கும் பெரிய வித்தியாசம் இருக்கும். இந்த படத்தில் உணர்வுபூர்வமான பல அம்சங்கள் இருக்கிறது. அதை உருவாக்கிய இயக்குனர் குமரவேலனுக்கு அவர்களுக்கு நன்றி. இந்த படத்தை தயாரித்த என் தந்தைக்கு நன்றி. என்னை நம்பி அவர் ஓகே சொன்னார். படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். இசையமைப்பாளருக்கு எனது தனிப்பட்ட நன்றிகள். இந்த படம் நிச்சயம் உங்கள் அனைவருக்கும் பிடிக்க கூடிய ஒன்றாக இருக்கும்.” என்றார்.



 



படத்தின் இயக்குநர் ஜி.என்.ஆர்.குமரவேலன் பேசுகையில், “என்னுடைய படத்திற்கு பாராட்டுகளையும், நான் செய்த தவறுகளுக்கு விமர்சனங்களும் தொடர்ந்து கொடுத்து வரும் பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி. இந்த படத்தின் கதையாசிரியர் உண்மையாகவே காவல் துறையில் பணிபுரிகிறார். இந்த படத்தின் கதையை கேட்டு, என்னுடைய முந்தைய படங்கள் பற்றி யோசிக்காமல் அருண் விஜய் ஓகே செய்தார். விஜய்குமார் சார் உடன் பணிபுரிவது எனக்கு முதலில் பயத்தை கொடுத்தது. அதன்பிறகு மகிழ்ச்சியாக இருந்தது. நடிகரே இந்த படத்தின் தயாரிப்பாளராக அமைந்தது பெரிய பலமாக அமைந்தது. கோவிட் காலத்தில் நம்பிக்கை இழக்க கூடிய தருணத்தில், எங்களுக்கு நம்பிக்கை அளித்தவர் விஜயகுமார் சார். இந்த படத்தை ஒடிடியில் வெளியிடாமல், தியேட்டரில் வெளியிட வேண்டும் என்று அருண் விஜய் உறுதியாக இருந்தார். இந்த படம் கண்டிப்பாக பேசப்பட கூடிய படமாக இருக்கும்.” என்றார்.



 



இசையமைப்பாளர் சபீர் பேசுகையில், “மொழிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற முனைப்புடன் தான் பணியாற்றியுள்ளோம். அருண் விஜய் சார் ஒரு பாடல் பாடியுள்ளார், அந்த பாடல் சுலபமானது அல்ல, அது தொழில்முறை ஆட்களால் மட்டுமே உணர்வுடன் வெளிகாட்ட முடியும், அதை அவர் கொடுத்தார். இந்த படத்தின் அனைத்து பாடல்களும் கதையோடு சேர்ந்து பயணிக்கும் படி இருக்கும். இயக்குனர் குமரவேலன், ஆக்‌ஷன், எமோஷன், அதே நேரத்தில் சமூகத்துடன் சார்ந்து நிற்கும் திரைப்படத்தை உருவாக்க கூடியவர், அவர் உடன் பணிபுரிந்தது மிகச்சிறந்த அனுபவம். இந்த படம் நிச்சயமாக சிறந்த அனுபவமாக இருக்கும்.” என்றார்.



 



நடிகை பாலக் லால்வாணி பேசுகையில், “இது என்னுடைய தமிழ் பேச்சு. மொழி தெரியாமல் எப்படி தமிழ் படத்தில் நடிக்கிறனு எல்லோரும் கேட்பார்கள். உணர்வுக்கு மொழி கிடையாது. இந்தப்படத்தில் நல்ல மெசேஜ் இருக்கிறது. அதனால் தான் இந்த வாய்ப்பு வந்த போது உடனடியாக ஒப்புக்கொண்டேன். என் மேல நம்பிக்கை வைத்த இயக்குநர், அருண் விஜய் மற்றும் விஜயகுமார் சாருக்கு நன்றி. படத்தில் உழைத்த கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. இந்தப்படம் மிக நல்ல படம் தியேட்டரில் பாருங்கள் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும்.” என்றார்.



 



தயாரிப்பாளர் விஜயகுமார் பேசுகையில், “படத்தின் இயக்குனர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் தங்களது சொந்த படமாக நினைத்து பணியாற்றியுள்ளனர். இந்த படத்தை மக்கள் அனைவரும் பார்க்க கூடிய படமாக உருவாக்கியுள்ளோம். இந்த படம் நிச்சயம் வெற்றிபெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது.” என்றார்.



 



சிறப்பு விருந்தினர்கள் பேசும்போது, படத்தின் டிரைலர் மிக சிறப்பாக இருப்பதாகவும், படத்தில் பல உணர்வூப்பூர்வமான விஷயங்கள் இருப்பது டிரைலரை பார்க்கும் போது தெரிகிறது, என்றும் கூறினார்கள். மேலும், நடிகர் அருண் விஜய் பல வருட போராட்டத்திற்குப் பிறகே தற்போதைய இடத்தை பிடித்திருக்கிறார், அவருடைய விடா முயற்சி பலருக்கு ஊக்கமளிப்பதோடு, எடுத்துக்காட்டாகவும் இருக்கிறது. அவர் இன்னும் பல உயரங்களை தொட வேண்டும், நிச்சயம் அவருடைய உழைப்புக்காகவே மிகப்பெரிய வெற்றியை அவர் பெறுவார், என்றும் வாழ்த்தினார்கள்.



 



 





 



 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா