சற்று முன்

ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ரெபெல் ஸ்டார் பிரபாஸின் 'தி ராஜா சாப்' டிரெய்லர   |    VV வினாயக் முதல் காட்சியை க்ளாப் அடிக்க 'ஹெய் லெசோ' திரைப்படம் பிரம்மாண்டமாக துவங்கியது!   |    'தி பாரடைஸ்' படத்திற்காக லெஜெண்ட்டரி மோகன் பாபு மீண்டும் வெள்ளித் திரைக்கு வருகை!   |    தியா சூர்யா இயக்கியிருக்கும் டாக்குமெண்ட்ரி - டிராமா!   |    முன்னணி ஓடிடி தளமான ZEE5, தமிழ் ஒரிஜினல் “வேடுவன்” சீரிஸின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது!   |    இயக்குநராக அறிமுகமாகிறார் வரலட்சுமி சரத்குமார்!   |    காந்தாராவின் பாரம்பரியத்தை சிறப்பு தபால் அட்டைகளை வெளியிட்டு கௌரவித்துள்ளனர்!   |    முதல்முறையாக தேசிய விருது வென்றார் நடிகர் ஷாரூக் கான் !   |    அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் படமாக 'மருதம்' உருவாகியுள்ளது.   |    விமர்சன ரீதியாக பாராட்டப்படும் மோகன் ஜி இயக்கத்தில், ரிச்சர்ட் ரிஷி நடிக்கும் 'திரெளபதி 2'   |    அப்பா -மகள் இடையிலான அன்பை சொல்லும் கவிதையாக உருவாகியுள்ளது 'மெல்லிசை'   |    கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மீண்டும் திரைக்கு வருகிறது 'அனகோண்டா'!   |    நடிகர் உன்னி முகுந்தனை கேரளா ஸ்ட்ரைக்கர்ஸ் அணி தங்களது புதிய கேப்டனாக அறிவித்துள்ளது!   |    மோதியின் அரசியலுக்கு அப்பாற்பட்ட தனிப்பட்ட வாழ்வை உணர்வுப்பூர்வமாக பேசும் படம் 'மா வந்தே'   |    அதீரா, (PVCU)- பிரசாந்த் வர்மா சினிமா யுனிவர்ஸின் அடுத்த அத்தியாயமாகும்   |    ‘காந்தாரா: சேப்டர் 1’ ட்ரைலரை நடிகர் சிவகார்த்திகேயன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்!   |    கவுதம் ராம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியது   |    “காந்தாரா சேப்டர் 1” படத்தின் தமிழ் டிரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிடுகிறார்!   |    இந்த பூமி கோளில் செல்வராகவன் தான் மிகவும் சிறந்த மனிதர் - பினு ஜார்ஜ் அலெக்சாண்டர்   |    சென்னைவில் நடைபெறும் 23வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் – 2025   |   

சினிமா செய்திகள்

ஸ்ரீ ஹீரோவாக நடிக்கும் ‘ஈடாட்டம்’
Updated on : 06 September 2022

’சின்னா’, விஜயின் ‘தெறி’, கமலின் ‘விக்ரம்’ உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் ஸ்ரீ, பல வெற்றி தொலைக்காட்சி தொடர்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். ‘யாரடி நீ மோகினி’ உள்ளிட்ட பல தொடர்கள் மூலம் தமிழகத்தின் பட்டிதொட்டியெல்லாம் அறியப்பட்ட நடிகர் ஸ்ரீ ‘ஈடாட்டம்’ என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். 



 



ஈசன் மூவிஸ் சார்பில் சக்தி அருண் கேசவன் தயாரிக்கும் இப்படத்தின் கதை எழுதி ஈசன் இயக்கியிருக்கிறார்.



 



ஸ்ரீ ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் வெண்பா, அணுகிருஷ்ணா, தீக்‌ஷிகா ஆகிய மூன்று பேர் ஹீரோயின்களாக நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ராஜா, விஜய் விசித்திரன், காதல் சுகுமார், பவர் ஸ்டார், பூவிலங்கு மோகன், விஜய் சத்யா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.



 



வறுமையில் வாழும் ஒருவர் பணத்தேவைக்காக தவறான முடிவுகளை எடுக்கிறார். அதனால், அவர் மட்டும் இன்றி அவரை சார்ந்தவர்களும் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்ற மெசஜை காதல், காமெடி, செண்டிமெண்ட் என கமர்ஷியலாக சொல்வது தான் இப்படத்தின் கதை.



 



யோகி பாபு, நடன இயக்குநர் தினேஷ் ஆகியோர் கதாநாயகர்களாக நடித்திருக்கும் ‘லோக்கல் சரக்கு’ படத்திற்கு இசையமைத்திருக்கும் வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ‘லோக்கல் சரக்கு’ படத்தின் பாடல்களுக்கு கிடைத்த வரவேற்பை போல், ‘ஈடாட்டம்’ படத்தின் பாடல்களும் மிகப்பெரிய ஹிட் ஆகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.



 



கஜபதி வசனம், திரைக்கதை எழுதியுள்ள இப்படத்திற்கு ஜேசன் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சென் முத்துராஜ் படத்தொகுப்பு செய்கிறார். கலை செந்தில், ராதிகா நடனம் அமைக்க, ஹார்ஸ் சுரேஷ் சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளார். வணக்கம் ராஜா தயாரிப்பு மேற்பார்வையாளரா பணியாற்றுகிறார்.



 



இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆகஸ்ட் 31 ஆம் தேதி வெளியிடப்பட்டது. பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்திருப்பதோடு, படத்தின் மீதும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.



 



திருச்செந்தூர், பாண்டிச்சேரி, சென்னை ஆகிய பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்த நிலையில், பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா