சற்று முன்

VV வினாயக் முதல் காட்சியை க்ளாப் அடிக்க 'ஹெய் லெசோ' திரைப்படம் பிரம்மாண்டமாக துவங்கியது!   |    'தி பாரடைஸ்' படத்திற்காக லெஜெண்ட்டரி மோகன் பாபு மீண்டும் வெள்ளித் திரைக்கு வருகை!   |    தியா சூர்யா இயக்கியிருக்கும் டாக்குமெண்ட்ரி - டிராமா!   |    முன்னணி ஓடிடி தளமான ZEE5, தமிழ் ஒரிஜினல் “வேடுவன்” சீரிஸின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது!   |    இயக்குநராக அறிமுகமாகிறார் வரலட்சுமி சரத்குமார்!   |    காந்தாராவின் பாரம்பரியத்தை சிறப்பு தபால் அட்டைகளை வெளியிட்டு கௌரவித்துள்ளனர்!   |    முதல்முறையாக தேசிய விருது வென்றார் நடிகர் ஷாரூக் கான் !   |    அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் படமாக 'மருதம்' உருவாகியுள்ளது.   |    விமர்சன ரீதியாக பாராட்டப்படும் மோகன் ஜி இயக்கத்தில், ரிச்சர்ட் ரிஷி நடிக்கும் 'திரெளபதி 2'   |    அப்பா -மகள் இடையிலான அன்பை சொல்லும் கவிதையாக உருவாகியுள்ளது 'மெல்லிசை'   |    கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மீண்டும் திரைக்கு வருகிறது 'அனகோண்டா'!   |    நடிகர் உன்னி முகுந்தனை கேரளா ஸ்ட்ரைக்கர்ஸ் அணி தங்களது புதிய கேப்டனாக அறிவித்துள்ளது!   |    மோதியின் அரசியலுக்கு அப்பாற்பட்ட தனிப்பட்ட வாழ்வை உணர்வுப்பூர்வமாக பேசும் படம் 'மா வந்தே'   |    அதீரா, (PVCU)- பிரசாந்த் வர்மா சினிமா யுனிவர்ஸின் அடுத்த அத்தியாயமாகும்   |    ‘காந்தாரா: சேப்டர் 1’ ட்ரைலரை நடிகர் சிவகார்த்திகேயன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்!   |    கவுதம் ராம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியது   |    “காந்தாரா சேப்டர் 1” படத்தின் தமிழ் டிரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிடுகிறார்!   |    இந்த பூமி கோளில் செல்வராகவன் தான் மிகவும் சிறந்த மனிதர் - பினு ஜார்ஜ் அலெக்சாண்டர்   |    சென்னைவில் நடைபெறும் 23வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் – 2025   |    நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும், அசத்தலான கமர்ஷியல் திரில்லர் திரைப்படம் 'ரைட்'   |   

சினிமா செய்திகள்

ஏலியன் சர்வைவல் திரில்லராக ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'கேப்டன்'
Updated on : 06 September 2022

திரையுலகில் வெகு சில இயக்குநர்களே தங்கள் வழக்கமான  படைப்புலகத்திலிருந்து வெளிவந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு படத்தை தர முயல்வார்கள். அத்தைகைய தொலைநோக்கு பார்வைக்கொண்ட இயக்குநர்களில் முதன்மையானவராக தன்னை நிரூபித்தவர் இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜன். ஸ்பேஸ் திரில்லராக உருவான டிக் டிக் டிக், வேம்பயர் திரில்லரன மிருதன், உயிருடன் வரும் டெடி பொம்மை சார்ந்த காதல் கதையான டெடி என ஒவ்வொரு படமும் அவருக்கு மட்டுமல்ல தமிழ்படைப்புலகத்திற்கே   முற்றிலும் புதிதானது. அந்த வகையில் முற்றிலும் புதிதான களத்தில் ஏலியன் சர்வைவல் திரில்லராக ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள கேப்டன் திரைப்படம் (செப்டம்பர் 8, 2022) உலகம் முழுக்க வெளியாகிறது.



 



படம் குறித்து இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜன்  கூறியதாவது… 





 ஒவ்வொரு படத்திற்கும் ஒரு ஆரம்ப புள்ளி இருக்கும் அந்த கணத்திலிருந்தே அதன் மொத்த பயணமும் தொடங்கும். கேப்டன் படத்தை பொறுத்தவரை ரசிகர்கள் திரையரங்கில் கொண்டாடும் படியான ஒரு  படைப்பை, இது வரை பார்த்திராத விஷுவல்களுடன் புதிய ஆக்சனுடன் பிரமாண்டமாக தர வேண்டுமென்பதாக இருந்தது. முதலில் இது சாத்தியமில்லை என்றே நினைத்தேன் ஆனால் ஆர்யா மற்றும் ஸ்வரூப் தந்த ஆதரவு  எனக்கு மிகப்பெரிய நம்பிக்கை தந்தது.  என் மீது அவர்கள் வைத்த முழுமையான நம்பிக்கையில் தான் நான் இந்த படைப்பை உருவாக்க முடிந்தது. ஒரு படத்தின் பட்ஜெட்டை விட இயக்குநருக்கும் நடிகருக்கும் உள்ள சுமூகமான உறவால் தான்  ஒரு அருமையான படம் உருவாக முடியும் அந்த வகையில் ஆர்யாவுடன் டெடி படத்தில் பணியாற்றும் போதே ஒரு சகோதரர் போன்ற உறவு உண்டாகிவிட்டது. இந்தப்படத்தில் அவரது உழைப்பும் அர்ப்பணிப்பும் அபாரமானது. முன்னெப்போதிலும் இல்லாத ஒரு முழுமையான திரையரங்கு அனுபவமாக இப்படம் இருக்கும் என்றார். 



 



Think Studios உடன் நடிகர் ஆர்யாவின் The Show People இணைந்து தயாரிக்கும் “கேப்டன்” படத்தில் ஆர்யாவுடன்  சிம்ரன், ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஹரிஷ் உத்தமன், காவ்யா ஷெட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் கோகுல் ஆனந்த், சுரேஷ் மேனன், பரத் ராஜ், அம்புலி கோகுல் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.



 



தொழில்நுட்பக் குழுவில் S.யுவா (ஒளிப்பதிவு), D இமான் (இசை), பிரதீப் E ராகவ் (எடிட்டர்), S.S.மூர்த்தி (தயாரிப்பு வடிவமைப்பு), R.சக்தி சரவணன்- K கணேஷ் (ஸ்டண்ட்ஸ்), தீபாலி நூர் (ஆடை வடிவமைப்பு), S மூர்த்தி (ஸ்டில்ஸ்) , NXgen (VFX), V அருண் ராஜ் (VFX மேற்பார்வையாளர்), Igene (DI), சிவசங்கர் V (வண்ணக்கலைஞர்), தபஸ் நாயக் (ஆடியோகிராபி), அருண் சீனு (ஒலி வடிவமைப்பு), கோபி பிரசன்னா (பப்ளிசிட்டி டிசைன்), S சிவக்குமார் (தயாரிப்புக் கட்டுப்பாட்டாளர் ), K. மதன் (நிர்வாகத் தயாரிப்பாளர்), சுரேஷ் சந்திரா-ரேகா D’One(மக்கள் தொடர்பு) ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா