சற்று முன்
சினிமா செய்திகள்
பாபி சிம்ஹா முக்கியமான வேடத்தில் நடிக்கும் 'ராவண கல்யாணம்' படப்பிடிப்பு இனிதே துவங்கியது!
Updated on : 07 September 2022

தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழி படங்களிலும், பான் இந்தியா படங்களிலும் கதாநாயகியாக நடித்துவரும் நடிகை தீப்ஷிகாவுக்கு வாய்ப்புகள் தொடர்ந்து குவிந்து வருகின்றன. அந்தவகையில் அழகும் திறமையும் வாய்ந்த தீப்ஷிகா, தெலுங்கில் தனது மூன்றாவது படமாக ராவண கல்யாணம் என்கிற படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.
ஜார்ஜ் ரெட்டி, வங்கவீட்டி உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்த சந்தீப் மாதவ் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். முக்கியமான வேடத்தில் தேசிய விருது பெற்ற நடிகர் பாபி சிம்ஹா நடிக்கிறார்.
சமீபத்தில் திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்துகொள்ள இந்த படத்தின் துவக்க விழா நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் தெலுங்கு திரையுலகின் பிரபல இயக்குநர் விவி விநாயக் கலந்துகொண்டு படத்தின் ஸ்கிரிப்டை அதன் தயாரிப்பாளர்களிடம் ஒப்படைத்தார். அதுமட்டுமல்ல படத்தின் முதல் ஷாட்டையும் அவர் இயக்கினார்.
மேலும் தெலுங்கின் பிரபல கதாநாயகன் சத்யதேவ் கலந்துகொண்டு கேமராவை ஆன் செய்து துவக்கி வைத்தார். அந்தவகையில் ராவண கல்யாணம் படத்தின் துவக்கவிழா திரையுலக நிகழ்வுகள் மிகவும் அருமையான நிகழ்வுகளில் ஒன்றாக அமைந்து விட்டது.
இந்த படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் இரண்டாம் வாரத்தில் இருந்து முழுவீச்சில் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது.
ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற அர்ஜுன் ரெட்டி படத்திற்கு இசையமைத்த ரதன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ஜதி ரத்னாலு படத்திற்காக பாராட்டப்பட்ட ஒளிப்பதிவாளர் சித்தம் மனோகர் இந்த படத்தின் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். இந்த படத்தை ஜேவி மதுகிரண் என்பவர் இயக்குகிறார்.
ராவண கல்யாணம் திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி என பான் இந்திய படமாக ஒரே நேரத்தில் வெளியாக இருக்கிறது.
ஏற்கனவே பான் இந்தியா படமாக உருவாகும் மைக்கேல் என்கிற படத்தில் சந்தீப் கிஷன் ஜோடியாக நடித்து வருகிறார் தீப்ஷிகா. பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜால் துவங்கி வைக்கப்பட்ட இந்த படத்தில் விஜய்சேதுபதியும் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனும் கூட முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
அதுமட்டுமல்ல, தீப்ஷிகா தெலுங்கில் தனது முதல் படமாக கதாநாயகியை மையப்படுத்தி உருவாகி வரும் காதல் கதை ஒன்றிலும் நடித்து முடித்துவிட்டார். பிரபல நடிகர் ரவிதேஜாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ஆர்டி டீம் ஒர்க்ஸ் மற்றும் பாசிட்டிவ் வைப் புரொடக்சன் ஆகியவை இணைந்து தயாரித்துள்ள இந்தப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
சமீபத்திய செய்திகள்
‘பிளாக்மெயில்’ படம் த்ரில்லர் என்பதையும் தாண்டி ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகி உள்ளது
இசையமைப்பாளர் மற்றும் நடிகர் என இரண்டு துறைகளிலும் சிறந்து விளங்கும் வெகு சிலர்களில் ஜிவி பிரகாஷ்குமாரும் ஒருவர். தேசிய மற்றும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஆன பின்பு நடிகராகவும் தனக்கான இடத்தை தக்க வைத்துள்ளார். திரைத்துறையினர் மற்றும் வர்த்தக வட்டாரத்தில் இவரது படங்கள் வணிக ரீதியாக வெற்றியடைந்துள்ளது. நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்களைக் கவர்ந்துள்ளார்.
தற்போது மு. மாறன் இயக்கத்தில், JDS ஃபிலிம் ஃபேக்டரி பேனரில் ஜெயக்கொடி அமல்ராஜ் தயாரிப்பில் ஜிவி பிரகாஷ்குமார் நடித்துள்ள ‘பிளாக்மெயில்’ திரைப்படம் ஆகஸ்ட் 1, 2025 அன்று உலகளவில் திரையரங்குகளில் வெளியாகத் தயாராக உள்ளது.
படம் குறித்து ஜிவி பிரகாஷ்குமார் பகிர்ந்து கொண்டதாவது, “’பிளாக்மெயில்’ படத்தின் ஃபைனல் அவுட்புட் பார்த்த பிறகு, மு. மாறன் ஒரு கதை சொல்லியாகவும் இயக்குநராகவும் தன்னை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றிருக்கிறார் என்பது தெரிந்தது. அவருடைய முந்திய படங்களான ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ மற்றும் ‘கண்ணை நம்பாதே’ ஆகிய இரண்டு படங்களுக்கும் நான் ரசிகன். ‘பிளாக்மெயில்’ திரைப்படம் த்ரில்லர் என்பதையும் தாண்டி ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகி உள்ளது. அனைத்து வயதினரும் தங்களுடன் இந்தப் படத்தை தொடர்பு படுத்திக் கொள்ள முடியும்.
என்னுடைய கதாபாத்திரத்தை இயக்குநர் மாறன் தெளிவாக எழுதியிருந்தார். படத்தைப் பார்த்த பிறகு, ஒவ்வொரு கதாபாத்திரமும் முக்கியத்துவத்துடன் எழுதப்பட்டிருக்கிறது என்பதை உணர்ந்தேன். குறைந்த நேரம் வரக்கூடிய சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் ரசிகர்கள் மனதில் அழுத்தமாக பதியும்” என்றார்.
தயாரிப்பாளர் ஜெயக்கொடி அமல்ராஜ் பற்றி பகிர்ந்து கொண்டதாவது, “அவரைப் போல நிறைய தயாரிப்பாளர்கள் தமிழ் சினிமாவுக்கு தேவை. படத்திற்கு தேவையான பணம் மட்டுமே கொடுப்பது இல்லாமல் உணர்வுப்பூர்வமாகவும் படம் ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை ஆர்வம் காட்டினார். நானும் ஒரு தயாரிப்பாளர் என்பதால் இந்த குணத்தை அவரிடம் பார்த்து வியந்தேன். எந்த ஒரு சவால் வந்தாலும் படத்தை நல்லபடியாக முடிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார்”.
தன்னுடன் நடித்த சக நடிகர்கள் பற்றி பேசும்போது, “திரையில் மிகவும் திறமையாக தனக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை கொண்டு வருபவர் நடிகை பிந்து மாதவி. ’பிளாக்மெயில்’ படத்தில் வலுவான கதாபாத்திரம் மூலம் அவர் மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வருவது மகிழ்ச்சியாக உள்ளது. தேஜூ அஸ்வினி வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவரது ரசிகர்கள் இதற்கு முன்பு இவரை இப்படி பார்த்திருக்க மாட்டார்கள். ஸ்ரீகாந்த் மறக்க முடியாத கதாபாத்திரத்தில் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்” என்றார்.
ரசிகர்களிடையே வானளாவிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள 'கிங்டம்' ட்ரைலர்!
விஜய் தேவராகொண்டா நடித்துள்ள "கிங்டம்" படத்தின் அதிகாரபூர்வ ட்ரைலர் வெளியாகி, ரசிகர்களிடையே வானளாவிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்தப் படத்தை கவுதம் தின்னனூரி இயக்க, நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்யா இணைந்து தயாரிக்கின்றனர். படம் வரும் ஜூலை 31, 2025 அன்று திரைக்கு வரவுள்ளது.
ட்ரைலர் ஒரு கதையை மிக வலிமையாகவும் தாக்கத்தோடும் கொண்டு வருகிறது. சாதாரண ஆக்ஷன் மட்டும் அல்லாமல், கதாபாத்திரங்களுக்கிடையிலான நெருக்கத்தை உணர்த்தும் பல உணர்வுபூர்வமான காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. விஜயின் 'சூரி' மற்றும் சத்யதேவின் 'சிவா' இடையேயான காட்சிகள் மிகுந்த கேமிஸ்ட்ரியுடன் உள்ளடக்கப்பட்டு, படம் ஒரு ஆழமான உணர்வை வழங்கப் போவதைக் காட்டுகின்றன. கதையின் உணர்வும், விழிப்பும் பார்வையாளர்களை ஈர்க்கும் விதமாக உள்ளது.
விஜய் தேவராகொண்டாவின் நடிப்பு, அவர் வழங்கிய மிகச் சிறந்த நிகழ்வாகவே கருதப்படுகிறது. அவரது ரௌத்திரம் , உணர்ச்சிப்பூர்வமான அன்பு மற்றும் திரைமேடையில் அவரது நம்பிக்கையான உலாவல் அனைத்தும் இந்த ட்ரைலரில் நமக்கு அறிமுகமாகின்றன. இது திரையில் அவர் தரவுள்ள பெரிய விருந்து என்னும் அடையாளமாக அமைகிறது.
கவுதம் அவர்களின் தனித்துவத்தையும் , கதை சொல்லும் மென்மையையும் மிகச் சிறந்த உணர்வுகளுடன் இணைத்து வழங்கியுள்ளார். எடிட்டர் நவீன் நூலி அவர்களின் கூர்மையான எடிட்டிங் வேலை ட்ரைலரை மேலும் வலுப்படுத்தி, பார்வையாளர்களை கவரும் வகையில் உள்ளது.
இசை அமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன், இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். ஏற்கனவே "அண்ணா அந்தனே", "இதயம் உள்ளே வா" போன்ற ஹிட் பாடல்களை வழங்கிய அனிருத், இந்தப் படத்திலும் தனது பாக்ஸ்கிரவுண்ட் ஸ்கோரை வைத்து ஒவ்வொரு காட்சியையும் பறக்க வைக்கிறார். கதையின் உணர்வுகளுக்கும், ஓட்டங்களுக்கும் இசை வழிகாட்டியாக அமைந்துள்ளது.
ஒளிப்பதிவு - ஜோமன் T. ஜான் மற்றும் கிரிஷ் கங்காதரன் படத்தொகுப்பு - நவீன் நூலி
சித்தாரா எண்டர்டெயின்மென்ட்ஸ், ஃபார்சூன் ஃபோர் சினிமாஸ் மற்றும் ஸ்ரீகரா ஸ்டூடியோஸ் என்ற மூன்று நிறுவனங்களின் சார்பில், நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்யா தயாரித்துள்ளனர்.
ஜூலை 31 – வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் ஒரு மாஸ் பிளாக்பஸ்டர் பிறக்கப்போவது உறுதி!
படம் வெளியானதற்கு பிறகு நிச்சயம் இயக்குநரின் வேலை பேசப்படும் - இணைத் தயாரிப்பாளர் கலை அரசு
சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் வழங்கும் இயக்குநர் ராஜவேல் இயக்கத்தில் நடிகர்கள் தர்ஷன், காளி வெங்கட், ஆர்ஷா பைஜூ உள்ளிட்டப் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ஹவுஸ் மேட்ஸ்'. ஆகஸ்ட் 1 அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் நடைபெற்றது.
இயக்குநர், கிரியேட்டிவ் புரொடியூசர் சக்திவேல், "இதன் திரைக்கதை படிப்பதற்கே சுவாரஸ்யமாக இருந்தது. வெவ்வேறு இடங்களில் டிராவல் ஆகிக் கொண்டே இருந்தது. அதை சரியாக படமாக்கிவிட முடியுமா என்ற கேள்வியும் இருந்தது. சவாலான இந்த விஷயத்தை செய்ய ஆர்ட் டிரைக்ஷன், இசை, ஸ்டண்ட் என அனைத்திலும் சரியாக இருக்க வேண்டும். அந்த குழு சரியாக வேலையும் பார்த்தார்கள். படம் முடிந்ததும் அதை பிசினஸ் செய்ய வேண்டும் என்றபோது, சிவகார்த்திகேயன் தரப்பிலிருந்து கால் வந்தது. அவர் படம் பார்த்துவிட்டு, 'உங்கள் குழுவின் முயற்சிக்கு என்னால் ஆன சின்ன சப்போர்ட்' என்று சொல்லிவிட்டு படத்தை வழங்குவதற்கு மிகவும் நன்றி. எனக்கு காளி வெங்கட்டை மிகவும் பிடிக்கும். அவருக்கும் தர்ஷன் பிரதருக்கும் மற்ற நடிகர்களுக்கும் நன்றி! பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ் போல இந்த படத்திலும் எதிர்பாராததை எதிர்பாருங்கள். ஆகஸ்ட் 1 அன்று படம் வெளியாகிறது".
எடிட்டர் நிஷார் ஷெரிஃப், "'ஹவுஸ் மேட்ஸ்' எனக்கு முதல் படம். முதல் படம் எப்போதுமே ஸ்பெஷல். இயக்குநர், நடிகர்கள் என எல்லோருமே எனக்கு நண்பர்கள் தான். தயாரிப்பாளர் விஜய பிரகாஷூக்கு நன்றி. எல்லாமே எங்களுக்கு செய்து கொடுத்தார். ஆகஸ்ட் 1 அன்று படம் வெளியாகிறது. பார்த்துவிட்டு சொல்லுங்கள்".
ஒளிப்பதிவாளர் சதீஷ், "எனக்கும் இது முதல் படம். டிரெய்லரில் பார்த்ததை விட இன்னும் சிறப்பான பல விஷயங்கள் படத்தில் இருக்கிறது. ஆகஸ்ட் 1 அன்று திரையரங்குகளில் வந்து படம் பாருங்கள். நன்றி".
கலை இயக்குநர் ராகுல், " ஒரு வெற்றி இன்னொரு வெற்றியை தேடி தரும் என்று சொல்வார்கள். அப்படித்தான் 'பார்க்கிங்' பட வெற்றி மூலம் இந்த பட வாய்ப்பு எனக்கு வந்தது. நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து இந்த படம் செய்து இருக்கிறோம். இதில் பணியாற்றியது மகிழ்ச்சி. படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்".
நடிகர் அப்துல் லீ, "நான் இதற்கு முன்பு நடித்த 'கேப்டன் மில்லர்', 'இரும்புத்திரை' போன்ற படங்களில் என்னுடைய கேரக்டர் சின்னதாக இருந்தாலும் கதையின் போக்கை மாற்றும்படி முக்கியமானதாக இருக்கும். அது போன்ற ஒரு கதாபாத்திரம் தான் 'ஹவுஸ் மேட்ஸ்' படத்திலும். பொதுவாக புதுமுக இயக்குநர்களுக்கும் எனக்கும் நல்ல ராசி இருக்கிறது. இந்த படம் நிறைய பேருக்கு முதல் படம். அனைவருக்கும் வாழ்த்துக்கள்! காளி வெங்கட் அண்ணா நான் நடிக்க நுழைந்த சமயத்தில் பெரிய இன்ஸ்பிரேஷன். தர்ஷனை எங்கள் வீட்டில் எல்லோருக்கும் பிடிக்கும். எனக்கு நல்ல கேரக்டர் கொடுத்த இயக்குநருக்கு நன்றி. படத்தை தியேட்டரில் பார்த்துவிட்டு சொல்லுங்கள்".
நடிகை வினோதினி, " இந்த நல்ல படத்தில் எனக்கு நல்ல கதாபாத்திரம் கொடுத்த இயக்குநருக்கு நன்றி. இந்தப் படம் நல்ல படம் என்பதை மிகவும் நம்பிக்கையாக என்னால் சொல்ல முடியும். சக்திவேல் கிரியேட்டிவ் புரொடியூசர் ஆக இந்த படத்தில் வேலை பார்த்திருக்கிறார். நல்ல படங்களில் எப்போதும் அவருடைய பங்கு இருக்கும். இந்த சின்ன படத்தில் சிவகார்த்திகேயன் உள்ளே நுழைந்ததும் பெரிய படமாக மாறிவிட்டது. அவருக்கும் நன்றி. தர்ஷன், காளி வெங்கட் இருவரின் வளர்ச்சியும் பிரம்மிக்க வைக்கிறது. படம் வெளியானதும் நிச்சயம் அனைவரின் நடிப்பும் பாராட்டப்படும்".
பாடலாசிரியர் மோகன் ராஜன், "'குடும்பஸ்தன்', ''டூரிஸ்ட் ஃபேமிலி' படத்திற்குப் பிறகு இந்தப் படம் நன்றாக வந்திருக்கிறது. இந்த வருடத்தில் எனக்கு அமைந்த மற்றொரு நல்ல படம். சிவகார்த்திகேயன், தர்ஷன், காளி வெங்கட் இவர்கள் அனைவருடனும் பணிபுரிந்தது மகிழ்ச்சி. நிச்சயம் 'ஹவுஸ்மேட்ஸ்' உங்களால் மறக்க முடியாத படமாக இருக்கும்".
இசையமைப்பாளர் ராஜேஷ் குமரேசன், "படத்தின் கதை கேட்டதும் உடனே ஒத்துக்கொண்டேன். நிச்சயம் படம் உங்களுக்கும் பிடிக்கும். திரையரங்குகளில் வந்து பாருங்கள்".
புரொடியூசர் விஜய பிரகாஷ், "ராஜவேலும் நானும் கல்லூரி காலத்தில் இருந்தே நண்பர்கள். அப்போது சண்டை போட்டதில்லை. ஆனால், படம் எடுக்கும்போது நிறைய சண்டை போட்டோம். சக்திவேல் உள்ளே வந்ததும் டீம் செட் ஆகி படம் விறுவிறுப்பாக நடந்தது. அதன் பிறகு சாந்தி டாக்கீஸ் அருண் ப்ரோ பார்த்தார். பின்பு சிவகார்த்திகேயன் உள்ளே வந்தார். படத்திற்கு எல்லா விஷயங்களையும் பார்த்து செய்த சிவகார்த்திகேயன் & டீமுக்கு நன்றி. ஆகஸ்ட் 1 அன்று படம் வெளியாகிறது. உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை".
இயக்குநர் ரவிக்குமார், "இந்தப் படத்தை பார்க்க SK நட்பு ரீதியில் அழைத்த போது சென்று பார்த்தேன். படம் பார்த்துவிட்டு வெளியில் வந்தபோது இயக்குநரிடம் வெற்றி படம் கொடுத்திருக்கிறீர்கள் என்று வாழ்த்தினேன். டிரெய்லரை விட படத்தில் நிறைய சர்ப்ரைஸ் இருக்கும். SK புரொடக்சன்ஸ் மூலமாக இந்தப் படத்தை வெளியிடுவது படக்குழுவினருக்கு எவ்வளவு சந்தோஷமான விஷயம் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. அனைவருக்கும் வாழ்த்துக்கள்".
இயக்குநர் அஜய் ஞானமுத்து, "படம் பார்த்தது முடித்ததும் இயக்குநரை கட்டிப்பிடித்துக் கொண்டேன். வெற்றி படமாக இதைக் கொண்டு வந்திருக்கிறார்கள். படக்குழுவினர் அனைவரும் சிறப்பாக ஒத்துழைப்பு கொடுத்துள்ளார்கள். நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர். எஸ்கே புரொடக்க்ஷன் படத்தை வாங்கியுள்ளது என்பதே படத்தின் முதல் வெற்றி. படம் கண்டிப்பாக அடுத்த லெவல் சென்றிருக்கிறது"
SK புரொடக்சன்ஸ், இணைத் தயாரிப்பாளர் கலை அரசு, " நல்ல கன்டென்ட் மற்றும் புது திறமையாளர்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான் நாங்கள் இயங்கி வருகிறோம். அந்த வகையில் 'கனா' படத்தில் இருந்து ஆரம்பித்து இப்போது 'ஹவுஸ் மேட்ஸ்' எட்டாவது படமாக வெளியிட இருக்கிறோம். ஃபேமிலி என்டர்டர்டெயினராக படம் உருவாகி இருக்கிறது. படம் வெளியானதற்கு பிறகு நிச்சயம் இயக்குநரின் வேலை பேசப்படும். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்".
நடிகை ஆர்ஷா பைஜூ, " தமிழில் இது என்னுடைய முதல் படம். என்னை நம்பி இந்த கதாபாத்திரம் கொடுத்த ராஜவேல் அண்ணனுக்கு நன்றி. சிறப்பான குழுவோடு பணியாற்றி இருக்கிறேன். தர்ஷன் சிறந்த கோ- ஆக்டர். கடின உழைப்பாளி. காளி வெங்கட், வினோதினி போன்ற திறமை வாய்ந்த நடிகர்களுடன் நடித்தது மகிழ்ச்சி. உங்கள் ஆதரவு நிச்சயம் தேவை".
இயக்குநர் ராஜவேல், " இந்த படம் சாதாரணமாக தான் ஆரம்பித்தது. ஆனால், இவ்வளவு பெரிய மேடை இந்த படத்திற்கு அமைந்தது சிவகார்த்திகேயன் புரொடக்ஷன் தான். முதல் படம் எடுப்பது சவாலான விஷயம். எடுத்த படத்தை வெளியிடுவது இன்னும் சவாலானது. அதை SK புரொடக்க்ஷன் எளிமையாக செய்து கொடுத்தது. சிவகார்த்திகேயன் சாருக்கு நன்றி. இயக்குநர் அஜய் ஞானமுத்துவிடம் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன். நான் கஷ்டப்பட்ட சமயத்தில் கூட இருந்த விஜய்க்கு நன்றி. தர்ஷன், காளி வெங்கட், வினோதினி மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. படத்தில் நிறைய சின்ன சின்ன சர்ப்ரைஸ் இருக்கிறது. தியேட்டரில் படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்".
நடிகர் காளி வெங்கட், "எனக்கு மட்டுமல்ல, பார்வையாளர்களுக்கும் இது முக்கியமான படமாக இருக்கும். என்னை நம்பி இந்தக் கதாபாத்திரம் கொடுத்த இயக்குநருக்கு நன்றி. படம் பார்த்துவிட்டு வாழ்த்திய சிவகார்த்திகேயன், கலை மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. படத்தில் நிறைய சர்ப்ரைஸ் இருக்கு. ஆகஸ்ட் 1 அன்று படம் பாருங்கள்".
நடிகர் தர்ஷன், "இதுபோன்ற கதையில் நடிக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை. அது 'ஹவுஸ் மேட்ஸ்' படத்தில் அமைந்திருக்கிறது. என்னை நம்பி இந்த கதாபாத்திரம் கொடுத்த இயக்குநருக்கு நன்றி. படக்குழுவினர் அனைவரும் கடினமாக உழைத்துள்ளனர். படத்தின் ஐடியா, திரைக்கதை இதெல்லாம் சிவகார்த்திகேயன் அண்ணாவுக்கு மிகவும் பிடித்தது. படத்தை பிரசண்ட் செய்ய ஒத்துக்கொண்டதற்கு அண்ணாவுக்கு நன்றி. டிரெய்லர் பார்த்துவிட்டு நிறைய பேர் ஹாரர் படமா என்று கேட்டார்கள். அதையும் தாண்டி என்கேஜிங்கான திரைக்கதையும் ஆச்சரியங்களும் கொண்ட ஃபேமிலி எண்டர்டெயின்மெண்ட் படம் இது. காளி வெங்கட் அண்ணாவுடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம். படம் பார்த்துவிட்டு உங்கள் ஆதரவை கொடுங்கள்" என்றார்.
'பிளாக்மெயில்' உணர்வும், உற்சாகமும் சரியாக கலந்த ஒரு படம் - நடிகை பிந்து மாதவி
எந்த கதாபாத்திரம் குடுத்தாலும் , அதை தனது ஆழமான உணர்வால் உயிரோட்டமுடன் பதிவு செய்யும் நடிகை பிந்து மாதவி, தனது திறமையை நிரூபித்துவிட்டவர். எப்போதுமே சவாலான மற்றும் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்யும் பிந்து மாதவி, தற்போது பிளாக்மெயில் பட குழுவிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்துவருகிறது. ஆகஸ்ட் 1, 2025 அன்று உலகமெங்கும் திரையிடப்பட உள்ள இந்த படத்தில் நடித்த அனுபவத்தைப் பற்றி பிந்து மாதவி மனம் திறந்து பேசுகிறார்.
"ஒவ்வொரு கலைஞனும் தனது வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் தருணத்தை தேடிக்கொண்டே இருப்பார்," என்கிறார் பிந்து மாதவி.
"பெண்கள் தங்களுக்குரிய தனிப்பட்ட இடத்தை பெறுவதற்காக தொடர்ந்து சவால்களை எதிர்கொள்கிறார்கள். ஆனால் இயக்குநர் மு. மாரன் பிளாக்மெயில் கதையை விவரித்த நேரத்தில், அது என்னுடன் உடனடியாக ஒரு இணைப்பை ஏற்படுத்தியது. இது எனக்காகவே காத்திருந்த ஒரு கதாபாத்திரம் போல உணர்ந்தேன் , உணர்வும் ஆழமும் கலந்து அவர் உருவாக்கிய என் கதாபாத்திரம் எனக்கு ஒரு பெரிய பொறுப்பையும் தந்தது. முக்கியமான பல கதாபாத்திரங்களுடன் இணைந்து எனது காட்சிகள் வந்திருக்கின்றன. ஜி.வி. பிரகாஷ்குமார் போன்ற அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தும் நடிகருடன் பணியாற்றிய அனுபவம் அருமை. தேஜு அஸ்வினி, ஸ்ரிகாந்த் மற்றும் மற்ற நடிகர்கள் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர்.
நீங்கள் கண்களை இமைக்கவே மாட்டீர்கள்! இது ஒரு அதிரடித் திரில்லர், உணர்வும், உற்சாகமும் சரியாக கலந்த ஒரு படம். இவை அனைத்துக்கும் காரணம் மு. மாரனின் பதற்றமூட்டும் கதைச்சொல்லல்!"
பிளாக்மெயில் படத்தின் கதை, திரைக்கதை மற்றும் இயக்கம் – மு. மாரனின் படைப்பு.
இந்தப் படத்தை தயாரித்திருக்கிறார் தெய்வகனி அமல்ராஜ், மற்றும் ஜே.டி.எஸ் பிலிம் பேக்டரியின் சார்பாக ஜெயக்கொடி அமல்ராஜ் பெருமையுடன் வழங்குகிறார்கள்.
படத்துக்கு இசை அமைத்திருக்கிறார் சாம் சிஎஸ், ஒளிப்பதிவாளர் கோகுல் பெனாய், படத் தொகுப்பு சான் லோகேஷ்.
வேலு பிரபாகரன் கொடுத்த ஒரு புத்தகம் தான் என்னை சிந்திக்க தூண்டியது! - நடிகர் சத்யராஜ்
சமீபத்தில் மறைந்த திரைப் பெரியார் இயக்குநர் வேலு பிரபாகரன் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வு நேற்று சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.
நிகழ்வில் நடிகர் சத்யராஜ், இயக்குநார் கதிர், பாடகர் அந்தோணி தாசன், ப்ளூ சட்டை மாறன், இயக்குநர் அகரன், தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கோவை ராமகிருஷ்ணன், திராவிடர் விடுதலைக் கழக பொதுச்செயலாளர் விடுதலை ராசேந்திரன், திராவிடர் கழக பொருளாளர் வீ. குமரேசன், தயாரிப்பாளர் சிட்டிபாபு ஆகியோர் கலந்து கொண்டு நினைவேந்தல் உரை ஆற்றினார்கள்.
நடிகர் சத்யராஜ் இயக்குநர் வேலு பிரபாகரனின் படத்தை திறந்து வைத்து பேசும் போது வேலு பிரபாகரன் கொடுத்த ஒரு புத்தகம் தான் தன்னை சிந்திக்க தூண்டியதாகவும், தன்னை பகுத்தறிவாளனாக மாற்றியதாகவும், தான் பகுத்தறிவாளனாக மாறியதால் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறினார். மேலும் வேலு பிரபாகரன் மருத்துவமனையில் இருந்த போது தொலைபேசியில் ஆறுதல் சொல்ல அழைத்தபோது 'நான் பிறந்து பெரியாரின் கருத்துக்களை இந்த மக்களுக்கு என்னால் முடிந்தவரை கொண்டு சேர்த்திருக்கேன். நான் வந்த வேலை நிறைவாக முடிந்திருக்கிறது' என்று சொன்னதாகவும் பேசிய அவர், ஒரு பகுத்தறிவாளன் மரணத்தைக் கூட எப்படி இயல்பாக எடுத்துக் கொள்கிறார் பாருங்கள் என்று சிலாகித்து பேசினார்.
மேலும் வந்திருந்த ஆளுமைகள் அனைவரும் வேலு பிரபாகரனுக்கும் தங்களுக்குமான நட்பையும், அன்பையும், தங்கள் அனுபவங்களையும் கூறி இயக்குநர் வேலு பிரபாகரனின் கொள்கை பற்றியும், சிந்தனைக் கூர்மையையும், தொழில்நுட்ப வல்லமையையும் பாராட்டி அவரது நினைவுகளை நினைவுகூர்ந்தனர்.
இந்நிகழ்வை இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் தொகுத்து வழங்கி தனது அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார். இறுதியாக அவருக்கு உற்ற துணையாக இருந்த டிஜிட்டலி ஜெகதீஷ், அவரது சகோதரர் வேலு ராஜா, அர்ஜுன் வேலு ஆகியோர் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டு நன்றி உரையாற்றினர்.
பிரமாண்டமாக அரங்கேறும் 'ராக் ஸ்டார் அனிருத்தின் #Hukum சென்னை இசை நிகழ்ச்சி!
'ராக் ஸ்டார்' அனிருத்தின் இசை நிகழ்ச்சி இதற்கு முன் கண்டிராத வகையில்... பிரம்மாண்டமான முறையில் நடைபெறுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பையும், முன்பதிவு பற்றிய விவரங்களையும் அனிருத் வெளியிட்டுள்ளார்.
பான் இந்திய இசையமைப்பாளரான அனிருத் - ரசிகர்களின் தொடர் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு, சென்னையில் இதற்கு முன் இசை ரசிகர்கள் பார்த்திராத வகையில் புதிய இசை அனுபவத்தை வழங்குவதற்காக தயாராகிறார். இந்த இசை நிகழ்ச்சி வரும் ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதியன்று கிழக்கு கடற்கரை சாலையில் கூவத்தூர் எனும் பகுதியில் அமைந்துள்ள மார்க் சொர்ணபூமி ( MARG SWARNABHOOMI ) எனும் இடத்தில் நடைபெறுகிறது.
பல்லாயிரக்கணக்கில் திரளும் இசை ரசிகர்களின் பாதுகாப்பு.. பார்க்கிங்.. என ஏராளமான வசதிகளுடன் பிரம்மாண்டமான முறையில் இசை நிகழ்ச்சி நடைபெறும் வகையில் விரிவான ஏற்பாடுகளை இசை நிகழ்ச்சியை நடத்தும் ஒருங்கிணைப்பாளர்கள் மேற்கொண்டிருக்கிறார்கள். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை அனிருத் வெளியிட்டுள்ளார்.
அத்துடன் இந்த இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனை District எனும் பிரத்யேக ஆப்( App)பில் வரும் ஆகஸ்ட் 4 ஆம் தேதி மாலை 3 மணி அளவில் தொடங்குகிறது. அதற்கான முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது.
இசை ரசிகர்கள் இதற்கு முன் இப்படியொரு பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி அனுபவத்தை அனுபவித்திராத வகையில் பிரத்யேக ஏற்பாடுகளை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் இசை கலைஞர்கள் செய்து வருகிறார்கள். குறிப்பாக ஏராளமான இசை ரசிகர்களின் வாகனங்களுக்கான பார்க்கிங் வசதி விசாலமாக இருக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் இசை ரசிகர்களின் உற்சாகத்தையும், கொண்டாட்டத்தையும் உளவியல் ரீதியாக மேம்படுத்தும். மேலும் இந்த நிகழ்ச்சி - இசை ரசிகர்களுக்கான ஆகச் சிறந்த முன்னுதாரணமாக திகழும் என்றும் ஒருங்கிணைப்பாளர்கள் நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார்கள்.
'ராக்ஸ்டார்' அனிருத் - பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் - பிரம்மாண்டமான மற்றும் கூடுதலான வசதிகள் - ஒப்பற்ற இசை அனுபவம் - ஆகியவை ஒன்றிணைந்திருப்பதால் அனிருத்தின் #Hukum மிகப் பிரம்மாண்டமான வெற்றியை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே பல உலக நாடுகளில் நடைப்பெற்ற 'ராக்ஸ்டார்' அனிருத்தின் #Hukum இசை நிகழ்ச்சியின் ஃபைனல் சென்னையில் நடைபெறுவதால் மிகப் பிரம்மாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக ஒருங்கிணைப்பாளர்கள் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழில் வெற்றியைத் தொடர்ந்து தெலுங்கு இந்தி மொழிகளிலும் வெளிவரும் ‘சட்டமும் நீதியும்’!
“18 கிரியேட்டர்ஸ்” என்ற நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சசிகலா பிரபாகரன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் சரவணன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க, நீதிமன்ற வழக்கின் பின்னணியில், அசத்தலான சீரிஸாக ZEE5ல் 2025 ஜூலை 18 ல் வெளியான ‘சட்டமும் நீதியும்’ சீரிஸ், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று, வெற்றியடைந்துள்ளது.
உணர்வுப்பூர்வமான கதையுடன், சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள இந்த சீரிஸ் மக்களிடம் பெரும் பாராட்டுக்களைக் குவித்து, வெளியான வேகத்தில் ZEE5ல் 51 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. தமிழில் வெற்றியைத் தொடர்ந்து தெலுங்கு இந்தி மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
இந்நிகழ்வினில்
“18 கிரியேட்டர்ஸ்” சார்பில் தயாரிப்பாளர் சசிகலா பிரபாகரன் பேசியதாவது…
எல்லோருக்குமே மிகப்பெரிய நன்றி. உங்களால் தான் இந்த சீரிஸ் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. நீங்கள் தான் இந்த சீரிஸை மக்களிடம் கொண்டு சேர்த்தீர்கள். என் கணவர் பிரபாகரன் தான் இதன் தயாரிப்பாளர், ஆனால் என் பெயர் போட்டு என்னை தயாரிப்பாளர் ஆக்கிவிட்டார். இந்த சீரிஸ் நடந்த போது பல கஷ்டங்கள் வந்தது. ஆனால் அதையெல்லாம் சமாளித்து, இரவு பகல் தூங்காமல் அவர் கஷ்டப்பட்டதை நான் நேரில் பார்த்திருக்கிறேன். சினிமா மீது உள்ள ஆசையில் அதில் சாதிக்க வேண்டும் என்ற வெறியில் இருந்தார். பல அவமானங்களைச் சந்தித்துள்ளார். ஆனால் அவர் கடின உழைப்பு இப்போது வெற்றி பெற்றிருக்கிறது. அவருக்கான அங்கீகாரமாக இந்த வெற்றி கிடைத்துள்ளது. இது மாதிரி தொடர்ந்து பல படைப்புகளை தயாரிக்க வேண்டும். இந்த குழுவில் எல்லோருமே கடின உழைப்பை தந்துள்ளார்கள். சரவணன் சார் அசத்திவிட்டார். நம்ரிதா எங்கள் அழகி, க்யூட்டான ஹீரோயின், புராஜக்டுக்கான தேவை என்னவாக இருந்தாலும் தயங்காமல் செய்வார். ஆர்ட் டைரக்டர், மியூசிக் டைரக்டர், எடிட்டர் என எல்லோரும் சிறப்பாக செய்துள்ளீர்கள். கேப்டன் பாலாஜி செல்வராஜ் சிறப்பான படைப்பைத் தந்துள்ளார். அவர் புரடியூசருக்கான டைரக்டர். 14 நாட்களில் படப்பிடிப்பை முடித்தார். அவர் கடின உழைப்பாளி. இவர்களின் உழைப்புக்கான பலன் தான் இந்த வெற்றி. இந்த வெற்றியை மக்களிடம் சேர்த்த ZEE5க்கு நன்றி. பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு நன்றி.
“18 கிரியேட்டர்ஸ்” சார்பில் தயாரிப்பாளர் பிரபாகரன் பேசியதாவது…
எங்கள் டீம், சரவணன் அண்ணன், இந்த முழு வெப் சீரிஸை, எங்கேயோ எடுத்துச் சென்றுவிட்டார்கள். இப்போது தெலுங்கு இந்தியிலும் இது டப்பாகி கொண்டிருக்கிறது. சரவணன் அண்ணன் நாங்கள் கேட்டதை விடப் பல மடங்கு செய்து தந்துவிட்டார் நன்றி. நம்ரிதா அருமையாகச் செய்துவிட்டார். ஆர்ட் டைரக்டர் பாவனா இதில் ஒரு செட் கூட செட் எனச் சொல்ல முடியாத படி, அருமையாகச் செய்துள்ளார். இயக்குநர் பாலாஜியும் நானும் நிறையச் சண்டை போட்டிருக்கிறோம். ஆனால் 14 நாட்களில் மொத்த சீரிஸையும் முடித்துத் தந்தார். அந்தளவு கடினமான உழைப்பாளி. மியூசிக் டைரக்டர் நீங்கள் தந்த இசைக்கு நன்றி. இந்த சீரிஸுற்கு முழுக்காரணமாக இருந்த என் மனைவிக்கு நன்றி. நான் சினிமா ஆசையில் வந்தவன். இந்த வெற்றிக்கு ஆதரவாக இருந்த ZEE5க்கு நன்றி. சின்னதாக ஆரம்பித்ததை மிகப்பெரிய படைப்பாக மாற்றிய பத்திரிக்கை ஊடக நண்பர்க்கு நன்றி.
நடிகர் சரவணன் பேசியதாவது…
எல்லோருக்கும் வணக்கம், சட்டமும் நீதியும் இவ்வளவு உயரம் சென்றதற்கு காரணமான பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு நன்றி. 90 களில் நான் ஹீரோவாக வந்த போது, அத்தனை பத்திரிக்கையாளர்களும் மிகப்பெரிய ஆதரவு தந்தார்கள். இந்த சீரிஸ் வெற்றிபெற்ற பிறகும் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் பிரபாகரனுக்கு அவர் மனைவிக்கும் என் நன்றி. என்னுடன் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. இப்போது தெலுங்கிலும் இது டாப்பாகி கொண்டிருப்பது மகிழ்ச்சி. இந்த வெற்றிக்கு காரணமான பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு மீண்டும் நன்றி.
இயக்குநர் பாலாஜி செல்வராஜ் பேசியதாவது…
பத்திரிக்கை சினிமா ஊடகங்களுக்கு நன்றி. சூரி அண்ணா தான் இந்தக் கதையை எடுத்துத் தந்து, இந்த வாய்ப்பை வாங்கித் தந்தார். தயாரிப்பாளர் பிரபாகரன், சசிகலா பிரபாகரன் இருவரும் இந்த சீரிஸிற்காக அவ்வளவு உழைத்துள்ளார்கள். சரவணன் சார் அவரை கம்படபிளாக வைத்துக்கொள்ள வேண்டும் என நினைத்தோம், ஆனால் அவர் தான் எங்களை பார்த்துக்கொண்டார் அவருக்கு நன்றி. நம்ரிதா அருமையாக நடித்துத் தந்தார். என் நண்பர் கேமராமேன் கோகுல், இசையமைப்பாளர், எடிட்டர் எல்லோருக்கும் நன்றி, இந்த படைப்பை வெற்றியாக்கித் தந்த அனைவருக்கும் நன்றி.
நடிகை நம்ரிதா பேசியதாவது..,
மீடியா நண்பர்களுக்கு நன்றி. இதை நல்ல அனுபவமாக மாற்றியது நீங்கள் தான். எங்களுக்கு ஆதரவு தந்த கௌஷிக் சாருக்கு நன்றி. பாலாஜி சார் இதை அருமையாக எடுத்ததற்கு நன்றி. பிரபாகர் சார் இப்போது வரை உழைத்துக் கொண்டுள்ளார். சரவணன் சார் மிகச்சிறந்த மனிதர் அவருடன் வேலை பார்த்தது மகிழ்ச்சி. எங்களுடன் பணியாற்றிய அனைத்து தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி. எல்லோருக்கும் நன்றி.
காஸ்ட்யூம் டிசைனர் மரியா பேசியதாவது..,
அனைவருக்கும் நன்றி. உங்கள் ஆதரவு இல்லையென்றால் இவ்வளவு தூரம் நாங்கள் வந்திருக்க முடியாது. என்னை நம்பி இந்த வாய்ப்பு தந்த சசிகலா மற்றும் பிரபாகரன், இயக்குநர் பாலாஜி ஆகியோருக்கு நன்றி
ஆர்ட் டைரக்டர் பாவனா பேசியதாவது..,
என்னை நம்பி இந்த வாய்ப்பு தந்த இயக்குநர் பாலாஜிக்கு நன்றி. தயாரிப்பாளர் சசிகலா மற்றும் பிரபாகரன் ஆகியோருக்கு நன்றி. என் குருவுக்கு நன்றி. பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு நன்றி
எடிட்டர் ராவணன் பேசியதாவது..,
என்னை நம்பிய இயக்குநர் பாலாஜிக்கு நன்றி. தயாரிப்பாளர் சசிகலா மற்றும் பிரபாகரன் ஆகியோருக்கு நன்றி. நல்ல சீரிஸை பாராட்டிய பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு நன்றி.
இசையமைப்பாளர் விபின் பாஸ்கர் பேசியதாவது..,
என் குரு ஜேம்ஸ் வசந்தன் சாருக்கு நன்றி. இந்த சீரிஸ் வேலை பார்த்தது அற்புதமான அனுபவம், எங்களுக்கு முழு ஆதரவு தந்த கௌஷிக் சாருக்கு நன்றி. சரவணன் சார், நம்ரிதா கலக்கி விட்டார்கள். தயாரிப்பாளர் பிரபாகரன் சாருக்கு நன்றி. என் நண்பர் இயக்குநர் பாலாஜிக்கு நன்றி.
ஒளிப்பதிவாளர் கோகுலகிருஷ்ணன் பேசியதாவது..,
இந்த புராஜக்ட் எங்கள் மனதுக்கு நெருக்கமானது. இதை இவ்வளவு பெரிய வெற்றியாக மாற்றித் தந்த பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு நன்றி.
நடிகர் அரோல் D சங்கர் பேசியதாவது..,
விடியும் முன் படத்திலிருந்து இயக்குநர் பாலாஜியைத் தெரியும். அங்கு ஆரம்பித்த பயணம், இங்கு வரை வந்தது மகிழ்ச்சி. பிரபாகரன் அவரை முதலில் அஸிஸ்டெண்ட் என நினைத்தேன். அண்ணா அண்ணா என அழைப்பா,ர் அவர் தான் தயாரிப்பாளர் என்றவுடன் நான் சார் என அழைக்க ஆரம்பித்துவிட்டேன். கடினமான உழைப்பாளி. நல்ல நடிகராக வரக்கூடியவர். நம்ரிதா ஹீரோயின் போலவே இருக்க மாட்டார். இயல்பாக இருப்பார். அழகாக நடித்துள்ளார். சரவணன் சார் இது பத்தாது, இன்னும் பெரிய அளவில் உங்களிடம் சண்டை போட வேண்டும், இன்னும் பல படங்கள் செய்ய வேண்டும். இந்த சீரிஸை பாராட்டி மக்களிடம் சேர்த்த பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு நன்றி.
நடிகர் குப்புசாமி பேசியதாவது…
எல்லோருக்கும் வணக்கம், நான் நிறைய படங்களில் நடித்துள்ளேன், நான் நடிச்ச படங்கள் ரிலீஸாகது, ரிலீஸானால் ஓடாது. நான் முதலில் நடித்த படம் சட்டம் என் கையில், 34 வருட உழைப்புக்குப் பலனாக இந்த வெற்றி வந்துள்ளது. சட்டமும் நீதியும் எனக்கான திருப்புமுனையாக அமைந்துள்ளது. சூரி அண்ணா இயக்குநர் பாலாஜி சார் சொல்லிக்கொடுத்து சொல்லிக்கொடுத்து என்னை இந்த கேரக்டரில் நடிக்க வைத்தார்கள். மக்கள் என்னை அடையாளம் கண்டுகொள்வது பெரும் மகிழ்ச்சி. இந்த வெற்றிக்குத் துணையிருந்த அனைவருக்கும் நன்றி.
நடிகர் சௌந்தர் பேசியதாவது…
தயாரிப்பாளர் பிரபாகரன் என் மச்சான். நான் அவனை சினிமாவுக்கு வராதே என பலமுறை சொல்லி, சண்டை போட்டுள்ளேன். ஆனால் கேட்க மாட்டான். பிடிவாதமானவன், இந்த வெற்றி அவனது உழைப்பால் வந்தது. அவன் லட்சியம் மீது அவனுக்கு இருந்த வெறி தான் அவனை இங்கு கொண்டு வந்துள்ளது. இந்த சீரிஸை சின்ன பட்ஜெட்டில் எடுத்து, அதை அதற்கு அதிகமாக விளம்பரம் செய்து ஜெயித்திருக்கிறான். அவனுக்கு வாழ்த்துக்கள். இந்த சீரிஸை எடுத்துத் தந்த குழுவிற்கு வாழ்த்துக்கள். சரவணன் சித்தப்பு இந்த சீரிஸிற்கு முழு பலமாக இருந்துள்ளார். அவருக்கு நன்றி. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
சட்டமும் நீதியும் சீரிஸில் நடிகர் சரவணன், நம்ரிதா MV முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 15 வருட இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் இந்த சீரிஸ் மூலம் ஹீரோவாக திரும்பியிருக்கிறார் சரவணன்.
சட்டமும் நீதியும் சீரிஸ் “குரலற்றவர்களின் குரல்” எனும் கருத்திலிருந்து உருவாகியுள்ளது. நம்மைச் சுற்றியுள்ள பலர் தங்களது குரலை வெளிப்படுத்த முடியாமல் அமைதியாக இருக்கும்போது, அந்த அமைதியை உடைத்து, தனது உரிமைக்கும் மற்றொருவரின் நலனிற்காகவும் நிற்கும் ஒரு சாதாரண மனிதரின் கதைதான் இது.
சட்டமும் நீதியும் சீரிஸை ZEE5 தளத்தில் பிரத்தியேகமாகக் கண்டுகளியுங்கள்.
மூன்றாவது படத்துக்கே பண்டிகை தின ரிலீஸ் எனும் உயர்வை பெற்றிருக்கும் பிரதீப் ரங்கநாதன்!
திரைபடங்களைத் தாண்டி ரசிகர்களிடம் பெரும் பாசமும் பெருமிதமும் பெற்ற சிலரே உள்ளனர். அந்த வரிசையில், பிரதீப் ரங்கநாதன் இளைஞர்களிடம் ஒரு புரட்சி அலையை உருவாக்கியிருக்கிறார். அவரைப் பார்த்து பலர் உற்சாகமும் நம்பிக்கையும் பெறுகிறார்கள். ரசிகர்களுக்கு அவர் வெறும் ‘டியூட்’ மட்டுமல்ல, சினிமா தொழில்நுட்ப ரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும் ஒரு நம்பகமான பெயராக மாறிவிட்டார்.
'லவ் டுடே' மற்றும் 'டிராகன்' என இரு படங்கள் மூலமாக வசூலிலும் வெற்றியிலும் உச்சத்தைத் தொட்டிருக்கும் இயக்குநர்-நடிகர் பிரதீப், தனது மூன்றாவது படத்துக்கே பண்டிகை தின ரிலீஸ் எனும் முக்கியமான உயர்வை எளிதாகப் பெற்றிருக்கிறார் . இது பலருக்கு கனவாகவே இருந்தாலும்! மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம், தீபாவளிக்கு அவரது அடுத்த படம் 'டியூட்' வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பிரதீப் ரங்கநாதனின் பிறந்தநாளை முன்னிட்டு, மைத்ரி மூவி மேக்கர்ஸ் அவரின் ஸ்பெஷல் லுக் ஒன்றை வெளியிட்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித் குமாருடன் பணியாற்றிய அனுபவம் உள்ள நவீன் யெர்நேனி மற்றும் Y.ரவி சங்கர் ஆகியோர் இப்போது டியூட் படத்தை தயாரிக்கின்றனர் . "பிரதீப்பின் பிரபலத்துக்கு எல்லைகள் தாண்டி வர்த்தக வரவேற்பு இருக்கிறது. படத்தின் பூஜை நாள் முதலே வியாபாரரீதியாக வரவேற்பை பெற்றுள்ளது" என அவர்கள் கூறுகின்றனர்.
2025 தீபாவளி ரிலீஸாக இருக்கிற டியூட் ஒரு கலகலப்பான ரொமான்டிக் காமெடி படமாகும். புதிய இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கும் இப்படத்தில், மமிதா பைஜு கதாநாயகியாக நடிக்க, சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் பல முன்னணி நடிகர்களும் இணைந்துள்ளனர். சமீபமாக இளைய நெஞ்சங்களை தன் இசையால் கொள்ளைகொண்ட இசை அமைப்பாளர் சாய் அப்யங்கர் இசையமைத்துள்ளார் ,நிகேத் பொம்மி ஒளிப்பதிவில் , தேசிய விருது பெற்ற பூர்ணிமா ராமசாமி உடை அலங்காரத்தில், பரத் விக்ரமன் எடிட் செய்ய , லதா நாயுடு தயாரிப்பு நிர்வாகத்தை கையாளுகிறார் .
தன்யா ரவிச்சந்திரன் நடிக்கும் விறுவிறுப்பான கிரைம் திரில்லர் 'றெக்கை முளைத்தேன்'
'சுந்தரபாண்டியன்' திரைப்படத்தில் கிராமத்து நட்பு, 'இது கதிர்வேலன் காதல்' படத்தில் நகைச்சுவை மற்றும் காதல், 'சத்ரியன்' படத்தில் ஆக்ஷன், 'கொம்பு வெச்ச சிங்கம்டா' படத்தில் கிராமத்து வீரம் மற்றும் 'செங்களம்' இணையத் தொடரில் அரசியல் ஆழம் எனப் பல்வேறு வகைப் படைப்புகளில் முத்திரை பதித்த இயக்குநர் எஸ். ஆர். பிரபாகரன், 'றெக்கை முளைத்தேன்' படத்தின் மூலம் இன்னுமொரு புதிய களத்தில் புகுந்துள்ளார்.
இது வரை அவர் செய்த படங்களிலேயே முற்றிலும் மாறுபட்ட விறுவிறுப்பான கிரைம் திரில்லர் ஜானரை சேர்ந்த 'றெக்கை முளைத்தேன்' படத்தை எழுதி, இயக்கி இருப்பதோடு தனது ஸ்டோன் எலிபெண்ட் கிரியேஷன்ஸ் நிறுவனம் மூலம் எஸ். ஆர். பிரபாகரன் தயாரித்தும் உள்ளார்.
தன்யா ரவிச்சந்திரன், பிரபா, குருதேவ், நித்திஷா, மெர்லின், ஜெய்பிரகாஷ், 'ஆடுகளம்' நரேன், கஜராஜ், மீராகிருஷ்ணன் மற்றும் ஸ்ரீ ரஞ்சனி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இப்படம் ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
'றெக்கை முளைத்தேன்' படம் குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்ட இயக்குநர் எஸ். ஆர். பிரபாகரன், "இத்தகைய படங்களைத் தான் இவர் எடுப்பார் என்ற சுழலில் சிக்காமல் ஒவ்வொரு படத்திலும் புதிதாக முயற்சிக்க வேண்டும் என்ற எனது லட்சியத்தின் வெளிப்பாடு தான் 'றெக்கை முளைத்தேன்'. கல்லூரியில் சேர்ந்த உடன் புதிய சிறகுகள் கிடைத்தாக உணரும் மாணவர்கள் ஒரு புறம், அதிரவைக்கும் குற்றத்தை விசாரிக்கும் காவல் அதிகாரியாக தன்யா ரவிச்சந்திரன் மறுபுறம் என்று தொடக்கம் முதல் இறுதி வரை பரபரப்புக்கு பஞ்சம் வைக்காத வகையில் இப்படம் இருக்கும்," என்றார்.
'றெக்கை முளைத்தேன்' படத்திற்கு தரண்குமார் பின்னணி இசை அமைக்க, கணேஷ் சந்தானம் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை பிஜு வி. டான்போஸ்கோ கையாளுகிறார்.
பாடலுக்கான இசையை தீசன் வழங்கி உள்ளார், கலை இயக்கம்: பிரேம், ஸ்டில்ஸ்: சி.எச். பாலு, ஆடை வடிவமைப்பாளர்: திவ்யா பிரபு தயாரிப்பு நிர்வாகி: கார்த்திக் துரை,
தயாரிப்பு மேலாளர்: அமிர்தராஜ் மற்றும் சுரேஷ், வி,ளம்பர வடிவமைப்பு: சிவகுமார்.
ஸ்டோன் எலிபெண்ட் கிரியேஷன்ஸ் பேனரில் எஸ். ஆர். பிரபாகரன் தயாரித்து இயக்கியுள்ள 'றெக்கை முளைத்தேன்' திரைப்படம் கிரைம் திரில்லர் வகையில் புதிய தடத்தை பதிக்கும் வகையில் உருவாகியுள்ளது.
கோவையை கலக்கப் போகும் வித்யாசாகர், விஜய் ஆண்டனி
இந்தியாவின் முன்னணி ஊடகத் தயாரிப்பு, நிகழ்வு மேலாண்மை மற்றும் திறமை மேலாண்மை நிறுவனமான நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் (Noise and Grains), திரைத்துறை ஜாம்பவான்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக தயாரித்து, உருவாக்கி, நடத்துவதன் மூலம் இந்திய ஊடக வெளியில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.
இந்திய இசையின் திலகங்கள், இளையராஜா, ARரஹ்மான், யுவன் சங்கர் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ், வித்யாசாகர், விஜய் அந்தோணி, அரிஜித் சிங், சோனு நிகம் மற்றும் பல ஜாம்பவான்களுடன் நடத்தப்பட்ட மாபெரும் வெற்றி பெற்ற நிகழ்ச்சிகளை தொடர்ந்து, புதுமையான பிரம்மாண்ட முயற்சி ஒன்றில் சாஸ்தா புரொடக்ஷன் நிறுவனத்துடன் இணைந்து நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் இறங்கியுள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களான வித்யாசாகர் மற்றும் விஜய் ஆண்டனி கலந்து கொள்ளும் இரண்டு பிரம்மாண்ட இசை நிகழ்ச்சிகளை கோவையில் நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் மற்றும் சாஸ்தா புரொடக்ஷன் ஏற்பாடு செய்யவுள்ளன.
தி நேம் இஸ் வித்யாசாகர் நிகழ்ச்சி செப்டம்பர் 20 அன்றும் விஜய் ஆண்டனி லைவ் இன் கான்செர்ட் செப்டம்பர் 21 அன்றும் மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் முன்னிலையில் கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற உள்ளன. இவற்றுக்கான நுழைவுச் சீட்டுகள் டிஸ்டிரிக்ட் பை சொமாட்டோ இணையதளம் மற்றும் செயலியில் கிடைக்கும்.
இசை ரசிகர்களின் இதயத்துடிப்பை புரிந்து அதற்கேற்ப நிகழ்ச்சிகளை சிறப்பாக திட்டமிட்டு அரங்கேற்றி வரும் நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் நிறுவனத்தினர், முன்னணி இசையமைப்பாளர்கள் வித்யாசாகர் மற்றும் விஜய் ஆண்டனி கோவையில் பங்கு பெறும் இசை நிகழ்ச்சியை சாஸ்தா புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து நடத்துவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
இந்த நிகழ்ச்சிகளில் ரசிகர்களின் இதயம் கவர்ந்த பாடகர்கள் மற்றும் இசைக் கலைஞர்கள் வித்யாசாகர் மற்றும் விஜய் ஆண்டனி உடன் பங்கேற்று மறக்க முடியாத பாடல்களை ரசிகர்களுக்காக மேடையில் வழங்குவார்கள்.
- உலக செய்திகள்
- |
- சினிமா