சற்று முன்

கார்த்தியின் வித்தியாசமான தோற்றத்தில் 'வா வாத்தியார்' படத்தின் டீஸர் வெளியானது!   |    இந்தியாவின் முதல் பான்-இந்திய நட்சத்திரமானது எப்படி? 22 வருட திரை வாழ்க்கை பற்றி பிரபாஸ்   |    டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அதன் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான 'பாராசூட்' டீசரை வெளியிட்டுள்ளது!   |    ஜப்பான் நாட்டில் வெளியிடப்பட உள்ள 'கல்கி 2898 கிபி'!   |    ரிபெல் ஸ்டார் பிரபாஸ் மற்றும் ஹோம்பாலே பிலிம்ஸ் இணைந்து, மூன்று படத்தில் ஒப்பந்தம்!   |    #NaniOdela2 திரைப்படத்திற்கு 'தி பாரடைஸ்' என்று தலைப்பிடப்பட்டுள்ளது!   |    'அமரன்' பட வெற்றியை தொடர்ந்து இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் தனுஷின் #D55   |    ராம் சரணின் ஸ்வாக், ஸ்டைல் மற்றும் மாஸ் என அதிரடியாக கலக்கும் ‘கேம் சேஞ்சர்’ பட டீசர்!   |    அரசாங்கத்திற்கு எதிராக பொய் பிரச்சாரம் செய்து வரும் ராதாரவி!   |    அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் நிரபராதி என விடுவிக்கப்பட்டார் #நிவின்பாலி !   |    2026 மற்றும் 2027 தீபாவளி அன்று வரலாற்றின் சிறப்பு மிக்க பக்கத்தைக் காணத் தயாராகுங்கள்!   |    நடிகர் பிரபாஸ் எழுத்தாளர்களுக்காக துவக்கி வைத்த ‘தி ஸ்கிரிப்ட் கிராஃப்ட்’ இணையதளம்!   |    'கேம் சேஞ்சர்' பட கூட்டணியின் மாஸ் அப்டேட்!   |    நவம்பர் 8 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் மெகாஹிட் 'ஏ.ஆர்.எம்' திரைப்படம்!   |    கேபிஒய் பாலா மற்றும் நியதி நடிப்பில் காதலை கலகலப்பாக சொல்லும் பாடல் 'ராக்காயி'   |    ‘பிரேக் ஃபாஸ்ட்’ படம் மூலம் தமிழ் திரையுலகில் தனது பயணத்தைத் தொடங்கும் நடிகை ரோஸ்மின்!   |    3 ஆயிரம் கோடி வசூலைக் கடந்த திரைப்படங்களைத் தந்த இந்தியாவின் ஒரே நடிகர் பிரபாஸ்!   |    நாக சைதன்யா, சாய் பல்லவி நடிக்கும் 'தண்டேல்' திரைப்பட வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டது!   |    ZEE5 இல் 50 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்து வரும் 'ஐந்தாம் வேதம்’ சீரிஸ்!   |    யூனிஃபார்ம் அணிந்தாலே வேறு மாதிரியான கம்பீர உணர்வு நமக்கு வரும் - போலீசாக நடித்த நகுல் பேச்சு   |   

சினிமா செய்திகள்

'ஷாட் பூட் த்ரீ' ICAFF, திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றது !
Updated on : 08 September 2022

தென்னிந்திய படங்கள் பான்-இந்திய சந்தையை உலுக்கி கொண்டிருக்கும் நேரத்தில்,  தற்போது தயாரிப்பு முடிந்த தமிழ்த் திரைப்படமான "ஷாட் பூட் த்ரீ" ICAFF, சியோல், தென் கொரியாவில்  ஐ.சி.ஏ.எஃப். எஃப் திரைப்பட விழாவின் சிறந்த விருதை வென்றது. தென் கொரியபப் படங்களுக்கு தமிழகத்தில் அதிக ரசிகர்கள் இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே. அவர்களின் சில படங்கள் தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளன, இது நாம் கொடுத்த ஆதரவிற்கு, அவர்கள் கொடுத்த பரிசு போலுள்ளது!



 



தென் கொரியா,  உலகின் ‘செல்லப்பிராணிகளின் தலைநகரம் ‘என்று சொன்னால் அது மிகையாகாது.  ஐ.சி,.ஏ. எஃப் .எஃப் (ICAFF) தென்கொரியாவில் துணை விலங்குகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட முதல் திரைப்பட திருவிழாவாகும். 2016 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்தத் திரைப்பட விழாவில், முதன் முறை ஒரு இந்தியத் திரைப்படம் விருதை வென்றுள்ளது.



 



விலங்குகள் செல்லப்பிராணிகள் மட்டுமல்ல, இப்போது குடும்பம் அல்லது வாழ்க்கைத் துணையாகக் கருதப்படுகின்றன, எனவே இந்தத் திரைப்பட விழா செல்லப்பிராணிகள மேல் நாம் கொண்டுள்ள நட்பையும் அன்பையும் கொண்டாடுகிறது.



 



விழாக் குழுவினர், இயக்குனருக்கு எழுதிய  பாராட்டு மடலில் கீழ்க்கண்டவற்றைக் குறிப்பிட்டுள்ளனர்.



 



1. மிக அற்புதமான மற்றும் ஆரோக்கியமான கதையுடன் கூடிய திரைப்படம்.



 



2. குழந்தைகள் மற்றும் நாய்களைப் பற்றிய இந்தியப் படத்தைப் பார்ப்பது புத்துணர்ச்சி அளிக்கிறது.



 



3. ஒளிப்பதிவு சிறப்பாக உள்ளது..



 



4. படத்தின் கருப்பொருள் எங்கள் ICAFF திரைப்பட விழாவின் நோக்கம் மற்றும் குறிக்கோளை மனப்பூர்வமாக பூர்த்தி செய்தது. மேலும் இந்த பரிசை உங்களுக்கு வழங்குவது என்பது அனைத்து நடுவர்களாலும் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. 



 



விருது வழங்கும் விழா அக்டோபர் 7-9 தேதிகளில் நடைபெறும். "ICAFF எக்ஸலன்ஸ் விருது" பணமுடிப்பு மற்றும் ஒரு கோப்பை பரிசாக அளிக்க படுகிறது.  இந்த விழாவிற்கு அருணாச்சலம் வைத்யநாதன் நேரில் சென்று பங்கு பெற உள்ளார்.



 



அருணாச்சலம் வைத்ய்நாதன் இது பற்றி கூறும்போது, “ICAFF திரைப்பட விழா இயக்குனர் டெபோரா பைக்கிடம் இருந்து வந்த வாழ்த்து செய்தியில் நானும், எனது குழுவும் மிக மகிழ்ச்சி அடைந்தோம். ஷாட் பூட் த்ரீ, எழுத ஆரம்பத்தில் இருந்து திரைப்படமாக எடுத்து முடிக்கும் வரை, எங்களுக்குப் பல ஆச்சர்யங்களைத் தந்துள்ளது! இந்தப் படம் வெளியாவற்கு முன்பே, எங்களுக்குக் கிடைத்த இந்த அங்கீகாரம் மேலும் உற்சாகத்தை ஊட்டியுள்ளது!’ என்றார்.



 



ஷாட் பூட் த்ரீ படத்தில் சினேகா, வெங்கட் பிரபு, யோகி பாபு,ஷிவாங்கி மற்றும் நான்கு குழந்தைகளுடன் ஒரு ‘கோல்டன் ரெட்ரீவர்’ நாய் 'மேக்ஸ்' நடித்துள்ளனர். கைலாஷ் ஹீத், சூப்பர் சிங்கர் ப்ரணிதி, வேதாந்த் மற்றும் ‘மாஸ்டர்’ புகழ் பூவையார் ஆகியோர் இந்த குடும்பப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வீணை மேஸ்ட்ரோ ராஜேஷ் வைத்யா இசையமைத்திருக்கிறார் ஒளிப்பதிவு சுதர்சன் சீனிவாசன், படத்தொகுப்பு பரத் விக்ரமன். படத்தின் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் வேலைகள் முடிந்த உடன் கிடைத்திருக்கும்  இந்த விருது, படக்குழுவினரை உற்சாகப்படுத்தியுள்ளது.



 



 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா