சற்று முன்

நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |    வட இந்திய மாநிலங்களிலும் ரசிகர்களால் கொண்டாடப்படும் தங்கலான்!   |    'கடைசி உலகப்போர்' மாறுபட்ட களத்தில் போரின் கொடுமைகளைப் பேசும் அழுத்தமிகு படைப்பு   |    சம்யுக்தா பிறந்தநாளில் ‘சுயம்பு’ வில் அவரது கேரக்டர் லுக்கை வெளியிட்ட படக்குழு!   |    'கோட்' படத்தை வெளியிட்ட ரோமியோ பிக்சர்ஸ் விரைவில் 'சார்' படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது   |    நடிகர் ராணாவுடன் துல்கர் சல்மான் இணைந்து தயாரிக்கும் 'காந்தா' பட படப்பிடிப்பு தொடங்கியது!   |    'ரகுதாத்தா' ZEE5 இல் 13 செப்டம்பர் 2024 அன்று உலகளவில் டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படுகிறது!   |   

சினிமா செய்திகள்

'சினம்' படம் முந்தைய படங்களை பேசக்கூடிய படமாக இருக்கும் - நடிகர் அருண் விஜய் !
Updated on : 14 September 2022

மூவி ஸ்லைட்ஸ் நிறுவனம் சார்பில் நடிகர்விஜயகுமார் தயாரித்துள்ள படம், ‘சினம்’.



 



அருண் விஜய், பாலக் லால்வாணி, காளி வெங்கட், ஆர்.என்.ஆர். மனோகர், மறுமலர்ச்சி பாரதி உட்பட பலர் நடித்துள்ள இந்தப்படத்தை ஜி.என்.ஆர். குமரவேலன் இயக்கியுள்ளார். ஷபீர் இசை அமைத்துள்ள இந்தப் படத்துக்கு கோபிநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார்.



 



மதன் கார்க்கி, பிரியன், தமிழணங்கு பாடல்கள் எழுதியுள்ளனர். வரும் 16-ம் தேதி நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை  வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சமீபமாக சென்னையில் நடந்தபோது இயக்குநர்கள் பார்த்திபன், ஹரி, மகிழ் திருமேனி, அறிவழகன், நடிகர்கள் விஜய் ஆண்டனி, பிரசன்னா...  மற்றும் படக்குழுவினர் பங்கேற்றனர்.



 



விழாவில் அருண் விஜய் பேசும்போது, ‘‘இந்தப் படம் தியேட்டரில் வர வேண்டும் என்று உறுதியாக இருந்தேன். பார்வையாளர்கள் மீது எனக்கு இருந்த நம்பிக்கைதான் அதற்கு காரணம். எல்லோரும் வாழ்க்கையில் நிறைய விஷயங்களைப் பார்த்து கோபப்பட்டிருப்போம். ஆனால் , அதற்குப் பெரிதாக அந்தநேரங்களில்.... எதிர்வினையாற்ற முடியாமல் இருந்திருக்கும்.



 



அதே போன்ற சூழலில் , இப்படத்தில் ., பாரி வெங்கட் என்ற எனது கதாபாத்திரம் என்ன செய்கிறது ? என்பதுதான் 'சினம்' படம். இதற்கு முன்பும் போலீஸ்கேரக்டரில் நடித்திருக்கிறேன். ஆனால் ,  அவற்றிற்கும் இதற்கும்  நிறைய வித்தியாசம் இருக்கும்.



 



எனது , முந்தைய படங்கள் போன்று  'சினம்' படமும் பேசக்கூடிய படமாக, எல்லோருக்கும் பிடித்தமானதாக இருக்கும். இவ்வாறு அருண் விஜய் கூறினார். அவரது ''சினம்' கொண்ட வெற்றியை..." கோடம்பாக்கமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறது எனலாம் !

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா