சற்று முன்

நல்ல நோட்டு தான் கள்ள நோட்டு! - இயக்குனர் எம் ஜி. ராயன்   |    இசை அசுரனின் மயக்கும் மெலோடியாக 'வீர தீர சூரன்- பார்ட் 2' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!   |    'டி என் ஏ' திரைப்படத்தின் டீசர் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் தனுஷ்   |    ஜல்லிக்கட்டு நிகழ்வுகளுடன் இணைந்து பொங்கலைக் கொண்டாடுகிறது ZEE5 !   |    மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அகத்தியா கேம் மற்றும் இரண்டாவது சிங்கிள்!   |    அவர் ஒரு லெஜெண்ட் என்பது அவரே உணராமல் இருக்கிறார் - இயக்குநர் கிருத்திகா உதயநிதி   |    நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் திரையுலகில் இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கும் 'நேசிப்பாயா'   |    நடிகர் தனுஷ் வெளியிட்ட 'கிங்ஸ்டன்' திரைப்படத்தின் டீசர்!   |    பொங்கல் பண்டிகைக் கொண்டாட்டமாக ஜனவரி 14 உலகமெங்கும் வெளியாகும் 'தருணம்'   |    ராக்கிங் ஸ்டார் யாஷின் 39 வது பிறந்தநாளை முன்னிட்டு, ரசிகர்களுக்கு அசத்தலான விருந்து!   |    ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் 'கிங்ஸ்டன்' படத்தின் பர்ஸ்ட் லுக்   |    ராக்கிங் ஸ்டார் யாஷ் பிறந்த நாளை முன்னிட்டு அசத்தலான 'டாக்ஸிக்' பட கிளிம்ப்ஸை வெளியிடவுள்ளார்   |    அஜித் சாரால் தான் இந்தப்படம் பொங்கலுக்கு வருகிறது! - 'மெட்ராஸ்காரன்' பட தயாரிப்பாளர் B.ஜெகதீஷ்   |    மேஸ்ட்ரோ யுவன் ஷங்கர் ராஜாவின் அற்புதமான இசையில் 'அகத்தியா' பட முதல் சிங்கிள் பாடல்!   |    படப்பிடிப்பு முடிவடைந்த சசிகுமார் - சிம்ரன் நடிக்கும் ஃபீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னர்!   |    பாடலாசிரியரும் திரைப்பட இயக்குநருமான பா.விஜய் இயக்கியுள்ள 'அகத்தியா' வெளியீடு அறிவிப்பு!   |    வெளிநாடுகளில் புகழ் பெற்ற OTT தளம் ஜனவரி 2025 முதல் இந்தியாவிலும்!   |    நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள “எமகாதகி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!   |    பத்து வயதுப் பெண் குழந்தைக்கு நேர்ந்த கொடுமையை அடிப்படையாகக் கொண்ட 'துணிந்தவன்'   |    அம்பிகா மேடம் பாராட்டியது எனக்கு விருதாக கருதுகிறேன் - 'எல்லாம் நன்மைக்கே' பட இயக்குனர்   |   

சினிமா செய்திகள்

'பஃபூன்' திரைப்படம் உலகம் முழுவதும் நாளை வெளியாகிறது.
Updated on : 22 September 2022

அசோக் வீரப்பன் இயக்கத்தில் கார்த்திகேயன் சந்தானம், சுதன் சுந்தரம் மற்றும் ஜெயராமன் ஆகியோர் தயாரித்துள்ள படம் 'பஃபூன்'.



 



அதிரடியான அரசியல் ஆக்‌ஷன் படமான இதில் வைபவ்-அனகா முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கார்த்திக் சுப்பராஜ் வழங்கும் 'பஃபூன்' படத்தின் தமிழ்நாட்டு திரையரங்கு வெளியீட்டு உரிமையை சக்திவேலனின் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி பெற்றுள்ளது. 



 



'பீட்சா', 'ஜிகர்தண்டா', 'இறைவி' போன்ற படங்களில் கார்த்திக் சுப்புராஜிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அசோக் வீரப்பன், 'பஃபூன்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.



 



'பஃபூன்' படத்தை பற்றி அசோக் வீரப்பன் கூறுகையில், இது முழுக்க முழுக்க ஆக்ஷன் படம் என்றும், மேடை நாடகங்களில் வரும் பஃபூனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். மேலும், "ஒரு பஃபூன் வாழ்வில் என்ன நடக்கிறது என்பது தான் படத்தின் முக்கிய கரு. சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய கடலோர மாவட்டங்களில் உள்ள மக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. தலைப்பைப் பார்த்து இது ஒரு நகைச்சுவைப் படமாக இருக்கும் என்று நினைக்கலாம். ஆனால், 'பஃபூன்' ஒரு அதிரடி அரசியல் கதைக்களம் கொண்ட படமாக இருக்கும்," என்றார். 



 



சந்தோஷ் நாராயணனின் இசை படத்தின் மிகப்பெரிய பலம் என்றார் அசோக். "இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. சந்தோஷ் நாராயணன் பின்னணி இசையிலும் சிறப்பாக பணியாற்றியுள்ளார்," என்று அவர் மேலும் கூறினார்.



 



இப்படத்தின் படப்பிடிப்பு காரைக்குடி, ராமேஸ்வரம், கொல்லம் மற்றும் சென்னையை சுற்றி நடந்ததாகவும் அவர் கூறினார்.



 



ஆடுகளம் நரேன், தமிழரசன், மூணார் ரமேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் இதில் பிரபல மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 



 



பஃபூன்' திரைப்படம் உலகம் முழுவதும் நாளை வெளியாகிறது.



 



 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா