சற்று முன்

'தி பாரடைஸ்' படத்திற்காக லெஜெண்ட்டரி மோகன் பாபு மீண்டும் வெள்ளித் திரைக்கு வருகை!   |    தியா சூர்யா இயக்கியிருக்கும் டாக்குமெண்ட்ரி - டிராமா!   |    முன்னணி ஓடிடி தளமான ZEE5, தமிழ் ஒரிஜினல் “வேடுவன்” சீரிஸின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது!   |    இயக்குநராக அறிமுகமாகிறார் வரலட்சுமி சரத்குமார்!   |    காந்தாராவின் பாரம்பரியத்தை சிறப்பு தபால் அட்டைகளை வெளியிட்டு கௌரவித்துள்ளனர்!   |    முதல்முறையாக தேசிய விருது வென்றார் நடிகர் ஷாரூக் கான் !   |    அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் படமாக 'மருதம்' உருவாகியுள்ளது.   |    விமர்சன ரீதியாக பாராட்டப்படும் மோகன் ஜி இயக்கத்தில், ரிச்சர்ட் ரிஷி நடிக்கும் 'திரெளபதி 2'   |    அப்பா -மகள் இடையிலான அன்பை சொல்லும் கவிதையாக உருவாகியுள்ளது 'மெல்லிசை'   |    கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மீண்டும் திரைக்கு வருகிறது 'அனகோண்டா'!   |    நடிகர் உன்னி முகுந்தனை கேரளா ஸ்ட்ரைக்கர்ஸ் அணி தங்களது புதிய கேப்டனாக அறிவித்துள்ளது!   |    மோதியின் அரசியலுக்கு அப்பாற்பட்ட தனிப்பட்ட வாழ்வை உணர்வுப்பூர்வமாக பேசும் படம் 'மா வந்தே'   |    அதீரா, (PVCU)- பிரசாந்த் வர்மா சினிமா யுனிவர்ஸின் அடுத்த அத்தியாயமாகும்   |    ‘காந்தாரா: சேப்டர் 1’ ட்ரைலரை நடிகர் சிவகார்த்திகேயன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்!   |    கவுதம் ராம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியது   |    “காந்தாரா சேப்டர் 1” படத்தின் தமிழ் டிரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிடுகிறார்!   |    இந்த பூமி கோளில் செல்வராகவன் தான் மிகவும் சிறந்த மனிதர் - பினு ஜார்ஜ் அலெக்சாண்டர்   |    சென்னைவில் நடைபெறும் 23வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் – 2025   |    நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும், அசத்தலான கமர்ஷியல் திரில்லர் திரைப்படம் 'ரைட்'   |    நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்   |   

சினிமா செய்திகள்

சன் டிவி புகழ் 'சந்திரலேகா' முடிவடையவுள்ளதால் அடுத்து நம்மை சந்திக்க வருகிறார் 'இலக்கியா'
Updated on : 02 October 2022

சரிகம இண்டியா லிமிட்.,சார்பாக B.R. விஜயலட்சுமி தயாரிப்பில் இலக்கியா மெகாத்தொடர் ஒளிபரப்பாகவுள்ளது. சன் TV- யில் திங்கள் முதல் வெள்ளி வரை நண்பகல் 2 மணியளவில் 8 வருடங்களாக ஒளிபரப்பாகி மக்களிடம் அதிக வரவேற்புப் பெற்ற சந்திரலேகா தொடர் 9ந் தேதியுடன் முடிவடை கிறது அடுத்து அக்டோபர் 10 ந் தேதி முதல் நண்பகல் 2 மணிக்கு திங்கள் முதல் சனிக்கிழமை வரை இலக்கியா மெகாத்தொடர் ஒளிபரப்பாக உள்ளது. 



 



இந்த தொடரில் ரூபஸ்ரீ ,நந்தன்,ஹீமாபிந்து,சுஷ்மா,டெல்லிகணேஷ், சதிஷ், பரத்கல்யாண், ராணி, காயத்ரிப்ரியா, மீனா மற்றும்  முன்னணி  நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.



 



இந்த மெகாத்  தொடரின் கதையை அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் உருவாக்கியிருக்கிறார்கள் இந்தத்  தொடரில் பிரபலமான தொடர்களில் பணியாற்றிக்கொண்டிருக்கும் பல கலைஞகள் இந்தத் தொடரிலும் பணியாற்றுகிறார்கள்.



 



தந்தை   கைவிட்டுப் போன நிலையில் இலக்கியாவின் குடும்பம் தாய்மாமன் மாசிலாமணி வீட்டில் அவர்களின் தயவில் வாழ்ந்துக்கொண்டிருக்கிறது. அத்தை சிந்தாமணி எப்போதும்  அவர்களை தேளைப்போல வார்த்தைகளால் கொட்டிக்கொண்டே இருப்பாள். சிறு   வயதில் தங்களை காப்பாற்றிய தாய்மாமனுக்காக இலக்கியா அனைத்தையும் பொறுத்துக்கொள்கிறாள், தான் பல  வேலைகள் செய்து கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் மொத்த பணத்தையும் அத்தையிடமே கொடுத்து விடுகிறாள். இதற்கிடையில் தம்பியையும் படிக்க வைத்து அம்மாவையும் காக்க போராடுகிறாள். கதையின் நாயகன் கெளதம் பெரிய தொழிலதிபர். அவனின் நட்பு இலக்கியாவிற்கு கிடைக்க, அதை பொறுத்துக்கொள்ள முடியாமல்   தாய்மாமன் மகள் அஞ்சலி பிரச்சனை செய்கிறாள். நல்ல வாழ்க்கை இலக்கியாவிற்கு கிடைத்து விடக்கூடாது என்பதில் உறுதியாய் இருக்கிறாள். இலக்கியா அனைத்தையும் சமாளித்து வாழ்க்கைப்பயணத்தை எப்படி வெற்றிகரமாக தொடர்கிறாள். அத்தையின் கொடுமையிலிருந்து விடுதலையாகி எப்படி குடும்பத்தை காப்பாற்றப் போகிறாள் என்பதை இலக்கியா மெகாத் தொடர் விளக்குகிறது. 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா