சற்று முன்

மூன்றாவது படத்துக்கே பண்டிகை தின ரிலீஸ் எனும் உயர்வை பெற்றிருக்கும் பிரதீப் ரங்கநாதன்!   |    தன்யா ரவிச்சந்திரன் நடிக்கும் விறுவிறுப்பான கிரைம் திரில்லர் 'றெக்கை முளைத்தேன்'   |    கோவையை கலக்கப் போகும் வித்யாசாகர், விஜய் ஆண்டனி   |    ‘பிளாக்மெயில்’ நிறைய த்ரில், ஆச்சரியம் மற்றும் எண்டர்டெயின்மெண்ட் நிறைந்த படம்   |    தரமான கதைகளுக்காகவே திரைப்படம் தயாரிக்கிறேன்! - 'அந்த 7 நாட்கள்' தயாரிப்பாளர் முரளி கபீர்தாஸ்   |    'மிராய்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் 'வைப் இருக்கு பேபி'!   |    ஏஐ மூலம் உருவாக்கிய ஒரு முழு இசை வீடியோ ஆல்பம், இயக்குநர் அசத்தல்!   |    15 ஆண்டுகளுக்கு பிறகு திடீரென சமூக ஊடகங்களில் வைரல் ஆகியுள்ள 'பலே பாண்டியா' பட பாடல்!   |    'காந்தாரா: சாப்டர் 1 ' படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு   |    'பெத்தி' படத்திற்காக நம்ப முடியாத வகையில் தன் உடலை செதுக்கும் 'குளோபல் ஸ்டார்' ராம் சரண்'!   |    ZEE5-ல் ‘சட்டமும் நீதியும்’ சீரிஸ் இலவசமாக கண்டுகளிக்கலாம்!   |    சின்ன படங்கள் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது - முனீஷ்காந்த்   |    கோயம்புத்தூரில் நடைபெற்ற ஆல் இந்தியா ஆல் ஸ்டார் நவகோடி நினைவு கோப்பை நிகழ்வு!   |    'சோஷியல் மெசேஜுடன் கிரைம் திரில்லர்: 'சென்னை ஃபைல்ஸ் – முதல் பக்கம்'   |    உதயா, அஜ்மல், யோகி பாபு முதன்மையான வேடங்களில் நடிக்கும் 'அக்யூஸ்ட்'   |    ரஞ்சித் கண்ணா இயக்கத்தில் ரேக்ளா பந்தயத்தின் பின்னணியில் உருவாகும் படம் 'சோழநாட்டான்'   |    'ச்சீ ப்பா தூ...' வீடியோ பாடலை பாராட்டிய திரு. கமல்ஹாசன்!   |    இன்றைய தலைமுறை ரசிக்கும் வகையிலான இசையில் அசத்தும் 'ச்சீ ப்பா தூ...' பாடல்!   |    அக்டோபர் 4 அன்று ஹாரிஸ் ஜெயராஜ் கலந்துகொள்ளும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி!   |    ஆகஸ்ட் 16 அன்று பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள துடிப்பான‌ இசை நிகழ்ச்சி!   |   

சினிமா செய்திகள்

ஸ்ட்ரெஸ், டென்ஷன்களோடு சுற்றித்திரியும் இன்றைய இளைஞர்களுக்கான 'ரிலாக்ஸ்'
Updated on : 12 October 2022

"ரிலாக்ஸ்"  ட்ரீம் ஸ்டோரி சினிமா கம்பெனி என்ற பட நிறுவனம் தயாரிக்கும் முதல் படம். இந்த படத்தில் இயக்குனர் தம்பி செய்து இப்ராஹிம் @ ஸ்ரீ நாயகனாக நடிக்கிறார. இது முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்த காதல் கதை.



 



கேடி பில்லா கில்லாடி ரங்கா, மெரினா போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த விஜய் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.



 



இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜிடம் உதவியாளராக பணியாற்றிய டேவி  சுரேஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.



 



பாடலாசிரியர் பழனி பாரதி அனைத்து பாடல்களையும் எழுதுகிறார்.



 



ஹிந்தியில் வெளியான திருட்டுப்பயலே 2 படத்திற்கு எடிட்டிங் செய்த ராம் சதீஷ் இந்த படத்திற்கு எடிட்டிங் செய்கிறார்.



 



பல வெற்றிப்பாடல்களுக்கு நடனம் அமைத்த தினேஷ் இந்த படத்திற்கு நான்கு பாடல்களுக்கு பல்வேறு விதமான நடன அமைப்புகளை தரவிருக்கிறார்.



 



பிரபல கலை இயக்குனர் S.S. மூர்த்தி இந்த படத்தின் கலை இயக்குனராக பணியாற்றுகிறார்.



 



கதாநாயகி மற்றும் நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது.



 



இயக்குனர்கள் ரமணா, சுசீந்திரன் ஆகியோரிடம் இணை இயக்குனராக பல படங்களில் பணியாற்றிய பா. ஆனந்த்குமார் இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குகிறார்.



 



படம் பற்றி இயக்குனர் பா. ஆனந்த்குமார் பகிர்ந்தவை...



 



இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில் தனக்காக, தன்னை சார்தவர்களுக்காக ஒவ்வொருத்தரும் ஏதோ ஒரு வகையில் ஓடிக்கொண்டே இருக்கிறோம் இறுதியில் எல்லோரும் எதிர்பார்ப்பது நிம்மதியான ஓய்வு ( ரிலாக்ஸ் ) அதுதான் இந்த படத்தின் கரு.



 



ஆறு அறிவு படைத்த எல்லா மனிதர்கள் அனைவரும் காமம், காதல் என்ற உணர்வுகளுடன் பிறக்கின்றனர். இக்கதையில் வரும் நாயகன் தன் வாழ்க்கையில் காதலுக்கும், காமத்திற்கும் இடமே இல்லை என்று வாழ்கிறான். ஒரு சூழலில் மூன்று பெண்கள் அவன்மீது காதல் வயப்படுகின்றனர். ஆனால் அவனுக்கு பெற்றோர்கள் வேறொரு பெண்ணை திருமணம் செய்துவைக்க முடிவு செய்கிறார்கள். இந்த சூழ்நிலையில் பதற்றமில்லாமல் எப்படி ரிலாக்ஸாக முடிவு செய்கிறான் என்பதை முழு நகைச்சுவை கலந்து குடும்பப்பாங்கான, ஜனரஞ்சக படமாக உருவாக்க உள்ளோம்.

ஸ்டெஸ், டென்ஷன்களோடு சுற்றித்திரியும் இன்றயை இளைஞர்களுக்கு இந்த படம் நிச்சயமாக ரிலாக்ஸாக இருக்கும்.



 



படப்பிடிப்பு  வயநாடு, காசர்கோடு, மூணாறு போன்ற  இடங்களில் நடைபெற உள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா