சற்று முன்

நல்ல நோட்டு தான் கள்ள நோட்டு! - இயக்குனர் எம் ஜி. ராயன்   |    இசை அசுரனின் மயக்கும் மெலோடியாக 'வீர தீர சூரன்- பார்ட் 2' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!   |    'டி என் ஏ' திரைப்படத்தின் டீசர் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் தனுஷ்   |    ஜல்லிக்கட்டு நிகழ்வுகளுடன் இணைந்து பொங்கலைக் கொண்டாடுகிறது ZEE5 !   |    மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அகத்தியா கேம் மற்றும் இரண்டாவது சிங்கிள்!   |    அவர் ஒரு லெஜெண்ட் என்பது அவரே உணராமல் இருக்கிறார் - இயக்குநர் கிருத்திகா உதயநிதி   |    நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் திரையுலகில் இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கும் 'நேசிப்பாயா'   |    நடிகர் தனுஷ் வெளியிட்ட 'கிங்ஸ்டன்' திரைப்படத்தின் டீசர்!   |    பொங்கல் பண்டிகைக் கொண்டாட்டமாக ஜனவரி 14 உலகமெங்கும் வெளியாகும் 'தருணம்'   |    ராக்கிங் ஸ்டார் யாஷின் 39 வது பிறந்தநாளை முன்னிட்டு, ரசிகர்களுக்கு அசத்தலான விருந்து!   |    ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் 'கிங்ஸ்டன்' படத்தின் பர்ஸ்ட் லுக்   |    ராக்கிங் ஸ்டார் யாஷ் பிறந்த நாளை முன்னிட்டு அசத்தலான 'டாக்ஸிக்' பட கிளிம்ப்ஸை வெளியிடவுள்ளார்   |    அஜித் சாரால் தான் இந்தப்படம் பொங்கலுக்கு வருகிறது! - 'மெட்ராஸ்காரன்' பட தயாரிப்பாளர் B.ஜெகதீஷ்   |    மேஸ்ட்ரோ யுவன் ஷங்கர் ராஜாவின் அற்புதமான இசையில் 'அகத்தியா' பட முதல் சிங்கிள் பாடல்!   |    படப்பிடிப்பு முடிவடைந்த சசிகுமார் - சிம்ரன் நடிக்கும் ஃபீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னர்!   |    பாடலாசிரியரும் திரைப்பட இயக்குநருமான பா.விஜய் இயக்கியுள்ள 'அகத்தியா' வெளியீடு அறிவிப்பு!   |    வெளிநாடுகளில் புகழ் பெற்ற OTT தளம் ஜனவரி 2025 முதல் இந்தியாவிலும்!   |    நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள “எமகாதகி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!   |    பத்து வயதுப் பெண் குழந்தைக்கு நேர்ந்த கொடுமையை அடிப்படையாகக் கொண்ட 'துணிந்தவன்'   |    அம்பிகா மேடம் பாராட்டியது எனக்கு விருதாக கருதுகிறேன் - 'எல்லாம் நன்மைக்கே' பட இயக்குனர்   |   

சினிமா செய்திகள்

அருண் விஜய் படத்திற்காக 3.5 கோடி மதிப்பிலான லண்டன் சிறையை 2.5 ஏக்கரில் செட் அமைத்திருக்கிறார்கள்
Updated on : 29 October 2022

இயக்குநர் விஜய் இயக்கத்தில், நடிகர் அருண் விஜய் நடித்து வரக்கூடிய 'அச்சம் என்பது இல்லையே' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில், லண்டனில் முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்து அடுத்தக் கட்டப் படப்பிடிப்பு தற்போது சென்னையில் தொடங்கி இருக்கிறது. சென்னையின் பின்னி மில்ஸ் பகுதியில் 2.5 ஏக்கர் பரப்பளவில் 3.5 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக லண்டன் சிறையின் பிரதியை செட் அமைத்துள்ளனர். ராமலிங்க மேஸ்திரி உதவியுடன் கலை இயக்குநர் சரவணன் நூற்றுக்கணக்கான வேலைப்பாடுகள் மற்றும் ஆட்களுடன் லண்டன் சிறையை மறு உருவாக்கம் செய்திருக்கிறார். இந்த ஷெட்யூலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டைச் சேர்ந்த ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் இதில் பங்கேற்க இருக்கின்றனர். இவர்களுடன் அருண் விஜய் பங்கேற்கக் கூடிய தீவிரமான ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்பட இருக்கிறது. 



 



முன்பே திட்டமிட்டபடி படத்தின் ஷெட்யூல் மிகச் சரியாக போய் கொண்டிருப்பது குறித்து தயாரிப்பாளர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இயக்குநர் விஜய்யும் திட்டமிட்டபடி அந்த நேரத்திற்குள்ளோ அல்லது அதற்கு முன்போ மிகச்சரியாக படப்பிடிப்பை முடித்து விடக்கூடியவர். அதைப் போலவே 'அச்சம் என்பது இல்லயே' படப்பிடிப்பும் திட்டமிட்ட காலத்திற்கு முன்பாகவே முடிந்து விடும். 



 



லண்டனில் ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப் பட்டபோது, நடிகர் அருண் விஜய்க்கு தீவிரமான காயம் ஏற்பட்டு தசைநாரில் பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்தியும் இந்த இடைவேளையால் படப்பிடிப்பு பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக படப்பிடிப்பு முடித்ததும் சிகிச்சை என்பதில் அருண் விஜய் உறுதியாக இருந்தார்.   பிஸியோதெரபிஸ்ட் உதவியுடன் துன்புறுத்துகிற  இந்த வலியைப் பொறுத்துக் கொண்டு படப்பிடிப்பில் பங்கேற்றார். 



 



ஏமி ஜாக்சன் இந்தப் படத்தின் மூலம் கம்பேக் கொடுக்கிறார். நிமிஷா விஜயனுடன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ஏமி. 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா