சற்று முன்

நல்ல நோட்டு தான் கள்ள நோட்டு! - இயக்குனர் எம் ஜி. ராயன்   |    இசை அசுரனின் மயக்கும் மெலோடியாக 'வீர தீர சூரன்- பார்ட் 2' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!   |    'டி என் ஏ' திரைப்படத்தின் டீசர் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் தனுஷ்   |    ஜல்லிக்கட்டு நிகழ்வுகளுடன் இணைந்து பொங்கலைக் கொண்டாடுகிறது ZEE5 !   |    மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அகத்தியா கேம் மற்றும் இரண்டாவது சிங்கிள்!   |    அவர் ஒரு லெஜெண்ட் என்பது அவரே உணராமல் இருக்கிறார் - இயக்குநர் கிருத்திகா உதயநிதி   |    நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் திரையுலகில் இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கும் 'நேசிப்பாயா'   |    நடிகர் தனுஷ் வெளியிட்ட 'கிங்ஸ்டன்' திரைப்படத்தின் டீசர்!   |    பொங்கல் பண்டிகைக் கொண்டாட்டமாக ஜனவரி 14 உலகமெங்கும் வெளியாகும் 'தருணம்'   |    ராக்கிங் ஸ்டார் யாஷின் 39 வது பிறந்தநாளை முன்னிட்டு, ரசிகர்களுக்கு அசத்தலான விருந்து!   |    ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் 'கிங்ஸ்டன்' படத்தின் பர்ஸ்ட் லுக்   |    ராக்கிங் ஸ்டார் யாஷ் பிறந்த நாளை முன்னிட்டு அசத்தலான 'டாக்ஸிக்' பட கிளிம்ப்ஸை வெளியிடவுள்ளார்   |    அஜித் சாரால் தான் இந்தப்படம் பொங்கலுக்கு வருகிறது! - 'மெட்ராஸ்காரன்' பட தயாரிப்பாளர் B.ஜெகதீஷ்   |    மேஸ்ட்ரோ யுவன் ஷங்கர் ராஜாவின் அற்புதமான இசையில் 'அகத்தியா' பட முதல் சிங்கிள் பாடல்!   |    படப்பிடிப்பு முடிவடைந்த சசிகுமார் - சிம்ரன் நடிக்கும் ஃபீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னர்!   |    பாடலாசிரியரும் திரைப்பட இயக்குநருமான பா.விஜய் இயக்கியுள்ள 'அகத்தியா' வெளியீடு அறிவிப்பு!   |    வெளிநாடுகளில் புகழ் பெற்ற OTT தளம் ஜனவரி 2025 முதல் இந்தியாவிலும்!   |    நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள “எமகாதகி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!   |    பத்து வயதுப் பெண் குழந்தைக்கு நேர்ந்த கொடுமையை அடிப்படையாகக் கொண்ட 'துணிந்தவன்'   |    அம்பிகா மேடம் பாராட்டியது எனக்கு விருதாக கருதுகிறேன் - 'எல்லாம் நன்மைக்கே' பட இயக்குனர்   |   

சினிமா செய்திகள்

'நைட்ரோ ஸ்டார்' சுதீர் பாபுவின் 18 ஆவது படத்தின் டைட்டில் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரல் !
Updated on : 01 November 2022

ஸ்ரீ சுப்ரமணியேஸ்வரா சினிமாஸ் எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுமந்த் ஜி. நாயுடுவின் பிரம்மாண்டமான தயாரிப்பில், இயக்குநர் ஞானசாகர் துவாரகா இயக்கத்தில் சைத்தன் பரத்வாஜ் இசையில் தயாராகும் 'நைட்ரோ ஸ்டார்' சுதீர் பாபுவின் 18 ஆவது திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் சில நாட்களுக்கு முன்பு வித்தியாசமாக வடிவமைக்கப்பட்ட போஸ்டருடன் வெளியானது. 



 



மேலும்  'அக்டோபர் 31ஆம் தேதி மாஸான சம்பவம்' என்றும் தயாரிப்பாளர்கள் அறிவித்திருந்தார்கள். அதனை தற்போது பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். அந்த வகையில் 'நைட்ரோ ஸ்டார்' சுதீர் பாபு - ஞானசாகர் துவாரகா- சுமந்த் ஜி நாயுடு ஆகியோர் கூட்டணியில் உருவாகும் புதிய படத்திற்கு ' ஹரோம் ஹரா'  என பெயரிடப்பட்டு, அதற்கான பிரத்யேக காணொளி ஒன்றும் வெளியிடப்பட்டிருக்கிறது..



 



இந்த வீடியோவில் சித்தூர் மாவட்டம் குப்பத்தில் 1989 ஆம் ஆண்டில் நடக்கும் கதை என்பதும், அங்கு சுப்பிரமணிய சுவாமி ஆலயம், ஜகதாம்பா டாக்கீஸ் எனும் திரையரங்கம், குப்பம் ரயில் நிலையம் ...போன்ற இடங்கள் இருப்பது போல் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. இதுவரை பார்வையாளர்கள் பார்த்திராத புதிய தோற்றத்தில் சுதீர் பாபு தோன்றுவதாகவும் காணொளியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஒரு கையில் வேலும், மற்றொரு கையில் துப்பாக்கியும் வைத்துக் கொண்டு, மாஸான லுக்கில், ஆக்சன் அவதாரத்தில் ‘நைட்ரோ ஸ்டார்’ சுதீர் பாபு நின்றிருப்பதை அவரது ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். அத்துடன் 'இங்க பேச்சே இல்ல. செயல்தான்..' என சுதீர் பாபு தெலுங்கில் பேசும் வசனங்களும், தலைப்புடன் 'தி ரிவோல்ட்' என்ற வாசகமும் இடம்பெற்றிருப்பதால், பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.



 





 



'நைட்ரோ ஸ்டார்' சுதீர் பாபு நடிப்பில் தயாராகும் 'ஹரோம் ஹரா' எனும் திரைப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. படத்தை பற்றிய கூடுதல் விவரங்கள்  விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருக்கிறது.



 



இதனிடையே 'நைட்ரோ ஸ்டார்' சுதீர் பாபு நடிக்கும் 'ஹரோம் ஹரா - தி ரிவோல்ட்'  என படத்தின் தலைப்பு ஆன்மீகமாக இருந்தாலும், காணொளியில் இடம்பெற்றிருக்கும் குரல், பழிக்கு பழி வாங்கும் அம்சத்தை உரக்க எழுப்புகிறது என்பதும், சுதீர் பாபுவின் பான் இந்திய படமாக வெளியாக இருப்பதால், தலைப்பிற்கான பிரத்யேக காணொளியை அவரது ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா