சற்று முன்

இசை அசுரனின் மயக்கும் மெலோடியாக 'வீர தீர சூரன்- பார்ட் 2' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!   |    'டி என் ஏ' திரைப்படத்தின் டீசர் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் தனுஷ்   |    ஜல்லிக்கட்டு நிகழ்வுகளுடன் இணைந்து பொங்கலைக் கொண்டாடுகிறது ZEE5 !   |    மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அகத்தியா கேம் மற்றும் இரண்டாவது சிங்கிள்!   |    அவர் ஒரு லெஜெண்ட் என்பது அவரே உணராமல் இருக்கிறார் - இயக்குநர் கிருத்திகா உதயநிதி   |    நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் திரையுலகில் இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கும் 'நேசிப்பாயா'   |    நடிகர் தனுஷ் வெளியிட்ட 'கிங்ஸ்டன்' திரைப்படத்தின் டீசர்!   |    பொங்கல் பண்டிகைக் கொண்டாட்டமாக ஜனவரி 14 உலகமெங்கும் வெளியாகும் 'தருணம்'   |    ராக்கிங் ஸ்டார் யாஷின் 39 வது பிறந்தநாளை முன்னிட்டு, ரசிகர்களுக்கு அசத்தலான விருந்து!   |    ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் 'கிங்ஸ்டன்' படத்தின் பர்ஸ்ட் லுக்   |    ராக்கிங் ஸ்டார் யாஷ் பிறந்த நாளை முன்னிட்டு அசத்தலான 'டாக்ஸிக்' பட கிளிம்ப்ஸை வெளியிடவுள்ளார்   |    அஜித் சாரால் தான் இந்தப்படம் பொங்கலுக்கு வருகிறது! - 'மெட்ராஸ்காரன்' பட தயாரிப்பாளர் B.ஜெகதீஷ்   |    மேஸ்ட்ரோ யுவன் ஷங்கர் ராஜாவின் அற்புதமான இசையில் 'அகத்தியா' பட முதல் சிங்கிள் பாடல்!   |    படப்பிடிப்பு முடிவடைந்த சசிகுமார் - சிம்ரன் நடிக்கும் ஃபீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னர்!   |    பாடலாசிரியரும் திரைப்பட இயக்குநருமான பா.விஜய் இயக்கியுள்ள 'அகத்தியா' வெளியீடு அறிவிப்பு!   |    வெளிநாடுகளில் புகழ் பெற்ற OTT தளம் ஜனவரி 2025 முதல் இந்தியாவிலும்!   |    நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள “எமகாதகி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!   |    பத்து வயதுப் பெண் குழந்தைக்கு நேர்ந்த கொடுமையை அடிப்படையாகக் கொண்ட 'துணிந்தவன்'   |    அம்பிகா மேடம் பாராட்டியது எனக்கு விருதாக கருதுகிறேன் - 'எல்லாம் நன்மைக்கே' பட இயக்குனர்   |    படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் 'கரவாலி' படத்தின் தனித்துவமான டீசர்   |   

சினிமா செய்திகள்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு படம் இயக்கும் 'தினந்தோறும்' நாகராஜ் !
Updated on : 03 November 2022

”மாற்றம் ஒன்றே மாறாதது” என்பது எத்தனை சத்தியமானது என்பதற்கு இயக்குனர் ‘தினந்தோறும்’ நாகராஜின் வாழ்க்கையும் உதாரணம். 1998 ஆம் ஆண்டு இவர் இயக்கிய படம் ‘தினந்தோறும்’. முரளி – சுவலட்சுமி நடித்த இந்த படம் வெளிவந்தபோது பத்திரிகை உலகம் கொண்டாடி தீர்த்தது. இந்தபடம் வெளிவந்த ஒரு வாரத்திற்குள் அன்றை முன்னணி தயாரிப்பாளர்கள், கதாநாயகர்கள் நாகராஜுடன் இணைந்து பணியாற்ற தூதனுப்பினர். 



 





இப்படத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய ‘வானம் நீதானா அந்த நிலவும் நீதானா’ என்ற பாடல் பெரிய ஹிட்டானது. தெலுங்கில் ’மனசிச்சி சூடு’ பெயரில் படம் ரீமேக்கானது. படத்தின் வெற்றியை தொடர்ந்து நாகராஜின் பெயருடன் படத்தின் பெயரும் ஒட்டிக்கொண்டு ‘தினந்தோறும்’ நாகராஜ் ஆனார். என்னசெய்வது காலத்தின் வெள்ளத்தில் நாகராஜ் திசை மாற, தொடர்ந்து படங்கள் இயக்க முடியாமல் போனது.

பிறகு கெளதம் மேனன் இயக்கிய மின்னலே, காக்க காக்க படங்களுக்கு வசனம் எழுதிய நாகராஜ் இயக்கத்தில் 2013 ஆண்டு ‘மத்தாப்பு’ என்ற படம் வெளியானது.



 



அதனைத்தொடர்ந்து தமிழ் சினிமா பட விவாதங்கள் பலவற்றில் பங்கேற்ற நாகராஜ்,  ‘நான் திரும்ப வந்துட்டேன்னு சொல்லு’ என்பதுபோல் நீண்ட இடைவெளிக்குப் பிறகு  ஒரு படத்தை இயக்குகிறார்.



 



Q சினிமாஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பில் சசிகுமார்.R இந்த படத்தை மிக பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளார். பெயரிடப்படாத இந்த படத்திற்கு  நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. ஜனவரியில் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.



 



பிரபல இசையமைப்பாளர் C. சத்யா இசையமைக்கிறார்.



 



 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா