சற்று முன்

இசை அசுரனின் மயக்கும் மெலோடியாக 'வீர தீர சூரன்- பார்ட் 2' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!   |    'டி என் ஏ' திரைப்படத்தின் டீசர் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் தனுஷ்   |    ஜல்லிக்கட்டு நிகழ்வுகளுடன் இணைந்து பொங்கலைக் கொண்டாடுகிறது ZEE5 !   |    மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அகத்தியா கேம் மற்றும் இரண்டாவது சிங்கிள்!   |    அவர் ஒரு லெஜெண்ட் என்பது அவரே உணராமல் இருக்கிறார் - இயக்குநர் கிருத்திகா உதயநிதி   |    நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் திரையுலகில் இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கும் 'நேசிப்பாயா'   |    நடிகர் தனுஷ் வெளியிட்ட 'கிங்ஸ்டன்' திரைப்படத்தின் டீசர்!   |    பொங்கல் பண்டிகைக் கொண்டாட்டமாக ஜனவரி 14 உலகமெங்கும் வெளியாகும் 'தருணம்'   |    ராக்கிங் ஸ்டார் யாஷின் 39 வது பிறந்தநாளை முன்னிட்டு, ரசிகர்களுக்கு அசத்தலான விருந்து!   |    ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் 'கிங்ஸ்டன்' படத்தின் பர்ஸ்ட் லுக்   |    ராக்கிங் ஸ்டார் யாஷ் பிறந்த நாளை முன்னிட்டு அசத்தலான 'டாக்ஸிக்' பட கிளிம்ப்ஸை வெளியிடவுள்ளார்   |    அஜித் சாரால் தான் இந்தப்படம் பொங்கலுக்கு வருகிறது! - 'மெட்ராஸ்காரன்' பட தயாரிப்பாளர் B.ஜெகதீஷ்   |    மேஸ்ட்ரோ யுவன் ஷங்கர் ராஜாவின் அற்புதமான இசையில் 'அகத்தியா' பட முதல் சிங்கிள் பாடல்!   |    படப்பிடிப்பு முடிவடைந்த சசிகுமார் - சிம்ரன் நடிக்கும் ஃபீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னர்!   |    பாடலாசிரியரும் திரைப்பட இயக்குநருமான பா.விஜய் இயக்கியுள்ள 'அகத்தியா' வெளியீடு அறிவிப்பு!   |    வெளிநாடுகளில் புகழ் பெற்ற OTT தளம் ஜனவரி 2025 முதல் இந்தியாவிலும்!   |    நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள “எமகாதகி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!   |    பத்து வயதுப் பெண் குழந்தைக்கு நேர்ந்த கொடுமையை அடிப்படையாகக் கொண்ட 'துணிந்தவன்'   |    அம்பிகா மேடம் பாராட்டியது எனக்கு விருதாக கருதுகிறேன் - 'எல்லாம் நன்மைக்கே' பட இயக்குனர்   |    படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் 'கரவாலி' படத்தின் தனித்துவமான டீசர்   |   

சினிமா செய்திகள்

சன்னி லியோன் என்றவுடன் நான் ஒத்து கொண்டேன் - நடிகர் சதீஷ்
Updated on : 03 November 2022

VAU MEDIA ENTERTAINMENT மற்றும் WHITE HORSE STUDIOS  சார்பில்  D.வீரா சக்தி & K. சசிகுமார் வழங்கும், சன்னி லியோன், சதீஷ்நடிப்பில், இயக்குநர் யுவன் இயக்கத்தில், வரலாற்று பின்னணியில் உருவாகும்  ஹாரர் காமெடி  திரைப்படம்  “ஓ மை கோஸ்ட்” (OMG). விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று திரை பிரபலங்கள் கலந்துகொள்ள பிரமாண்டமாக அரங்கேறியது. 



 



இசை, நடன கோலாகல கொண்டாட்டத்துடன் நடைபெற்ற இவ்விழாவினில்..





நடிகர் தயாரிப்பாளர் RK சுரேஷ் பேசியதாவது...





நடிகை சன்னி   லியோன்  மனிதநேயமிக்க  நபர்.  இந்த படம் பற்றி சதீஷ் என்னிடம் கூறியபோது, ஒரு வெற்றி படத்திற்கான அனைத்து அம்சமும் இந்த படத்தில் இருப்பதை என்னால் உணர முடிந்தது. டார்க் காமெடி திரைப்படங்கள் இப்போது அதிகமாக  வந்து கொண்டு இருக்கிறது. அந்த வகையில் இந்த திரைப்படம் ஹாரர் உடன் கலந்த டார்க் காமெடி திரைப்படம். படம் நன்றாக வந்துள்ளது. ஒரு புதிய தயாரிப்பாளர் நமது திரைத்துறைக்கு வந்து இருக்கிறார். அவரை வரவேற்க வேண்டியது நமது கடமை. இந்த திரைப்படம்  வெற்றியடைந்தது, இதில் பங்கேற்று இருக்கும் அனைவருக்கும் வெற்றி படமாக இது  அமைய வேண்டும். அனைவருக்கும் வாழ்த்துக்கள் 



 



இயக்குநர் தங்கர் பச்சான் பேசியதாவது..,





இப்பட தயாரிப்பாளரின் அடுத்த படத்தை நான் இயக்குகிறேன். இந்த படமும், இந்த தயாரிப்பாளர் எடுக்கும் அடுத்த படமும் தமிழ் சினிமாவின் போக்கை மாற்றும் படமாக இருக்கும்.  திரைப்படங்கள் மக்கள் வாழ்வில் மிகப்பெரிய ஒரு அங்கமாக திகழ்கிறது. ஊடகங்கள் சிறிய திரைப்படங்களுக்கு ஆதரவு தர வேண்டும். நேர்மையான விமர்சனம் தான் திரைப்படத்திற்கு தேவை. மண் சார்ந்த திரைப்படங்களை நாம் எடுக்க வேண்டும். அப்படிபட்ட திரைப்படங்களை எடுக்கும், இயக்குனர்களும் இங்கு இருக்கிறார்கள். அவர்களுக்கு உங்கள் ஆதரவு தேவை. இந்த  திரைப்படம் வெற்றியடைய எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.



 



ஜிபி முத்து கூறியதாவது.., 





இது தான் எனது முதல் திரைப்படம், முன் அனுபவம் இல்லாத எனக்கு, இயக்குனர் தான் பக்கபலமாக இருந்தார். தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் இந்த நேரத்தில் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இந்த படத்தில் எனக்கு சிறப்பான ஒரு கதாபாத்திரத்தை கொடுத்துள்ளனர். அந்த பாத்திரம் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும். உங்களுடைய ஆதரவு இந்த படத்திற்கு தேவை. அனைவரும் ஆதரவு தாருங்கள் 



 



நடிகர் சதீஷ் பேசியதாவது.., 





இந்த படத்தின் கதையை இயக்குநர் கூறியபோது, அதில் ஒரு முக்கிய கதாபாத்திரம் இருந்தது. அதில் சன்னி லியோன் நடிக்கிறார் என்ற உடன், நான் இந்த படத்தில் நடிக்க ஒத்து கொண்டேன். சன்னி லியோன் ஒரு சிறந்த மனிதநேயம் மிக்க நபர், அவரை நெருங்கவே நாங்கள் தயங்கி கொண்டு இருந்தோம். ஆனால் அவர் இலகுவாக மிக இயல்பாக எங்களிடம் பழகினார். அவர் இந்த படத்தில் மிகப்பெரிய அர்பணிப்பை கொடுத்துள்ளார். சிறப்பாக நடித்துள்ளார். அனைவரும் கடின உழைப்பை கொடுத்து, இந்த படத்தை உருவாக்கியுள்ளோம். இந்த படம் உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன்.



 



நடிகை சன்னி லியோன் கூறியதாவது..., 





தமிழகம்  வந்து உங்களை சந்திதது மகிழ்ச்சி. நீங்கள் கொடுக்கும் வரவேற்பும், அன்பும் எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. OMG திரைப்படத்திற்காக அனைவரும் கடின உழைப்பையும், அர்பணிப்பையும் கொடுத்துள்ளோம்.  இந்த படத்தை பார்க்க உங்களது நேரத்தையும் பணத்தையும் நீங்கள் ஒதுக்குவதற்கு நான் நன்றி கூறிக்கொள்கிறேன். எங்களது கனவை நீங்கள் பார்க்க போகிறீர்கள். உங்களது அன்பும் ஆதரவும் எங்களுக்கு தேவை.





தயாரிப்பாளர் வீர சக்தி கூறியதாவது



 



இந்த படம் முழுக்க முழுக்க காமெடி நிறைந்த ஒரு கதை. முதல் பாதி காமெடியும், இரண்டாவது பாதி சன்னி லியோன் வரும் பிரம்மாண்டமும் படத்தில் நிறைந்து இருக்கும். நீங்கள் ரசிக்கும் வகையில் இந்த படத்தை உருவாக்கியுள்ளோம். நடிகர்கள், இயக்குனர், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். இந்த படத்திற்கு உங்கள் ஆதரவு தேவை



 



தயாரிப்பாளர் K. சசிகுமார் பேசியதாவது…





இப்படம் பற்றி அண்ணன் அனைத்தையும் கூறி விட்டார். இப்படம் எல்லோருக்கும் பிடிக்கும் ஒரு படமாக இருக்கும். அனைவரும் கடுமையாக உழைத்துள்ளார்கள். படம் விரைவில் திரைக்கு வருகிறது அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி 



 



இயக்குநர் யுவன் பேசியதாவது…





தயாரிப்பாளர் மிக தீவிரமான சினிமா ரசிகர் அவரிடம் கதை சொன்ன போதே இந்தப்படத்தை வேறு உயரத்திற்கு கொண்டு சென்று விடுவார் என நம்பிக்கை வந்தது. இந்தப்படம் சன்னி லியோன் வந்த பிறகு தான் மிகப்பெரிய படமாக மாறியது. மொழி தெரியாமல் மிக அர்ப்பணிப்புடன் கற்றுக்கொண்டு நடித்தார். அவருடன் வேலை பார்க்க மிக எளிதாக இருந்தது. சதீஷ் மிக அற்புதமாக நடித்துள்ளார். படத்தில் அனைவருமே கடினமாக உழைத்துள்ளார்கள். கண்டிப்பாக அனைவரும் திரும்ப திரும்ப பார்க்கும் படியான படமாக இருக்கும். நன்றி.



 



“ஓ மை கோஸ்ட்”   (OMG) திரைப்படத்தினை  VAU MEDIA ENTERTAINMENT சார்பில் தயாரிப்பாளர் D.வீரா சக்தி மற்றும் WHITE HORSE STUDIOS சார்பில் K. சசிகுமார் இணைந்து தயாரிக்கின்றனர். நடிகை சன்னி லியோன் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் சதீஷ் மற்றும் தர்ஷா குப்தா முக்கிய பாத்திரங்களில் நடிக்க, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், ரவி மரியா, ரமேஷ் திலக், அர்ஜுனன், தங்கதுரை ஆகியோருடன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர். ஜாவித் ரியாஸ் இசையமைக்க, தீபக் D. மேனன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.



 





 



 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா