சற்று முன்

'தி பாரடைஸ்' படத்திற்காக லெஜெண்ட்டரி மோகன் பாபு மீண்டும் வெள்ளித் திரைக்கு வருகை!   |    தியா சூர்யா இயக்கியிருக்கும் டாக்குமெண்ட்ரி - டிராமா!   |    முன்னணி ஓடிடி தளமான ZEE5, தமிழ் ஒரிஜினல் “வேடுவன்” சீரிஸின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது!   |    இயக்குநராக அறிமுகமாகிறார் வரலட்சுமி சரத்குமார்!   |    காந்தாராவின் பாரம்பரியத்தை சிறப்பு தபால் அட்டைகளை வெளியிட்டு கௌரவித்துள்ளனர்!   |    முதல்முறையாக தேசிய விருது வென்றார் நடிகர் ஷாரூக் கான் !   |    அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் படமாக 'மருதம்' உருவாகியுள்ளது.   |    விமர்சன ரீதியாக பாராட்டப்படும் மோகன் ஜி இயக்கத்தில், ரிச்சர்ட் ரிஷி நடிக்கும் 'திரெளபதி 2'   |    அப்பா -மகள் இடையிலான அன்பை சொல்லும் கவிதையாக உருவாகியுள்ளது 'மெல்லிசை'   |    கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மீண்டும் திரைக்கு வருகிறது 'அனகோண்டா'!   |    நடிகர் உன்னி முகுந்தனை கேரளா ஸ்ட்ரைக்கர்ஸ் அணி தங்களது புதிய கேப்டனாக அறிவித்துள்ளது!   |    மோதியின் அரசியலுக்கு அப்பாற்பட்ட தனிப்பட்ட வாழ்வை உணர்வுப்பூர்வமாக பேசும் படம் 'மா வந்தே'   |    அதீரா, (PVCU)- பிரசாந்த் வர்மா சினிமா யுனிவர்ஸின் அடுத்த அத்தியாயமாகும்   |    ‘காந்தாரா: சேப்டர் 1’ ட்ரைலரை நடிகர் சிவகார்த்திகேயன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்!   |    கவுதம் ராம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியது   |    “காந்தாரா சேப்டர் 1” படத்தின் தமிழ் டிரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிடுகிறார்!   |    இந்த பூமி கோளில் செல்வராகவன் தான் மிகவும் சிறந்த மனிதர் - பினு ஜார்ஜ் அலெக்சாண்டர்   |    சென்னைவில் நடைபெறும் 23வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் – 2025   |    நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும், அசத்தலான கமர்ஷியல் திரில்லர் திரைப்படம் 'ரைட்'   |    நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்   |   

சினிமா செய்திகள்

'பொன்னியின் செல்வன்' தயாரிப்பாளர்கள் அமரர் கல்கியின் அறக்கட்டளைக்கு ஒரு கோடி நன்கொடை
Updated on : 05 November 2022

அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் அறக்கட்டளைக்கு லைகா குழும தலைவர் சுபாஸ்கரன் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பாளர் மணிரத்னம் இணைந்து ஒரு கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளார்கள்.



 



அமரர் கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவலை, லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் 'பொன்னியின் செல்வன்' எனும் பெயரில் இரண்டு பாகங்களைக் கொண்ட திரைப்படமாக தயாரித்திருக்கிறது. இதன் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகி, வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் சாதனையை படைத்திருக்கிறது. 



 



இந்நிலையில் லைகா குழுமம் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும், அமரர் கல்கியின் புகழையும், அவரது சேவைகளையும், பாரம்பரியத்தையும் போற்றும் வகையில் இயங்கி வரும் அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி அறக்கட்டளையின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க மகிழ்ச்சியுடன் முன்வந்தனர். மேலும் அறக்கட்டளையின் சேவைகளை ஊக்குவிக்கும் வகையில் லைகா குழும தலைவர் சுபாஸ்கரன் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் மணிரத்னம் ஆகிய இருவரும் இணைந்து அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி அறக்கட்டளைக்கு வருகை தந்தனர். அங்கு கல்கி கிருஷ்ணமூர்த்தியின் மகன் கல்கி ராஜேந்திரன் அவர்களின் முன்னிலையில், அறக்கட்டளையின் நிர்வாகத் தலைவர் திருமதி சீதா ரவியிடம் ஒரு கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கினர். 



 



இந்த நன்கொடை அறக்கட்டளையின் மூலதன நிதியாதாரமாக அளிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.



 



'பொன்னியின் செல்வன்' நாவலை எழுதிய அமரர் கல்கிக்கு நன்றி செலுத்தும் வகையில், அவரது குடும்ப உறுப்பினர்களின் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் அறக்கட்டளைக்கு 'பொன்னியின் செல்வன்' படக்குழுவினர் ஒரு கோடி ரூபாயை மூலதன நிதி உதவியாக வழங்கி இருக்கிறார்கள். லைகா குழும தலைவர் சுபாஸ்கரன் மற்றும் இயக்குநர் மணிரத்னத்தின் இந்த செயலுக்கு, திரை உலகினர் மட்டுமல்லாமல், அவரின் வாசகர்கள் அனைவரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா