சற்று முன்

நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |    வட இந்திய மாநிலங்களிலும் ரசிகர்களால் கொண்டாடப்படும் தங்கலான்!   |    'கடைசி உலகப்போர்' மாறுபட்ட களத்தில் போரின் கொடுமைகளைப் பேசும் அழுத்தமிகு படைப்பு   |    சம்யுக்தா பிறந்தநாளில் ‘சுயம்பு’ வில் அவரது கேரக்டர் லுக்கை வெளியிட்ட படக்குழு!   |    'கோட்' படத்தை வெளியிட்ட ரோமியோ பிக்சர்ஸ் விரைவில் 'சார்' படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது   |    நடிகர் ராணாவுடன் துல்கர் சல்மான் இணைந்து தயாரிக்கும் 'காந்தா' பட படப்பிடிப்பு தொடங்கியது!   |    'ரகுதாத்தா' ZEE5 இல் 13 செப்டம்பர் 2024 அன்று உலகளவில் டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படுகிறது!   |   

சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயனின் புதிய படம் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் !
Updated on : 15 November 2022

தீபாவளி கொண்டாட்டமாக  இயக்குனர் K V அனுதீப் இயக்கத்தில்,  நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் மரியா ரியாபோஷப்கா ஆகியோர் நடிப்பில்,  வெளியான ‘ப்ரின்ஸ்' திரைப்படம் இந்தியாவின் முன்னணி ஓடிடி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில், நவம்பர் 25, 2022 முதல்,  உலகமெங்கும் ஸ்ட்ரீம் செய்யப்படவுள்ளது.



 



தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்க, உக்ரெய்ன் நாயகி மரியா ரியாபோஷப்கா மற்றும் சத்யராஜ் நடிப்பில், தெலுங்கு திரையுலகின் இளம் இயக்குனர் K V அனுதீப் உடைய தனித்துவமான இயக்கத்தில், தீபாவளி கொண்டாட்டமாக, வெளியான திரைப்படம் 'ப்ரின்ஸ்'. காதலும் காமெடியும் கலந்து, படம் முழுக்க வெடித்து சிரிக்க வைக்கும் காட்சிகளுடன், முழுமையான ரொமான்டிக் காமெடி படமாக இப்படம் அனைவரையும் கவர்ந்தது.



 



ஒரு தமிழ் பையன் பிரிட்டிஷ் பெண்ணை காதலிக்கும் எளிமையான கதை. அன்பு (சிவகார்த்திகேயன்), ஒரு பள்ளியில் சமூக அறிவியல் பாடம் சொல்லித்தரும் ஆசிரியராக பணியாற்றுகிறான். அதே பள்ளியில், ஜெசிகா (மரியா ரியாபோஷப்கா) ஆங்கிலம் கற்பிக்கிறார்.



 



ஜாதிக்கு எதிரானவராக வாழும் உலகநாதன் ( சத்யராஜ்) தன் மகன் ஜாதியை விட்டு கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என ஆசைப்படுகிறார். இந்நிலையில் ஜாதிக்கெதிராக மட்டுமல்லாமல் முற்றிலும் வேறொரு நாட்டைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டால் அப்பா எதிர்க்க மாட்டார் என நினைக்கிறான் அன்பு. அங்கு தான் பிரச்சனை ஆரம்பமாகிறது.  உலகநாதன் ஆங்கிலேயர்களால் தனது தந்தை கொல்லப்பட்டதால் பிரிட்டிஷ்காரர்களை முற்றிலுமாக வெறுக்கிறார். இதனால் தன் மகன் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். இந்த இக்கட்டான சூழ்நிலையில் அன்பு தனது காதலில் எப்படி ஜெயிக்கிறான் என்பது தான் 'ப்ரின்ஸ்' படம்.



 



தீபாவளி வெளியீடாக வெளியான இப்படம் திரையரங்குகளில் சிரிப்பு மழை பொழிய வைத்தது. தற்போது உங்களை மகிழ்விக்க இல்லங்கள் தேடி வருகிறது.  நவம்பர் 25 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் இப்படத்தை அனைவரும் கண்டுகளிக்கலாம்.



 



டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஒரு முன்னணி ஸ்ட்ரீமிங்  ஓடிடி தளமாகும். இது இந்தியாவில்  பொழுதுபோக்கு, திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விளையாட்டு மற்றும் வெற்றிகரமாக ஸ்ட்ரீம் செய்யும் மற்ற அனைத்து நிகழ்ச்சிகளையும் வழங்கி, மக்கள் பார்க்கும் விதத்தில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.  டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளமானது சுமார் 8 மொழிகளில் 1,00,000 தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் மற்றும் விளையாட்டு தொடர்பான ஸ்லாட்டுகளை உலகம் முழுவதிலிருந்து வழங்கி வருகிறது



 



 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா