சற்று முன்
சினிமா செய்திகள்
Mythri Movie Makers Next Pan India Film Announced
Updated on : 28 November 2022
Mega Power Star Ram Charan, Buchi Babu Sana, Venkata Satish Kilaru, Vriddhi Cinemas, Mythri Movie Makers, Sukumar Writings, Pan India Film Announced
Mega Power Star Ram Charan who bagged a massive blockbuster with the Pan India film RRR is presently starring in another Pan India film under the direction of Shankar. Charan’s next film has been confirmed officially today. Young director Buchi Babu Sana who made a banging debut with the sensational blockbuster Uppena will be directing Ram Charan. The director readied a powerful script with an universal appeal to make it a Pan India entertainer.
Proudly presented by the leading production house Mythri Movie Makers, Venkata Satish Kilaru is venturing into film production grandly with the movie to be mounted on a huge scale with a high budget under the banners of Vriddhi Cinemas and Sukumar Writings.
The makers will disclose the details of the other cast and crew soon.
.jpg)
சமீபத்திய செய்திகள்
சுந்தர் சி – விஷால் கூட்டணியில் மீண்டும் ஒரு அதிரடி விருந்து
தமிழ் சினிமாவில் கமர்ஷியல் வெற்றிகளுக்குப் பெயர் பெற்ற சுந்தர் சி – விஷால் கூட்டணி மீண்டும் ஒன்று சேர்ந்திருப்பது, ரசிகர்களிடையே மட்டுமல்லாது திரையுலக வட்டாரங்களிலும் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. “புருஷன்” என தலைப்பிடப்பட்ட இந்த புதிய திரைப்படம், முழுமையான கமர்ஷியல் எண்டர்டெயினராக உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Benzz Media Pvt Ltd சார்பில் A.C.S. அருண்குமார் மற்றும் Avni Cinemax (P) Ltd சார்பில் குஷ்பு சுந்தர் இணைந்து, இப்படத்தை பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கின்றனர். இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில், ஆக்ஷன் ஹீரோ விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும், இன்றைய இளம் ரசிகர்களின் விருப்ப இசையமைப்பாளரான ஹிப்ஹாப் தமிழா இந்த படத்திற்கு இசையமைப்பது கூடுதல் பலமாக அமைந்துள்ளது.
சுந்தர் சி – விஷால் கூட்டணி இணையும் நான்காவது திரைப்படம் என்பதே “புருஷன்” படத்தின் முக்கிய சிறப்பு. இதற்கு முன், “ஆம்பள” திரைப்படத்தில் சுந்தர் சி – விஷால் – ஹிப்ஹாப் தமிழா கூட்டணி ரசிகர்களை கவர்ந்திருந்த நிலையில், அதே கூட்டணி மீண்டும் இணைவது எதிர்பார்ப்பை பல மடங்கு உயர்த்தியுள்ளது. இப்படத்தின் திரைக்கதை மற்றும் வசனங்களை வெங்கட் ராகவன் எழுதியுள்ளார்.

சமீபத்தில் வெளியான “புருஷன்” படத்தின் அறிவிப்பு வீடியோ, அதிரடி, நகைச்சுவை மற்றும் மாஸ் தருணங்கள் கலந்த சுந்தர் சி-யின் தனித்துவமான கமர்ஷியல் பாணியை வெளிப்படுத்தி, குறுகிய நேரத்திலேயே ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, படத்தின் மீதான ஆவலை மேலும் அதிகரித்துள்ளது.
இப்படத்தில் கதாநாயகியாக தமன்னா நடிக்க, பிரபல நகைச்சுவை நடிகர் யோகிபாபு முக்கிய கதாப்பாத்திரத்தில் தோன்றுகிறார். “கமர்ஷியல் கிங்” சுந்தர் சி-யின் முத்திரையுடன், குடும்பத்தோடு ரசித்து கொண்டாடும் வகையிலான ஒரு முழுமையான எண்டர்டெயினராக “புருஷன்” உருவாகி வருகிறது.
படப்பிடிப்பு தொடங்க உள்ள நிலையில், படத்தில் இணையும் மற்ற நடிகர்–நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் குழு குறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் ஒரு மாஸ் கமர்ஷியல் விருந்தாக “புருஷன்” அமையும் என்பதில் சந்தேகமில்லை.
சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வாவின் ‘புரொடக்ஷன் நம்பர் 4’ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்கள் மகிழ்ந்து, கொண்டாடும் வகையிலான பொழுதுபோக்கு திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்து வரும் சாந்தி டாக்கீஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் அருண் விஸ்வா, தனது நான்காவது தயாரிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தரமான கதையம்சம் மற்றும் வலுவான பொழுதுபோக்கு அம்சங்களை இணைப்பதே சாந்தி டாக்கீஸின் முக்கிய நோக்கமாக இருந்து வருகிறது.
‘மாவீரன்’, ‘3BHK’ போன்ற வெற்றிப் படங்களைத் தொடர்ந்து, நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் ‘சியான் 63’ படத்தையும் சாந்தி டாக்கீஸ் தயாரித்து வரும் நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ‘புரொடக்ஷன் நம்பர் 4’ திரைப்படம் ரசிகர்களிடையே புதிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
இந்த புதிய படத்தில், வளர்ந்து வரும் நாயகனாக தனது நகைச்சுவை கலந்த இயல்பான நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள பாரத், கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக, ‘குடும்பஸ்தன்’ திரைப்படத்தில் சிறப்பான நடிப்பால் பாராட்டைப் பெற்ற நடிகை சான்வி மேக்னா நடிக்கிறார். இப்படத்தை ஹரிஹரசுதன் அழகிரி எழுதி இயக்குகிறார்.
இன்று (ஜனவரி 21, 2026) காலை, இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. முழுப் படப்பிடிப்பும் பட்டுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், சுமார் 45 முதல் 50 நாட்களுக்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
நகைச்சுவை மற்றும் கதாபாத்திர நடிப்பில் தொடர்ந்து தனி முத்திரை பதித்து வரும் பாலசரவணன், இந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் தலைப்பு விரைவில் அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.
தொழில்நுட்ப ரீதியாகவும் படத்திற்கு வலு சேர்க்கும் வகையில்,
தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவை கவனிக்க, சி. எஸ். பாலச்சந்தர் கலை இயக்கத்தை மேற்கொள்கிறார். உடை வடிவமைப்பை கிருத்திகா சேகர் கவனித்து வருகிறார்.
வலுவான கதைக்களம், நகைச்சுவை கலந்த பொழுதுபோக்கு மற்றும் புதிய அணுகுமுறையுடன் உருவாகும் இந்த ‘புரொடக்ஷன் நம்பர் 4’ திரைப்படம், சாந்தி டாக்கீஸ் நிறுவனத்தின் இன்னொரு குறிப்பிடத்தக்க படைப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘திரௌபதி 2’ படத்தின் கதாநாயகிகளும் அவர்களது அனுபவங்களும்!
இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில், பிரமாண்டமான வரலாற்று கதைக்களத்துடன் உருவாகியுள்ள திரைப்படம் ‘திரௌபதி 2’. ஜனவரி 23ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ள இந்த திரைப்படம், அதன் தீவிரமான கதையம்சம் மற்றும் வலுவான கதாபாத்திரங்களால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
இந்த படத்தில் கதாநாயகிகளாக நடித்துள்ள ரக்ஷனா இந்துசூடன், தேவியானி ஷர்மா, திவி வைத்யன் ஆகியோருக்கு, தங்கள் நடிப்புத் திறனை முழுமையாக வெளிப்படுத்தும் விதமான முக்கியமான கதாபாத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அவர்கள் நடித்துள்ள திரௌபதி, ஆயிஷா, கோதை என்ற கதாபாத்திரங்கள், பெண்களின் வலிமை, உணர்ச்சி, அறிவு மற்றும் வீரத்தை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
திரௌபதி கதாபாத்திரத்தில் நடித்துள்ள ரக்ஷனா இந்துசூடன், இந்த அனுபவத்தை தனது சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்றாகக் குறிப்பிட்டுள்ளார். ஆழமான உணர்ச்சிகளும், தாங்கும் உறுதியும், அதே சமயம் நளினமும் கொண்ட கதாபாத்திரமாக திரௌபதி இருப்பதாகவும், அந்த உணர்வுகளை திரையில் வெளிப்படுத்துவது ஒரு பெரிய சவாலாக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர் மோகன் ஜி, தயாரிப்பாளர் சோலா சக்கரவர்த்தி மற்றும் சக நடிகர்கள் அனைவருக்கும் அவர் நன்றியைத் தெரிவித்துள்ளார்.
ஆயிஷா என்ற கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் தேவியானி ஷர்மா, இந்த படம் தன் வாழ்க்கையில் பெருமையான தொடக்கம் எனக் கூறியுள்ளார். அறிவும், அமைதியும், மன உறுதியும் கொண்ட ஆயிஷா கதாபாத்திரத்தை இயக்குநர் மோகன் ஜி அழகாக திரையில் வடிவமைத்துள்ளதாக அவர் பாராட்டியுள்ளார். இசையமைப்பாளர் ஜிப்ரான் அவர்களின் மனதை தொடும் இசையும், ஒளிப்பதிவாளர் பிலிப் கே. சுந்தர் அவர்களின் பிரமாண்டமான ஒளிப்பதிவும் கதைக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கோதை கதாபாத்திரத்தில் நடித்துள்ள திவி வைத்யன், உறுதியான உண்மையான உணர்ச்சிகளை பிரதிபலிக்கும் கதாபாத்திரமாக கோதை இருப்பதாகக் கூறியுள்ளார். அந்த வீரத்தையும் உறுதியையும் தன் நடிப்பில் முழுமையாக வெளிப்படுத்தியிருப்பதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆக்ஷன் காட்சிகளை வடிவமைத்த ஆக்ஷன் சந்தோஷ் அவர்களுக்கும், படப்பிடிப்பில் வழிகாட்டியாக இருந்த ரிச்சர்ட் ரிஷி அவர்களுக்கும் அவர் நன்றியைத் தெரிவித்தார்.
நேதாஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் சோலா சக்கரவர்த்தி தயாரிப்பில் உருவாகியுள்ள ‘திரௌபதி 2’ திரைப்படத்தில், ரிச்சர்ட் ரிஷி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் நட்டி நட்ராஜ், வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
வலுவான பெண்கதாபாத்திரங்கள், வரலாற்று பின்னணி, பிரமாண்டமான காட்சியமைப்பு மற்றும் உணர்ச்சிப் பூர்வமான கதையம்சம் ஆகியவற்றின் சங்கமமாக ‘திரௌபதி 2’ திரைப்படம் உருவாகியுள்ளது. ஜனவரி 23ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ள இந்த திரைப்படம், ரசிகர்களுக்கு ஒரு தாக்கம் கொண்ட சினிமா அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ZEE5 தமிழில் சமுத்திரகனியின் அடுத்த அதிரடி திரில்லர் “தடயம்” அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது தமிழ் பிராந்திய ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில், புதிய படைப்பான “தடயம்” என்ற திரைப்படத்தின் அறிவிப்பை இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. தரமான, கருத்துச் செறிவுள்ள கதைகளுக்குப் பெயர் பெற்ற ZEE5 தமிழ், தொடர்ந்து வலுவான உள்ளடக்கங்களை வழங்கி வரும் நிலையில், இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைத்தேர்வுகளுக்கும், சமூகப் பார்வையுடன் கூடிய இயல்பான நடிப்புக்கும் பெயர் பெற்ற நடிகர் சமுத்திரகனி, மீண்டும் ZEE5 ஓடிடி தளத்தில் ஒரு முக்கியமான படைப்புடன் இணைந்துள்ளார். “தடயம்” எனும் இந்த புதிய படம், விரைவில் ZEE5-ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நவீன் குமார் பழனிவேல் இயக்கத்தில், அஜய் கிருஷ்ணா தயாரிப்பில் உருவாகியுள்ள “தடயம்”, சமுத்திரகனியின் வலுவான நடிப்பை மையமாகக் கொண்டு, தீவிரமான கதையம்சத்துடன் உருவாகியுள்ள படைப்பாகக் கருதப்படுகிறது. சமுத்திரகனியின் கதாபாத்திரத் தேர்வுகளுக்கு ஏற்ப, இந்த திரைப்படமும் சமூக நிழல்கள், மனித மனநிலை மற்றும் நீதியின் தேடல் போன்ற அம்சங்களை ஆழமாக பேசும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முன், சமுத்திரகனி இயக்கி நடித்த “விநோதய சித்தம்” திரைப்படம் ZEE5-ல் வெளியானபோது, விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடமிருந்து ஒரே நேரத்தில் பாராட்டுகளைப் பெற்றது. வாழ்க்கை–மரணம், நேரம், மனித உறவுகள் போன்ற தத்துவார்த்தமான கருத்துகளை எளிய மொழியில், தாக்கம் கொண்ட திரைக்கதையுடன் சொல்லிய அந்த படம், ZEE5-யின் முக்கியமான தமிழ் படைப்புகளில் ஒன்றாக மாறியது.
அந்த வெற்றியின் தொடர்ச்சியாக, “தடயம்” திரைப்படமும் ZEE5 தமிழ் ரசிகர்களுக்கு ஒரு நினைவில் நிற்கும் அனுபவமாக இருக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. கதையின் முழு விவரங்கள் இன்னும் வெளிவராத நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு போஸ்டர், காவல் துறை பின்னணியில் உருவாகும் ஒரு அழுத்தமான, விறுவிறுப்பான திரில்லராக இந்த படம் இருக்கும் என்பதைக் குறிப்பதாக உள்ளது.
புதிய கதைகள், தீவிரமான நடிப்பு, மற்றும் உணர்வுப்பூர்வமான திரில்லர் அனுபவம் – இவற்றின் சங்கமமாக “தடயம்” உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் ரசிகர்கள், ஒரு புதிய பயணத்திற்கு தயாராகுங்கள்… சமுத்திரகனி நடிப்பில் “தடயம்” – விரைவில் ZEE5-ல் மட்டும்!
வரலாற்றுக் காவியத்தில் வீரத் தோற்றம் - ‘திரௌபதி 2’ மூலம் புதிய உயரம் தொடும் ரிச்சர்ட் ரிஷி
பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரைத்துறையில் நடிகராக வலம் வரும் ரிச்சர்ட் ரிஷி, சவாலான கதைகளையும் வித்தியாசமான கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து, தனது நடிப்புத் திறமையை தொடர்ந்து நிரூபித்து வருகிறார். காதல் நாயகனாக தனது திரைப்பயணத்தை தொடங்கிய அவர், காலப்போக்கில் பல்வேறு பரிமாணங்களைக் கொண்ட கதாபாத்திரங்களில் நடித்துத் தனக்கென ஒரு வலுவான இடத்தைப் பிடித்துள்ளார்.
அந்த வரிசையில், இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள வரலாற்றுத் திரைப்படமான ‘திரௌபதி 2’ ரிச்சர்ட் ரிஷியின் திரை வாழ்க்கையில் முக்கிய திருப்புமுனையாக அமைந்துள்ளது. இந்தப் படத்தில் மன்னர் வீர சிம்ம கடவராயன் என்ற வரலாற்றுப் பாத்திரத்தில், இதுவரை ரசிகர்கள் காணாத வீரத் தோற்றத்தில் அவர் திரையில் தோன்றவுள்ளார். ஜனவரி 23 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் படம் வெளியாக உள்ள நிலையில், இந்த அனுபவம் குறித்து ரிச்சர்ட் ரிஷி தனது மனதாரப் பகிர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார்.
நடிகர் ரிச்சர்ட் ரிஷி கூறியதாவது,
"திரௌபதி 2" படத்தில் மன்னர் வீர சிம்ம கடவராயனாக நடித்திருப்பது என் வாழ்க்கையின் முக்கிய திருப்புமுனை. இது வெறும் நடிப்பு அல்ல; தமிழ்நாட்டில் ரத்தம் சிந்திய வீரமும் தியாகமும் நிறைந்த வரலாற்றிற்கு உயிர் கொடுத்திருக்கும் அனுபவம். இயக்குநர் மோகன் ஜியின் ‘திரௌபதி 2’ சினிமா என்பதைத் தாண்டி வரலாற்றின் மறுபிறப்பாக உள்ளது. ’திரௌபதி’ படத்திற்கு பிறகு அவருடன் மீண்டும் பணியாற்றுவது, நம்பிக்கையுள்ள தளபதியுடன் மீண்டும் போர்க்களம் சென்ற அனுபவம் போல இருந்தது” என்றார்.
மேலும் பகிர்ந்து கொண்டதாவது, “இசையமைப்பாளர் ஜிப்ரானின் இசை பேரரசர்களின் ஆன்மாவை உலுக்கும் வகையில் அமைந்துள்ளது. ஒளிப்பதிவாளர் பிலிப் கே. சுந்தரின் ஒளிப்பதிவு அரச கம்பீரத்தை அழகாகப் பதிவு செய்கிறது. ஆக்ஷன் சந்தோஷ் அமைத்த போர் காட்சிகள் வரலாற்று காவியங்களுக்கு இணையானவை. ரக்ஷனா இந்துசூடன், நட்டி நட்ராஜ், வேல ராமமூர்த்தி ஆகியோருடன் இணைந்து நடித்தது ஒவ்வொரு காட்சியையும் மேலும் சிறப்பாக்கியுள்ளது. ‘திரௌபதி 2’ வரலாற்று திரைப்படம் என்பதைத் தாண்டி, நம் முன்னோர்களின் மறைக்கப்பட்ட போர்க்குரலை மீண்டும் உயிர்ப்பிக்கும் ஒரு வரலாற்றுப் பயணம். நேதாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம், தலைமுறைகள் கடந்து ஒலிக்கும் தமிழ் சினிமாவின் மிகத் துணிச்சலான வரலாற்றுக் காவியமாக இருக்கும். ஆரம்பம் முதல் இறுதி வரை ரசிகர்களை கட்டிப்போடும் அனைத்து அம்சங்களுடனும் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது” என்றார்.
நேதாஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் சோலா சக்கரவர்த்தி தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம், வரலாற்றுத் திரைப்படம் என்பதைத் தாண்டி, நம் முன்னோர்களின் மறைக்கப்பட்ட போர்க்குரலை மீண்டும் உயிர்ப்பிக்கும் ஒரு காவியப் பயணமாக உருவாகியுள்ளது. ஆரம்பம் முதல் இறுதி வரை ரசிகர்களை கட்டிப்போடும் அனைத்து வணிக மற்றும் உணர்ச்சி அம்சங்களுடனும் உருவாகியுள்ள ‘திரௌபதி 2’, தலைமுறைகள் கடந்தும் பேசப்படும் தமிழ் சினிமாவின் மிகத் துணிச்சலான வரலாற்றுக் காவியங்களில் ஒன்றாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோயம்புத்தூரில் பொங்கல் விழாவுடன் முடிவடைந்த ‘அறுவடை’ படப்பிடிப்பு
இயக்குநர் எம். கார்த்திகேசன் இயக்கத்தில் உருவாகி வரும் கிராமியப் பின்னணியிலான கமர்சியல் திரைப்படமான ‘அறுவடை’ படத்தின் படப்பிடிப்பு, அறுவடைத் திருநாளாகக் கொண்டாடப்படும் பொங்கல் நாளில் கோயம்புத்தூரில் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.
இந்த திரைப்படத்தில் கதையின் நாயகனாக இயக்குநர் எம். கார்த்திகேசன் நடித்துள்ளதுடன், அவருக்கு ஜோடியாக கதாநாயகியாக சிம்ரன் ராஜ் நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் பருத்திவீரன் சரவணன் நடித்துள்ளார். இவர்களுடன் ராஜசிம்மன், கஜராஜ், அனுபராமி கவிதா, தீபா பாஸ்கர் உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
படத்தின் தொழில்நுட்பக் குழுவில் ஒளிப்பதிவாளராக ரகு ஸ்ரவண் குமார், இசையமைப்பாளராக ஆனந்த், படத்தொகுப்பாளராக கே. கே. விக்னேஷ் பணியாற்றியுள்ளனர். பாடல்களை கார்த்திக் நேத்தா, கார்த்திகேசன் மற்றும் கானா சக்தி எழுதியுள்ளனர்.
கிராமப்புற மக்களின் வாழ்வியல் கலாச்சாரம், பண்பாடு மற்றும் பாரம்பரியங்களை உணர்வுப்பூர்வமாக பிரதிபலிக்கும் வகையில் உருவாகி வரும் இந்தத் திரைப்படத்தை, எம். கே. ஃபிலிம் மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் இயக்குநர் எம். கார்த்திகேசன் தயாரித்து வருகிறார்.
‘அறுவடை’ திரைப்படத்தின் சார்பில் கோயம்புத்தூரில் பொங்கல் விழாவை பாரம்பரிய முறையில் உற்சாகமாகக் கொண்டாடியதுடன், அதே நாளில் படப்பிடிப்பையும் முழுமையாக நிறைவு செய்துள்ளனர். அறுவடைத் திருநாளில் படப்பிடிப்பு முடிவடைந்தது, படக்குழுவினருக்கு ஒரு நல்ல தொடக்கத்தின் அடையாளமாகவும், படத்தின் வெற்றிக்கான நல்ல முன்னறிவிப்பாகவும் கருதப்படுகிறது.
கிராமிய மணம் கமழும் கதை, வணிக அம்சங்கள் மற்றும் உணர்ச்சிப் பூர்வமான காட்சிகள் இணைந்து உருவாகும் ‘அறுவடை’ திரைப்படம், ரசிகர்களிடையே தற்போதே நல்ல எதிர்பார்ப்பை உருவாக்கி வருகிறது.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில்,
'' ஒரு சாதாரண மனிதனின் வீட்டில் நடைபெறும் ஒரு சிறிய பிரச்சினை, மிகப்பெரிய சிக்கலாக உருவெடுத்து சமூகத்தை எப்படி சீரழிக்கிறது என்பதை விவரிக்கும் வகையில் இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. 'வினை விதைத்தவன் வினை அறுப்பான்' என்ற ஒரு தத்துவத்தை மையப்படுத்தி இப்படத்திற்கு 'அறுவடை' என பெயரிட்டிருக்கிறோம். விரைவில் படத்தை வெளியிட உள்ளோம் " என்றார்.
300 கோடி வசூல் சாதனை… ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியான நன்றி கூறிய ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி
உலகம் முழுவதும் 300 கோடி ரூபாய் வசூலைத் தாண்டி பிரம்மாண்டமான பாக்ஸ் ஆபீஸ் வெற்றியைப் பெற்றுள்ள ‘மான சங்கர வர பிரசாத் (MSG)’ திரைப்படம், தெலுங்கு திரையுலகில் புதிய வரலாற்றுச் சாதனையைப் பதிவு செய்துள்ளது. மிகக் குறுகிய காலத்திலேயே இந்த இலக்கை எட்டிய முதல் தெலுங்குத் திரைப்படமாக இது அமைந்துள்ளது.
வட அமெரிக்காவில் மட்டும் 3 மில்லியன் டாலர் வசூல் என்ற மைல் கல்லைக் கடந்து, மெகா ஸ்டார் சிரஞ்சீவி – இயக்குநர் அனில் ரவி புடி கூட்டணியில் இதுவரை இல்லாத அளவிலான மிகப் பெரிய வசூல் சாதனை படமாக MSG உருவெடுத்துள்ளது. வெளியான எட்டாவது நாளிலும் வலுவான வசூலை பதிவு செய்த இப்படம், பெரும் முன்பதிவுகளின் ஆதரவுடன் ஒன்பதாவது நாளில் கூடுதல் வேகத்தைப் பெற்றுள்ளது. ஏற்கனவே பல சாதனைகளை முறியடித்துள்ள இந்த திரைப்படம், தொடர்ந்து புதிய சாதனைகளை நோக்கி பயணித்து வருகிறது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியின் பின்னணியில், வசூல் கணக்குகளை விட ரசிகர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் படக்குழுவினரின் உழைப்பையே முக்கியமாக பேசும் விதமாக, மெகா ஸ்டார் சிரஞ்சீவி தனது இதயம் கனிந்த – உணர்ச்சி பூர்வமான செய்தியை வெளியிட்டுள்ளார். அதன் மூலம் தெலுங்கு ரசிகர்களுடனான தன்னுடைய பிரிக்க முடியாத பிணைப்பை அவர் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளார்.
'மெகா ஸ்டார் 'சிரஞ்சீவியின் செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது...
''நமது எம் எஸ் ஜி யின் இந்த பிரம்மாண்டமான வெற்றியை பார்க்கும் போது என் இதயம் நன்றியுணர்வால் நிரம்புகிறது. நான் எப்போதும் உங்கள் அன்பின் விளை பொருள் என்று கூறி வருகிறேன். இன்று நீங்கள் அதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளீர்கள்.
இந்த சாதனை தெலுங்கு ரசிகர்களுக்கும், அன்பான விநியோகஸ்தர்களுக்கும், பல தசாப்தங்களாக எனக்கு துணையாக நிற்கும் எனது அன்பான மெகா ரசிகர்களுக்கும் சொந்தமானது. திரையரங்குகளில் நீங்கள் எழுப்பும் ஆரவாரமே என்னை முன்னோக்கி செல்ல வைக்கும் ஆற்றல். சாதனைகள் வரும். போகும். ஆனால் நீங்கள் என் மீது பொழியும் அன்பு ...என்றென்றும் நிலைத்திருக்கும்.
இந்த பிளாக் பஸ்டர் வெற்றி நமது அனில் ரவி புடி - தயாரிப்பாளர்களான சாஹூ மற்றும் சுஷ்மிதா ஆகியோருடனான முழு படக் குழுவினரின் கடின உழைப்பிற்கும், என் மீது நீங்கள் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கைக்கும் ஒரு காணிக்கையாகும். இந்த கொண்டாட்டத்தை தொடர்வோம். உங்கள் அனைவருக்கும் என் அன்பு வாழ்த்துக்கள்''.
இந்த செய்தி ரசிகர்களிடையே பெரும் உணர்ச்சி அலைகளை ஏற்படுத்தி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு பிளாக் பஸ்டர் வெற்றிக்கு பின்னால் இருக்கும் கூட்டு உழைப்பையும், ரசிகர் – நட்சத்திர உறவின் ஆழத்தையும் சிரஞ்சீவியின் இந்த வார்த்தைகள் மீண்டும் நினைவூட்டுகின்றன.
சாதனைகள் மாறக்கூடும், ஆனால் மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கும், அவரது ரசிகர்களுக்கும் இடையேயான அன்பு – எப்போதும் நித்யமானதே.
சசிகுமார் நடிப்பில் அரசியல் & உணர்வு காட்சிகள் நிறைந்த “மை லார்ட்” டிரெய்லர் வெளியீடு
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர் சசிகுமார் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் “மை லார்ட்” படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. முன்னணி இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் சசிகுமார், சைத்ரா ஜே. ஆச்சார், ஜெயப்பிரகாஷ், குரு சோமசுந்தரம், ஆஷா சரத், இயக்குநர் கோபி நயினார் மற்றும் வசுமித்ரா போன்ற பலர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவை நீரவ் ஷா, இசையமைப்பை ஷான் ரோல்டன், பாடல்களை யுகபாரதி, கலை இயக்கத்தை முனி பால்ராஜ், படத்தொகுப்பை சத்யராஜ் நடராஜன், ஆடை வடிவமைப்பை டி. ஆர். பூர்ணிமா, நடனத்தை எம். ஷெரீப், சண்டை காட்சிகளை பி. சி. ஸ்டண்ட் மேற்பார்வை எடுத்து உள்ளனர்.
ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரித்து வழங்கும் இந்த படத்தில், அரசியல் ஆதிக்கத்தில் சிக்கி வாழும் எளிய மனிதர்களின் வாழ்க்கையை உணர்வு பூர்வமாக வெளிப்படுத்திய காட்சிகள் டிரெய்லரில் சிறப்பாக வெளிப்பட்டுள்ளன. சிறுநீரக திருட்டு சம்பவம், ஜனநாயக உரிமைகள், சசிகுமார் வசனங்கள் ஆகியவை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
தேசிய விருது பெற்ற இயக்குநர் ராஜு முருகன் மற்றும் தொடர்ச்சியான வெற்றிபெற்ற படங்களை வழங்கிய சசிகுமார் ஆகியோர் முதன்முறையாக இணைந்த இந்த படம், டிரெய்லர் மட்டுமே ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் மோடி முன்னிலையில் ஜி.வி. பிரகாஷ் குரலில் அரங்கேற்றப்பட்ட திருவாசகத்தின் முதல் பாடல்!
தமிழ் ஆன்மிக இசையின் பெருமையை மீண்டும் கொண்டு வரும் திருவாசகம் புதிய இசை வடிவில் ரசிகர்களை கவர்கிறது. இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்த இந்தப் பாடல், வரும் ஜனவரி 22 அன்று அவரது அதிகாரப்பூர்வ YouTube சேனலில் வெளியிடப்படுகிறது.
சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற பொங்கல் விழாவில், இந்திய பிரதமர் திரு நரேந்திர மோடி முன்னிலையில் அரங்கேற்றப்பட்ட பாடல், நேரடியாக நிகழ்ச்சியினை ரசிக்கும் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.
பாரம்பரிய ஆன்மிகத்தையும் நவீன இசை மொழியிலும் இணைத்த ஜி.வி. பிரகாஷ், திருவாசகத்தின் ஆழமான பக்தி உணர்வை இன்றைய தலைமுறைக்கும் எளிதில் உணரச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
திருவாசகத்தை முழுமையான இசை ஆல்பமாக உருவாக்க வேண்டும் என்பது அவரது நீண்ட நாள் கனவு. இந்த முதல் பாடல் அந்த கனவின் ஆரம்பப் படியாகும். பிரதமர் மோடி அவர்களின் பாராட்டையும் பெற்ற பாடல், ஆன்மிக இசை ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை எழுப்பியுள்ளது.

நகரின் சுழற்சியும் குடும்ப உறவுகளும் கலந்த “கான் சிட்டி” ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது!
தமிழ் சினிமாவில் புதுமையான கதைக்களங்களும் குடும்ப உணர்வுகளும் கலந்த படைப்புகள் தொடர்ந்து வெளிவருவதில், புதிய “கான் சிட்டி” திரைப்படம் ரசிகர்களை கவர உள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் முன்னணி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார், இது சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பேசப்படுகிறது.
படத்தில் முன்னணி இளம் நட்சத்திர நடிகர் அர்ஜூன் தாஸ், மலையாள முன்னணி நடிகை அன்னா பென், நகைச்சுவை நடிகர் யோகிபாபு, வடிவுக்கரசி, மற்றும் குழந்தை நட்சத்திரம் அகிலன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
போஸ்டர் நகர பின்னணியில் நிகழும் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தின் உணர்வுகளை நெருக்கமாகக் காட்டுகிறது. அர்ஜூன் தாஸ் ஹேண்ட் பேக்குடன், அன்னா பென் அவரைச் சுற்றி, யோகிபாபு பயணப்பெட்டி உடன், மற்றும் குழந்தை அகிலன் வெற்றிக் கோப்பையுடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த காட்சிகள் படத்தின் காமர்ஷியல் மற்றும் குடும்ப மனதை வெளிப்படுத்துகிறது.
Power House Pictures தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் எழுதி இயக்குகிறார். படப்பிடிப்பு 80 சதவீதம் நிறைவடைந்து, மங்களூர், சென்னை, மும்பை போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது.
இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைக்கும் இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகும் திட்டத்தில் உள்ளது. புதிய தலைப்பு மற்றும் வித்தியாசமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், ரசிகர்களுக்கும் திரை ஆர்வலர்களுக்கும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
- உலக செய்திகள்
- |
- சினிமா













