சற்று முன்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் திரையுலகில் இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கும் 'நேசிப்பாயா'   |    நடிகர் தனுஷ் வெளியிட்ட 'கிங்ஸ்டன்' திரைப்படத்தின் டீசர்!   |    பொங்கல் பண்டிகைக் கொண்டாட்டமாக ஜனவரி 14 உலகமெங்கும் வெளியாகும் 'தருணம்'   |    ராக்கிங் ஸ்டார் யாஷின் 39 வது பிறந்தநாளை முன்னிட்டு, ரசிகர்களுக்கு அசத்தலான விருந்து!   |    ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் 'கிங்ஸ்டன்' படத்தின் பர்ஸ்ட் லுக்   |    ராக்கிங் ஸ்டார் யாஷ் பிறந்த நாளை முன்னிட்டு அசத்தலான 'டாக்ஸிக்' பட கிளிம்ப்ஸை வெளியிடவுள்ளார்   |    அஜித் சாரால் தான் இந்தப்படம் பொங்கலுக்கு வருகிறது! - 'மெட்ராஸ்காரன்' பட தயாரிப்பாளர் B.ஜெகதீஷ்   |    மேஸ்ட்ரோ யுவன் ஷங்கர் ராஜாவின் அற்புதமான இசையில் 'அகத்தியா' பட முதல் சிங்கிள் பாடல்!   |    படப்பிடிப்பு முடிவடைந்த சசிகுமார் - சிம்ரன் நடிக்கும் ஃபீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னர்!   |    பாடலாசிரியரும் திரைப்பட இயக்குநருமான பா.விஜய் இயக்கியுள்ள 'அகத்தியா' வெளியீடு அறிவிப்பு!   |    வெளிநாடுகளில் புகழ் பெற்ற OTT தளம் ஜனவரி 2025 முதல் இந்தியாவிலும்!   |    நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள “எமகாதகி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!   |    பத்து வயதுப் பெண் குழந்தைக்கு நேர்ந்த கொடுமையை அடிப்படையாகக் கொண்ட 'துணிந்தவன்'   |    அம்பிகா மேடம் பாராட்டியது எனக்கு விருதாக கருதுகிறேன் - 'எல்லாம் நன்மைக்கே' பட இயக்குனர்   |    படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் 'கரவாலி' படத்தின் தனித்துவமான டீசர்   |    புத்தாண்டு தினத்தில் வெளியாகயிருக்கும் 'கேம் சேஞ்சர்' படத்தின் டிரெய்லர்!   |    8 எப்பிசோட்களாக உருவாகும் மிஸ்டரி திரில்லர் இணையத் தொடர் ‘ராகவன் : Instinct'   |    ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் 'ரெட்ரோ' பட சூர்யாவின் தோற்றம்!   |    சத்யராஜ், சேரன் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் 'பயாஸ்கோப்'   |    இயக்குநர் செல்வராகவன் 'இசை அசுரன்' ஜீ.வி. பிரகாஷ் குமார் இணைந்திருக்கும் 'மெண்டல் மனதில்'   |   

சினிமா செய்திகள்

கிரைம் திரில்லராக உருவாகவுள்ள படத்தில் முக்கிய வேடத்தில் ஜீனியர் எம்.ஜி.ஆர் !
Updated on : 06 December 2022

Third Eye Creations  சார்பில் MD விஜய் தயாரிப்பில்,  கிரிஷா குரூப் ஜீனியர் எம்.ஜி.ஆர் முதன்மை பாத்திரங்களில் நடிக்க, இயக்குநர் தமிழ் தியாகராஜன் இயக்கத்தில் உருவாகும் புதிய க்ரைம் திரில்லர் திரைப்படம்,  “Production No. #2” இன்று இனிதே பூஜையுடன் துவங்கியது.



 



எம்.ஜி.ஆரின் தோட்டமான சென்னை ராமவரம் தோட்டத்தில்  படக்குழுவினர் மற்றும் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள இப்படத்தின் பூஜை கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவினில் படக்குழுவினருடன், திரை பிரபலங்கள் ஜீனியர் எம்.ஜி.ஆர், நடிகர் ஆனந்த்பாபு, இயக்குநர் மோகன் ஜி, சந்தோஷ் பிரதாப், விஜய் டிவி புகழ், உதயா, சிலுமிசம் சிவா, வையாபுரி,  இயக்குநர் தமிழ், , பிக்பாஸ் டேனியல்  ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்தினர்.



 



பெண் கதாப்பாத்திரத்தை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் கிரிஷா குரூப் நாயகியாக நடிக்கிறார் அறிமுக இயக்குநர்  தமிழ் தியாகராஜன் இயக்குகிறார். முக்கிய வேடத்தில் ஜீனியர் எம்.ஜி.ஆர் நடிக்கிறார்.



 



புதுமையான க்ரைம் திரில்லராக உருவாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.



 



இப்படத்தில்  ஆனந்த்பாபு, உதயா ரவி, சிலிமிசம் சிவா, ஹிட்லர், காதல் சுகுமார், சானா கான் ஆகியோருடன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர்.



 



படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர்கள் குறித்த விபரம் மற்றும் படம் குறித்த தகவல்கள் விரைவில் தயாரிப்பு தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா