சற்று முன்

நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |    வட இந்திய மாநிலங்களிலும் ரசிகர்களால் கொண்டாடப்படும் தங்கலான்!   |    'கடைசி உலகப்போர்' மாறுபட்ட களத்தில் போரின் கொடுமைகளைப் பேசும் அழுத்தமிகு படைப்பு   |    சம்யுக்தா பிறந்தநாளில் ‘சுயம்பு’ வில் அவரது கேரக்டர் லுக்கை வெளியிட்ட படக்குழு!   |    'கோட்' படத்தை வெளியிட்ட ரோமியோ பிக்சர்ஸ் விரைவில் 'சார்' படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது   |    நடிகர் ராணாவுடன் துல்கர் சல்மான் இணைந்து தயாரிக்கும் 'காந்தா' பட படப்பிடிப்பு தொடங்கியது!   |    'ரகுதாத்தா' ZEE5 இல் 13 செப்டம்பர் 2024 அன்று உலகளவில் டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படுகிறது!   |   

சினிமா செய்திகள்

ரஜினிகாந்தின் 'பாபா' போல் தெலுங்கில் ரி-ரிலீஸ் செய்யப்படும் கே.டி. குஞ்சுமோனின் 'காதல் தேசம்'
Updated on : 09 December 2022

 தமிழ் சினிமாவில் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து புதிய இயக்குனர்களை வைத்து பிரம்மாண்ட படங்களாக  தயாரித்தவர் கே.டி.கே என்றழைக்கப்படும் மெகா புரோடியூசர் 'ஜென்டில்மேன்' கே.டி. குஞ்சுமோன். 



 



இவர் தயாரித்த சூரியன், ஜென்டில்மேன், காதலன், காதல் தேசம் போன்ற பல படங்கள் வினியோகஸ்தர்களுக்கு வசூல் சாதனை படைத்த படங்களாகும். பிரமாண்டமாகவும், ஒலி ஒளி நேர்த்தியாகவும் படைக்கப்பட்டு மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற படங்களாக தயாரித்தவர் கே.டி.கே. 



 



ரஜினிகாந்தின் #பாபா படத்தை ரி-ரிலீஸ் செய்கிறார்கள். இதற்கு முன்னோடியாக கே.டி.கே தயாரித்த "காதல் தேசம்" படத்தை முதல் கட்டமாக தெலுங்கில் இன்று  வெளியிடுகிறார். 



 



இளைஞர்களை காதலில் கிரங்கடித்த இந்த படத்தை இசை நேர்த்தியுடன் புதிய கலர் சேர்ப்பில் தெலுங்கில்  #பிரேமதேசம் என்ற பெயரில் புத்தம் புது காப்பியாக இன்று வெளியாகியுள்ளது. 



 



ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 200- க்கும் அதிகமான திரை அரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யபட்டு சாதனை படத்துள்ளார் கே.டி.கே. 



 



வினீத், அப்பாஸ், தபு ஆகியோர் நடித்து கதிர் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்துக்கு இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்தார். ரஹ்மானின் இசை பயணத்தில் காதல் தேசம் திருப்புமுனையாக அமைந்தது . படத்தின் பாடல்கள் உலகம் முழுவதும் பட்டி தொட்டி எங்கும் முணு முணுக்கப்பட்டு பிரபலமடைந்தது. இதில் வரும் முஸ்தஃபா முஸ்தஃபா பாடல் தலைமுறைகளை தாண்டி இன்றும் பிரபலம். சமீபத்தில் மறைந்த பிரபல டைரக்டர் கே.வி.ஆனந்த் தமிழில் ஒளிப்பதிவாளராக அறிமுகமான படமும் இதுவே.



 



1996-ல்  இப்படம் வெளியிட்டபோது  ஆந்திரா  மற்றும் கர்நாடகாவில் ஒரு வருடங்களுக்கு மேல் திரையிடப்பட்டு  வசூலில் சாதனை படைத்தது.



 



ஆர்ட் டைரக்டர் தோட்டா தரணியின் கைவண்ணத்தில் படத்துக்காக அமைக்கப்பட்ட பிரம்மாண்ட அரங்கங்களும் மக்களை வியப்படைய வைத்தது.



 



சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பாபா மற்றும் பல படங்கள்  மீண்டும் வெளியிட இருக்கும் வேளையில்.. அப்படங்களுக்கு முன்னோடியாக "பிரேம தேசம்" படத்தை  வெளியிட்டு மீண்டும் தன்னை முதன்மை தயாரிப்பாளராக அடையாளப் படுத்தியுள்ளார் 

கே.டி. குஞ்சுமோன். 



 



இவர் அடுத்து தயாரித்து வரும் "ஜென்டில்மேன்2" படத்தின் படப்பிடிப்புக்கான வேலைகளும் முழு வீச்சில் நடை பெற்று வருகிறது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா