சற்று முன்

நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |    வட இந்திய மாநிலங்களிலும் ரசிகர்களால் கொண்டாடப்படும் தங்கலான்!   |    'கடைசி உலகப்போர்' மாறுபட்ட களத்தில் போரின் கொடுமைகளைப் பேசும் அழுத்தமிகு படைப்பு   |    சம்யுக்தா பிறந்தநாளில் ‘சுயம்பு’ வில் அவரது கேரக்டர் லுக்கை வெளியிட்ட படக்குழு!   |    'கோட்' படத்தை வெளியிட்ட ரோமியோ பிக்சர்ஸ் விரைவில் 'சார்' படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது   |    நடிகர் ராணாவுடன் துல்கர் சல்மான் இணைந்து தயாரிக்கும் 'காந்தா' பட படப்பிடிப்பு தொடங்கியது!   |    'ரகுதாத்தா' ZEE5 இல் 13 செப்டம்பர் 2024 அன்று உலகளவில் டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படுகிறது!   |   

சினிமா செய்திகள்

தனது பிறந்த நாளில் 10 ஏழை எளிய பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உதவிய நடிகர் ஆர்யா
Updated on : 12 December 2022

ஜீ ஸ்டூடியோஸ் & ட்ரம்ஸ்டிக்ஸ் புரடக்சன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் முத்தையா இயக்கத்தில்,  நடிகர் ஆர்யா நடிக்கும் படம் “காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்”. 



 



இதுவரையிலும் மாடர்ன் இளைஞராக ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகர் ஆர்யா,  முதல் முறையாக இப்படத்தில் கரடுமுரடான தோற்றத்தில் கிராமத்து மனிதனாக நடிக்கிறார் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது கோவில்பட்டி பகுதிகளில் படப்பிடிப்பு வெகுவேகமாக நடந்து வருகிறது.



 



முதல் முறையாக கிராமத்து லுக்கில் ஆர்யா நடிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஆர்யாவின் பிறந்தநாளான டிசம்பர் ௧௦ அன்று வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் பெரும் பரபரப்பை கிளப்பியது. 



 



அதுமட்டுமின்றி Drumsticks Productions தயாரிப்பு நிறுவனம்,  Round Table India  மற்றும் ஆர்யாவின் Ryders Team Jammy குழு இணைந்து ஆர்யா பிறந்தநாள் அன்று படப்பிடிப்பு நடைபெறும் பகுதிகளில் அரசுப்பள்ளியில் படிக்கும் அந்த பகுதிகளில் வாழும் ஏழை மாணவ, மாணவிகள் 10 பேரை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு ஆர்யா அவர்களால் சைக்கிள் வழங்கப்பட்டது. மேலும் படக்குழுவினர், கிராமத்து மக்களுடனும் பள்ளி மாணவர்களுடனும் இணைந்து, ஆர்யா பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினர். 



 



ஆர்யா பிறந்த நாளில் வெளியான ஃபர்ஸ்ட் லுக்கில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பாட்ஷா போஸ்டர் பின்னணியில் இருக்க, கருப்பு வேட்டி சட்டையில், தாடியுடன் கரடுமுரடான கிராமத்து லுக்கில் அசத்துகிறார் ஆர்யா. இந்த ஃபர்ஸ்ட் லுக், ரசிகர்களிடம்  படத்தின் மீது பெரும் ஆர்வத்தை தூண்டியுள்ளது.



 



குடும்பத்துடன் ரசிக்கும்படியான, வெற்றிகரமான கமர்ஷியல் படங்களை வழங்கும் இயக்குநர் முத்தையா இப்படத்தினை இயக்குகிறார். இப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார், வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.



 



பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கிய ஆர்யாவையும், படக்குழுவினரையும் அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.



 



 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா