சற்று முன்

'தி பாரடைஸ்' படத்திற்காக லெஜெண்ட்டரி மோகன் பாபு மீண்டும் வெள்ளித் திரைக்கு வருகை!   |    தியா சூர்யா இயக்கியிருக்கும் டாக்குமெண்ட்ரி - டிராமா!   |    முன்னணி ஓடிடி தளமான ZEE5, தமிழ் ஒரிஜினல் “வேடுவன்” சீரிஸின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது!   |    இயக்குநராக அறிமுகமாகிறார் வரலட்சுமி சரத்குமார்!   |    காந்தாராவின் பாரம்பரியத்தை சிறப்பு தபால் அட்டைகளை வெளியிட்டு கௌரவித்துள்ளனர்!   |    முதல்முறையாக தேசிய விருது வென்றார் நடிகர் ஷாரூக் கான் !   |    அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் படமாக 'மருதம்' உருவாகியுள்ளது.   |    விமர்சன ரீதியாக பாராட்டப்படும் மோகன் ஜி இயக்கத்தில், ரிச்சர்ட் ரிஷி நடிக்கும் 'திரெளபதி 2'   |    அப்பா -மகள் இடையிலான அன்பை சொல்லும் கவிதையாக உருவாகியுள்ளது 'மெல்லிசை'   |    கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மீண்டும் திரைக்கு வருகிறது 'அனகோண்டா'!   |    நடிகர் உன்னி முகுந்தனை கேரளா ஸ்ட்ரைக்கர்ஸ் அணி தங்களது புதிய கேப்டனாக அறிவித்துள்ளது!   |    மோதியின் அரசியலுக்கு அப்பாற்பட்ட தனிப்பட்ட வாழ்வை உணர்வுப்பூர்வமாக பேசும் படம் 'மா வந்தே'   |    அதீரா, (PVCU)- பிரசாந்த் வர்மா சினிமா யுனிவர்ஸின் அடுத்த அத்தியாயமாகும்   |    ‘காந்தாரா: சேப்டர் 1’ ட்ரைலரை நடிகர் சிவகார்த்திகேயன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்!   |    கவுதம் ராம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியது   |    “காந்தாரா சேப்டர் 1” படத்தின் தமிழ் டிரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிடுகிறார்!   |    இந்த பூமி கோளில் செல்வராகவன் தான் மிகவும் சிறந்த மனிதர் - பினு ஜார்ஜ் அலெக்சாண்டர்   |    சென்னைவில் நடைபெறும் 23வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் – 2025   |    நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும், அசத்தலான கமர்ஷியல் திரில்லர் திரைப்படம் 'ரைட்'   |    நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்   |   

சினிமா செய்திகள்

வழக்கறிஞராக வாதாட வருகிறார் வரலட்சுமி சரத்குமார்!
Updated on : 26 December 2022

ரசிமீடியா மேக்கர்ஸ், வி.வி.பிலிம்ஸ் சார்பில் ஏ.ஆர்.கே ராஜராஜா, ஆவடி சே.வரலட்சுமி தயாரிப்பில் சூரியகிரண் இயக்கியிருக்கும் படம்  "அரசி".



 



ஐந்தே படத்தில் வரலட்சுமி சரத்குமாருடன் கார்த்திக் ராஜு,அங்கனாராய், மனிஷா ஜஸ்னானி, சித்தார்த்தராய், அபிஷேக் வினோத், ஹாசினி, சுப்ரமணியம் சிவா,சாப்ளின் பாலு, மோகித் ராஜ், ஆகியோருடன் விஜய் டிவி புகழ் ஹரி,சிவா மதன்,சக்தி ஆகியோர் நடித்துள்ளனர்.



 



வக்கீல், போலீஸ் அதிகாரி, ரவுடி ஆகிய மூன்று பேர் நடுவில் நடக்கும் போராட்டத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள அரசி படத்திற்கு  இசை சித்தார்த் விபின், பாடல்கள் ஆவடி சே.வரலட்சுமி, அருண் பாரதி, நிலவை பார்த்திபன்,கானா பிரபா.



 



ஒளிப்பதிவு செல்வா.ஆர், நடனம் தீனா, சண்டை பயிற்சி மிரட்டல் செல்வா.  



 



இப்படத்தில் 4 பாடல்கள் இடம்பெற்றுள்ளது. படத்தின் தயாரிப்பாளர் ஆவடி சே.வரலட்சுமி ஒரு பாடலை எழுதியுள்ளார். நதியே அடங்காதே அணைக்குள் முடங்காதே... என்று பெண்களுக்கு தன்னம்பிக்கை தரும் பாடலை எழுதியிருக்கிறார். இப்பாடல் நிச்சயம் மகளிர் மத்தியில் மிகப் பிரபலமாக பேசப்படும்.



 



அண்ணன மிஞ்ச இங்க யாரும் இல்லை...எனும் துள்ளல் இசை  பாடலை இயக்குனர் வெங்கட் பிரபு,பிரேம்ஜி அமரன் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். இப்பாடலை கேட்போரை கிறுகிறுக்க வைக்கும். காண்போரை ஆட வைக்கும்.



 



இப்படத்தில் 6 சண்டை காட்சிகள் அற்புதமாக அமைந்துள்ளது. குறிப்பாக ராணிப்பேட்டை தோல் தொழிற்சாலையில் மிகப் பிரமாண்டமான செட் அமைக்கப்பட்டு 5 நாட்கள் படப்பிடிப்பு நடத்திருக்கிறார்கள்.



 



சண்டை காட்சிகளை மிரட்டி இருக்கிறார் மிரட்டல் செல்வா. தூள் கிளப்பி இருக்கிறார் வரலட்சுமி சரத்குமார்.



 



இதன் படப்பிடிப்பு மொத்தம் 55 நாட்களில் சென்னை மற்றும் வேலூர் விஐடி கல்லூரியில்  இரவு பகல் பாராது படப்பிடிப்பு நடைபெற்றிருக்கிறது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா