சற்று முன்

நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |    வட இந்திய மாநிலங்களிலும் ரசிகர்களால் கொண்டாடப்படும் தங்கலான்!   |    'கடைசி உலகப்போர்' மாறுபட்ட களத்தில் போரின் கொடுமைகளைப் பேசும் அழுத்தமிகு படைப்பு   |    சம்யுக்தா பிறந்தநாளில் ‘சுயம்பு’ வில் அவரது கேரக்டர் லுக்கை வெளியிட்ட படக்குழு!   |    'கோட்' படத்தை வெளியிட்ட ரோமியோ பிக்சர்ஸ் விரைவில் 'சார்' படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது   |    நடிகர் ராணாவுடன் துல்கர் சல்மான் இணைந்து தயாரிக்கும் 'காந்தா' பட படப்பிடிப்பு தொடங்கியது!   |    'ரகுதாத்தா' ZEE5 இல் 13 செப்டம்பர் 2024 அன்று உலகளவில் டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படுகிறது!   |   

சினிமா செய்திகள்

மோகன்லாலுக்கும் விஷாலுக்கும் வில்லனான போலீஸ் கான்ஸ்டபிள்!
Updated on : 26 December 2022

 பத்ரன் இயக்கத்தில் மோகன்லால் நடித்து மாபெரும் வெற்றிப்பெற்ற படம் " ஸ்படிகம் " . இப்படத்தில் மோகன்லாலுக்கு சவால் விடும் பயில்வான் போன்ற உடல்வாகுள்ள நடிகரை தேடியிருக்கிறார் இயக்குனர்.



 



அந்த சமயத்தில் தான் அதில் முக்கிய வில்லனாக நடித்த ஜார்ஜ், அன்றைய மிஸ்டர் கேரளா பட்டத்தில் 2- ம் பரிசு பெற்ற போலீஸ் கான்ஸ்டபிள் சன்னியை பற்றி சொல்ல.. டைரக்டரின் ஒரே பார்வையில் ஓக்கே ஆனார் பெருச்சாளி பாஸ்டின் என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக அசத்தி மலையாள மக்களின் மனதில் நீங்கா இடம்பெற்றார்.



 



அதன் பிறகு நிறைய மலையாள படத்தில் பரபரப்பாக நடித்து வருகிறார். முதல் படத்திலேயே இவர் பெருச்சாளி பாஸ்டின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.  " ஜோஜி " என்ற படத்தில்  பஹத் ஃபாசிலின் தந்தையாக நடித்து அசத்தியது விஷாலின் " லத்தி" பட இயக்குனர் A. வினோத் குமார் கண்ணில் பட அப்படத்தில் வில்லனாக ரமணாவின் அப்பா வேடத்திற்கு தேர்வானார். படம் ரிலீசாகி இன்று சன்னி யின் கதாபாத்திரமும் , அவரது தோற்றமும் நடிப்பும் ரசிகர்களையும் சினிமா வட்டாரங்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.



 



அன்று மோகன்லால் வில்லனாக அறிமுகமானவர் இன்று விஷாலுக்கு வில்லனாக கேரளா எல்லையை தாண்டியுள்ளார். நல்ல வாய்ப்புகள் அமைந்தால் தமிழ் - தெலுங்கு படவுலகிலும் கவனம் செலுத்த தீர்மானித்துள்ளார் *P.N.சன்னி.



 



 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா