சற்று முன்

நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |    வட இந்திய மாநிலங்களிலும் ரசிகர்களால் கொண்டாடப்படும் தங்கலான்!   |    'கடைசி உலகப்போர்' மாறுபட்ட களத்தில் போரின் கொடுமைகளைப் பேசும் அழுத்தமிகு படைப்பு   |    சம்யுக்தா பிறந்தநாளில் ‘சுயம்பு’ வில் அவரது கேரக்டர் லுக்கை வெளியிட்ட படக்குழு!   |    'கோட்' படத்தை வெளியிட்ட ரோமியோ பிக்சர்ஸ் விரைவில் 'சார்' படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது   |    நடிகர் ராணாவுடன் துல்கர் சல்மான் இணைந்து தயாரிக்கும் 'காந்தா' பட படப்பிடிப்பு தொடங்கியது!   |    'ரகுதாத்தா' ZEE5 இல் 13 செப்டம்பர் 2024 அன்று உலகளவில் டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படுகிறது!   |   

சினிமா செய்திகள்

டிரெண்டிங்கில் முதலிடத்தில் இருக்கும் அமலா பாலின் 'தி டீச்சர்'
Updated on : 26 December 2022

நட்மெக் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் நெட்ப்ளிக்ஸ் எனும் டிஜிட்டல் தளத்தில் வெளியான நடிகை அமலாபால் கதையின் நாயகியாக நடித்திருக்கும் 'தி டீச்சர் ' எனும் திரைப்படம் இணையவாசிகளிடம் பாராட்டை பெற்று ட்ரெண்டிங்கில் முதலிடத்தினை பிடித்திருக்கிறது.



 



இயக்குநர் விவேக் இயக்கத்தில் தயாராகி மலையாளம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு, நெட்ப்ளிக்ஸ் டிஜிட்டல் தளத்தில் டிசம்பர் 23ஆம் தேதியன்று 'தி டீச்சர்' வெளியானது.



 



நடிகர்கள் ஹக்கீம் ஷாஜகான், செம்பன் வினோத், கல்யாணி, மஞ்சு பிள்ளை, நந்து, மாலா பார்வதி, தினேஷ் பிரபாகர், கால்பந்தாட்ட வீரரும், நடிகருமான ஐ. எம். விஜயன், அனுமோல் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். திரில்லர் ஜானரில் தயாராகியிருக்கும் 'தி டீச்சர்' படத்தை நட்மெக் புரொடக்ஷன்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் வருண் திரிபுரனேனி, அபிஷேக் ராமிஷெட்டி, ப்ருத்வி ராஜ் மற்றும் VTK பிலிம்ஸ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.



 



இந்த திரைப்படத்தில் பள்ளிக்கூடம் ஒன்றில் தேவிகா எனும் உடற்கல்வி ஆசிரியராக நடிகை அமலா பால் நடித்திருக்கிறார். பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான இவர், தன்னை துன்புறுத்தியவர்களை தேடி கண்டறிந்து பழி வாங்குவதுதான் இப்படத்தின் திரைக்கதை. அமலா பாலின் அனுபவம் மிகுந்த முதிர்ச்சியான நடிப்பால் இப்படம் பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. திரில்லர் ஜானரில் அமைந்திருப்பதால் இந்த படத்தின் திரைக்கதை, ரசிகர்களிடம் பேசு பொருளாகி இருக்கிறது.



 



இப்படத்தின் கதையை எழுதிய பி. ஜி. ஷாஜி குமார் மற்றும் இயக்குநர் விவேக்,  போதை பொருளை பயன்படுத்தி பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட  உடற்கல்வி ஆசிரியையான தேவிகா எனும் கதாபாத்திரம், தனக்கு ஏற்பட்ட பாதிப்பிற்காக சட்டத்தை தன் கையில் எடுத்துக் கொள்வது போல் திரைக்கதையை அமைத்திருப்பது ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.



 



அமலா பாலின் 'தி டீச்சர்' திரைப்படம், டிஜிட்டல் தள பார்வையாளர்களிடத்தில் மட்டுமல்லாமல், திரையுலக ஆர்வலர்களிடத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, இந்திய அளவில் டிரெண்டிங்கில் முதலிடத்தில் இருக்கிறது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா