சற்று முன்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் திரையுலகில் இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கும் 'நேசிப்பாயா'   |    நடிகர் தனுஷ் வெளியிட்ட 'கிங்ஸ்டன்' திரைப்படத்தின் டீசர்!   |    பொங்கல் பண்டிகைக் கொண்டாட்டமாக ஜனவரி 14 உலகமெங்கும் வெளியாகும் 'தருணம்'   |    ராக்கிங் ஸ்டார் யாஷின் 39 வது பிறந்தநாளை முன்னிட்டு, ரசிகர்களுக்கு அசத்தலான விருந்து!   |    ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் 'கிங்ஸ்டன்' படத்தின் பர்ஸ்ட் லுக்   |    ராக்கிங் ஸ்டார் யாஷ் பிறந்த நாளை முன்னிட்டு அசத்தலான 'டாக்ஸிக்' பட கிளிம்ப்ஸை வெளியிடவுள்ளார்   |    அஜித் சாரால் தான் இந்தப்படம் பொங்கலுக்கு வருகிறது! - 'மெட்ராஸ்காரன்' பட தயாரிப்பாளர் B.ஜெகதீஷ்   |    மேஸ்ட்ரோ யுவன் ஷங்கர் ராஜாவின் அற்புதமான இசையில் 'அகத்தியா' பட முதல் சிங்கிள் பாடல்!   |    படப்பிடிப்பு முடிவடைந்த சசிகுமார் - சிம்ரன் நடிக்கும் ஃபீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னர்!   |    பாடலாசிரியரும் திரைப்பட இயக்குநருமான பா.விஜய் இயக்கியுள்ள 'அகத்தியா' வெளியீடு அறிவிப்பு!   |    வெளிநாடுகளில் புகழ் பெற்ற OTT தளம் ஜனவரி 2025 முதல் இந்தியாவிலும்!   |    நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள “எமகாதகி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!   |    பத்து வயதுப் பெண் குழந்தைக்கு நேர்ந்த கொடுமையை அடிப்படையாகக் கொண்ட 'துணிந்தவன்'   |    அம்பிகா மேடம் பாராட்டியது எனக்கு விருதாக கருதுகிறேன் - 'எல்லாம் நன்மைக்கே' பட இயக்குனர்   |    படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் 'கரவாலி' படத்தின் தனித்துவமான டீசர்   |    புத்தாண்டு தினத்தில் வெளியாகயிருக்கும் 'கேம் சேஞ்சர்' படத்தின் டிரெய்லர்!   |    8 எப்பிசோட்களாக உருவாகும் மிஸ்டரி திரில்லர் இணையத் தொடர் ‘ராகவன் : Instinct'   |    ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் 'ரெட்ரோ' பட சூர்யாவின் தோற்றம்!   |    சத்யராஜ், சேரன் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் 'பயாஸ்கோப்'   |    இயக்குநர் செல்வராகவன் 'இசை அசுரன்' ஜீ.வி. பிரகாஷ் குமார் இணைந்திருக்கும் 'மெண்டல் மனதில்'   |   

சினிமா செய்திகள்

23 வருடங்களுக்கு பிறகு மீண்டும் கைகோர்த்துள்ள இசைஞானியும் மக்கள் நாயகனும்
Updated on : 05 January 2023

எண்பது, தொண்ணூறுகளில் மக்கள் நாயகன் என எளிய மக்களின் முகமாக அறியப்பட்டவர் நடிகர் ராமராஜன்.தொடர்ந்து வெள்ளி விழாப்படங்களை கொடுத்த பெருமை இவருக்கு மட்டுமே உண்டு. இவரது வெற்றியின் பின்னணியில் தூணாக இருந்து அவரது படங்களுக்கு காலத்தால் அழியாத இனிமையான பாடல்களை கொடுத்தவர் இசைஞானி இளையராஜா. 



 



தற்போது இவர்கள் இருவரும் 23 வருடங்களுக்கு பிறகு ‘சாமானியன்’ என்கிற படத்தின் மூலம் மீண்டும் கைகோர்த்துள்ளனர். இப்படி ஒரு அபூர்வ கூட்டணியை மீண்டும் இணைத்து படம் இயக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார் இயக்குநர் R.ராகேஷ். இவர் இதற்கு முன்னதாக தம்பிக்கோட்டை, மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன ஆகிய படங்களை இயக்கியவர்.



 



இந்த படத்தை எட்செட்ரா என்டர்டெய்ன்மென்ட் சார்பில் V.மதியழகன் தயாரித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.



 



இந்தநிலையில்  புத்தாண்டை முன்னிட்டு தயாரிப்பாளர் V.மதியழகன் இயக்குநர் R.ராகேஷ் ஆகியோருடன் சென்று இசைஞானி இளையராஜாவை சந்தித்து தங்களது புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் மக்கள் நாயகன் ராமராஜன். 



 



இந்த சந்திப்பின்போது படப்பிடிப்பு குறித்து பல விவரங்களை இசைஞானி இளையராஜா கேட்டு அறிந்துகொண்டார். இன்னும் நான்கு நாட்கள் படப்பிடிப்பு  மட்டுமே பாக்கி உள்ளது என இயக்குநர் ராகேஷ் கூற, மொத்த படமும்  முடிந்ததுமே தன்னுடைய இசைப்பணிகளை துவங்குவதாக உறுதி அளித்தார் இளையராஜா.



 



இசைஞானி இன்னும் பாடல்கள் கொடுக்காத நிலையிலேயே ஒரு பாடலுக்கான காட்சிகளை படமாக்கிவிட்டு வந்ததாக இயக்குநர் ராகேஷ் கூற ஆச்சரியப்பட்டு போனார் இளையராஜா. அப்போது அவரிடம் இதுவரை எங்களுக்காக ஒரு லட்சம் பாடல்கள் தந்து இருக்கிறீர்கள்.. அதில் ஒரு பாடலை வைத்து கதைக்குப் பொருத்தமான காட்சிகளை படமாக்கி விட்டோம் என்று கூற அவர்களை பாராட்டியுள்ளார் இளையராஜா. 



 



இந்தப்படத்தில் ராமராஜனுடன் முக்கிய வேடங்களில் நடிகர் ராதாரவி, எம்.எஸ் பாஸ்கர் கே.எஸ்.ரவிக்குமார், சரவணன் சுப்பையா, லியோ சிவா, நக்ஷா சரண், ஸ்மிருதி வெங்கட், அபர்ணதி உள்ளிட்ட 25 பிரபல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடிக்கின்றனர்.



 



ஒளிப்பதிவை அருள்செல்வன் மேற்கொள்ள, படத்தொகுப்பை  ராம்கோபி கவனிக்கிறார். சண்டைக்காட்சிகளை மிரட்டல் செல்வா வடிவமைக்கிறார்.



 



விரைவில் இந்தப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு துவங்கி நான்கே நாட்களில் நிறைவடைய இருக்கிறது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா