சற்று முன்
சினிமா செய்திகள்
தமிழ்த் திரை உலகில் அடுத்த சூப்பர் ஸ்டார் யார்? - '90'ஸ் கிட்ஸ் பரிதாபங்கள்'!
Updated on : 11 January 2023

மிக முக்கிய கதாபாத்திரத்தில் சிறப்புத் தோற்றத்தில் இயக்குநர்
கே. பாக்யராஜ் நடிக்கும் "'90'ஸ் கிட்ஸ் பரிதாபங்கள்". 'திட்டிவாசல்' படத்தின் இயக்குநர் மு.பிரதாப் முரளி ,ரிவான் என்னும் புனைபெயரில் இயக்கும் இப்படத்தை N & N சினிமாஸ் சார்பில் கோவை சசிகுமார் தயாரிக்கும் இந்த படத்தில் தமிழ்த் திரை உலகில் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்று பெரிய விவாதம் நடந்து கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் ஒருவர்' BIG ஸ்டார் 'என்கிற பட்டத்தோடு தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு ' 90'ஸ் கிட்ஸ் பரிதாபங்கள்' என்கிற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். அவருடன் பல முன்னணி நடிகர்கள், நடிகைகள் நடிக்கிறார்கள்.
இந்தப் படத்திற்கு ஜெர்மன் விஜய் இசை அமைக்கிறார். பா. விஜய் எழுதிய பாடல் வரிகளுக்கு ஹரிஹரன் ஹரிணி, பாம்பே ஜெயஸ்ரீ , ஜாசி கிப்ட், திப்பு போன்ற முன்னணிக்குரல்களில் பாடல்கள் உருவாகின்றன.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு கோவை நீலகிரி மற்றும் சென்னையில் மிக வேகமாக நடைபெற்று வருகிறது.'90 கிட்ஸ் பரிதாபங்கள் 'படம் சொல்லும் கதை என்ன?படம் எதைப் பற்றிப் பேசுகிறது என்பது விரைவில் தெரியும்.
சமீபத்திய செய்திகள்
விஜய் சேதுபதி, இயக்குநர் M.மணிகண்டன் கூட்டணியில் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் அடுத்த வெப் சீரிஸ்
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், அதன் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் வெப் சீரிஸை அறிவித்துள்ளது. இந்த வெப் சீரிஸில், இந்தியா முழுவதும் புகழ்பெற்ற நடிகர், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முதன்மை பாத்திரத்தில் நடிக்க, தேசியவிருது வென்ற இயக்குநர் M.மணிகண்டன் இயக்குகிறார். இயக்குநர் M.மணிகண்டன் 'காக்கா முட்டை', 'ஆண்டவன் கட்டளை' மற்றும் 'கடைசி விவசாயி' போன்ற விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்ட, சூப்பர்ஹிட் படைப்புகளை தந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கோலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான விஜய் சேதுபதி, தன் தனித்தன்மை வாய்ந்த நடிப்பின் வழியே, இந்தியா முழுவதும் தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கிறார். இந்திய அளவில் புகழ்மிக்க நடிகராக விளங்கும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தமிழில் வெப் சீரிஸில் அவர் நடிப்பது இதுவே முதல் முறை.
நடிகர் விஜய் சேதுபதி மற்றும் இயக்குனர் M.மணிகண்டன் கூட்டணி மீண்டும் இணைவது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பையும் உற்சாகத்தையும் பல மடங்கு எகிற வைத்திருக்கிறது.
இந்த புதிய ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் வெப் சீரிஸின் படப்பிடிப்பு இன்று மதுரை அருகே உசிலம்பட்டியில் எளிமையான பூஜையுடன் இனிதே துவங்கியது.
7C’s Entertainment Pvt Ltd (P ArumugaKumar) தயாரிக்கும் இந்த வெப் சீரிஸிற்கு இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசன் இசையமைக்க, சண்முகசுந்தரம் ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.
B அஜித் குமார் படத்தின் எடிட்டராகவும், இம்மானுவேல் ஜாக்சன் கலை இயக்குநராகவும் பணியாற்றுகிறார்கள். வெப் சீரிஸின் ஒலி வடிவமைப்பை அஜயன் K அடாத் மற்றும் ஆடை வடிவமைப்பை கவிதா கையாள்கின்றனர்.
இந்த வெப் சீரிஸில் பங்குபெறவுள்ள மற்ற நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஒரு முன்னணி ஸ்ட்ரீமிங் ஓடிடி தளமாகும். இது இந்தியாவில் பொழுதுபோக்கு, திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விளையாட்டு மற்றும் வெற்றிகரமாக ஸ்ட்ரீம் செய்யும் மற்ற அனைத்து நிகழ்ச்சிகளையும் வழங்கி, மக்கள் பார்க்கும் விதத்தில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளமானது சுமார் 8 மொழிகளில் 1,00,000 தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் மற்றும் விளையாட்டு தொடர்பான ஸ்லாட்டுகளை உலகம் முழுவதிலிருந்து வழங்கி வருகிறது
சூரி 'பாபா பிளாக் ஷீப்' படக்குழுவினருக்கு வாழ்த்து
ரோமியோ பிக்சர்ஸ் சார்பில், யூடுயூப் புகழ் இயக்குநர் ராஜ்மோகனின் அறிமுக இயக்கத்தில், பள்ளி குழந்தைகளின் வாழ்வை மையப்படுத்தி உருவாகி வரும் திரைப்படம் “பாபா பிளாக் ஷீப்”. தற்கால பள்ளிக்குழந்தைகளின் விளையாட்டுத்தனம், சேட்டைகள், அவர்களின் இன்பங்கள், துன்பங்கள் எல்லாம் இணைந்த ஒரு அழகான திரைக்கதையாக, உணரச்சிகரமான டிராமாவாக “பாபா பிளாக் ஷீப்” உருவாகிறது. அயாஸ், நரேந்திர பிரசாத், அம்மு அபிராமி, RJ விக்னேஷ்காந்த் சுப்பு பஞ்சு உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்தில் நீண்ட இடைவேளைக்கு பிறகு 'விருமாண்டி' அபிராமி நடிக்கின்றார்.
இப்பட குழுவினரை சமீபத்தில் பார்த்த நடிகர் சூரி “பாபா பிளாக் ஷீப்” படக்குழுவினருக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்தார். “பாபா பிளாக் ஷீப்” படக்குழுவினரும் நடிகர் சூரிக்கு 'விடுதலை Part1' வெற்றிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
“பாபா பிளாக் ஷீப்” படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் தற்போது நடந்து வருகிறது. இப்படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
சூர்யா குடும்பத்தினருடன் சென்ற தமிழரின் தொல்லியல் வரலாற்றை பறைசாற்றும் அருங்காட்சியகம்
கீழடியில் தொல்லியல் துறை சார்பில் அகழ்வாய்வு நடைபெற்றது. இதில் சேகரிக்கப்பட்ட தொல்லியல் பொருட்கள் பொதுமக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட அருங்காட்சியகம் ஒன்று உருவாக்கப்பட்டது. உலகதரத்தில் உருவாக்கப்பட்ட இந்த அருங்காட்சியகம் கடந்த மார்ச் மாதம் ஆறாம் தேதி அன்று பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது. ஏப்ரல் ஒன்றாம் தேதியான இன்று முதல் பார்வையாளர்களுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு வசூலிக்கப்படுகிறது.
இந்நிலையில் தமிழர்களின் தொல்லியல் வரலாற்றை பறைசாற்றும் இந்த அருங்காட்சியகத்தை தமிழ் மொழிக்கு இலக்கிய சேவையை இடையறாது செய்து வரும் நடிகர் சிவக்குமார், அவரது மனைவி லட்சுமி சிவக்குமார், நடிகர் சூர்யா, திருமதி ஜோதிகா சூர்யா, அவர்களின் வாரிசுகளான தேவ் மற்றும் தியா ஆகியோர்களும் பார்வையிட்டனர்.
இவர்களுடன் மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினரான சு. வெங்கடேசனும் உடனிருந்தார். இறுதியில் அங்குள்ள பதிவேட்டில் சிவக்குமார் குடும்பத்தினர் தங்களது எண்ணங்களை குறிப்பிட்டனர்.
'டைகர் நாகேஸ்வரராவ்' பட வெளியீட்டு தேதி அறிவிப்பு
'மாஸ் மகாராஜா' ரவி தேஜா- இயக்குநர் வம்சி -தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வால் ஆகியோரின் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான 'டைகர் நாகேஸ்வரராவ்' எனும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இயக்குநர் வம்சி இயக்கத்தில் 'மாஸ் மகாராஜா' ரவி தேஜா நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் 'டைகர் நாகேஸ்வரராவ்'. இந்தத் திரைப்படத்தில் 'மாஸ் மகாராஜா' ரவி தேஜா உடன் பாலிவுட் நடிகைகள் நூபுர் சனோன் மற்றும் காயத்ரி பரத்வாஜ் இணைந்து நடிக்கிறார்கள். ஆர். மதி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசைமைக்கிறார். 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' , 'கார்த்திகேயா 2' ஆகிய பிரம்மாண்டமான வெற்றி படங்களை வழங்கிய அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் எனும் நிறுவனத்தின் சார்பில் பிரபல தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வால் தயாரித்திருக்கிறார். ஸ்ரீகாந்த் விசா வசனம் எழுத, அவினாஷ் கொல்லா தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், மயங்க் சிங்கானியா இணை தயாரிப்பாளராகவும் பணியாற்றுகின்றனர்.
பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படத்திற்காக ஐந்து ஏக்கர் நிலத்தில் ஸ்டுவர்ட்புரம் எனும் கிராமம் பெரும் பட்ஜெட்டில் பிரம்மாண்டமான முறையில் உருவாக்கப்பட்டது. 1970களில் ஸ்டூவர்ட்புரம் எனும் கிராமத்தில் வாழ்ந்த டைகர் நாகேஸ்வரராவ் என்னும் திருடனின் வாழ்க்கை வரலாற்றை தழுவி தயாராகும் இந்த திரைப்படத்தில் டைகர் நாகேஸ்வரராவ் எனும் கதாபாத்திரத்தில் 'மாஸ் மகாராஜா' ரவிதேஜா வித்யாசமான கெட்டப்பில் நடிக்கிறார்.
தற்போது இந்த திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. 'டைகர் நாகேஸ்வரராவ்' எனும் திரைப்படம் நவராத்திரி திருவிழா கொண்டாடும் தருணமான அக்டோபர் 20ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது. இதற்காக வெளியிடப்பட்டிருக்கும் போஸ்டரில் 'மாஸ் மகாராஜா' ரவி தேஜா டைகர் நாகேஸ்வரராவின் கெட்டப்பில் நீராவி ரயில் மீது நின்றிருப்பது ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.
தசரா விடுமுறையின் போது 'மாஸ் மகாராஜா' ரவி தேஜாவின் 'டைகர் நாகேஸ்வரராவ்' திரைப்படம் வெளியாவதால் வசூல் ரீதியாக பெரும் வெற்றியை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
'ஆதி புருஷ்' படக்குழு வெளியிட்டிருக்கும் தெய்வீகமான போஸ்டர்
ஸ்ரீ ராமரின் பிறந்த நாள் ராம நவமி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. நன்மையின் தொடக்கத்தை குறிப்பிடும் இந்நன்னாளில் ராமாயண காவியத்தை தழுவி தயாராகி இருக்கும் 'ஆதி புருஷ்' எனும் திரைப்படத்தின் தெய்வீகம் ததும்பும் புதிய போஸ்டரை அப்பட குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள்.
படக்குழு வெளியிட்டிருக்கும் போஸ்டரில் ஸ்ரீ ராமராக பிரபாஸ், சீதா தேவியாக கிருத்தி சனோன், லக்ஷ்மணனாக சன்னி சிங், அனுமனாக தேவதத்தா நாகே ஆகியோர் தோன்றியிருக்கிறார்கள். தர்மம், தைரியம், தியாகம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஸ்ரீ ராமரின் நல்லொழுக்கத்தையும் மையப்படுத்தி இத்திரைப்படம் உருவாகி இருக்கிறது. இதனை இந்த போஸ்டர் நேர்த்தியான முறையில் பிரதிபலித்திருக்கிறது.
அதர்மத்தை வீழ்த்தி தர்மம் வெல்வதை அடையாளமாக குறிக்கும் இந்த ராமநவமி தினத்தன்று படக் குழுவினர் பிரத்யேக போஸ்டரை வெளியிட்டு, அனைவரின் கவனத்தையும் கவர்ந்திருக்கிறார்கள்.
இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் 'ஆதி புருஷ்'. இதில் பிரபாஸ், கிருத்தி சனோன், சையீப் அலி கான், சன்னி சிங் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். டி சீரிஸ் மற்றும் ரெட்ரோஃபைல்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் பூஷன் குமார், க்ரிஷன் குமார், ஓம் ராவத், பிரசாத் சுதார் மற்றும் ராஜேஷ் நாயர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படம் ஜூன் மாதம் 16ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த திரைப்படம் ஐமேக்ஸ் மற்றும் 3டி தொழில்நுட்பத்திலும், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது.
அஜீத்தின் முதல் படம் டிஜிட்டலில் வெளிவருகிறது!
சோழா கிரியேஷன்ஸ் சார்பில், 1993-ம் ஆண்டு சோழா பொன்னுரங்கம் தயாரித்து, வெளியான படம் "அமராவதி". அஜீத் அரும்பு மீசையுடன் நடித்த இந்த காதல் காவியத்தில், ஜோடியாக சங்கவி நடித்திருந்தார். செல்வா இயக்கியிருந்தார்!
அமராவதி படத்தின் மூலம் அஜீத் குமாரை கதாநாயகனாக திரையுலகிற்கு சோழா பொன்னுரங்கம் அறிமுகப்படுத்தி, 30' ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.
எளிமை, அன்பு, கொடை என அனைத்து நற்குணங்களுக்கும் சொந்தக்காரராக உயர்ந்து நிற்கிறார் அஜீத் குமார். அவருக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் விதமாக, அஜீத் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, வருகின்ற மே மாதம் முதல் தேதி, அஜீத் குமார் பிறந்தநாளில், அவரின் முதல் படமான "அமராவதி" படத்தை டிஜிட்டலில் வெளியிடுகிறோம் என்கிறார் தயாரிப்பாளர் சோழா பொன்னுரங்கம்!
பிரசாத் ஸ்டுடியோவில், இரவு பகலாக நவீன தொழில்நுட்பத்துடன் டிஜிட்டல் ஆக்கப்பட்டு வருகிறது. மேலும் தற்போதைய இசை வடிவில், புதிய பின்னணி இசை அமைக்கப்பட்டு வருகிறது.
அஜீத் ரசிகர்கள் ஆர்ப்பரித்து கொண்டாடும் விதமாக, மே முதல் தேதி, 'பிறந்தநாள் பரிசாக' அமராவதி திரைக்கு வருகிறது என்கிறார் சோழா பொன்னுரங்கம்!
லைகா சார்பில் தமிழ்க்குமரன் அஜித்துக்கு ஆறுதல்
அஜித்தின் தந்தை சமீபத்தில் காலமான நிலையில் அவருக்கு நேரிலும் தொலைபேசிகளிலும் சமூக வலைதளங்களிலும் பலர் இரங்கல் மற்றும் ஆறுதல் தெரிவித்தனர்.
இந்த நிலையில் லைகா நிறுவனத்தின் தமிழ்குமரன் மற்றும் இயக்குனர் மகிழ்திருமேனி ஆகிய இருவரும் அஜித்தை சந்தித்து தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்தபோது தமிழ் குமரன் ரசிகர்கள் எதிர்பார்க்கும் ‘ஏகே 62’ படத்தின் அதிகாரபூர்வமான அறிவிப்பு அடுத்த மாதம் வரும் என தெரிவித்தார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் அஜித் விரைவில் இரண்டாவது கட்ட உலக பைக் சுற்றுப்பயணத்தை இருப்பதாலும் அதனால் ’ஏகே 62’ படத்தின் படப்பிடிப்பை அதற்க்கு முன்பே முடித்து விடுவார் என்றும் கூறப்பட்டது.
ரஜினி, விஜய், அஜித்துக்கு நிகராக அங்கீகாரம் பெற்ற நடிகர் சூரி!
பொதுவாக திரையரங்குகளில் ஒரு படத்தை திரையிடும் போது மால்களில் இருக்கும் திரையரங்குகளில் 55 -45 என்றும் மற்ற திரையரங்குகளில் 55-45 அல்லது 60 -40 என்று படத்திற்கு ஏற்றவாறு தயாரிப்பாளருக்கும், திரையரங்கு உரிமையாளருக்கும் இடையே ஒப்பந்தம் போடப்படும். அதாவது நுழைவுச்சீட்டு விலை ரூ.100 என்று வைத்துக் கொண்டால் அதில் திரையரங்குக்காரர்களுக்கு ரூ.40, தயாரிப்பாளருக்கு ரூ.60 என்பது கணக்கு.
ரஜினி, விஜய், அஜித் போன்ற பெரிய நடிகர்கள் படம் வரும்போது பெருநிறுவன அரங்குகளில் 55 -45 என்றும் மற்ற அரங்குகளில் 70 -30 என்று ஒப்பந்தம் போடுவார்கள். ஆனால் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் கதையின் நாயகனாக சூரி நடித்திருக்கும் ‘விடுதலை’ படத்துக்கும் 70 -30 என்று ஒப்பந்தம் போட்டுள்ளனர்.
மேலும் இந்த படத்தில் விஜய் சேதுபதி வாத்தியார் வேடத்தில் நடித்திருக்கிறார். ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் சார்பில் எல்ரெட்குமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.
திரையரங்குகளைப் பொறுத்தவரை கதாநாயகர்களை மட்டுமே கருத்தில் கொண்டு முடிவு செய்வர். அந்த வகையில் பார்த்தால் ’விடுதலை’ படத்தின் கதைநாயகன் சூரிதான். அப்படித்தான் அனைத்து விளம்பரங்களும் செய்யப்படுகின்றன.
அதனால், சூரி கதைநாயகனாக நடிக்கும் முதல் படத்துக்கே 70 சதவீதம் தயாரிப்பாளருக்குப் பங்கு கொடுக்க திரையரங்குகள் ஒப்புக்கொண்டிருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
தளபதி மற்றும் சூப்பர்ஸ்டாருக்கு பாடல்கள் எழுதிய பாடலாசிரியர் இசையமைப்பாளராகிறார்
தளபதி விஜய் மற்றும் சூப்பர்ஸ்டார் ரஜினி படங்களுக்கு பாடல்கள் எழுதிய பாடலாசிரியர், ஜூலியன் அண்ட் ஜெரோமோ இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் சத்யராஜ், ஸ்ரீபதி நடிக்கும் அங்காரகன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அடியெடுத்து வைக்கிறார்.
உதித் நாராயணன் மற்றும் ஜிவி பிரகாஷ் போன்ற முன்னணி பாடகர்கள் பங்களிப்பை கொடுத்துள்ள இந்த படத்தின் இசை ஆல்பம் வரும் மார்ச் 29ஆம் தேதி ட்ரெண்ட் மியூசிக்கின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழில் 150க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ள பாடலாசிரியர் கு.கார்த்திக் இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தப்படுகிறார்.
சத்யராஜின் கதாபாத்திரத்தை சுற்றிவரும் விதமாக உருவாகியுள்ள இந்த படத்தில் ஸ்ரீபதி, நியா, ரெய்னா காரத் அங்காடித்தெரு மகேஷ் மற்றும் அப்புக்குட்டி ஆகியோர் நடித்துள்ளனர்.
நடிகர் ஸ்ரீபதி, சதீஷ் சரண் இயக்கத்தில், சைமன் கிங் இசையமைப்பில் அசுரன் புகழ் அம்மு அபிராமி மற்றும் கோமல் சர்மா கதாநாயகிகளாக நடித்துள்ள பெண்டுலம் என்கிற படத்திலும் மற்றும் சகு பாண்டியன் இயக்கத்தில் ஜேம்ஸ் வசந்த் இசையமைப்பில் உருவாகியுள்ள என் இனிய தனிமையே என்கிற படத்திலும் கதாநாயகனாக நடித்துள்ளார்.
மலையாள நடிகை நியா மற்றும் மும்பையை சேர்ந்த மாடலான ரெய்னா காரத் இந்த படத்தின் கதாநாயகிகளாக தமிழ் திரைஉலகிற்கு அறிமுகம் ஆகின்றனர். மலையாளத்தில் இயக்குனர் வினயன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான பத்தொன்பதாம் நூற்றாண்டு என்கிற படத்தில் கதாநாயகியாக நியா நடித்திருந்தார் என்பதும் மற்றும் தெலுங்கில் லாயர் விஸ்வநாத் என்கிற படத்தில் நகைச்சுவை நடிகர் அலியுடன் இணைந்து நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ரோஷன், தியா, நேகா ரோஸ், குரு சந்திரன், KCP பிரபாத் , காயத்ரி D ஆகியோர் முக்கிய வேடங்களில் இந்த படத்தில் நடித்திருந்தனர்.
சூது கவ்வும், இன்று நேற்று நாளை மற்றும் மரகத நாணயம் உள்ளிட்ட படங்களுக்கு பிரமிப்பூட்டும் திரைக்கதை எழுதி பாராட்டு பெற்ற கருந்தேள் ராஜேஷ் இந்த படத்தின் வசனங்களை எழுதியுள்ளார்.
படத்தின் தயாரிப்பாளர் ஜோமோன் பிலிப் கூறும்போது, “இந்த படம் ஒரு ஹாரர் த்ரில்லர் படமாக உருவாகி இருந்தாலும் அதேசமயம் பாடல்கள் இந்த படத்தில் ஒரு முக்கிய பங்கு வகிக்கும் என்றும் இந்த படத்திற்கு தேவையான அனைத்து அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன என்றும் கூறியுள்ளதுடன் வரும் சம்மரில் இந்த படம் ரிலீசுக்கு திட்டமிடப்பட்டுள்ளது என்பதியும் உறுதிப்படுத்தியுள்ளார். .
ஸ்டைலிஷான கதாபாத்திரத்தில் நடிக்கும் தெலுங்கு சூப்பர் ஸ்டார்
சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு, திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ், ஹாரிகா & ஹாசினி கிரியேஷன்ஸ் இணையும் SSMB28 திரைப்படம், ஜனவரி 13, 2024 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது !!
தெலுங்கு திரையுலகை அதிர வைத்த, அத்தடு மற்றும் கலேஜா படங்களுக்குப் பிறகு, சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு மற்றும் திரைக்கதை வித்தைக்காரர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் கூட்டணியில் ஹாட்ரிக் பிளாக்பஸ்டராக உருவாகி வருகிறது SSMB28. இந்த முறை, கதையின் களம், மேக்கிங், தொழில்நுட்பம், மகேஷ் பாபுவின் கதாபாத்திரம் என அனைத்துமே முந்தைய இரண்டு படங்களை விட அட்டகாசமாக ரசிகர்கள் கொண்டாடும் வகையில் இருக்கும்.
இப்படத்தில் மகேஷ் பாபு ஒரு ஸ்டைலிஷான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் மேலும் அவர் இந்த படத்திற்காக தன் உடலமைப்பைப் மெருகேற்றி, இதுவரையில் காணாத மகேஷ்பாபுவை ரசிகர்களுக்காக திரையில் கொண்டு வந்துள்ளார். ஆர்வத்துடன் இருக்கும் ரசிகர்களை மகிழ்விக்கும் விதத்தில் தயாரிப்பாளர்கள் இப்படத்தின் வெளியீட்டு தேதியை, மகேஷ் பாபுவின் கதாப்பாத்திர லுக்குடன் கூடிய ஒரு போஸ்டர் மூலம் வெளியிட்டுள்ளனர்.
இந்திய அளவில் மிகவும் எதிர்பார்க்கப்படும், #SSMB28 திரைப்படம் ஜனவரி 13, 2023 அன்று சங்கராந்தி விழாக்கொண்டாட்டமாக திரையரங்குகளில் வெளியாகும். இந்த போஸ்டரில் மகேஷ் பாபு ஸ்டைலான தோற்றம் மற்றும் லேசான தாடியுடன் அழகின் உருவமாக, சிகரெட் புகைத்து கொண்டு சாலையில் நேர்த்தியாக நடந்து செல்கிறார், மேலும் போஸ்டரில் அடியாட்கள் அவரை வணங்குகிறார்கள். இந்த போஸ்டர் பொதுமக்களையும், திரைப்பட ரசிகர்களையும் ஒரு சேர மகிழ்விக்கும் வண்ணம் அமைந்துள்ளது.
டோலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஹாரிகா & ஹாசினி கிரியேஷன்ஸின் சார்பில் எஸ் ராதாகிருஷ்ணா (சீனா பாபு) மிகப்பெரிய பட்ஜெட்டில் இந்த படத்தைத் தயாரிக்கிறார். குடும்ப அம்சங்களுடன் கூடிய ஆக்ஷன் கலந்த இந்த என்டர்டெய்னரில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார்.
மகேஷ் பாபுவை இதுவரை பார்த்திராத கேரக்டரில் காண்பிக்க, இயக்குநர் திரிவிக்ரம் தனித்தன்மையுடன் கூடியதொரு கதாபாத்திரத்தை உருவாக்கியுள்ளார். முன்னணி நட்சத்திரங்கள் சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் குழு இப்படத்தில் பணியாற்றி வருகிறார்கள்.
#SSMB28 படத்தை தேசிய விருது பெற்ற தொழில்நுட்ப வல்லுநர் நவின் நூலி எடிட்டிங் செய்கிறார், கலை இயக்குநராக AS பிரகாஷ், இசையமைப்பாளராக தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் S தமன் மற்றும் ஒளிப்பதிவாளராக PS வினோத் ஆகியோர் பணியாற்றுகின்றனர்
- உலக செய்திகள்
- |
- சினிமா