சற்று முன்

விஜய் சேதுபதி, இயக்குநர் M.மணிகண்டன் கூட்டணியில் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் அடுத்த வெப் சீரிஸ்   |    சூரி 'பாபா பிளாக்‌ ஷீப்' படக்குழுவினருக்கு வாழ்த்து   |    சூர்யா குடும்பத்தினருடன் சென்ற தமிழரின் தொல்லியல் வரலாற்றை பறைசாற்றும் அருங்காட்சியகம்   |    'டைகர் நாகேஸ்வரராவ்' பட வெளியீட்டு தேதி அறிவிப்பு   |    'ஆதி புருஷ்' படக்குழு வெளியிட்டிருக்கும் தெய்வீகமான போஸ்டர்   |    அஜீத்தின் முதல் படம் டிஜிட்டலில் வெளிவருகிறது!   |    லைகா சார்பில் தமிழ்க்குமரன் அஜித்துக்கு ஆறுதல்   |    ரஜினி, விஜய், அஜித்துக்கு நிகராக அங்கீகாரம் பெற்ற நடிகர் சூரி!   |    தளபதி மற்றும் சூப்பர்ஸ்டாருக்கு பாடல்கள் எழுதிய பாடலாசிரியர் இசையமைப்பாளராகிறார்   |    ஸ்டைலிஷான கதாபாத்திரத்தில் நடிக்கும் தெலுங்கு சூப்பர் ஸ்டார்   |    1970களில் பெங்களூரில் நடந்த உண்மைச் சம்பவ கதையில் பிரபல நடிகை  ஷில்பா ஷெட்டி   |    வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவன பங்குகள் விற்பனை   |    ’பொன்னியின் செல்வன் - 2 'ல் கார்த்தி, திரிஷா இடம் பெறும் காதல் பாடல் வெளியானது   |    இந்தியில் வெளியாகும் நடிகர் சூர்யா நடித்த படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டது   |    தெலுங்கின் முன்னணி நட்சத்திர நடிகர் கார்த்திகேயாவுடன் ஜோடி சேரும் ஐஸ்வர்யா மேனன்   |    விருமாண்டி புகழ் நடிகை அபிராமி.நீண்ட நாளைக்கு பிறகு நடிக்கும் 'பாபா பிளாக்‌ ஷீப்'   |    பிரபலங்கள் பாராட்டும் 'D3' திரைப்படம்   |    நீண்ட இடைவேளைக்குப் பிறகு, மீண்டும் இணைந்து கலக்கப்போகும் பிரபல நடிகைகள் !   |    ஆஸ்கார் விருது பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் - பெருமகிழ்ச்சியில் 'குளோபல் ஸ்டார்' ராம் சரண்   |    ’தி லிட்டில் மெர்மெய்ட்’ மே 26, 2023 அன்று திரையரங்குகளில் !   |   

சினிமா செய்திகள்

பிரபல ஸ்ட்ரீமிங் தளம் அறிவித்துள்ள அடுத்த தொடரின் அறிவிப்பு
Updated on : 18 January 2023

பல அற்புதமான வெற்றிகளை சென்ற வருடம் கொடுத்த ZEE5 தமிழில் தங்களது அடுத்த படைப்பாக " அயலி " என்ற தொடரினை அறிவித்துள்ளது, இது எட்டு தொடர்களாக வெளியாக உள்ளது. இதில் அபி நட்சத்திரா , அனுமோல், அருவி மாதவன் , லிங்கா மற்றும் சிங்கம்புலி மற்றும் பலர் நடித்துள்ள ஐந்தே தொடரை Estrella stories சார்பில் தயாரிப்பாளர் S. குஷ்மாவதி தயாரிக்க, இயக்குநர் முத்துக்குமார் இயக்கியுள்ளார். 



 



மருத்துவராக வேண்டும் என்ற கனவுடன் இருக்கும், 8 ஆம் வகுப்பு படிக்கும் தமிழ் செல்வி என்ற இளம் பெண்ணைப் பற்றிய கதை தான் அயலி. அதோடு, வீரப்பண்ணை கிராமத்தில் தற்போதுள்ள பழக்கவழக்கங்கள், பருவமடைந்தவுடன் பெண்களை திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்ற  நடைமுறைகளை பற்றி இந்த கதை பேசுகிறது. இந்த பாரம்பரியத்தை கடைபிடிக்காவிட்டால், அயலி தேவி கோபமடைந்து கிராம மக்களை சபிப்பாள் என்பது இந்த கிராமத்து மக்களின் நம்பிக்கை. பழங்கால நம்பிக்கைகள் மற்றும் பழக்கவழக்கங்களை உடைத்து, இளம் பெண் மருத்துவராக வேண்டும் என்ற தனது இலக்கை அடைய அனைத்து முரண்பாடுகளுக்கு எதிராகவும் போராடுகிறாள். இருப்பினும், வீரப்பண்ணை கிராமத்தில் உள்ள மற்ற சிறுமிகளுக்கு வழி காட்டக்கூடிய மாற்றத்தை கொண்டு வருவதில் அவள் வெற்றி பெறுவாளா?



 



இளைஞர்களின் மனக்கசப்பு, புத்திசாலித்தனம் மற்றும் சுதந்திரமான விருப்பத்தை எடுத்துக்காட்டும் ஒரு புதிய வயதுக் கதை தான் அயலி. பழங்கால பழக்க வழக்கங்களையும் சடங்குகளையும் உடைத்து,  தனது தேடலை அடைய போராடும் தமிழ்ச் செல்வியின் பயணத்தை  இந்த கதை கூறுகிறது. பேப்பர் ராக்கெட்டின் இயக்குனர் கிருத்திகா உதயநிதி, இந்த தொடரை பார்வையாளர்களுக்கு பெருமையுடன் அறிவித்தார். முக்கிய நடிகர்களுடன் கூடுதலாக, லட்சுமி பிரியா, ஸ்ம்ருதி வெங்கட் மற்றும் பகவதி பெருமாள் ஆகியோரின் சிறப்பு தோற்றத்திலும் இந்த அயலி உருவாகி உள்ளது. நட்சத்திர நடிகர்கள், சமூக செய்தி மற்றும் பொழுதுபோக்கு கதைக்களத்துடன், அயலி ஜனவரி 26 அன்று ZEE5 இல் திரையிடப்பட உள்ளது.



 



ZEE5, இந்தியாவின் தலைமை வணிக அதிகாரி மணீஷ் கல்ரா கூறுகையில், “கடந்த ஆண்டு விலங்கு, ஃபிங்கர் டிப் மற்றும் பேப்பர் ராக்கெட் போன்ற தமிழ் ஒரிஜினல்களுக்கு கிடைத்த அபரிதமான வரவேற்பிற்கு பிறகு, மற்றொரு பொழுதுபோக்கு மற்றும் வழக்கத்திற்கு மாறான தொடரான 'அயலி'யை  நாங்கள் வெளியிட உள்ளோம்.  சமூகச் செய்தியுடன் கூடிய பொழுதுபோக்கு உள்ளடக்கங்கள் எப்பொழுதும் பார்வையாளர்களை ஊக்குவிக்கும், கல்வியறிவு அளிக்கும், அறிவூட்டும், மற்றும் ஆதிக்கம் செலுத்தும் சக்தியைக் கொண்டுள்ளது என்பதை  ZEE5 இல் உள்ள அனைவரும் நம்புகிறோம், அயலி அப்படிபட்ட கதை தான். பழங்கால பழக்க வழக்கங்களையும் நம்பிக்கைகளையும் உடைத்து மருத்துவராக வேண்டும் என்ற தனது கனவைத் துரத்தும் ஒரு  இளம் பெண்ணின் கதை இது. இந்த கதை பல பெண்களை தங்கள் கனவுகளை நம்புவதற்கும் அதன் பின்னால் செல்வதற்கும் தூண்டும். நன்றி "



 



இயக்குனர் முத்துக்குமார் பேசுகையில், “இன்று ஸ்ட்ரீமிங் தளங்கள் வெகுஜனங்களின் பார்வையை மாற்றும் கதைகளை வெற்றிகரமாக வழங்குகின்றன, மேலும் அந்த மாற்றத்தை  பிரச்சாரம் போல் இல்லாமல் மக்களுக்கு கொடுக்க நாங்கள் எடுத்து இருக்கும் ஒரு உண்மையான முயற்சி தான் அயலி . இந்தத் தொடர் பெண்களின் கல்வி, அதிகாரம் மற்றும் கனவுகளை அடைய அனைத்து முரண்பாடுகளுக்கு எதிராகவும் போராடும் வலிமையை கூறும் ஒரு கதையாக இருக்கும். இந்த அதிக மணி நேர கதையை சொல்வதற்காக எங்களுக்கு ஒரு தளத்தை கொடுத்த ZEE5-க்கு எங்களது நன்றியை கூறி கொள்கிறோம்."



 



"அயலி " தொடர் ZEE5 இல் ஜனவரி 26 முதல் ஒளிபரப்பாக இருக்கிறது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா