சற்று முன்

விஜய் சேதுபதி, இயக்குநர் M.மணிகண்டன் கூட்டணியில் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் அடுத்த வெப் சீரிஸ்   |    சூரி 'பாபா பிளாக்‌ ஷீப்' படக்குழுவினருக்கு வாழ்த்து   |    சூர்யா குடும்பத்தினருடன் சென்ற தமிழரின் தொல்லியல் வரலாற்றை பறைசாற்றும் அருங்காட்சியகம்   |    'டைகர் நாகேஸ்வரராவ்' பட வெளியீட்டு தேதி அறிவிப்பு   |    'ஆதி புருஷ்' படக்குழு வெளியிட்டிருக்கும் தெய்வீகமான போஸ்டர்   |    அஜீத்தின் முதல் படம் டிஜிட்டலில் வெளிவருகிறது!   |    லைகா சார்பில் தமிழ்க்குமரன் அஜித்துக்கு ஆறுதல்   |    ரஜினி, விஜய், அஜித்துக்கு நிகராக அங்கீகாரம் பெற்ற நடிகர் சூரி!   |    தளபதி மற்றும் சூப்பர்ஸ்டாருக்கு பாடல்கள் எழுதிய பாடலாசிரியர் இசையமைப்பாளராகிறார்   |    ஸ்டைலிஷான கதாபாத்திரத்தில் நடிக்கும் தெலுங்கு சூப்பர் ஸ்டார்   |    1970களில் பெங்களூரில் நடந்த உண்மைச் சம்பவ கதையில் பிரபல நடிகை  ஷில்பா ஷெட்டி   |    வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவன பங்குகள் விற்பனை   |    ’பொன்னியின் செல்வன் - 2 'ல் கார்த்தி, திரிஷா இடம் பெறும் காதல் பாடல் வெளியானது   |    இந்தியில் வெளியாகும் நடிகர் சூர்யா நடித்த படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டது   |    தெலுங்கின் முன்னணி நட்சத்திர நடிகர் கார்த்திகேயாவுடன் ஜோடி சேரும் ஐஸ்வர்யா மேனன்   |    விருமாண்டி புகழ் நடிகை அபிராமி.நீண்ட நாளைக்கு பிறகு நடிக்கும் 'பாபா பிளாக்‌ ஷீப்'   |    பிரபலங்கள் பாராட்டும் 'D3' திரைப்படம்   |    நீண்ட இடைவேளைக்குப் பிறகு, மீண்டும் இணைந்து கலக்கப்போகும் பிரபல நடிகைகள் !   |    ஆஸ்கார் விருது பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் - பெருமகிழ்ச்சியில் 'குளோபல் ஸ்டார்' ராம் சரண்   |    ’தி லிட்டில் மெர்மெய்ட்’ மே 26, 2023 அன்று திரையரங்குகளில் !   |   

சினிமா செய்திகள்

Disney Hotstar வெளியிட்ட பிரபல நடிகையின் திருமண விழாக்கால கொண்டாட்டத்தின் பர்ஸ்ட் லுக்
Updated on : 18 January 2023

சென்னை, ஜனவரி 18, 2023: இந்திய சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவரான ஹன்சிகா மோத்வானி, கடந்த ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி ஜெய்ப்பூரில் உள்ள முண்டோடா கோட்டை மற்றும் அரண்மனையில், தனது நீண்ட கால நண்பரான சோஹேல் கதுரியாவை திருமணம் செய்தார் என்ற செய்தி வெளியான போது பல இதயங்கள் உடைந்து போனது. ஹன்சிகா மற்றும் சோஹேல் கதுரியாவின் திருமணம் நாடு முழுவதும் தலைப்புச் செய்திகளாக அறியப்பட்டது.



 



இப்போது, முதன்முறையாக, விழாகோலமாக இருந்த அந்த நாளில் நடைபெற்ற கொண்டாட்டங்கள், நிகழ்வுகள் மற்றும் கோலாகலமாக அரங்கேறிய நிகழ்வுக்கு பின்னால் நடந்த உற்சாக சம்பவங்களை டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ரசிகர்களுக்கு கொண்டு வருகிறார்கள்.



 



ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் ஷோ-வான 'ஹன்சிகாவின் லவ் ஷாதி டிராமா' ஷோ, நடிகை  ஹன்சிகா, சோஹேலுடன் தனது திருமண வாழ்க்கையை தொடர போவதற்கான முடிவை எடுத்த தருணத்தில் இருந்து, வெறும் ஆறு வாரங்களில் இப்படி ஒரு தேவதை திருமணத்தை நேரத்தை வென்று குடும்பமாக சேர்ந்து எப்படி நடத்தினார்கள் என்பது வரை, திருமண திட்டமிடுபவர்கள் தொடங்கி, வடிவமைப்பாளர்கள் மற்றும் குடும்பங்கள் வரை கூறும் அற்புதமான கதைகள் அடங்கிய ஒரு ஷோ-வாக இருக்கும்.



 



அதோடு, ஹன்சிகாவும் அவரது குடும்பத்தினரும் ஹன்சிகாவின் திருமணத்தை சுற்றி நடந்த அசௌகரியமான பிரச்சனையை பற்றியும் கூறுகிறார்கள். இது அவரது கனவு நாளை தடம் புரள செய்யும் அளவிற்கு எவ்வாறு அச்சுறுத்தியது என்றும் விளக்குகிறார்கள்.



 



டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மற்றும் ஹன்சிகா இணைந்து ஹாட்ஸ்டார் சிறப்பு நிகழ்ச்சியின் முதல் தோற்றத்தை வெளியிட்டுள்ளனர், வெளியீட்டு தேதி மிக விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.



 



டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஒரு முன்னணி ஸ்ட்ரீமிங்  ஓடிடி தளமாகும். இது இந்தியாவில்  பொழுதுபோக்கு, திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விளையாட்டு மற்றும் வெற்றிகரமாக ஸ்ட்ரீம் செய்யும் மற்ற அனைத்து நிகழ்ச்சிகளையும் வழங்கி, மக்கள் பார்க்கும் விதத்தில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.  டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளமானது சுமார் 8 மொழிகளில் 1,00,000 தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் மற்றும் விளையாட்டு தொடர்பான ஸ்லாட்டுகளை உலகம் முழுவதிலிருந்து வழங்கி வருகிறது



 





 



 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா