சற்று முன்

விஜய் சேதுபதி, இயக்குநர் M.மணிகண்டன் கூட்டணியில் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் அடுத்த வெப் சீரிஸ்   |    சூரி 'பாபா பிளாக்‌ ஷீப்' படக்குழுவினருக்கு வாழ்த்து   |    சூர்யா குடும்பத்தினருடன் சென்ற தமிழரின் தொல்லியல் வரலாற்றை பறைசாற்றும் அருங்காட்சியகம்   |    'டைகர் நாகேஸ்வரராவ்' பட வெளியீட்டு தேதி அறிவிப்பு   |    'ஆதி புருஷ்' படக்குழு வெளியிட்டிருக்கும் தெய்வீகமான போஸ்டர்   |    அஜீத்தின் முதல் படம் டிஜிட்டலில் வெளிவருகிறது!   |    லைகா சார்பில் தமிழ்க்குமரன் அஜித்துக்கு ஆறுதல்   |    ரஜினி, விஜய், அஜித்துக்கு நிகராக அங்கீகாரம் பெற்ற நடிகர் சூரி!   |    தளபதி மற்றும் சூப்பர்ஸ்டாருக்கு பாடல்கள் எழுதிய பாடலாசிரியர் இசையமைப்பாளராகிறார்   |    ஸ்டைலிஷான கதாபாத்திரத்தில் நடிக்கும் தெலுங்கு சூப்பர் ஸ்டார்   |    1970களில் பெங்களூரில் நடந்த உண்மைச் சம்பவ கதையில் பிரபல நடிகை  ஷில்பா ஷெட்டி   |    வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவன பங்குகள் விற்பனை   |    ’பொன்னியின் செல்வன் - 2 'ல் கார்த்தி, திரிஷா இடம் பெறும் காதல் பாடல் வெளியானது   |    இந்தியில் வெளியாகும் நடிகர் சூர்யா நடித்த படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டது   |    தெலுங்கின் முன்னணி நட்சத்திர நடிகர் கார்த்திகேயாவுடன் ஜோடி சேரும் ஐஸ்வர்யா மேனன்   |    விருமாண்டி புகழ் நடிகை அபிராமி.நீண்ட நாளைக்கு பிறகு நடிக்கும் 'பாபா பிளாக்‌ ஷீப்'   |    பிரபலங்கள் பாராட்டும் 'D3' திரைப்படம்   |    நீண்ட இடைவேளைக்குப் பிறகு, மீண்டும் இணைந்து கலக்கப்போகும் பிரபல நடிகைகள் !   |    ஆஸ்கார் விருது பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் - பெருமகிழ்ச்சியில் 'குளோபல் ஸ்டார்' ராம் சரண்   |    ’தி லிட்டில் மெர்மெய்ட்’ மே 26, 2023 அன்று திரையரங்குகளில் !   |   

சினிமா செய்திகள்

கவுண்டமணி கதாநாயகனாக நடிக்கும் புதிய படம்
Updated on : 20 January 2023

அன்றைக்கும் இன்றைக்கும் என்றைக்கும் ரசிகர்கள் மனதில் தனி சிம்மாசனமிட்டு இருப்பவர் காமெடி கிங் கவுண்டமணி. சமூக அக்கறைகொண்ட விஷயங்களைகூட போகிற போக்கில் தனது வசனத்தால், உடல்மொழியால் விதைத்து செல்லும் வித்தை கவுண்டமணிக்கு கைவந்த கலை. தமிழக மக்களின் நகைச்சுவை விருந்தாகவும் மருந்தாகவும் எப்போதும் தனது பங்களிப்பை செய்துவரும் கவுண்டமணி நகைச்சுவை அரசன்  இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். அவருடன் யோகி பாபு, கஞ்சா கருப்பு இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். மேலும் ராதாரவி, சித்ரா லட்சுமணன், T.சிவா, மனோபாலா, J.S.K. சதீஷ் குமார்,நந்தகோபால்,  R.K. சுரேஷ்,மதுரை  டாக்டர் சரவணன்,  மங்கை அரிராஜன், திருச்சி சுரேந்தர், சாந்தகுமார்,  ஆகிய 11 தயாரிப்பாளர்களும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவிருக்கிறார்கள். யோகா டீச்சராக சஞ்சனா சிங் நடிக்கிறார். மற்ற நடிகை நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.  wide angle   ரவிசங்கர் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். கவிப்பேரரசு வைரமுத்து வரிகளுக்கு தனித்த இசை, மனதில் நிற்கும் பாடல்களை தந்த இசையமைப்பாளர் K  இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இவர் ஏற்கனவே கவுண்டமணி நடித்த 49 ஓ படத்திற்கு இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அ.நாகராஜ் எடிட்டிங் செய்ய , கலை இயக்குனராக ராஜா பணியாற்றுகிறார். கதை, திரைக்கதை, வசனம்  எழுதி இயக்குகிறார் - திரைப்பட கல்லூரி மாணவரான செல்வ அன்பரசன். இந்த படத்தின் பூஜை இன்று இனிதே நடைபெற்றது. படப்பிடிப்பு அடுத்த  மாதம் துவங்கவிருக்கிறது. இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதற்காக பிரபல கதாநாயகன் ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா