சற்று முன்

பாரதப்பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கும் உண்ணி முகுந்தன்   |    'கண்மணி அன்னதான விருந்து' நடிகர் லாரன்ஸின் புதிய தொடக்கம்!   |    'கிஸ்' என்ற டைட்டில் முதலில் மிஷ்கின் சாரிடம் தான் இருந்தது! - இயக்குநர் சதீஷ்   |    அமெரிக்காவில் மட்டும் $2 மில்லியன் வசூல் செய்து 'மிராய்' சாதனை!   |    அக்டோபர் 10 ஆம் தேதி முதல் ZEE5 இன் அடுத்த அதிரடி தமிழ் வெப் சீரிஸ் 'வேடுவன்'   |    தர்ஷன் மற்றும் அலிஷா மிரானி நடிப்பில் ரோம்-காம் படமான 'காட்ஸ் ஜில்லா' பூஜையுடன் தொடங்கியது   |    இயக்குநர் மணி ரத்னத்திடம் பாராட்டு பெற்று மேலும் வலு பெற்ற '18 மைல்ஸ்'!   |    சான்யாவின் விடாமுயற்சி, திறமை, ஆர்வம், அர்ப்பணிப்புக்கான அங்கீகாரம் SIIMA விருது!   |    நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தின் புதிய தொடரான 'Unaccustomed Earth'-ல் நடிக்கும் நடிகர் சித்தார்த்!   |    இதுவரை பார்வையாளர்கள் கண்டிராத புதுமையான கதையுடன் வெளியாகிறது 'விருஷபா'   |    இட்லி கடை தான் ஹீரோ. அதனால் தான் இந்த டைட்டில் - நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் தனுஷ்   |    யானைக்கும், சிறுவனுக்கும் இடையேயான காதல் கதை 'கும்கி 2'   |    தீபாவளிக்கு வெளியாகும் 'கார்மேனி செல்வம்'   |    'தணல்' படத்தில் அஸ்வினின் வில்லன் கதாபாத்திரம் நிச்சயம் ஆச்சரியமாக இருக்கும்!   |    முதல்முறையாக சரீரத்தை தியாகம் செய்யும் காதலர்களின் கதையை சொல்லும் படம் 'சரீரம்'   |    அர்ஜுன் தாஸ் நடிக்கும் படங்கள் என்றாலே, தரமான படமாக இருக்கும்!   |    ‘தி பாரடைஸ்’ மூலம் மறுபடியும் சினிமாப் பெருவிழாவை ரசிகர்களுக்கு வழங்கவிருக்கும் ஸ்ரீகாந்த்    |    அறிமுக நடிகை விருதை வென்று அசத்திய, நடிகை பாக்யஸ்ரீ போஸ் !!   |    'தி பாரடைஸ்' படத்தில் நேச்சுரல் ஸ்டார் நானியின் புதிய பீஸ்ட் மோட் தோற்றம் வெளியாகியுள்ளது!!   |    பிக் பாஸ் விக்ரமன் - சுப்ரிதா நடிக்கும் புதிய படம்   |   

சினிமா செய்திகள்

ஆறு வருடங்களுக்குப் பிறகு அதிரடி ஆக்சனோடு களம் இறங்கும் ராக்கிங் ஸ்டார் !
Updated on : 21 January 2023

6ix Cinemas தயாரிப்பில் அறிமுக இயக்குனர் வருண் கதை திரைக்கதையில் உருவாகும், படம் "வாட் தி ஃபிஷ்". இதில் ஆறு வருடங்களுக்குப் பிறகு, திரை ரசிகர்களை உற்சாகம் கொள்ள வைக்கும்படி அதிரடி  ஆக்சனோடு களம் இறங்குகிறார் தெலுங்கு திரையுலகின் முன்னணி இளம் நாயகன் ராக்கிங் ஸ்டார் மனோஜ்குமார் மஞ்சு. 



 



உலகத்தரத்தில்  அமைந்துள்ள இப்படத்தின் அறிவிப்பு போஸ்டர் ரசிகர்களிடம்  அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் போஸ்டர் படத்தின் மையத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. தெரியாத பல அமானுஷ்யங்களை  மனோஜ்குமார் மஞ்சு எதிர்கொள்ளத் தயாராகி வருவதாகத் தெரிகிறது. போஸ்டரில் இருக்கும் பல வகை சித்திரங்கள் நமக்குள் பெரும் ஆவலைத் தூண்டுவதாக அமைந்துள்ளது.  மனோஜின்  இந்த புதிய அவதாரம் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்.



 



ரசிகர்களுக்கு புதிய உலகைக் காட்டப்போகும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு கனடா மற்றும் டொரோண்டோ நகரங்களில் 75 நாட்கள் நடக்கவுள்ளது. படத்தில் உலகளாவிய முன்னணி நடிகர்களும் கலைஞர்களும் பங்குகொள்ளவுள்ளனர். அவர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். 



 



அனைவரும் ரசிக்கும் வண்ணம் உலகின் பல மொழிகளில் இப்படம் தயாராகிறது. ஒரு அதிசய உலகத்தை உங்கள் கண்முன் காட்டும் திரை அனுபவமாக இப்படம் இருக்கும். 



 



“வாட் த ஃபிஷ்” திரைப்படம் இதுவரை இல்லாத வகையில் உலகளாவிய படமாக மிகப்பெரும் பட்ஜெட்டில் உலகத்தரமான தொழில்நுட்பத்துடன் உருவாகிறது. இந்தப் படத்தின் பெயரே படம் பார்க்கும் ஆர்வத்தை தூண்டுவதாக அமைந்துள்ளது. 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா