சற்று முன்

நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |    வட இந்திய மாநிலங்களிலும் ரசிகர்களால் கொண்டாடப்படும் தங்கலான்!   |    'கடைசி உலகப்போர்' மாறுபட்ட களத்தில் போரின் கொடுமைகளைப் பேசும் அழுத்தமிகு படைப்பு   |    சம்யுக்தா பிறந்தநாளில் ‘சுயம்பு’ வில் அவரது கேரக்டர் லுக்கை வெளியிட்ட படக்குழு!   |    'கோட்' படத்தை வெளியிட்ட ரோமியோ பிக்சர்ஸ் விரைவில் 'சார்' படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது   |    நடிகர் ராணாவுடன் துல்கர் சல்மான் இணைந்து தயாரிக்கும் 'காந்தா' பட படப்பிடிப்பு தொடங்கியது!   |    'ரகுதாத்தா' ZEE5 இல் 13 செப்டம்பர் 2024 அன்று உலகளவில் டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படுகிறது!   |   

சினிமா செய்திகள்

ஒரு மனிதனின் அதிர்ஷ்டத்தைப் பற்றி பேசும் யோகிபாபுவின் 'லக்கி மேன்'
Updated on : 06 February 2023

கதையின் நாயகனாக யோகிபாபு தேர்ந்தெடுத்து நடித்து வரும் கதைகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அந்த வரிசையில், பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் யோகிபாபு நடித்துள்ள புதிய படத்திற்கு 'லக்கி மேன்' எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. 'லக்கி மேன்' திரைப்படம் உண்மையான அதிர்ஷ்டம் என்றால் என்ன என்பதைக் கண்டறியும் ஒரு மனிதனின் அதிர்ஷ்டத்தைப் பற்றி பேசுகிறது. அதிர்ஷ்டம் என்றால் என்ன, எந்த அளவிற்கு அது ஒருவனின் வாழ்க்கையில் வந்து சேர்கிறது என்பதையும் படத்தில் காட்டி இருக்கிறார்கள். சில சமயங்களில் நாம் விரும்புவது கிடைக்காமல் போவதும் ஒரு அற்புதமான அதிர்ஷ்டம். எனவே,  யோகிபாபு உண்மையில் ஒரு 'லக்கி மேன்' தானா என்பதை அறிய அவரது இந்த ஃபீல் குட் பயணத்தில் இணையுங்கள். 



 



ஃபீல் குட் காமெடி திரைப்படமான இதன் படப்பிடிப்பு முழுவதும் சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றது. இங்குள்ள குறைவாக பேசப்படும் மக்களை பற்றியும் படம் பேசுகிறது. இதுவே படத்தின் அடிப்படை. படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், போஸ்ட் புரொடக்சன் பணிகள் தற்போது முழுவீச்சில் நடந்து வருகிறது. 



 



யோகிபாபு கதையின் நாயகனாக நடிக்க வீரா, ரேச்சல் ரெபேக்கா, அப்துல் லீ, ஆர்.எஸ். சிவாஜி, அமித் பார்கவ், சாத்விக் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 



 



 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா