சற்று முன்

'சோஷியல் மெசேஜுடன் கிரைம் திரில்லர்: 'சென்னை ஃபைல்ஸ் – முதல் பக்கம்'   |    உதயா, அஜ்மல், யோகி பாபு முதன்மையான வேடங்களில் நடிக்கும் 'அக்யூஸ்ட்'   |    ரஞ்சித் கண்ணா இயக்கத்தில் ரேக்ளா பந்தயத்தின் பின்னணியில் உருவாகும் படம் 'சோழநாட்டான்'   |    'ச்சீ ப்பா தூ...' வீடியோ பாடலை பாராட்டிய திரு. கமல்ஹாசன்!   |    இன்றைய தலைமுறை ரசிக்கும் வகையிலான இசையில் அசத்தும் 'ச்சீ ப்பா தூ...' பாடல்!   |    அக்டோபர் 4 அன்று ஹாரிஸ் ஜெயராஜ் கலந்துகொள்ளும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி!   |    ஆகஸ்ட் 16 அன்று பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள துடிப்பான‌ இசை நிகழ்ச்சி!   |    நடிகர்கள் ரவி மோகன் - ஜீ.வி. பிரகாஷ் குமார் ஆகியோர் இணைந்து வெளியிட்ட 'காளிதாஸ் 2' பட டீசர்!   |    எம் எஸ் பாஸ்கர் மற்றும் ஃப்ராங்க்ஸ்டர் ராகுல் முதன்மையான வேடங்களில் நடிக்கும் புதிய படம்!   |    ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ள 'தி கேர்ள்ஃபிரண்ட்' படத்தின் முதல் பாடல்!   |    டாக்டர் ஐசரி K. கணேஷ் தயாரிப்பில் சீயான் விக்ரம் நடிக்கும் புதிய படம்!   |    கவின் - பிரியங்கா மோகன் இணைந்து நடிக்கும் ஃபேண்டஸி ரொமான்டிக் காமெடி படம்   |    புதுமையான களத்தில், புதுமுகங்களின் முயற்சியில் 'மனிதர்கள்' ஒடிடி தளங்களில் ஸ்ட்ரீமாகிறது!   |    வித்தியாசமான கதைக்களத்துடன் புதிதாகக் கால் பதிக்கும், 'PRK ப்ரோடுக்ஷன்ஸ்' தயாரிப்பு நிறுவனம்!   |    விஜய் சாருக்கு நான் வெற்றி கொடுத்ததாக நினைக்கவில்லை - இயக்குநர் பேரரசு   |    போதை பொருளை கையில் எடுத்து தமிழ் படம் கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க - ஆர் வி உதயகுமார்   |    ஊர்வசி மற்றும் ஜோஜு ஜார்ஜ் இணையும் புதிய பன்மொழி திரைப்படம் 'ஆஷா'   |    'மாரீசன்' படத்துக்காக மீண்டும் இணைந்துள்ள வடிவேலு - பகத் பாசில்!   |    கவின் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம்!   |    மிரட்டும் வகையில் வெளியாகியுள்ள ‘பெத்தி’ பட ஃபர்ஸ்ட் லுக்!   |   

சினிமா செய்திகள்

நேச்சுரல் ஸ்டார் நானியுடன் இணைந்து ரசிகர்களுக்கு ஆனந்த அதிர்ச்சி தந்த சந்தோஷ் நாராயணன்!
Updated on : 16 February 2023

ரீ லக்‌ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்  சுதாகர் செருகுரி தயாரிப்பில், இயக்குநர் ஶ்ரீகாந்த் ஒதெலா இயக்கத்தில், நேச்சுரல் ஸ்டார் நானி, கீர்த்தி சுரேஷ் நடிப்பில், மிகவும் எதிர்பார்க்கப்படும்  பான் இந்தியத்  திரைப்படமாக உருவாகிவருகிறது “தசரா” இப்படத்தின் ஒவ்வொரு அறிவிப்பும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து வரும் நிலையில், தற்போது படத்தின் இரண்டாவது சிங்கிள் தீக்காரி பாடல் வெளியாகியுள்ளது. மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இப்பாடலை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 



 



தசரா படத்தின் இரண்டாவது சிங்கிளான தீக்காரி தூரம் ஆக்குறியாடி பாடல் ஒரு மென்சோக காதல் பாடலாக மனதை மயக்குகிறது. நாயகனின் காதல் வலியைச் சொல்லும் இப்பாடல் கேட்டவுடனே மனதிற்குள் ஒட்டிக்கொள்ளும், அழகான பாடலாக அமைந்துள்ளது. ரசிகர்களுக்கு ஆனந்த அதிர்ச்சியாக இப்பாடலில்  இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் வீடியோ பாடலில் தோன்றுவதுடன்  நாயகன் நானியுடன் இணைந்து, டான்ஸும் ஆடியுள்ளார். இவர்கள் கூட்டணியைத் திரையில் பார்ப்பது, பெரிய விருந்தாக அமைந்துள்ளது. 



 



ஶ்ரீ லக்‌ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்  சுதாகர் செருகுரி இப்படத்தை மிகப்பெரும் பட்ஜெட்டில் தயாரிக்கிறார். இயக்குநர் ஶ்ரீகாந்த் ஒதெலா இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.



 



சத்யன் சூரியன் ISC ஒளிப்பதிவு செய்ய சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் சமுத்திரக்கனி, சாய் குமார் மற்றும் ஜரீனா வஹாப் ஆகியோர் முக்கியமான பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.



 



இப்படத்தில் நவின் நூலி எடிட்டராகவும், அவினாஷ் கொல்லா தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், விஜய் சாகந்தி நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றுகிறார்கள்.



 



“தசரா” திரைப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 30 மார்ச் 2023 வெளியாகிறது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா