சற்று முன்

'தி பாரடைஸ்' படத்திற்காக லெஜெண்ட்டரி மோகன் பாபு மீண்டும் வெள்ளித் திரைக்கு வருகை!   |    தியா சூர்யா இயக்கியிருக்கும் டாக்குமெண்ட்ரி - டிராமா!   |    முன்னணி ஓடிடி தளமான ZEE5, தமிழ் ஒரிஜினல் “வேடுவன்” சீரிஸின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது!   |    இயக்குநராக அறிமுகமாகிறார் வரலட்சுமி சரத்குமார்!   |    காந்தாராவின் பாரம்பரியத்தை சிறப்பு தபால் அட்டைகளை வெளியிட்டு கௌரவித்துள்ளனர்!   |    முதல்முறையாக தேசிய விருது வென்றார் நடிகர் ஷாரூக் கான் !   |    அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் படமாக 'மருதம்' உருவாகியுள்ளது.   |    விமர்சன ரீதியாக பாராட்டப்படும் மோகன் ஜி இயக்கத்தில், ரிச்சர்ட் ரிஷி நடிக்கும் 'திரெளபதி 2'   |    அப்பா -மகள் இடையிலான அன்பை சொல்லும் கவிதையாக உருவாகியுள்ளது 'மெல்லிசை'   |    கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மீண்டும் திரைக்கு வருகிறது 'அனகோண்டா'!   |    நடிகர் உன்னி முகுந்தனை கேரளா ஸ்ட்ரைக்கர்ஸ் அணி தங்களது புதிய கேப்டனாக அறிவித்துள்ளது!   |    மோதியின் அரசியலுக்கு அப்பாற்பட்ட தனிப்பட்ட வாழ்வை உணர்வுப்பூர்வமாக பேசும் படம் 'மா வந்தே'   |    அதீரா, (PVCU)- பிரசாந்த் வர்மா சினிமா யுனிவர்ஸின் அடுத்த அத்தியாயமாகும்   |    ‘காந்தாரா: சேப்டர் 1’ ட்ரைலரை நடிகர் சிவகார்த்திகேயன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்!   |    கவுதம் ராம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியது   |    “காந்தாரா சேப்டர் 1” படத்தின் தமிழ் டிரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிடுகிறார்!   |    இந்த பூமி கோளில் செல்வராகவன் தான் மிகவும் சிறந்த மனிதர் - பினு ஜார்ஜ் அலெக்சாண்டர்   |    சென்னைவில் நடைபெறும் 23வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் – 2025   |    நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும், அசத்தலான கமர்ஷியல் திரில்லர் திரைப்படம் 'ரைட்'   |    நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்   |   

சினிமா செய்திகள்

ஐபிஓ மூலம் பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்டும் முன்னணி தயாரிப்பு நிறுவனம் !
Updated on : 11 March 2023

VELS FILM INTERNATIONAL LIMITED திரைப்படத் துறையில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாகும். புதிய முயற்சியின் முதல் கட்டமாக, ‘இனிஷியல் பப்ளிக் ஆஃபரிங்’ (ஐபிஓ) மூலம் பொதுமக்களுக்கு பங்குகளை வழங்குகிறது.



 



இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பு…



 



“வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் என்பது சென்னையைத் தளமாகக் கொண்ட ஒரு திரைப்படத் தயாரிப்பு நிறுவனமாகும், இது தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் பதிவுசெய்யப்பட்ட உறுப்பினராகவும் உள்ளது. இது திரைப்பட தயாரிப்பு, திரைப்பட விநியோகம் மற்றும் திரைப்பட உரிமை விற்பனை போன்றவற்றில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. தமிழ் திரையுலகம் மட்டுமின்றி பிற பிராந்திய மொழிகளிலும் தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர் ஐசரி கே, கணேஷ் தமிழ் நகைச்சுவை நடிகர் மறைந்த ஐசரி வேலனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.



 



இந்நிறுவனம் முதல் முறையாக பொதுமக்களிடமிருந்து ஐபிஓ மூலம் ரூ.34 கோடி நிதி திரட்டுகிறது, இது திரைப்பட தயாரிப்புக்காக பயன்படுத்தப்படும். மேலும் இந்நிறுவனம் தேசிய பங்குச் சந்தையில் SME தளத்தின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளது. 

ஒரு பங்கின் விலை ரூ. 99/- பங்குகளின் வெளியீட்டு அளவு. ரூ 34,08,000

IPO மார்ச் 10, 2023 அன்று தொடங்கி மார்ச் 14, 2023 அன்று நிறைவடைகிறது.

உள்ளடக்கக் குறிப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, சில்லறை முதலீட்டாளர்கள், சில்லறை அல்லாத முதலீட்டாளர்கள் போன்ற பல்வேறு வகை முதலீட்டாளர்களுக்கு IPO வழங்கப்படுகிறது, இது எங்கள் வலைத்தளமான –www.velsfilminternational.com யில் மக்கள் பார்வைக்கு உள்ளது. எங்கள் நிறுவனத்தின் முன்னணி மேலாளர் (Lead Manager) M/s கம்பட்டா செக்யூரிட்டீஸ் லிமிடெட், மும்பை.IPO தொடர்பான பிற தகவல்களுக்கு, எங்கள் நிறுவனத்தின் இணையதளத்தைப் பார்வையிடவும்.மேலும், எங்களின் துணை நிறுவனமான Vels Studios and Entertainment Private Limited பெங்களூருவில் ஒரு பொழுதுபோக்கு பூங்காவை உருவாக்கி வருகிறது. இதில் திரைப்பட ஸ்டுடியோ, கேளிக்கை பூங்கா, செயற்கை நீரூற்று பூங்கா, சாகச விளையாட்டுகள் போன்ற பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன. இதன் இறுதிக்கட்ட கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. மேலும் இது 2023 ஆம் ஆண்டின் மத்தியில் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



 





 



 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா